தோழர் தியாகு எழுதுகிறார் 143 : உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம்

(தோழர் தியாகு எழுதுகிறார் 142 : சி.வை. தாமோதரம் தொடர்ச்சி) உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம் 2016 சனவரி 17 – ஐதரபாத்து பல்கலைக் கழகத்தின் விடுதி அறை ஒன்றில் அறிவியலரும் செயல்வீரரும் அம்பேத்துகர் மாணவர் சங்கத் தலைவருமான உரோகித் வேமுலா பிணமாகக் கிடந்தார்! ஆம், அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார். முந்தைய நாள் சில மாணவர்கள் தங்கள் மீது பல்கலைக்கழக ஆட்சியாளர்கள் தொடுத்த பொய் வழக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலை வளாகத்தில் பட்டினிப் போராட்டம் தொடங்கியிருந்தார்கள். உணவு மறுப்புப் போராட்டக் கொட்டகையிலிருந்து வெளியே சென்ற உரோகித் விடுதி…

தோழர் தியாகு எழுதுகிறார் 142 : சி.வை. தாமோதரம்

(தோழர் தியாகு எழுதுகிறார் 141 : மகிழவன் நினைவுகள்! கனவுகள்! தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தமிழ்நாடு இனி தொடர் அரசியல் வகுப்பில் தொடர்ந்து கலந்து கொள்கிறவரா நீங்கள்? அண்மையில் இந்த வகுப்பில் தமிழ்நாட்டில் அச்சுப் பணியின் முன்னோடிகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவ்வகையில் திரு சி.வை.தாமோதரம் பிள்ளையின் பெயரைக் குறிப்பிட்டேன். தொடர்ந்து நம் இணைய வகுப்பில் கலந்து கொள்கிறவரான அபுதாபியைச் சேர்ந்த முதுநிலைப் பொறியாளர் சிங்கை கவிதா சோலையப்பன் தாழி அன்பரும் ஆவார். அவர் திரு சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றை…

உ .வே.சா.வின் என் சரித்திரம் 42 : காரிகைப் பாடம்

என் சரித்திரம் 41 : ஏக்கமும்நம்பிக்கையும் தொடர்ச்சி அத்தியாயம் 24காரிகைப் பாடம் குன்னத்தில் நாங்கள் தங்கியிருந்த வீட்டினராகிய இராமையங்கார் எனது நிலையை அறிந்து மிகவும் இரங்கினார். அப்பால் ஒருநாள் என் தந்தையாரைப்பார்த்து, “இவனைச் செங்கணம் சின்னப் பண்ணை விருத்தாசல ரெட்டியாரிடம் கொண்டுபோய் விட்டால் அவர் பாடஞ் சொல்வாரே” என்றார். “விருத்தாசல ரெட்டியார் என்பவர் யார்?” என்று என் தந்தையார் கேட்டார். “அவர் செங்கணத்திலுள்ள பெரிய செல்வர், உபகாரி, தமிழ் வித்துவான், இலக்கண, இலக்கியங்களை நன்றாகப் பாடஞ்சொல்லும் சக்தி வாய்ந்தவர்.” “அவரிடம் போயிருந்தால் ஆகாரம் முதலியவற்றிற்கு…

தோழர் தியாகு எழுதுகிறார் 141 : மகிழவன் நினைவுகள்! கனவுகள்!

(தோழர் தியாகு எழுதுகிறார் 140 : (உ)ரோகித்து வேமுலா இறுதி மடல் தொடர்ச்சி) இனிய அன்பர்களே! சென்ற ஆண்டு நான் பொள்ளாச்சியில் இருந்த போது அந்தத் துயரம் நிகழ்ந்தது. வளர்ந்து வந்து கொண்டிருந்த இளந்தோழர் ஒருவரைச் சாலை விபத்தில் இழந்தோம். சந்தோசு என்ற இயற்பெயர் கொண்ட தோழர் மகிழவனின் அந்தக் கொடிய இழப்பின் நினைவை அவருக்கு நெருங்கிய நண்பரான தோழர் ப. ஆறுச்சாமி பகிர்கிறார்… மகிழவன் நினைவுகள்! கனவுகள்! – ப. ஆறுச்சாமி 22.02.2022 அன்று “நடக்கக் கூடாதது நடந்து விட்டது !”. தந்தை பெரியாரின்…

ஊரும் பேரும் 40 : இரா.பி.சேது(ப்பிள்ளை): ஆறும் குளமும்

(ஊரும் பேரும் 39 : மலையும்குன்றும் – தொடர்ச்சி) ஆறும் குளமும்      ஆண்டவன் கோயில் கொண்டுள்ள ஆற்றுப் பதிகளை ஒரு பாட்டிலே அடுக்கிக் கூறினார் திருநாவுக்கரசர்.       “நள்ளாறும் பழையாறும் கோட்டாற் றோடு       நலந்திகழும் நாலாறும் திருவையாறும்      தெள்ளாறும்” என்று அப் பெரியார் எடுத்த திருப்பாசுரத்தில் ஆறு பதிகள் குறிக்கப்படுகின்றன. அவற்றின் தன்மையை முறையாகக் காண்போம். திருநள்ளாறு      காரைக்காலுக்கு அண்மையில் உள்ளது திரு நள்ளாறு. நளன் என்னும் மன்னவன் ஈசனை வழிபட்டுக் கலி நீங்கப் பெற்ற இடம் நள்ளாறென்பர்….

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 44 : பழந்தமிழும் தமிழரும் 4

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 43 : பழந்தமிழும் தமிழரும் 3 தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 4   பெண்களுக்கு அக்காலத்தில் எல்லா உரிமைகளும் இருந்தன. விரும்பிய கணவனை மணக்கும் உரிமையும் இருந்தது. மணவினைச் சடங்குகளும் நிகழ்ந்தன. மணவினை நிகழ்வதற்கு முன்னர்ச் சிலம்புகழி நோன்பு என்ற ஒரு சடங்கு நிகழ்ந்துளது. அது மணமகன் வீட்டிலோ மணமகள் வீட்டிலோ நடைபெறும். அச் சடங்கில் புரோகிதர்களோ பொருள் விளங்கா மந்திரங்களோ இல்லை. பெண்களே நடத்தி வைத்தனர்.   அத் திருமணச் சடங்கு பற்றி நல்லாவூர் கிழார் கூறியுள்ளார்.            …

தோழர் தியாகு எழுதுகிறார் 139 : தருசன் சோலங்கி

(தோழர் தியாகு எழுதுகிறார் 138 : செந்தமிழ்க்கோ! தாெடர்ச்சி)   தருசன் சோலங்கி! மீண்டும் ஒரு (உ)ரோகித் வெமுலா! உயர்கல்விக் கூடங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்க வெறிக்கு மீண்டும் ஓர் உயிர்ப் பலி! அகமதாபாத்தில் ஓர் ஒடுக்கப்பட்ட மாணவன். பெயர் தருசன் சோலங்கி. வயது பதினெட்டு.  தந்தை குழாய் வேலை பார்ப்பவர்; தாய் வீட்டு வேலை செய்பவர். அரிதின் உழைத்து மும்பை இ.தொ.நு. (ஐ.ஐ.டி) இல் இ.தொ. (பி.டெக்) வகுப்பில் இடம் பிடித்து விட்டார். படிக்கத் தொடங்கி மூன்றே மாதம் கழிந்திருந்த நிலையில் கடந்த பிப்பிரவரி 12 ஞாயிறு மதியம் விடுதிக் கட்டடத்தின் ஏழாவது…

தமிழ்நாடும் மொழியும் 44 : சீர்திருத்தம்

(தமிழ்நாடும் மொழியும் 43 : . தமிழ் நெடுங்கணக்கும் பிறவும் – தொடர்ச்சி) சீர்திருத்தம் தமிழ் நெடுங்கணக்கு இத்தனை மாற்றங்களைப் பெற்ற போதிலும், இன்னும் முழுமையான உருவைப் பெறவில்லை. அதில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் சில உள. இன்று தமிழ் நெடுங்கணக்கிலே சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று கூறுவோரை இருவகைப்படுத்தலாம். தமிழையும், அதன் எழுத்தையும் சிதைக்கவேண்டும் என்ற தீய எண்ணத்தோடு ஒரு சாரார் தமிழ் நெடுங்கணக்கிலே திருத்தம் வேண்டும் என்கின்றனர். தமிழ் நெடுங்கணக்கு மேலும் அழகும் எளிமையும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலே சிலர் சீர்திருத்தம் வேண்டும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 138 : செந்தமிழ்க்கோ!

(தோழர் தியாகு எழுதுகிறார் 137 : பாசிச எதிர்ப்பின் பன்னாட்டுப் பரிமாணம் தாெடர்ச்சி) செந்தமிழ்க்கோ!  இனிய அன்பர்களே! இனவழிப்புத் துயரத்தில் அமிழ்ந்த ஈழ மண்ணிற்கு மிக நெருக்கமான ஒரு தமிழ்நாட்டுப் புள்ளியில்…  கோடியக்கரைக் கடலில் உப்புநீரில் கால் நனைத்துப் பின் கரையேறிக் கதிரொளி முதுகுதொட ஊக்கத்துடன் நெடுநடைப் பயணத்தைத் தொடங்கிய போது எங்கள் அணியில் முதல் வீரரராக இயக்கக் கொடியேந்தி நேர்கொண்ட பார்வையோடு நிமிர்ந்து நடந்தவர் தோழர் செந்தமிழ்க்கோ. யார் இந்தத் தாடிக்காரர்? எனக்கு அதுதான் அவரோடு முதல் அறிமுகமே. எங்கள் அணியில் அவர்தான்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 733 – 739

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 727 – 732 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 733 – 739 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 733. Homeopathy – ஒப்புமுறை வைத்தியம் பல நோய்கள் இயற்கைக்கு மாறான வாழ்க்கையினாலேயும் நல்லுணவு கொள்ளாமையினாலும் ஏற்படுகின்றன. ஒழுங்கான வாழ்க்கையும் சுகாதாரமான உணவும் நோயைத் தடுப்பன என்று ஒப்புமுறை (Homeopathy)…

தோழர் தியாகு எழுதுகிறார் 137 : பாசிச எதிர்ப்பின் பன்னாட்டுப் பரிமாணம்

(தோழர் தியாகு எழுதுகிறார் 136 : குண்டர்களால் தாக்கப்பட்ட தமிழ்நாசரின் பேச்சு தொடர்ச்சி) பாசிச எதிர்ப்பின் பன்னாட்டுப் பரிமாணம் இனிய அன்பர்களே! குசராத்தில் 2002ஆம் ஆண்டு நரேந்திர மோதி ஆட்சியில் நடந்தது என்ன? மதக் கலவரமா? இல்லை. தற்செயலாக வெடித்த வன்முறை நிகழ்ச்சிகளா? இல்லை. உண்மையில் நடந்தது இசுலாமிய மக்கள் மீதான இனக் கொலை; திட்டமிட்ட இனக் கொலை. நரேந்திர மோதி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வழிநடத்திய இனக் கொலை என்பதை நாம் முன்பே அறிந்து வைத்துள்ளோம், பல முறை கூறியுள்ளோம் என்றாலும் பி.ஒ.நி.(பிபிசி)யின் மோதி…

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’   3. தாய் தந்தையர் போற்றல்

(ப. சம்பந்த(முதலியா)ரின் என் சுயசரிதை 2. தொடர்ச்சி) என் சுயசரிதை’   3. ஏழைக் குடும்பம் தொடர்ச்சி அவர் சென்னைக்கு வந்த பிறகு பெரிய காஞ்சிபுரம் சிரீ ஏகாம்பரநாதர் ஆலயத்திற்கும், சென்னையில் பெத்து நாய்க்கன் பேட்டையிலிருக்கும் சிரீ ஏகாம்பரேசுவரர் ஆலயத்திற்கும் சென்னையில் திருவட்டீசுவரன் பேட்டையிலிருக்கும் சிவாலயத்திற்கும் 10 ஆண்டுகளாக தருமகர்த்துவாக இருந்தார். அவர் சீவித காலத்தில் வருடா வருடம் காஞ்சிபுரத்து சிவன் கோயில் பிரம்மோற்சவ காலத்தில் எங்களை அழைத்துக் கொண்டு போவார். இதை நான் இங்கு எழுதிய தன் முக்கிய காரணம் என்னவென்றால் இந்த…