தோழர் தியாகு எழுதுகிறார் 136 : குண்டர்களால் தாக்கப்பட்ட தமிழ் நாசரின் பேச்சு
(தோழர் தியாகு எழுதுகிறார் 135 : இரத்தினம் மணி – தொடர்ச்சி) குண்டர்களால் தாக்கப்பட்ட தமிழ்நாசரின் பேச்சு தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆர்எசுஎசு மாணவர் பிரிவான அ.பா.மா.அ. (ஏபிவிபி) குண்டர்கள் நடத்திய தாக்குதலில் அன்புத் தோழர் தமிழ்நாசர் தாக்கப்பட்டதை அறிவீர்கள். அப்பொழுது குருதிக் காயத்தோடு அவரது மருத்துவமனைப் படமும் கண்டு நானும் தோழர்களும் பதறிப் போனோம். சப்தர்சங்கு மருத்துவமனையில் காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கொண்டு திரும்பி வந்ததும் தொலைபேசி வழி அவர் தெரிவித்தவை வருமாறு: ச.நே.ப.(J.N.U.) மாணவர் சங்க அலுவலகத்தில் ‘நூறு பூக்கள்’ (100…
தோழர் தியாகு எழுதுகிறார் 135 : இரத்தினம் மணி
(தோழர் தியாகு எழுதுகிறார் 134 : பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள் தொடர்ச்சி) இரத்தினம் மணி தாழி குறிப்பு: வழக்கறிஞர் இரத்தினம் அன்று போலவே இன்றும் களத்தில் நிற்கிறார். 1980ஆம் ஆண்டு சென்னைச் சிறையில் என்னையும் தோழர்களையும் நேர்காண வந்த இளைஞர் இரத்தினம் இப்போதும் அதே துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார். பகைவர்களையும் நண்பர்களையும் உறங்க விட மாட்டார். திண்ணியம் வழக்கைத் திறம்பட நடத்திய வழக்கறிஞர் சு.க. மணி என் கல்லூரி நண்பர், குடந்தை கல்லூரியில் அறிவியல் இளநிலையில் எனக்கு ஓராண்டு மூத்தவர். சேக்குசுபியரின் ஒதெலோ நாடகத்தின் ஒரு காட்சியை…
என் சரித்திரம் 41 : தந்தையார் சிவ பூசை
(என் சரித்திரம் 40 : ஏக்கமும்நம்பிக்கையும் தொடர்ச்சி) தந்தையார் சிவ பூசை அப்பால் நாங்கள் சூரியமூலை சென்று சிலநாள் தங்கினோம். அங்கே என் பிதா என் மாதாமகரிடம் படிக லிங்க பூசையை எழுந்தருளச் செய்துகொண்டார். அந்தச் சிவலிங்கப் பெருமானுக்கு மீனாட்சிசுந்தரேசுவர ரென்பது திருநாமம். குடும்பத்துக்குரிய பூசையை அதுகாறும் செய்துவந்த எந்தையார் அக்கால முதல் சிவபூசையை விரிவாகச் செய்யத் தொடங்கினர். என் பாட்டனாரைப் போலவே அபிசேகத்துக்குப் பாலும் அருச்சனைக்கு வில்வமும் இல்லாமற் பூசை செய்வதில்லை என்ற நியமத்தை மேற்கொண்டார். சிவபூசையில் வரவர அதிகமாக அவர் ஈடுபடலானார்….
தோழர் தியாகு எழுதுகிறார் 134 : பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள்
(தோழர் தியாகு எழுதுகிறார் 133 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் . இ – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! உலகத் தாய்மொழி நாள் பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள் பிப்பிரவரி 21இல் ‘உலகத் தாய்மொழி நாள்’ வாழ்த்துச் செய்திகள் முகநூலிலும் புலனத்திலும் பிற சமூக ஊடகங்களிலும் நிறைந்துள்ளன. வேறு எதற்கெல்லாமோ வாழ்த்துப் பரிமாற்றம் செய்துகொள்வதை விடவும் தாய்மொழி நாள் வாழ்த்துப் பரிமாற்றம் என்பது சிறப்பு. ஒரு திருத்தம் மட்டும் சொல்கிறேன். இது உலகத் தாய் மொழி நாள் என்பதில் இரு பிழைகள் உண்டு. ஒன்று உலகம் அல்ல, பன்னாடு!…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 39 – மலையும் குன்றும் – தொடர்ச்சி
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 38 – மலையும் குன்றும் தொடர்ச்சி) மலையும் குன்றும் – தொடர்ச்சி காளத்தி மலை தென் கயிலாயம் என்று கருதப்படும் திருக்காளத்தி மலை அன்புருவாய கண்ணப்பர் வழிபட்டுப் பேறு பெற்ற அரும் பெரும் பதியாகும்.12 “கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடும்” காளத்தி மலையைக்கண்களிப்பக் கண்ட திருஞான சம்பந்தர், அங்குக் கண்ணப்பர் திருவுருவைத் தரிசித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, அவரடியில் விழுந்து போற்றிய பான்மையைத் திருத்தொண்டர் புராணம் விரித்துரைக்கின்றது.13 திருவாட் போக்கி மலை திருச்சி நாட்டுக்…
தோழர் தியாகு எழுதுகிறார் 133 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – இ
(தோழர் தியாகு எழுதுகிறார் 130 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் ஆ. தொடர்ச்சி) திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – இ மருத்துவச்சான்று வலுவற்று இருப்பதாக நீதிபதி குறைபட்டுக் கொள்வது பொருளற்றது. தாக்குண்டவர்கள் மருத்துவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்ட போது காயங்கள் பெரும்பாலும் ஆறிப்போய் இருந்ததில் வியப்பில்லை. ஆனால் முதல் எதிரி சுப்பிரமணியனுக்கு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 323 / 324 பிரிவுகளில் குற்றத் தீர்ப்பு வழங்குவதற்கு நீதிபதி இதே மருத்துவச் சான்றைத்தான் நம்பியுள்ளார். வழக்குரைஞர்களின் போற்றத்தக்க பணி இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் அச்சத்தைப் போக்கி…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 43 : பழந்தமிழும் தமிழரும் 3
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 42 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 3 மக்கள் பல்லாண்டுகள் நல்வாழ்வு வாழ்ந்துள்ளனர். முதியோர் கையில் கொண்டிருந்த கோலே தொடித்தலை விழுத்தண்டு என்று கூறப்படுகின்றது. அத் தண்டினைக் கொண்டிருந்த முதியோர் தம் கடந்த கால வாழ்வை நினைந்து இரங்குகின்ற முறையில் பாடப்பட்டுள்ள பாடல் பல முறை படித்துச் சுவைக்கத் தக்கது. இனிநினைந்து இரக்க மாகின்று; திணிமணல் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத்…
தமிழ்நாடும் மொழியும் 43 : . தமிழ் நெடுங்கணக்கும் பிறவும் – அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும் மொழியும் 42 : தமிழ் மொழியும் வடமொழியும் தொடர்ச்சி) 6. தமிழ் நெடுங்கணக்கும் பிறவும் தமிழ் நெடுங்கணக்கு என்ற சொற்றொடர் தமிழிலுள்ள உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் ஆகிய எழுத்துகளைக் குறிப்பதாகும். தமிழ் எழுத்துகளிலே சிலவற்றிற்கு உயிர் என்றும், இன்னும் சிலவற்றிற்கு மெய் என்றும், வேறு சிலவற்றிற்கு உயிர்மெய் என்றும், ஆய்தம் என்றும் பெயரிட்டனர், நந்தம் செந்தமிழ்ப் புலவர்கள். உயிர், மெய், முதலிய பெயர்களே அவற்றினாற் குறிக்கப்படும் எழுத்துகளின் இயல்பைத் தெள்ளத் தெளியக் குறிக்கும் தகையவாம். உயிர் என்ற பெயரால் குறிக்கப்படுகின்ற எழுத்துகள்,…
தோழர் தியாகு எழுதுகிறார் 132 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – ஆ
(தோழர் தியாகு எழுதுகிறார் 131 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – அ தொடர்ச்சி) திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – ஆ காப்பு எதற்கு? உண்மையில் காப்புக் கட்டுவது சமத்துவத்திற்காக அல்ல, மரியாதைக்காகவும் அல்ல. திருவிழா முடியும் வரை யாரும் ஊரை விட்டுப் போகக் கூடாது என்பதற்காகவே இந்த வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருவது. அப்படியானால் இன்று மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் தீண்டாமை நிலவியதில்லை என்று சொல்லி விட முடியுமா? காப்புக் கட்டும் வழக்கம் திண்ணியத்திற்கு மட்டும் உரியதல்ல. தமிழ்நாடு முழுக்க இந்த வழக்கம்…
தோழர் தியாகு எழுதுகிறார் 131 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – அ
(தோழர் தியாகு எழுதுகிறார் 130 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 5 தொடர்ச்சி) திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – அ நீதிபதியிடம் ஒரு கேள்வி இவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்ப்போம். அதற்கு முன் நீதிபதியிடம் ஒரு கேள்வி: இந்த ஏழு குறைபாடுகளையும் மீறித் தானே முதல் எதிரி சுப்பிரமணியனுக்கு 323, 324 பிரிவுகளில் குற்றத் தீர்ப்பும் தண்டனையும் கொடுத்துள்ளீர்கள்? முதல் எதிரிக்கும் மற்றவர்களுக்கும் எதிரான பிற குற்றச்சாட்டுகளை மெய்ப்பிப்பதற்கு மட்டும் இந்தக் குறைபாடுகள்(?) எப்படித் தடையாகும்? தாமதம் ஏன்? வழக்கிற்குக் காரணமான முதல் நிகழ்ச்சி 2002 மே 20ஆம் நாள் நடைபெற்றது….
தோழர் தியாகு எழுதுகிறார் 130 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 5
(தோழர் தியாகு எழுதுகிறார் 129 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 4 தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும் 5 தமிழ்நாட்டில் நிருவாகத் தலைவர், அவர்தான் ஆளுநர், ஆளுநர் இரவி! தமிழரல்ல என்பதே முதல் தகுதி! உயர் நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக இப்போது ஒரு தமிழர் இருக்கிறார். ஆனால் நிரந்தரமாக ஒரு நீதிபதி வந்தால் தமிழராக இருக்கக் கூடாது என்பது நிபந்தனை. முகமது இசுமாயில் காலத்திற்குப் பிறகு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் எல்லாருமே தமிழர் அல்லாதவர்கள்தான் ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டு பார்க்க வேண்டும்….
ப. சம்பந்த(முதலியா) ரின் ‘என் சுயசரிதை’ 2. ஏழைக் குடும்பம்
(ப. சம்பந்த(முதலியா)ரின் என் சுயசரிதை 1. தொடர்ச்சி) 3. ஏழைக் குடும்பம் என் தகப்பனார் அந்தக் கல்லூரியில் அரைச் சம்பளத்தில் படித்ததாகச் சொல்லியிருக்கிறார். என் பாட்டனாராகிய ஏகாம்பர முதலியார் என்பவர் செல்வந்தரல்ல, ஒரு சாராயக்கடையில் குமாசுத்தாவாக சொல்பச் சம்பளம் பெற்று, குடும்பத்தைச் சம்ரட்சணம் செய்துவந்தனராம். ஆயினும் தன் பிள்ளைகள் இருவரும் நன்றாய்ப் படிக்கவேண்டுமென்று தீர்மானித்துக் கட்டப்பட்டு அரைச்சம்பளத்தில் அந்தக் கல்லூரியில் படிக்கச் செய்தராம். இந்த நிலையில்தான் என் தகப்பனார் கட்டப்பட்டுப் படித்ததற்கு உதாரணமாக அவர் எனக்குக் கூறிய கதை ஒன்றை இங்கு எழுதுகிறேன். அச்சமயம்…
