5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

(4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக!– தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டம் 1956 நிறைவேற்றப் பட்டதிலிருந்து  இதுநாள் வரை தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்திற்காகப் பல்வேறு அரசாணைகள், தொடர்பான சுற்றறிக்கைகள், மடல்கள், வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்வளர்ச்சித்துறை இணையத்தளத்தில் 02.08.1968 முதல் 02.11.2021 வரையிலான 120 ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில முன்னர் வெளியிடப்பட்டவற்றையே வலியுறுத்திப் பின்னரும் வெளியிடப்பட்டனவாக இருக்கின்றன. இவ்வாறு மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளமையே தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் எந்த அளவில்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 169 – 177

(தமிழ்ச்சொல்லாக்கம் 161 – 168 தொடர்ச்சி) யோகநித்திரை – அறிதுயில்அறிதுயில் எல்லாவற்றையு மறியா நின்றே துயிலல். இதில் அறிதலும் துயிறலும் ஒருங்கு நிகழ்தலான் இது துணைவினையெனப்படும். இதனை யோக நித்திரையென்பர் வடநூலார், நூல் : குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் (1904) பக்கம் : 55 ★ ஆசி – வாழ்த்துஆசி – ஆசிசு என்னும் வடசொல்லின் விகாரம். வாழ்த்து என்பது பொருள்.மேற்படி நூல் : பக்கம் -285உரையாசிரியர் : வித்துவான் – காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு★ (ட்)செரம் – மழித்தல்முகத்திடை நீண்டவுரோமம், நீண்ட முகரோமம்…

திருவள்ளுவர் அகப்பொருள் நெறி: நூலாய்வுக் கட்டுரை – 1/4 – வெ.அரங்கராசன்

முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 1/4 நுழைவாயில்:             1-8-1973 ஆண்டு முதல் 4-2004 வரை சென்னைப் பல்கலைக் கழக இலக்கியத் துறையில் திருக்குறள் ஆய்வுப் பகுதியில் தகுதிமிகு பேராசிரியராகப் பணியாற்றிய 31 ஆண்டுகளில் திருக்குறள் ஆய்வில் உலகச் சாதனைகள் பற்பல புரிந்த  உயர்சாதனையர் நூலாசிரியர் முனைவர் கு. மோகனராசு அவர்கள். இந்நூல் வெளியிட்டப்பட்ட 4.2004 வரை நூலாசிரியரது சாதனைகள் 17. அவற்றின் பட்டியல் நூலின் பின்னட்டையில் பதிவு பெற்றுள்ளது. அவற்றை இங்குக் காண்போம். திருக்குறள் நான்காவது எழுச்சிக்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 161 – 168

(தமிழ்ச்சொல்லாக்கம்  151-160  தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 161. ஆதாரம்          —        பற்றுக்கோடு 162. கர்வம்  —        பெருமிதம் 163. தாட்சண்ணியம்     —        கண்ணோட்டம் 164. அருத்த சாத்திரம்   —        பொருணூல் 165. தருமசாத்திரம்        —        அறநூல் 166. பத க    —        பெருங்கொடி 167. பகுதி    —        முதனிலை 168. பூரண விசுவாசம்   —        தலையளி நூல்   :           திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் (1904). தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் : கோ. வடிவேலு செட்டியார் (சென்னை இந்து தியலாசிகல்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 151 – 160

(தமிழ்ச்சொல்லாக்கம்  141-150  தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 151. தரித்திரன்     —        வறியன் 152. நிந்தை            —        வசை 153. சுரோத்திரம் —        செவி 154. சட்சு     —        கண் 155. சிங்குவை      —        நாக்கு 156. புருசார்த்தங்களைக் கூறும் சாத்திரங்கள்     —        உறுதி நூல்கள் 157. அவமானம்    —        இளிவரவு 158. விரோதம்       —        மாறுபாடு 159. பராக்கிரமம் —        ஆண்மை 160. முனிவர்          —        அறவோர் நூல்   :           திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் (1904). தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும்…

வேற்றுமையின் வித்தே சனாதனம்!- இலக்குவனார் திருவள்ளுவன்

வேற்றுமையின் வித்தே சனாதனம்! “வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றிக் கூறுகிறோம். சனாதனத் தருமமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் வளர சனாதனத் தருமம் வழி முறையாக இருக்கும்” என உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பெரியர் ஒருவர் முத்து உதிர்த்துள்ளார். அறிந்தே சொல்லப்படும் பொய் என்பதால் அவருக்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டின் தலைவர்கள் பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் இதுபோன்ற பொய்களை நம்பும் அப்பாவிகள் உள்ளனர். அவர்களை வைத்துத்தான் பொய்களை…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 141 – 150

(தமிழ்ச்சொல்லாக்கம்  138 – 140 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 141. ஆசாரம்          —        ஒழுக்கம் 142. வியவகாரம்  —        வழக்கு 143. பிராயச்சித்தம்        —        கழுவாய் 144. பிரத்தியட்சம்           —        கண்கூடு 145. வானப்பிரசுத்தநிலை      —        புறத்தாறு 146. சுதந்தரம்       —        உரிமை 147. அவயவம்       —        உறுப்பு 148. அமிர்தம்         —        சாவா மருந்து 149 நீதி         —        நடுவு 150. முத்தி பெறுதல்       —        வீடுபேறு நூல்   :           திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் (1904). தெளிபொருள் விளக்கமும்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 138 – 140

(தமிழ்ச்சொல்லாக்கம்  133 – 137 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 138. Great world’s Fair – உலகத்துப் பெருஞ்சந்தை இந்துமதத்தையும் இந்துக்களின் தத்துவ ஞானத்தையும் பிற தேசங்களிலுள்ளவர்ளுக்குக் கற்பிக்க வேண்டுமென்ற அவா இவருக்கு மிக விருந்தது. இவ்வெண்ண மேற்கொண்டு 1893 ஆம் வருடத்தில் இந்தியாவினின்றுங் கிளம்பி அமெரிக்கா கண்டத்தை நோக்கிச் சென்றார். சிக்காகோ என்னும் நகரத்தையடைந்து ஆங்கு நடந்த ‘உலகத்துப் பெருஞ்சந்தை’ (Great World’s Fair)க்குச் சென்றனர். உலகத்திலுள்ள மதங்கட்கான சபையில் இவரை இந்து மதத்திற்கும் வேதாந்த நிலைமைக்கும் பிரதிநிதியாக அங்குள்ளர்…

4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

(3. தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினைத் தட்டி எழுப்புக! – தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக! அலுவலகங்களில் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியது குறித்து ஆணைகள், சுற்றறிக்கைகள், அறிக்கைகள் எனப் பலவும் வேண்டிய மட்டும் வந்துள்ளன;  வந்து கொண்டுள்ளன. இருப்பினும் முழுப்பயனில்லை. உண்மையிலேயே  ஆட்சிமொழிச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், ஒரே ஓர் ஆணை மட்டும் பிறப்பித்தால் போதும். அந்த ஆணை, தமிழில் உள்ள செயல்முறை ஆணைகள், அலுவலக ஆணைகள், நிதி ஆணைகள், பட்டியல்கள், படிவங்கள், ஒப்பந்தங்கள்,…

‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு 4/4 – வெ.அரங்கராசன்

(‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 3/4 தொடர்ச்சி) முனைவர் மு.மோகனராசின் கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ நூல் திறனாய்வுக் கட்டுரை 4/4 13.1.0.0.அவ்ஆய்வு முடிவுகள் – 6:                இவை நூலாசிரியன் ஆய்வு முடிவுகள்: 13.1.1.0.பழமையில் பெரும்பற்றுக் கொண்ட கன்பூசியசின் நோக்கிலிருந்து, வள்ளுவர் பெரிதும் வேறுபடுகிறார். [பக்.27]. 13.1.1.1. பழையன என்பதாலேயே அவற்றைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும் – போற்ற வேண்டும் என்னும்  உணர்வோ புதியன என்பதாலேயே அவற்றை ஏற்கக் கூடாது என் னும்  உணர்வோ வள்ளுவரிடம் சிறிதும் இல்லை. பழையன வாயினும்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 133 – 137

(தமிழ்ச்சொல்லாக்கம்  129-132 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 133. பட்சி பட்சி – பட்சமுடையது (பட்சம் – இறகு) நூல் : குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் (1904) நூலாசிரியர் : வித்துவான் – காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு ★ 134. ஆறு பகை காமம் – ஒரு பொருளின் மீது செல்லும் விருப்பம், குரோதம் – அப்பொருள் கிடையாத போதுண்டாகும் கோபம், உலோபம் – தானும் அநுபவிக்காமல் பிறர் கொடாமலிருக்கும் குணம், மோகம் – மாதர் மீதுண்டாகுமிச்சை, மதம் – செருக்கு,…

‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’: நூலாய்வு 3/4 – வெ.அரங்கராசன்

(‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ 2/4 தொடர்ச்சி) முனைவர் மு.மோகனராசின் ‘கன்பூசியசும் திருவள்ளுவரும் கண்ட கல்வி’ நூலாய்வு  3/4 8.0.0.0.ஆய்வுப் போக்கு:             ஓர் ஆய்வு / ஒப்பாய்வு நூலின் உள்ளடக்க ஆய்வுத் தலைப் புகள், உட்தலைப்புகள், இவ்விரண்டிற்கும் எண்ணிடல், பத்திகள் பிரிப்பு போன்றவை சிறப்புற அமைதல் வேண்டும். இவற்றிற்கு எல்லாம் ஒப்பாய்வுச் சான்று நூலாக இந்நூல் இலங்குகிறது. 8.2.0.0.உள்ளிருக்கும் ஒவ்வோர் ஆய்வுக் கட்டுரைக்கும் வரிசை               எண் வழங்கல், 8.2.0.0.ஆய்வுக் கட்டுரைகளைக் கருத்து நிறைவுக்குத் தக்கபடி               உட்தலைப்புகள் அமைத்தல், அவற்றிற்கு எண்ணிடல்,…