திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 4/4 – வெ.அரங்கராசன்

(திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 3/4 தொடர்ச்சி) முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 4/4 13.0.0.0. நலம் நடைநலம்: ஒரு நூலை / ஆய்வு நூலை மிகக் கடினப்பட்டு, நூலாசிரியர் நெய்கிறார். அந்நூல் ஆய்ஞர், அறிஞர், கற்றார், கல்லார், சுவைஞர் என அனைவரிடமும் சென்று அகத்துள் பதிய வேண்டும். அவ்வாறு செலச்செல்வதற்கு நூலின் நடை நலம் மிக இன்றியமையாதது. அப்போதுதான், நூலாசிரியரின் ஆய்வுக்கும் அரிய உழைப்புக்கும் ஆன்ற பயன் ஊன்று நிலை தோன்றும்.              …

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 213 – 217

(தமிழ்ச்சொல்லாக்கம் 208-212தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 213. GLAND- உமிழ்நீர்க் கோளம் கீழ்த்தாடை என்பு, மேல்தாடை என்பு இவற்றில் உமிழ்நீர்க் கோளங்கள் ஒவ்வொன்றிலும் மும்மூன்றாக அணைந்திருக்கின்றன. நூல்   :           சரீரவியவசேத சாத்திரம் என்னும் அங்க விபாக சுகரண வாதம் (1906) பாகம் 15 நூலாசிரியர்                     டி. ஆர். மகாதேவ பண்டிதர் ★ 214. தத்தம் –           கொடுக்கப்பட்ட பொருள் 215. சூதிகாகாரம்            –           பிள்ளை பெறும் வீடு 216. திகுதிகு           –           சுடுகடு நூல்   :           சிரீ பாகவத தசமசுகந்த கீர்த்தனை (1907)…

மற்றொரு  மொழி புகுத்தப்படுவதை எதிர்க்கிறேன்!- பெரியார் ஈ.வெ.இராமசாமி

மற்றொரு  மொழி புகுத்தப்படுவதை எதிர்க்கிறேன்! “ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கோண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.” “தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்லுகிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு; மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு; ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு; ஆனால், தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதவரையில் தமிழர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள்.”…

தமிழில் முழுத் தேர்ச்சிக்கு வழிகள் – இலக்குவனார் திருவள்ளுவன் & இருவர் : குமுதம் ‘ரிப்போர்ட்டர்’

தமிழில் தேர்ச்சி பெற மாட்டேன் போடா!…10 ஆம் வகுப்பு தேர்வு பகீர் – கணேசுகுமார் “இந்தி தெரியாது போடான்னு சொல்லிப் போராடினீங்களே? இப்போ தமிழ்ப் பாடத்தில் 47 ஆயிரம் பேர் ஃபெயிலாமே” என பா.ச.க., மூத்த தலைவர் எச்.ராசா போட்ட சுட்டுரைப் (twitter) பதிவுதான் தமிழ் ஆர்வலர்களுக்குக் கடும் அதிர்ச்சி! இந்த ஆண்டு திருச்செந்தூரைச் சேர்ந்த மாணவி துர்கா தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து அரிய சாதனை படைத்திருக்கிறார். இதனைப் பலரும் பாராட்டியும் கொண்டாடியும் மகிழ்கின்றனர். இந்த நேரத்தில்தான் 9.12 நூறாயிரம் பேர்…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 208-212

(தமிழ்ச்சொல்லாக்கம் 203-207தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 208. புருசார்த்தம்    –   தக்க நலம் 209. பரிசுத்த (இசு)தானம் –   தூய நிலம் 210. துர்கதி –   பொல்லா நெறி நூல்   :           பகவத்(து) கீதை வெண்பா (1906) நூலாசிரியர்                     வாதிகேசரி சிரீ அழகிய மணவாள சீயர் ★ 211. Cultivators         :           பயிரிடுகிறவர்கள் 212. Sea Custom                   கடல்வரி இதழ் :           விவகாரி (1906), புத்தகம் இலக்கம் 1 இதழாசிரியர்                   ஏ. நடேசபிள்ளை, வக்கீல், மாயவரம் (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்

பேரறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே!

ஏ, தாழ்ந்த தமிழகமே! 1/8 [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] புரட்சியின் சிகரம் தலைவர் அவர்களே! அருமைத் தோழர்களே!! மிக உற்சாகத்துடன் ஒரு கவிக்கும் (பாரதிதாசன்) ஒரு பேராசிரியருக்கும் (பேராசிரியர் கா. சு. பிள்ளை) சிறந்த முறையிலே பாராட்டுதல் நடத்துகிற இந்த உங்கள் சம்பவத்திலே, நான் கலந்துகொண்டு பேசுவதற்கும், இதில் பங்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கும் எனது…

திருவள்ளுவர் அகப்பொருள் நெறி : நூலாய்வுக் கட்டுரை – 3/4 – வெ.அரங்கராசன்

(திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 2/4 தொடர்ச்சி) முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 3/4             இம்முப்பொருள்களும் கீழ்க்காணும் 2 வகைப்பாடுகளில் வழங்கப்பட்டுள்ளன.            முதல் பொருளும் கருப்பொருளும் 13 வகைகளில் வழங்கப் பட்டுள்ளன. அவை 1 முதல் 13 தலைப்புகளில் அமைந்துள்ளன. அவை: 1.அறிமுகம்                     2. காமம் 3.பாடல் வடிவம்               4.திணைப் பகுப்பு 5.நாடக வழக்கு               6.அகப்பொருள் தலைமக்கள் 7.பெயர்  வரும் முறைமை  8.கூற்று முறைமை 9.நிலம்                          10.பொழுது             11.பிரிவு [பொது]              12.களவு   …

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 203-207

(தமிழ்ச்சொல்லாக்கம் 197-202 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 203. மத்தியசுதன்   –    நடுவோன் 204. (இ)லாபம்  –    பேறு 205. துர்கதி –   பொல்லா நெறி 206. கர்மபந்தம்    –    வினைக்கட்டு 207. (இ)லாப நட்டம் –   பேறு இழவு நூல்   :           பகவத்(து) கீதை வெண்பா (1906) நூலாசிரியர்                     வாதிகேசரி சிரீ அழகிய மணவாள சீயர் பதிப்பாளர்                        சே. கே. பாலசுப்பிரமணியம் (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 197-202

(தமிழ்ச்சொல்லாக்கம் 178- 196 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 197. அசுதமயம்   –        ஞாயிறுபடுதல் 198. அற்பம் –        சிற்றளவை 199. அநுராகம்      –        தொடர் விருப்பு 200. கவி       –        புலவன் 201. கல்யாணம்   –        மணவினை 202. விபரீதம்         –        மாறுபாடு நூல்   :           சேந்தன் செந்தமிழ் (1906) நூலாசிரியர்                     பாம்பன் குமர குருதாச சுவாமிகள் (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்

பு தி ய  ஆ ட் சி த் த மி ழ் ச்  ச ட் ட ம்  தே வை! –  இலக்குவனார் திருவள்ளுவன்

(5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 6.  பு தி ய  ஆ ட் சி த் த மி ழ் ச்  ச ட் ட ம்  தே வை! தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்பது கட்சி, சமய வேறுபாடின்றி அனைத்துத் தரப்பாராலும் பலமுறை வற்புறுத்தப்பட்டு வந்தது. தமிழறிஞர்கள், தமிழ்ப்பற்றாளர்கள், அரசியலாளர்கள் எனப் பலரும் கூட்டங்களில் தீர்மானமாக நிறைவேற்றியும் தங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தினர். இவற்றின் பயனாக, ஆட்சிமொழிச்சட்டம் 1956இல்…

திருவள்ளுவர் அகப்பொருள் நெறி:நூலாய்வுக் கட்டுரை – 2/4 – வெ.அரங்கராசன்

(திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 1/4 தொடர்ச்சி) முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 2/4 மூன்றாம் பக்கம் முதல் எட்டாவது பக்கம்வரை நூலாசிரியரின் விரிவான — விளக்கமான முன்னுரை  பக்கம் 3 முதல் 8 வரை 6 பக்கங்களில் விளங்குகின்றது. அதில் கீழ்க் காணும் கருத்தாக்கங்கள் கூறப்பட்டுள்ளன. 1. அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப் பொருள்கள்   மாந்தர்க்கு  உயர்நெறி வழங்கத் திருவள்ளுவர்  எண்ணியமை 2. தலைவன், தலைவி பெறத்தக்க இன்பத்தை  மூன்றாம் பாலாக ஆக்கியமை…

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 178- 196

(தமிழ்ச்சொல்லாக்கம் 169 – 177 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 178. பாரகாவியம் – பெருநூல் நூல்   :           திருவிளையாடற் புராண மூலமும் அரும்பதக் குறிப்புரையும் (1905) குறிப்புரை :           முத்தமிழ் இரத்னாகரம் ம. தி. பானுகவி வல்லி – ப. தெய்வநாயக முதலியார் சென்னை சிந்தாதிரிப் பேட்டை ஆங்கிலோ வருணகுலரி இசுகூல் தமிழ்ப் பண்டிதர் ★ 179. புலித்தோலாசனம் –        வேங்கையதள் 180. சோமவாரம்  –        மதிநாள் 181. சரசுவதி        –       வெள்ளைச் செழுமலர்ந்திரு 182. வியாக்கிரபாதன்   –         புலிக்காலோன்…