புறநானூறு சொல்லும் வரி நெறி! -இலக்குவனார் திருவள்ளுவன்
புறநானூறு சொல்லும் வரி நெறி! மத்திய நிதியமைச்சர் நிருமலா சீதாராமன், சூலை 5 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் முன் வைத்த 2019-20 நிதிநிலை அறிக்கையில் புறநானூற்றுப் பாடலில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார். இதன் மூலம் சங்கத்தமிழின் சிறப்பையும் பண்டைத் தமிழரின் வரி விதிப்புக் கொள்கையையும் உலகம் அறியச் செய்துள்ளார். எனவே, அவருக்கு நம் பாராட்டுகள். அவரால் மேற்கோளாகக் கூறப்பட்ட பாடலை நாமும் அறிவோமா? புலவர் பிசிராந்தையார் காணாமலேயே கோப்பெருஞ்சோழனுடன் நட்பு கொண்டவர்; அவர் வடக்கிருந்து உயிர் துறந்த பொழுது தாமும் உண்ணாமல் உயிர்…
தமிழால் இணைவோம்…! – மறைமலை இலக்குவனார்
தமிழால் இணைவோம்…! தமிழ் இந்திய மொழிகளுள் ஒன்று மட்டுமல்ல, ஓர் உலகமொழியாகவும் திகழ்கிறது. ஆங்கிலம், சீனம், இசுபானிசு மொழி போன்று உலகெங்கும் பேசப்பட்டுவரும் மொழி நம் தமிழ்மொழி என்பதனைப் பெருமையுடன் நாம் அனைவரும் கூறலாம். உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களால் தமிழ் பல சிறப்புகளைப் பெற்று புதிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கை, மலேசியா, மொரீசியசு நாட்டிலும் தொடர்பு மொழியாக இருப்பதுடன் தமிழ், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது. இதுபோன்றே ஆத்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா, தமிழ், கல்விக்கூடங்களில்…
என்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
என்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! இன்று(ஆடி 19 / சூலை 4) முதல் நான்கு நாள் அமெரிக்க நாட்டில் சிகாகோவில் உலகத்தமிழர்கள் ஒன்றுகூடும் தமிழர் விழா நடைபெறுகிறது. தமிழறிஞர்களைப் புறக்கணித்துள்ளதாக உள்நாட்டுத் தமிழறிஞர்கள் முதல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தொடர் படைப்பாளர்கள் வரை வருத்தம் உள்ளது. என்றாலும், சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! குழுக்கள் பொறுப்புகளில் ஈழத்தமிழர்களைப் புறக்கணித்ததாக அவர்களிடையே பெரும் ஆதங்கம் உள்ளது. என்றாலும் உலக மாநாட்டை நடத்துவது அரிதான செயல் என்ற அளவில் மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்! கவியரங்கம், தமிழிசை, மரபிசை,…
அனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு
அனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு சிறப்புப் பயிலரங்குகள் ஆடி 11, 2050 – 27.07.2019 சனி காலை 9.30 முதல் மாலை 5.00 வரை புத்தகக் கண்காட்சி
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190 (குறள்நெறி) பிறர் பொருளை விரும்பி அறமற்ற செயல் புரியாதே! உன்னிடம் இல்லை என்பதற்காகப் பிறர் பொருளை விரும்பாதே! பிறர் பொருள் விரும்பி வெறிச்செயல் செய்யாதே! அருள்வழி நின்றாலும் பிறர் பொருள் விரும்பாதே! பிறர் பொருளைக் கொண்டு செல்வம் சேர்க்காதே! செல்வம் குறைய வேண்டாமெனில் பிறர் பொருளை விரும்பாதே! (செல்வம் சேரப்) பிறர் பொருள் விரும்பா அறவாணராய் வாழ்! அழிவு வரப் பிறர் பொருள் விரும்பு! வெற்றிக்குப்பிறர் பொருள் விரும்பாதே! முன்னால் இழித்துச்…
தந்தை பெரியார் சிந்தனைகள் 5 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 4 இன் தொடர்ச்சி) (இ) தடத்தநிலையில் சிவற்றைக் காட்டுதல் பொருத்தமாகும். சொரூப நிலையில் பதி ‘பரசிவம்‘ என நிற்குங்கால் அதன் சக்தி ‘பராசக்தி‘ என வழங்கப்பெறும். அஃது உயிர்களின் அறிவை நோக்கி நிற்கும் அறிவு வடிவமானது. அந்த அறிவே சக்தியின் சொரூபம். பாரதியாரின் சக்தி வழிபாடெல்லாம் இந்தச் சக்தியை நோக்கியேயாகும் என்று கருதுவதில் தவறில்லை. மேலும், சித்தத்தி லேநின்று சேர்வ துணரும் சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்; இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே. 1 என்ற தாழிசையிலும் இந்த நிலையினைக் காணலாம். பதி…
கருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ]
கருத்துக் கதிர்கள் 16-18 : [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ] கருத்துக் கதிர்கள் 16-18 [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ] 16. ஒரே தேர்தல் : பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான கூட்டம் கடந்த வாரம் (19.06.2019)…
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180 (குறள்நெறி) பொறாமையால் அல்லவை செய்யாதே! (துன்பம் தரும்) அழுக்காறு வேண்டா உனக்கு! சுற்றம் கெட வேண்டுமாயின் பிறருக்குக் கொடுப்பதைத் தடு! செல்வம் சேர வேண்டாமெனில், பிறர் செல்வம் கண்டு பொறாமை கொள்! நடுவுநிலை தவற விரும்பாவிடில், பிறர் பொருள் விரும்பாதே! பொறாமையாளனின் செல்வமும் பொறாமையற்றவனின் கேடும் மாறும். அழிவினுள் தள்ளும் அழுக்காறு கொள்ளாதே! (உயர வேண்டுமெனில்,) பொறாமை கொள்ளாதே! உன் குடி அழிய வேண்டுமாயின், பிறர் பொருள் விரும்பு! பிறர் பொருள்…
கருத்துக் கதிர்கள் 14-15: இலக்குவனார் திருவள்ளுவன் [14. தண்ணீர்ப் பஞ்சமா? அப்படி என்றால் என்ன? 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்]
கருத்துக் கதிர்கள் 14-15 [14. தண்ணீர்ப் பஞ்சமா? அப்படி என்றால் என்ன? 15. அயற்பெயர்ப் படங்களை ஓட்டிய மக்கள்] தண்ணீர்ப் பஞ்சமா? அப்படி என்றால் என்ன? “தமிழ்நாட்டில் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்பட்டுள்ளது போன்ற மாயையை ஏற்படுத்த வேண்டா” என மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டியுள்ளார். அவர் சொல்வது உணமைதான். அதுபோல் தண்ணீர்ப்பஞ்சம் என்பது இல்லை என மாண்புமிகு அமைச்சர் வேலுமணி பேசியுள்ளார். ஒரு முறை போதிய அளவு தண்ணீர் இருப்பதாகவும் மின்தடையால் உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க இயலவில்லை என்றும் பேசியுள்ளார். இதன்…
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும், ஒரே மதத்திற்கான பாதை – இலக்குவனார் திருவள்ளுவன்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும், ஒரே மதத்திற்கான பாதை ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் நாளை (ஆனி 04 / சூன் 19) நடை பெறுகிறது. இது பா.ச.க.வின் புதிய திட்டம் அல்ல. அதன் முந்தைய ஆட்சியிலேயே 2021 வரை நடக்க வேண்டிய மாநிலச் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை இவ்வாண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்து நடத்த முயன்றது. இப்பொழுது தன் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் தொடக்கததிலேயே இதற்கான முயற்சியில் இறங்கி…
கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?]
கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?] திருமாவளவன் விளக்கம் சரிதானே! தீவிரவாதத்திற்கும் பயங்கர வாதத்திற்குமான விளக்கத்தை முனைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளதற்காக அவர் மீது வழக்கு தொடுத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. நான் அரசிலறிவியலைத் துணைப்பாடமாக எடுத்துப் படித்துள்ளேன்.அப்பொழுதிருந்தே தீவிரவாதியையும் பயங்கரவாதிகயையும் ஒன்றுபோல் கூறும் பழக்கம் தவறு என்ற கருத்து உடையவன். சில இடங்களில் இது குறித்துப் பேசியும் எழுதியும் உள்ளேன். இப்பொழுது வி.சி.க.தலைவர் இந்த விளக்கத்தைக் கூறுவது…
வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 (குறள்நெறி) நற்குணம் நீங்காமல் காத்திடப் பொறுமையைக் காத்திடு!. பொறுத்தவரைப் பொன்போல் போற்று! ஒறுத்தால் ஒருநாள் இன்பம்; பொறுத்து என்றும் புகழ் பெறு! பிறர் திறனல்ல செய்யினும் நீ அவர்க்கு அறனல்ல செய்யாதே! செருக்கினை வெல்ல பொறு! துறவியினும் தூயராகத் தீச்சொல் தாங்கு! தீச்சொல் பொறு! அழுக்காறு இன்மையை ஒழுக்காறு ஆகக் கொள்! இணையற்று வாழ அழுக்காறு இன்றி இரு! அறன் ஆக்கம் வேண்டுமெனின், பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படாதே! (தொடரும்)இலக்குவனார்…
