பூம்புகார் அவலநிலை – க.தமிழமல்லன்

பூம்புகார் அவலநிலை 1975இல் தமிழக முதல்வராக இருந்த இலக்கியப்பேராசான் கலைஞர் தம் கற்பனை வளத்தால் சிலப்பதிகாரம் என்னும் ஒப்பற்ற இலக்கியத்திற்கு உயர்வாழ்வு அளித்தார். சிலப்பதிகாரக் கதைக்காட்சிகளை நுட்பம் மிக்க சிற்பப் பலகைகளாக உருவாக்கினார். சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட எழுநிலைமாடத்தைப் பூம்புகாரில்  கட்டி அதில் மக்கள் பார்த்து மகிழுமாறு பதிக்கச்செய்தார். அவற்றை ஒருமுறை பார்த்தாலே சிலப்பதிகாரத்தைப்  படித்த எண்ணம் நமக்குத் தோன்றும்.மிக அழகான கண்ணகி, மாதவி  சிலைகளையும் அங்கு நிறுவச் செய்தார். மக்கள் அவர்களை நேரில் பார்க்கும் தோற்றத்தையே அச்சிலைகள் உண்டாக்கும். ஏறத்தாழ 34 குறுக்கம் (ஏக்கர்)…

கருத்துக் கதிர்கள் 09-11: இலக்குவனார் திருவள்ளுவன் [09. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு தேவை. 10. இளைய உறுப்பினருக்கு அமைச்சர் பதவி தருவதில் தவறில்லை. 11. இராசன் செல்லப்பாவின் குரல் சரியே! ]

கருத்துக் கதிர்கள் 09-11  [09. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு தேவை. 10. இளைய உறுப்பினருக்கு அமைச்சர் பதவி தருவதில் தவறில்லை. 11. இராசன் செல்லப்பாவின் குரல் சரியே! ] 09. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு தேவை.  பா.ச.க.வின் கடந்த ஆட்சியிலும் அமைச்சரவையில் தமிழர்களுக்கு உரிய முதன்மை தரவில்லை. இப்பொழுது அடியோடு பங்களிப்பு தரவில்லை. பிற மாநிலத்தைச் சேர்ந்த தமிழர் இருவர் அமைச்சரவையில் இருப்பது மகிழ்ச்சிதான். எனினும் இவர்களைத் தமிழ்நாட்டின் சார்பாளர்களாகச் சிறிதும் கருத இயலாது.  இன்றைய நிதியமைச்சர் முன்பு…

தந்தை பெரியார் சிந்தனைகள்- 4. முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 3 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் – 4 கடவுள் – பொது ஒவ்வொரு சமயமும் கடவுளைப் பற்றிக் கருதுகின்றது. எல்லாச் சமயங்களும் உருவழிப்பாட்டைச் சார்ந்தவையாயினும் இதில் சைவமும் வைணவமும் தனித்தன்மை வாய்ந்தவை. (1) சைவம்: சைவம் சிவபெருமானையும் சிவக்குமாரர்களையும் கடவுளர்களாகக் கொண்டது. இந்திரியங்களின் துணைக் கொண்டு அறியப்பெறுவது உலகம். இவ்வுலகை உள்ளபடி காண்பவன் கடவுளையே காண்கின்றான். கடவுள் எத்தகையவர் என்று இயம்புவதன் மூலம் இவ்வுலக நடைமுறையே விளக்கப் பெறுகின்றது. குடும்பிகளுள் சிவபெருமான் ஒரு சிறந்த குடும்பி. உலகெலாம் அவர்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160 (குறள்நெறி)  நம்பியவர் மனைவியை நாடாதே! பிறன்மனை புகுந்து  சிறியோன் ஆகாதே! பிறர் மனைவியை நாடாதே! பிறர் மனைவியை விரும்பாதே! அறவாழ்வு வேண்டுமெனில், பிறர்மனைவியை விரும்பாதிரு!   (அறத்தைத் தழுவப்,) பிறர் மனைவியைத் தழுவாதே!   பிறர் மனைவியை விரும்பா அறம் புரி! தோண்டுநரைத் தாங்கும் நிலம்போல் இகழ்வாரைத் தாங்கு! பிறர் தீங்கைப் பொறுத்தலினும் மற! அறிவின்றித் தீங்கிழைப்போரைப் பொறு!  (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170]

செம்மொழி என்னும் போதினிலே …! – முனைவர் ஒளவை நடராசன்

(சூன் 6 –  தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட  நாள்) “ஆங்கிலம் பேசும் அமெரிக்க நாட்டுப் பேராசிரியராகிய நான் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் வடமொழியில் பட்டம் பெற்றேன். இலத்தீன், கிரேக்க செம்மொழிகளை அறிந்து கற்றேன். கிழக்காசிய மொழிகள் துறையில் பணியாற்றியதால் இந்திய மொழிகள், பிற ஆசிய மொழிகளின் இலக்கியச் சிறப்புகளையும் அறிந்தேன். பன்மொழிப் புலமையின் பின்னணியில் செம்மொழி தகைமையைச் சீர்தூக்கும் தகுதி எனக்கு உண்டு. செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட மொழிகளில், தமிழ் சிறப்பான இடம் பெற்றுள்ளது என்பதை எந்தத் தயக்கமுமின்றி உறுதியாக என்னால் எடுத்துச் சொல்ல முடியும்….

தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை – எழுத்தாளர், பேராசிரியர் பாரதிபாலன்

தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை  “தமிழ் படித்தால் இன்றைய சூழலில் வேலை வாய்ப்புக் கிடைக்குமா?” என்பது குறித்து தமிழ்நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் தமிழ்ப்புலத் தலைவர், புதுதில்லி சாகித்ய அகாதெமியின் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு, உறுப்பினர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கல்விப் பேரவை உறுப்பினர், கல்வியாளர், எழுத்தாளர் பாரதிபாலன் அவர்களிடம் மேற்கொண்ட நேர்காணலில் மாணவர்களுக்கான பல புதிய தகவல்கள். தற்போதைய சூழலில் உயர்கல்விக்கான வாய்ப்பு – வசதிகள் எப்படி உள்ளன? உலக அரங்கில் இந்தியா…

புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்

புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் இந்திய விண்வெளியியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கத்தூரிரங்கன் தலைமையிலான குழு ‘புதிய கல்விக்கொள்கை 2019’ என்னும் தலைப்பிலான கல்விக் கொள்கை வரைவு ஒன்றினை அண்மையில் பொறுப்பேற்றுள்ள மனிதவள மேம்பாட்டு மந்திரி இரமேசு பொக்ரியாவிடம் வழங்கியுள்ளது.  ‘வரைவு’ என்றால் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை என்று பொருள்.  இந்தக்குழு இதற்கு முந்தைய அமைச்சர் சவடேகரால் 24-6-2017-இல் அமைக்கப்பட்டு 15-12-2018-இல் தனது அறிக்கையை நிறைவு செய்தது. மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை மாறி வரும் உலகச் சூழலுக்கு ஏற்ப…

தந்தை பெரியார் சிந்தனைகள்- 3. முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 2 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 3 (ஆ) பிறிதொரு சமயம்: தந்தை பெரியாரிடம் “ஆத்திகர் ‘கடவுள் உண்டு’ என்கின்றார்கள். தாங்கள் ‘கடவுள் இல்லை’ என்கிறீர்கள். அவர்கள் ஏதோ ஒரு பொருளை நினைத்து உண்டு என்கிறார்கள். அவர்கள் பேச்சில் உண்டு என்பதன் எழுவாய் ‘கடவுள்’ நீங்கள் ‘இல்லை’ என்கிறீர்கள்? எந்தப் பொருளை நினைத்து இல்லை என்கிறீர்கள்?” என்று வினவினேன். அவர் சிறிது சிந்தித்து ‘ஒன்றும் தெரியவில்லையே. கிழவனை மடக்கி விட்டீர்களே’ என்று சொல்லிச் சிரித்தார். ‘நான் சொல்லட்டுமா?’ என்றேன்….

சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 3/3: முனைவர் இரா.வேல்முருகன், சிங்கப்பூர்

(சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் –  ஓர் ஆய்வு 2/3 இன் தொடர்ச்சி) சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் –  ஓர் ஆய்வு 3/3 [அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது. திருநெல்வேலி ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி மதுரை  திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம்  இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில்  மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய  நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்  பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில்…

வெருளி அறிவியல் 38 – 41 : இலக்குவனார் திருவள்ளுவன்

[வெருளி அறிவியல் 34 – 37 தொடர்ச்சி] வெருளி அறிவியல் 38 – 41  38. இடைவிலகல் வெருளி – exterviaphobia இடைவழியிலிருந்து விலகுவது குறித்த அளவுகடந்த பேரச்சம் இடைவிலகல் வெருளி. exter என்றால் கிரேக்கத்தில் வெளிப்புறம் என்றும் via வழி என்றும் பொருள். exter என்றால் இலத்தீனில் தன்னியல்பான எனப் பொருள். இலத்தீனிலும் via என்றால் வழி என்றுதான் பொருள். 00 39.இருள் வெருளி-Achluophobia/Lygophobia/Nyctophobia/Scotophobia இரவு, இரவுப்பொழுதில் வரும் இருட்டு முதலியன குறித்த வரம்பு கடந்த பேரச்சம் இரவு வெருளி/ இருண்மை வெருளி/…

வெருளி அறிவியல் 34 – 37 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல்  –  31-33 தொடர்ச்சி) வெருளி அறிவியல் 34 – 37  34. ஆண்வெருளி– Androphobia/Arrhenphobia/Hominophobia ஆண்களைக் கண்டால் ஏற்படும் அச்சம் ஆண் வெருளி. ஆண்களைக் கண்டு அஞ்சுவது குறித்துக் கூறுவதால் இது பெண்களுக்கு வரும் எனப் புரிந்து கொள்ளலாம். ஆடவர் தங்களை அடக்கி ஒடுக்குவார்கள், துன்பம் இழைப்பார்கள், தவறாக  நடந்து கொள்வார்கள், தவறான முறையில் பழகி அவப்பெயர் ஏற்படுத்துவார்கள் என்று பல வகைகளில் ஆண்கள் மீது வரும் பேரச்சம். இத்தகையோர் ஆண்கள் மீதுள்ள அச்சத்தால் பொது வண்டிகளில் ஏறாமல் பெண்கள் வண்டிகளில்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 131-140 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 (குறள்நெறி)  (ஆக்கம் சேரவேண்டுமெனில்,) அழுக்காறு கொள்ளாதே! (உயர்வு வேண்டுமெனில்,) ஒழுக்கம் இல்லாதிராதே! (இழிவின் துன்பம் அறிந்து) ஒழுக்கம் தவறாதே! ஒழுக்கத்தால் மேன்மையுறு! ஒழுக்கந்தவறிப் பழி அடையாதே! (நன்றே தரும்) நல்லொழுக்கம் பேணு! (துன்பமே விளைவிக்கும்) தீயொழுக்கம் நீக்கு! தவறியும் இழிந்தன பேசாதே! உலகத்தாரோடு இணங்கி வாழ்! பிறர் மனைவியை விரும்பாதே! (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160]