தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 தொடர்ச்சி) 08   “தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் தோன்றும் நிலை ஏற்படவில்லை. தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் உயர் அறிஞர்கள் தோன்றியுள்ளனர். ஆதலின் ஆங்கிலம் அகன்றால் அறிவியல் வளராது என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகலுதல் வேண்டும். பிற நாடுகளைப் போன்றே…

தொல்காப்பியர் தலைசிறந்த மொழிநூல் புலவர் – சி. இலக்குவனார்

   சொற்களுள் சில பொருளுணர்த்தும் மரபினையும் புதிய சொற்கள் அவ்வப்போது படைத்துக்கொள்ளப்படலாமெனவும், வழங்கும் சொற்களையே உருக்குறைத்து வழங்குதல் உண்டெனவும், சொல்லுக்குரிய பொருளென்ற குறிப்பால் வேறு பொருள் பெறப்படுதல் உண்டெனவும் ஒரு பொருள் தரும் இரு சொற்களைச் சேர்த்துக் கூறல் இயல்பெனவும் வழக்காற்றில் சொல் பயனுறும் முறையைத் தெள்ளிதின் விளக்குவதனால் ஆசிரியர் மொழி நூற்புலவராகவும் விளங்குகின்றார்.    மொழி என்பது மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் கருவி; அக்கருவி வழக்காற்றினுள்ளும் செய்யுளுள்ளும் எவ்வாறு பயன்பட்டு வருகின்றது என்பதனைப் பதினெட்டு இயல்களால் ஆராய்ந்து கூறியுள்ள சிறப்பு வேறு எம்மொழிக்கும்…

வரலாறு எழுதுவோர் தெல்காப்பியம் கற்க வேண்டும் – சி. இலக்குவனார்

       வரலாற்று நூலாசிரியர்களில் பெரும்பான்மைபினர் தொல்காப்பியத்தைக் கற்றறியும் பேறு பெற்றிலர். ஆகவே தமிழர்களைப் பற்றித் தவறான செய்திகளை எழுதி விட்டனர். தமிழக வரலாறு எழுதுவோர் தொல்காப்பியத்தைக் கற்று அறிதல் வேண்டும். அப்பொழுதுதான் தமிழர்களைப் பற்றிய உண்மையான வரலாற்றினை எழுதுதல் கூடும். செம்மொழிச் செம்மல் முனைவர் சி. இலக்குவனார்  : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 127

தொல்காப்பியம் வரலாற்றுக் கருவூலமாகும் – சி.இலக்குவனார்

எகிப்தியரும், கிரேக்கரும், சீனரும், தொன்மை வாய்ந்த நாகரிகமும் பண்பாடும் உடையவர் என்று வரலாறுகள் கூறுகின்றன. தமிழரும் மிகமிகத் தொன்மை வாய்ந்த நாகரிகமும், பண்பாடும் உடையவர் என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாகும். ஆனால் இத் தொல்காப்பியத்தை உலகம் இன்னும் நன்கு அறிந்திலது. தமிழர்களே அறிந்திலர். தொல்காப்பியப் பொருட்படலம் இலக்கிய விளக்கம் தரும் இன்ப நூலாக மட்டுமின்றி வரலாற்றுக் கருவூலமாகவும் அமைந்துள்ளது. செம்மொழிச் செம்மல் முனைவர் சி. இலக்குவனார்  : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 126

” வாழ்வு இன்பத்திற்குரியது” என்று தமிழ்ப் பெரியார்கள் நிலைநாட்டினர்.- சி. இலக்குவனார்

  வாழ்வின் குறிக்கோள் என்ன? இன்பமாக வாழ்தல். வாழ்வே இன்பத்திற்குரியது. வாழ்வில் ஒரொருகால் துன்ப நிகழ்ச்சிகள் தோன்றினும் அவையும் இன்பத்திற்கு அடிப்படையாகும்; ஆதலின் இன்பமென்றே கருதத் தக்கன. எல்லாம் இன்பமயம். இன்ப வாழ்வுக்கே இன்ப வாழ்வால் மக்கள் தோன்றியுள்ளனர். உலகில் தோன்றிய பிற நாட்டுப் பொரியார்கள், ” உலகம் துன்ப மயம் ; துன்ப வழ்விலிருந்து விடுதலை பெறுவதே வாழ்வின் குறிக்கோள்” என்றனர். தமிழ்ப் பெரியார்கள் அவ்வாறு கருதாது, “வாழ்வு இன்பத்திற்குரியது; இன்பமாகவாழ்தலே வாழ்வின் குறிக்கோள்” என்று நிலைநாட்டினர். அவ்வின்ப வாழ்வுக்கு அடிப்படை இல்லற…

வேற்றுமொழிப் பெயர்ச் சொல்லைத் தமிழோசைவூட்டியே கொள்ளல் வேண்டும் – சி.இலக்குவனார்

           வேற்று மொழிப் பெயர்ச் சொல்லைக் கொள்ள வேண்டிய இன்றியமையாத நிலை ஏற்படின் கொள்ளலாம் என்றும், கொள்ளுங்கால் தமிழோசையூட்டியே கொள்ளல் வேண்டுமென்றும் ஆசிரியர் கூறியிருப்பதை அறியாது வரையறையின்றி வேற்று மொழிச் சொற்களை அம்மொழிகளில் உள்ளவாறே தமிழில் எடுத்தாளத் தொடங்குவது தமிழுக்கு அழிவு தேடித் தருவதாகும்; தொல்காப்பியர் கொள்கைக்கு மாறு பட்டதாகும்; மொழி நூலுக்கும் முரண்பட்டதாகும். செம்மொழிச் செம்மல் முனைவர் சி. இலக்குவனார்  : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 117

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்!

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்! திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் என்னும் பாரதியார் நல்லுரைக்கிணங்க அயல்நாட்டாராலும் போற்றத்தகும் புலமையும் பிறர் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகம் வணங்கச் செய்யும் தமிழ் வளமையும் மிக்க அருந்தமிழ்ச் சான்றோர் பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள்.   தமிழ்நாட்டில் சென்னை மாநிலக்கல்லூரியில் 30 ஆண்டுகளும் புறநகர்க்கல்லூரிகளில் 5 ஆண்டுகளும் கல்விப்பணி ஆற்றியதுடன் ஓராண்டுக்காலம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். அங்குப் பணியாற்றுகையில் அப்பல்கலைக்கழகம் சார்பில் பிற அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும்…

ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை1/2 – புகழேந்தி தங்கராசு

1/2     ஒரு தலைமுறையையே தலைநிமிரச் செய்த பிரபாகரனின் பிறந்தநாளை, எண்ணூர் அசோக்கு இலேலண்டுத் தொழிலாளர்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வை.கோ கொண்டாடியதுதான், இந்த வாரத்தின் நெகிழ்ச்சி நிகழ்ச்சி. காலை ௭ (7.00) மணிக்குத் தொழிலாளர்களுக்கு இனிப்புருண்டை (இலட்டு) வழங்கத் தொடங்கியவர், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குக் கொடுத்து முடிக்கிற வரை சலிக்கவேயில்லை. இத்தனைக்கும் தொழிலாளத் தோழர்கள், வை.கோ-விடமிருந்து இனிப்புப் பெறுவதைக் காட்டிலும், அவருடன் கைக்குலுக்குவதில்தான் அதிக அக்கறை காட்டினர்.  அசோக்கு இலேலண்டிலிருந்து மகிழ்ச்சியுடன் திரும்பிய ஓரிரு மணி நேரத்தில், யாழ்ப்பாணம் அருகே ௧௮ (18)…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 02 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 1 – தொடர்ச்சி)  02 யார்க்கும் அஞ்சாதே! எதற்கும் அஞ்சாதே!   இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் வாழ்ந்த பாரதியார், மக்களின் அடிமைத்தனத்திற்குக் காரணம் அச்சமே என்பதை உணர்ந்தார். எனவே, அச்சப்பேயை விரட்டுமாறு பல இடங்களில் வலியுறுத்துகிறார். அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம் கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம் யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம் (பாரதியார் கவிதைகள் பக்கம் 98/ விநாயகர் நான்மணிமாலை) என்கிறார். எதற்கும் அஞ்ச வேண்டா என்பதற்காக, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதும்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 10: தொடர்ச்சி) 11   தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க கால வரலாறு சரியாக எழுதப் பெறவில்லை. புலவர்கள் பிறந்த இடம், பிறந்த நாள், வளர்ந்த சூழ்நிலை ஆகியவை முறையாக எழுதி வைக்கப் பெறவில்லை. சிறப்பான செய்யுட்கள் பலவற்றை எழுதிய புலவர்கள் தம்மைப் பற்றி எழுதுவதைத் தற்புகழ்ச்சி என எண்ணி விட்டார்கள் போலும். அதனால் சங்கச் செய்யுட்களைக் கால வரிசைப் படி தொகுக்க முடியவில்லை.   பதிற்றுப் பத்து என்ற செய்யுள் தொகுப்பு மட்டும் இதற்கு சிறிது…

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 3/3 – வாலாசா வல்லவன்

(பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 2/3 தொடர்ச்சி) 3/3   15-2-1953 சென்னை மாவட்டத் திராவிடர் கழகச் செயற்குழு 22-2-1953 அன்று சென்னைக்கு வரும் குடியரசுத் தலைவர் இராசேந்திரப் பிரசாத்துக்குக் கருப்புக் கொடி காட்டத் தீர்மானித்தது.(விடுதலை 16-2-1953). அன்றே திராவிடர் கழக நடுவண் செயற்குழு கூடி இந்தியக் குடிஅரசுத் தலைவர் இராசேந்திரப் பிரசாத்து சென்னைக்கு வரும் அன்றே ‘தமிழக உரிமைப் பாதுகாப்பு நாள்’ தமிழகமெங்கும் கொண்டாடும்படித் தீர்மானம் நிறைவேற்றியது. (விடுதலை 16-2-1953).   திட்டமிட்டபடி இராசேந்திரப் பிரசாத்துக்குக் குத்தூசி குருசாமி தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்…

தன்மானத்தலைவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் – கதிர்நிலவன்

  நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவு நாள் கார்த்திகை 29, 1990 / திசம்பர் 14, 1959 ஆரிய எதிர்ப்பும் திராவிட மறுப்பும்   1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில்தான் மொழிவழி அடிப்படையில் தமிழ்த்தேசிய இனம் தன்னைத்தானே அடையாளங் கண்டது. அப்போராட்டத்தின் மூலமாக உருவான மொழிவழி மாகாணக் கோரிக்கையும், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கமும் அப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத் தலைவர்களால் திராவிடன், திராவிட நாடு என்று மடைமாற்றம் செய்யப்பட்டது.   முதல் இந்தி எதிர்ப்புப் போரில் உருவான தமிழின அடையாளத்தை இழக்க…