சி.இலக்குவனார் – சில நினைவுகள் : தீக்கதிர்

சி.இலக்குவனார் – சில நினைவுகள் “ஆறடி வளர்ந்த நல்ல ஆண்மையர் தோற்றம் விஞ்சம் மாறனோ ஆரன் தானோ மற்றெனின் சேரர்கோனோ வீறுடன் நீண்டமேலாடை வீசுகை முழந்தாள்தோய ஏறுபோல் நிமிர்ந்து செல்லும் இலக்குவனார்…” என்னும் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் நயமிகு பாடலடிகள் இலக்குவனாரை உள்ளத்திரையில் பதியவைக்கும். இலட்சுமணன் எனத் தமது பெற்றோரால் பெயரிடப்பட்டிருந்தவர், பள்ளிப்பருவத்தில், தமது தமிழாசான் சாமி. சிதம்பரனார் வழங்கிய அறிவுரையால், இலக்குவன் எனத் தமிழ்மணம் கமழும் பெயராக மாற்றிக் கொண்டார். “இராமனை ஏற்றுக்கொள்ளாத கருஞ்சட்டைக்காரனாகிய நீ இலட்சுமணன் எனப் பெயர் வைத்துக்கொள்வதேன்?” எனத்…

தொல்காப்பிய உரையாசிரியர்கள் – மு. வை. அரவிந்தன்

தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதலாக உரை இயற்றியதால் இளம்பூரணர்க்கு ‘உரையாசிரியர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்குப் பின் வந்த தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இவர் உரையைக் கற்றுத் தெளிந்த பின்னரே தம் கருத்தை விளக்கிப் புதிய உரை கண்டனர்.      இளம்பூரணர்க்குப் பின்னர்த் தோன்றிய சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மட்டும் சிறந்ததோர் உரை இயற்றினார்.      பேராசிரியர், பொருளதிகாரத்திற்கு விரிவாக உரை இயற்றினார். நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் முழுமைக்கும் விரிவான உரை கண்டார். இவருக்குப் பின், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய இருவரும் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை…

திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா!  தேர்தல் அரசியலுக்காகப் பெரும்பான்மைக் கட்சிகள் திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்போக்கு வரலாற்றை மறைப்பதாகும். குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (திருக்குறள் 504) எனத்   தெய்வப்புவலர் திருவள்ளுவர் நமக்கு வழிகாட்டியுள்ளார்.   எதிர்க்கும் கட்சிகளின் நிறைகளைக் கூறுவதற்கு மனம் வராதுதான். அதற்காக ஆற்றிய யாவும் தீமை என்பதுபோல் பேசக்கூடாதல்லவா? குறைந்தது குறைகளைப் பட்டியலிட்டு இத்தகைய குறைகளுக்காக இவற்றை ஆட்சிக்கு மீண்டும் வரச்செய்யக்கூடாது என்று சொல்லாம் அல்லவா?  …

கானல் நீரும் குடிநீராகலாம்! தேர்தல்முறையால் மக்களாட்சி மலராது! – மு.இலெனின் சுப்பையா

கானல் நீரும் குடிநீராகலாம்! தேர்தல்முறையால் மக்களாட்சி மலராது!   கானல் நீரில், குடிநீர், மின்சாரம்,  கன்னெய்(பெட்ரோல்), ஏப்புநோய்(எய்ட்சு), புற்றுநோய் போன்ற நோய்களுக்கான மருந்து, பசிப்பிணி போக்கும் மருந்து, அறுவையின்றி அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருந்து,  தங்கம், வைரம் ஆகியன பெறலாம் என்ற இந்த அனைத்துக் கற்பனைகளும்கூடச் சாத்தியமாகலாம். ஆனால் தேர்தல் சீர்திருத்தம் செய்யாமல் ஊழலையும், கையூட்டையும் இந்த நாட்டில் இருந்து அறவே ஒழித்து விடலாம் என்பது ஆயிரம் ஆண்டுகளானாலும் இயலாது என்பதற்கு மாற்றுக்கருத்தே இல்லை என்பதே உள்ளங்கை நெல்லிக்கனி.     இந்த நாடு விடுதலைபெற்று…

கடம்பறுத்தல்: மயிலை சீனி.வேங்கடசாமி

கடம்பறுத்தல்: அரபிக் கடலில் பல சிறு தீவுகள் உள்ளன.1 ‘இரு முந்நீர்த் துருத்தி’2 என இது பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது. அங்குக் கடம்ப (கடப்ப) மரத்தைக் காவல் மரமாக உடைய அரசன் ஒருவன் இருந்தான். அவனைக் கடம்பன் என்றே குறிப்பிடலாம்.3 நெடுஞ்சேரலாதன் தன்னிடமிருந்த பெரும்படையைக் கடற்போரில் ஈடுபடுத்தினான்;4 கடம்பனைத் தாக்கினான். நெடுஞ்சேரலாதன் கடம்பனின் படையைக் கொன்று குவித்தான். குருதி ஆறு ஓடிக் கடற்கழிகளைச் செந்நிறமாக்கியது. காவல் மரம் கடம்பு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டது. அதன் அடித் துண்டால் அக்கால வழக்கப்படி நெடுஞ்சேரலாதன் தனக்குப் போர் முரசு…

புறநானூற்றுப் புதிய சொ ற்கள் தேடல் – மோகனா : 2/3

2   அடுத்த நிலையில் கலைஞர்கள் எனும்போது, மிகுந்த கவனத்திற்குரிய சொல்லாகக் ‘கூத்தர்’ என்னும் சொல்லின் அறிமுகத்தைக் கூறலாம். சோழன் நலங்கிள்ளியைப் பாடிய உறையூர் முதுக்கண்ணன் சாத்தனாராலேயே இச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கவனித்தக்கது என்னவென்றால் பத்துப்பாட்டில் ஒன்றான நச்சினார்க்கினியர் மற்றும் இளம்பூரணரால் ‘கூத்தராற்றுப் படை’ என்று அழைக்கப்படுகின்ற மலைப்படுகடாத்தில் கூட இச்சொல் பயின்றுவரவில்லை. பிற சங்க இலக்கியங்களிலும் இச்சொல்லைக் காணமுடியவில்லை. ஆடுகளத்தோடு தொடர்புபடுத்தி இச்சொல்லைப் பயன்படுத்தியவர் முதுக்கண்ணன் சாத்தனாரே. [‘பூம்போது சிதைய விழ்ந்தெனக் கூத்த/ ராடுகளங் கடுக்கு மகநாட் டையே’ (புறநானூறு:28:13),]  கூத்தராடுகின்ற ஆடுகளத்திற்கு…

பம்புளி என மருவிய பைம்பொழில் – இரா.பி.சேது(ப்பிள்ளை)

பம்புளி என மருவிய பைம்பொழில்     மரங்களும், செடி கொடிகளும் செழித்தோங்கி வளரும் சோலையைப் பொழில் என்னும் அழகிய சொல் குறிப்பதாகும். ஆல மரங்கள் செறிந்து, அழகிய சோலையாக விளங்கிய ஓர் இடத்தைத் திருவாலம் பொழில் என்று தேவாரம் பாடிற்று. ஆலம் பொழிலில் அமர்ந்த பெருமானைத் திருஞானசம்பந்தர் தெள்ளிய பாமாலை அணிந்து போற்றியுள்ளார். இன்னும், மலைவளம் வாய்ந்த திருக்குற்றால மலையின் அடிவாரத்தில் கண்ணினைக் கவரும் தண்ணறுஞ் சோலைகளின் நடுவே, ஓர் அழகிய ஊர் அமைந்திருக்கிறது. அவ்வூரின் இயற்கை நலத்தினைக் கண்டு இன்புற்ற பண்டைத்…

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; ஏழு தமிழருக்கு ஒரு நீதியா? – விடுதலை இராசேந்திரன்

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; ஏழு தமிழருக்கு ஒரு நீதியா?   தேர்தல் நாள் அறிவிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்புதான் தமிழக அரசுக்குத் திடீர் ‘அறிவுப்புலர்ச்சி’ வந்தது. இராசீவு கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுவிப்பது குறித்து மீண்டும் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டது. நவம்பர் 2ஆம் நாள் உச்சநீதிமன்றம் இது குறித்துத் தீர்ப்பளித்த பிறகு, மூன்று மாதக் காலம் உறங்கிக் கிடந்தது தமிழக அரசு. எதிர்பார்த்தபடியே, அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், பேராயக் (காங்கிரசு) கட்சியைச்…

சங்கக்காலத்தில் சேரலாதன் என்னும் பெயர் கொண்ட அரசர் நால்வர் – மயிலை சீனி.வேங்கடசாமி

 சங்கக்காலத்தில் சேரலாதன் என்னும் பெயர் கொண்ட அரசர் நால்வர் இருந்தனர். நெடுஞ்சேரலாதன் இரண்டு பேர். இவர்கள் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்போர் ஆவர். பெருஞ்சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோர் மற்ற இருவர். இவர்களுள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசர்கள் எனும் இப் பகுதியின் கீழும், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசப் புலவர்கள் எனும் தலைப்பின் கீழும் காணலாம்.   நெடுஞ்சேரலாதன் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியோடு போரிட்டு மாண்டான். பெருஞ்சேரலாதன் கரிகாற் பெரு வளத்தானோடு போரிட்டு…

தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்!     நிகழ இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலில்(2016)  பன்முனைப் போட்டிகள் உள்ளன. ஒவ்வோர் அணியும் நம்பிக்கையுடன் உள்ளதாகத்தான்  கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் தேர்தல்  நெருங்க நெருங்க இப்போதைய சூழலில் மாற்றம் ஏற்படும். எனவே, சிலர் நம்பிக்கைகள் பொய்த்துப்போகும். சிலர் எதிர்பார்த்ததைவிட வாக்குகள் கூடுதலாக வாங்கலாம். கூட்டணியாகப் போட்டியிடாத கட்சிகளும் தேர்தலுக்குப்பின் புதிய கூட்டணி அமைக்கலாம். எனினும் இன்றைய நம் கடமை, யாருக்கு நம் மதிப்பார்நத வாக்குகளை அளிக்க வேண்டும்  என ஆராய்ந்து வாக்குரிமையைப் பயன்படுத்துவதுதான். யார் வெற்றி பெற்றால் என்ன…

காடு என்னும் பெயருடைய பல ஊர்கள் – இரா.பி.சேது(ப்பிள்ளை)

   காடு என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டில் பல உள்ளன. தொண்டை நாட்டில் பழையனூருக்கு அணித்தாக உள்ளது திருவாலங்காடு. பொன்னேரிக்கருகே உள்ளது பழவேற்காடு. கருவேல மரங்கள் நிறைந்திருந்த பழமையான காடு பழவேற்காடு எனப்பட்டது போலும். அவ்வூரில் வந்து குடியேறிய ஐரோப்பியர் அதனைப் புலிக் காடாக்கி விட்டனர். சோழ நாட்டில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் ஏனைய தமிழரசர் இருவருக்கும் பெரும் போர் நிகழக் கண்ட காடு தலையாலங்காடாகும். இன்னும், சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால்…

செங்குட்டுவன் போன்ற செம்மல்கள் இன்று இருப்பின் நீலகண்ட சாத்திரி போன்றார் தமிழை இழித்துரைப்பார்களா? – சி.இலக்குவனார்

செங்குட்டுவன் போன்ற செம்மல்கள் இன்று இருப்பின் நீலகண்ட சாத்திரி போன்றார் தமிழை இழித்துரைப்பார்களா?   கல்வியும் செல்வமும் உடைய தமிழர்கள் தாமுண்டு தம்வாழ்வுண்டு என்று கூற்றுவனுக்கு நாளோட்டுகின்றனரேயன்றித் தமிழினப் பெருமையை எண்ணிச் செயலாற்றும் இயல்பைப் பெற்றிலர். அன்று வாய்வாளாண்மையின் வண்டமிழ் இகழ்ந்த வடவரை அடக்க வலிதிற் சென்ற செங்குட்டுவன் போன்ற செம்மல்கள் இன்று இருப்பின் நீலகண்ட சாத்திரி போன்றார் ஆரியர்கள் வரும் முன்னர் தென்னிந்தியா வளமுற்றிருந்தது என்பதற்கோ நாகரிகச் சிறப்புடன் சிறந்தது என்பதற்கோ இதுவரை சான்று கிடையாது என்று கூறுவார்களா? கி,மு,ஏழாம் நூற்றண்டினது எனக்…