சாதிகள் ஒழிந்தால் மக்களாட்சி வேரூன்றும்! – சி.இலக்குவனார்

சாதிகள் ஒழிந்தால் மக்களாட்சி வேரூன்றும்!   இன்னும் மக்களாட்சி முறைக்குரிய தேர்தலுக்கு வேட்பாளர் களை நிறுத்துவது சாதி அடிப்படையிலேயே நிகழ்கின்றது என்பதை யார்தாம் அறியார். வேட்பாளர் தகுதியறிந்து வாக்குகள் கொடாது சாதியறிந்துதானே கொடுக்கின்றனர் பெரும்பாலார். சாதிகள் வேண்டா என்று பறை சாற்றும் கட்சிகள்கூட இந்நிலையைப் புறக்கணிக்க முடியவில்லையே! ஆகவே சாதிகளின் பேரால் நிகழும் அனைத்தையும் தடுத்து நிறுத்தற்குச் சட்டத்தின் துணையை நாடல் முற்றிலும் பொருத்தமேயாகும். எம்முறையிலானும் சாதிகளை ஒழித்தல் வேண்டும். எவ்வளவு விரைவில் சாதிகன் ஒழிகின்றனவோ அவ்வாளவு விரைவில் நாட்டு நலம் காக்கப் பட்டதாகும்….

ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்!

ஈழத்தமிழரைப் படுத்தும் பாடு! வருங்காலம் நம்மைப் பழிதூற்றும்! செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு (திருக்குறள் 86) என்னும் திருவள்ளுவர் நெறி தமிழர்க்கே உரிய பண்பு என்கிறோம். தவத்தோர் அடைக்கலம் தான்சிறி தாயினும் மிகப்பே ரின்பம் தருமது கேளாய் (சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை) என இளங்கோஅடிகள் கூறும் அடைக்கலப்பண்பில் சிறந்தவர்கள் நாம் என்கிறோம்.   ஆனால், இவையெல்லாம் யாருக்காக? நம்மவர் – தமிழினத்தவர் – எனில் விருந்தினராகக் கருதுவதும் கிடையாது; அடைக்கலம் தருவதும் கிடையாது.   ஒருவேளை அடைக்கல நாடகம் ஆடினாலும் அவர்களை உள்ளத்தாலும்…

தமிழ்ப் புலவர்கள் வடசொற்கலப்பைத் தடுத்தனர் – பரிதிமாற்கலைஞர்

பௌத்தர் தலையெடுத்த பொழுது தமிழ்ப் புலவர்கள் வடசொற்களைத் தமிழ்மொழியின் கண்ணே கலக்கவொட்டாது தடுத்தனர்.   பின்னர்ப் பௌத்தராயினார் தலையெடுத்துத் தம் மதத்தை யாண்டும் பரப்பிப் பல்லாயிரக்கணக்கான சனங்களைச் சேர்த்துக் கொண்டு அக்காலத்திருந்த ஆரியரை யெதிர்த்தனர். இப்பகைமை தென்னாட்டினும் பரவிற்று. பரவவே தமிழருட் பலர் பௌத்தமதம் மேற்கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்கமுற்றிருந்தனர். அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப் புலவர்கள் தங்களாற் கூடியமட்டில் வடசொற்களைத் தமது தமிழ்மொழியின் கண்ணே கலக்கவொட்டாது தடுத்தனர். முன்னரே தமிழிற் போந்து வேரூன்றி விட்ட வடசொற்களைத் தொலைப்பது அவர்கட்குப் பெருங் கடினமாய் விட்டது. ஆதலின்…

பழந்தமிழ் நூல்களில் இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை! – பரிதிமாற்கலைஞர்

பழந்தமிழ் நூல்களில் இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை.   இனித் தமிழ்ப் புலவர்களாயினார், சற்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப்பார்த்தும் அவற்றை விலக்குதல் முடியாது போயிற்று. போகவே தமிழ்ப்புலவர்களுந் தங்கள் முயற்சிகளெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத்திலக்கண விதிகட்குத் தக்கவாறு திரித்து மேற்கொள்வாராயினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர். பின்னர்க் கொஞ்சங் கொஞ்சமாக வட சொற்கள் பல தமிழ் மொழியின்கண் இடம் பெறுவன வாயின.   அதன்மேல் முதலிடை கடையெனும் முச்சங்கத்தார் காலத்தினும்…

மனித நேயர் ஊடகப்போராளி மேத்தியூ இலீயை ஐ.நா. வெளியேற்றியது!

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த மேத்தியூ இலீயை ஐ.நா.வலுக்கட்டாயமாக வெளியேற்றியது!   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புலம்பெயர் தமிழ்த் தலைமைகள் வரை எல்லா அமைப்புகளும் ‘ஐக்கிய நாடுகள் அவையை நம்பினோர் கைவிடப்படார்’ என மக்களை ஏமாற்றி வருகின்றன. ௨௦௦௯ (2009)-ஆம் ஆண்டு இனப்படுகொலை தொடங்கிய நாளிலிருந்தே இந்த ஏமாற்று வேலை மிகு வேகத்தில் தொடங்கி விட்டது. புலிகளையும் அதன் தலைவர்களையும் மக்களோடு சேர்ந்து வன்னியில் குந்தியிருக்குமாறு இத்தலைமைகள் அறிவுரை வழங்கின. அங்கு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் அவையும் திடீரெனத் தோன்றிக் காப்பாற்றிவிடும் என்று ஏமாற்றினர்….

புலவர்களே அரசர்களின் அறிவுரையாளர்கள் – பேரா.சி.இலக்குவனார்

புலவர்களே அரசர்களின் அறிவுரையாளர்கள்   புலவர்கள் தாம் அக்காலத்து அரசர்தம் அறிவுரையாளர்கள் ; மக்களை நல்வழிப்படுத்தும் விதிகள் பல அமைக்கும் சட்ட மன்றம் போன்றவர்கள். அரசரேயாயினும் யாவரே யாயினும் நெறிதவறிச் சென்றால் அதனை எடுத்துக்காட்டி நேர்வழி நடக்க அறிவுரை கூறுவார்கள். இக்காலத்து மக்களாட்சி அரசு மக்களுக்குச் கேடு பயக்கும் நெறி முறைகளை மேற்கொள்ளத் தொடங்கினால் எதிர்க் கட்சிகள் எதிர்த்து நின்று அரசின் குற்றங்களை எடுத்து இயம்புகின்றன. அக்காலத்தில் கட்சி முறையில் ஆட்சி இல்லை. ஆகவே புலவர்களே அப்பணியையும் ஆற்றிவந்தனர். -பேரா.முனைவர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய…

தென்னாட்டு வடமொழியாளர் தமிழ்ப் பெயர்களைத் தங்கள் சப்த சாத்திரத்திற் கியைந்த வண்ணம் மாற்றிப் புகுத்தினர்.

தென்னாட்டு வடமொழியாளர் தமிழ்ப் பெயர்களைத் தங்கள் சப்த சாத்திரத்திற் கியைந்த வண்ணம் மாற்றிப் புகுத்தினர். இவ்வாறு தமிழருட் பண்டிதராயானார் வடமொழியைத் தமிழின்கண் விரவவொட்டாது விலக்கியும், பாமரராயினார் வடமொழிச் சொற்களுட் பலவற்றை மேற்கொண்டு வழங்கப் புகுந்தமையின் நாளாவட்டத்தில் வட சொற்கள் பல தமிழ்மொழியின்கண்ணே வேரூன்றிவிட்டன. அவ்வாறாயின் இதுபோலவே வடமொழியின் கண்ணும் தமிழ்ச் சொற்கள் பல சென்று சேர்ந்திருத்தல் வேண்டுமன்றோ? அதையும் ஆராய்வாம்.   வடமொழி தமிழ் மொழியொடு கலக்கப் புகுமுன்னரே, முன்னது பேச்சுவழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஏட்டுவழக் கொன்றுமேயுள்ள மொழியோடு இருவகை வழக்கமுள்ள…

ஆரியர் முயற்சிக்கு இணங்காமல் தமிழ்ப் புலவராவார் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார்.

ஆரியர் முயற்சிக்கு இணங்காமல் தமிழ்ப் புலவராவார் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார்.   தமிழருட் சாமானிய சனங்கள் அவ்வாரியரது விருப்பத்திற்கேற்ப எவ்வளவிணங்கிய போதிலும், புலவராயினார் அவர்களது திருத்தப் பாட்டிற்குப் பெரிது மிணங்கினரல்லர். ஒழுக்கச் சீர்ப்பாடு ஏற்பட்டபோதினும் மொழித் திருத்தம் ஏற்படவில்லை. தமிழின் முப்பத்தோரெழுத்துகளும் அவ்வறே யின்றளவு மிருக்கின்றன; சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக் கொள்ளுமியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி தமிழிலிபியை யொட்டிக் ‘கிரந்தம்’ என்னும் பெயரிற் புதுவதோர் இலிபிவகுத்தனர்; தமிழரை வசீகரிக்குமாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந்தனர். தமிழ்ப்…

மெய்ப்பாட்டாராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை! – பேரா.சி.இலக்குவனார்

மெய்ப்பாட்டாராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை!   இலக்கிய மாந்தர்கள் உள்ள உணர்ச்சியால் உந்தப்படுகின்றகாலை எவ்வாறு சொல்லோவியப் படுத்துதல் வேண்டும் என்பதற்கு மெய்ப்பாட்டியல் மிகவும் துணைபுரியும். இவ்வகையான ஆராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை என்றே கூறலாம். வடமொழியில் நடனம் பற்றிய மெய்ப்பாடுகள் கூறப்பட்டுள்ளன. அவையும் தமிழ் நூல்களைப் பின்பற்றியனவேயாம். இலக்கியப் படைப்புக்கும் இலக்கிய ஆராய்ச்சிக்கும் உரியனவாகக் கூறப்பட்டுள்ள மெய்ப்பாடுகள் பற்றிய இவ்வியல் முழுதும் கிடைக்கப் பெற்றிலதோ என்று ஐயுற வேண்டியுள்ளது. ஒவ்வொரு இயலிலும் சொல்ல எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய விளக்கம் கூறிய பின்னர், வகை கூறத்…

மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்

மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதேயாகும்.  “மெய்ப்பாடு என்பது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுதல்.” இவ்வாறு பேராசிரியர் கூறியுள்ளார். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில் தோன்றும் வேறுபாடு என்பது தான் “மெய்ப்பாடு” என்பதன் பொருள். புளியை உண்டால் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப முகம் சுளிக்கின்றது. எதிர்பாராத விதமாக அருகில் அரவம் இருக்கக் கண்டால் அஞ்சுகின்றோம். அவ் வச்சத்தால் ஏற்படும் உணர்ச்சிக்கேற்ப உடல் நடுங்குகின்றது. இலக்கியத்தைப் படிக்கும்போதும் இலக்கியத்தின் இயல்புக் கேற்ப நம் உள்ளத்தில் உணர்ச்சி உண்டாகின்றது. அவ்வுணர்ச்சிக்கேற்ப…

“செவியறி வுறூஉ”, “வாயுறை வாழ்த்து”- பிறரைத் திருத்துவதற்காகப் பாடுவனவே.

“செவியறி வுறூஉ”, “வாயுறை வாழ்த்து” என்பன புலவர்கள் பிறரைத் திருத்துவதற்காகப் பாடுவனவே.      மேனாட்டில் அரசியலறிஞர்கள் பலர் – உரூசோ, காரல் மார்க்சு, பெயின், மெக்காலே போன்றவர்கள் – அவர்தம் காலத்து அரசைத் திருத்துவதற்காக எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள், இன்று பேரிலக்கியங்களாய்த் திகழ்கின்றன. அவ்வாறே, தமிழ் நாட்டிலும் அரசைத் திருத்த – நல்வழிப்படுத்த – செங்கோலாட்சி புரியக் கூறிய கருத்து நிறைந்த பாடல்கள் பேரிலக்கியப் பகுப்பினுள் அடங்குவனவாய் உள்ளன. புலவர்கள் பொருள் கருதிப் புகழ்ந்து பொய்வாழ்வு நடாத்தினர் என்று கருதுதல் கொடிது. இடித்துரைத்து மக்களுக்கு…

திருக்குறள் இளமையும் புதுமையும் உள்ள நூல் – நாமக்கல் கவிஞர்

திருக்குறள் என்றென்றும் அழியாத இளமையும் புதுமையும் உள்ள நூல்   உலகத்திற்கு தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்று நம்முடைய திருக்குறள். காலம் இடம் நிறம் மதம் என்று வேறுபாடுகளைக் கடந்து எங்கெங்கும் உள்ள எல்லா மனிதருக்கும் எக்காலத்திலும் பயன்தரக்கூடிய அறிவுரை நிரம்பிய அறநூல் திருக்குறள். மனித வருக்கத்தின் இயற்கையமைப்பில் எந்தக் காலத்திலும் மாறுதல் இல்லாதனவாகிய தத்துவங்களையே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால், திருக்குறள் என்றென்றும் அழிவில்லாதிருக்கும். அதுமட்டுமின்றி எப்போதும் இளமையும் புதுமையும் உள்ளதாகவே இருக்கும். மனித சமூகத்துக்கு இன்றியமையாத எல்லா நல்லறிவையும் இப்படித் தொகுத்து வகுத்துத் தந்துள்ள…