தமிழ்க்கருத்துகளை ஆரியமாக ஏமாற்றிய வடமொழியாளர் – பரிதிமாற்கலைஞர்
தமிழரிடத்திருந்த பல அரிய செய்திகளையும் ஆரியர், மொழி பெயர்த்து வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர். வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ் மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில்லாது போயிற்று. வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்மநூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயு மிருந்தமைபற்றித் தமிழரது திவ்விய தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்லாதிருந்த ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்’ என்ற நால்வகைச்சாதி முறையை மெல்லமெல்ல…
திருக்குறள் என்றும் அழியாச் சிறந்த பேரிலக்கியம் – இரா.நெடுஞ்செழியன்
திருக்குறள் என்றும் அழியாச் சிறந்த பேரிலக்கியம் உலக மக்கள் அனைவர்க்கும் பொதுப்படையாக அமைந்த ‘பொதுநூல்’ என்று பெயர் பெற்றது. உலகோர் போற்றிப் புகழுவதற்குரிய ‘பொதுமறைநூல்‘ என்னும் பெருமையுடையது. மக்களின் வாழ்வியலைப் பற்றிக் கூறவந்த ‘வாழ்வியல் நூல்‘ என்னும் சிறப்புடையது. எல்லா மக்களுக்கும் வாழ்க்கை வழிகாட்டியாகத் திகழக் கூடிய ‘வாழ்க்கை வழிகாட்டி நூல்’ என்னும் பெருமை பெற்றது. மக்கள் அனைவர்க்கும் அறநெறி கூறவந்த ‘அறநெறி நூல்’ என்னும் புகழ் பெற்றது. எல்லார்க்கும் அன்புநெறியை அறிவுறுத்த வந்த ‘அன்புநெறி நூல்’ என்னும் சிறப்பு பெற்றது. மக்கள்…
இசைவேள்வி 2016, பிரான்சு
தமிழில்லா அறமன்றம் யாருக்காக? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழில்லா அறமன்றம் யாருக்காக? நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படலாமா? தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கான நீதிமன்றங்களின் செயல்பாடுகள் தமிழில் அமைவதுதானே உண்மையான அறமாகும். குற்றஞ்சாட்டப்பட்டவர், எதிர்த்தரப்பார், இரு தரப்பினரின் சான்றுரைஞர்கள் எனனத் தொடர்புடையவர்கள் தங்கள்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு, பிற செய்திகளைப்பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ள அவர்களுக்குப் புரியும்படித் தமிழில் அமைவதுதானே முறையாகும். ஆனால், இதற்கு மாறான நிலை நம்நாட்டில் நிலவுகின்றதே! தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடுமொழியாக இருக்க வேண்டும் என இந்திய அரசியல்யாப்பின்படிதான் நாம் வேண்டுகிறோம். இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 348(2) இன்படி, …
அரிசுடாடில் விளக்காதவற்றைத் திருவள்ளுவர் விளக்கியுள்ளார் – அறிஞர் சி.யூ.போப்பு
அரிசுடாடில் விளக்காதவற்றைத் திருவள்ளுவர் விளக்கியுள்ளார் பணிவு, அறம், தீங்கினைப் பொறுத்தல் ஆகிய கிருத்துவப் பண்புகள் அரிசுடாடிலால் விளக்கப்படவில்லை…. தமிழ்நெறியாளரால் இம்மூன்றும் பதியும்படி வலியுறுத்தப்படுகின்றன. இம்மூன்றுமே சிறந்த பாக்களான திருக்குறளின் மையக் கருத்துகளாகும். எனவே, நாம் இத்தமிழ்ப் புலவரைக் கிருத்துவராக அழைக்கலாம். -அறிஞர் சி.யூ.போப்பு
திருக்குறளின் பொதுமையுணர்வு – இராதாகிருட்டிணன்
திருக்குறளின் பொதுமையுணர்வு தமிழ்ச் செவ்வியல் நூலான திருக்குறள் வேறுபட்ட சமயத்தவராலும் பிரிவினராலும் உரிமை கொண்டாடப்படும் உண்மையே இதன் பொதுமையுணர்வைப் புலப்படுத்துகின்றது…… திருக்குறள் புத்தசமயத்தவர், சமணத்தவர், சைவர்கள், வைணவர் எனப் பலராலும் பயன்படுத்தப்படுகின்றது. இது “பொதுமறை” என அழைக்கப்படுகிறது. ஒழுக்கக் கேடரான ஆரிய இனத்தவர் எப்பொழுதும் குடிப்பதும் சூதாடுவதுமாக இருந்துள்ளனர். இவ்விரண்டிற்கும் இரிக்கு வேதத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. – மேதகு இராதாகிருட்டிணன்: சமயமும் பண்பாடும் (Religion and Culture)
உலகத்தாய்மொழி நாளும் மத்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும் – இலக்குவனார் திருவள்ளுவன்
சமற்கிருத எதிர்ப்பு நாளைக் கொண்டாடுவோம்! உலகத்தாய்மொழி நாளும் மத்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும்! உலகத்தாய்மொழி நாள் என்பது எந்த ஒரு மொழியையும் உலகத் தாய்மொழியாகக் குறிப்பது அன்று. மாறாக, அனைவரும் அவரவர் தாய்மொழியைக் கொண்டாட வேண்டும் என்பதே நோக்கம். 1952இல் மேற்குப் பாக்கித்தான், கிழக்குப்பாக்கித்தான் மீது உருமொழியைத் திணித்தது. வங்காளமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கிழக்குப் பாகித்தானியர் அதை எதிர்த்துப் போராடினர். வங்க மொழிகாக்கும் போராட்டத்தில் வங்காளியர் பதினொருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மொழிப்போரில் ஈடுபட்ட கிழக்குப்பாக்கித்தானின் வங்காளியர் இதை இனப்போராட்டமாகவும் விடுதலைப் போராட்டமாகவும்…
தன்னேரிலாத தமிழ் – க.தில்லைக்குமரன்
தன்னேரிலாத தமிழ் “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்” – தண்டியலங்காரவுரை மேற்கோள் 4000 ஆண்டுகளுக்கு முன் நாவலந் தேயமாகிய ஆதி இந்தியாவின் (பாக்கிசுதானும் சேர்த்து) பெரும்பாலானப் பகுதிகளில் தொல்தமிழ்க் குடும்பமொழி பேசப்பட்டு வந்ததற்குச் சான்றுகள் கிடைத்து வருகின்றன. பலுசிசுத்தான் பகுதியில் பிராகூயி என்கிற தமிழ்க்குடும்பமொழி பேசப்பட்டு வருவது இதற்குச் சான்று. கி.மு 1900-க்குப் பின்பு ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து (கசாக்சுதான்) சிறிது சிறிதாக அரப்பாவில் (http://en.wikipedia.org/wiki/Harappa) குடியேறத்…
தமிழ்ப் பண்பாட்டிலிருந்து ஆரியர்கள் தங்கள் பண்பாட்டை அமைத்தனர் – அ.இராகவன்
சிந்துத்தமிழ்ப் பண்பாட்டிலிருந்து ஆரியர்கள் தங்கள் பண்பாட்டை அமைத்தனர். ஆரியர்கள் தமிழ் இந்தியாவில் கி.மு.1000 ஆண்டிலிருந்து கி.மு.1500ஆம் ஆண்டு வரையுள்ள காலத்தில் அடிஎடுத்து வைத்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தபொழுது ஆடு மேய்க்கும் நாடோடி மக்களாக வந்தனர். அவர்களுக்கு உயர்ந்த வளர்ச்சிபெற்ற பண்பாடும், நெறியும், நாகரிகமும் இல்லை. மொழிகூட செம்மையான வளர்ச்சி பெற்றதாக இல்லை. அவர்கள் எழுத்து இன்னதென அறியார்கள். வரிவடிவம் என்பது ஒன்று உண்டென்று சிறிதும் உணரார்கள். அவர்கள் இந்தியாவில் வந்தபொழுது சிந்துவெளியில் அரப்பா, மொகஞ்சதாரோ போன்ற நனிச்சிறந்த நாகரிகச்…
தமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம் – க.பூரணச்சந்திரன்
தமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம் மனித அறிவினால் விளையும் கண்டுபிடிப்புகள் மிக விரைந்து பெருகிவருவது இந்த நூற்றாண்டின் தனித்தன்மை. பல நூற்றாண்டுகளாகத் தளர்நடையிட்டு வந்த வந்த பல அறிவுத் துறைகள், இந்த நூற்றாண்டில் ஓட்டப்பந்தய வீரனின் வேகத்தோடு விரைந்து வளர்ந்தன. ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஏதோ ஒரு கொள்கையோ புத்தாக்கமோ அடுத்தநாட்டிற்குப் பரவிப் பாடப்புத்த கத்தில் இடம் பெறுவதற்குள் பழமையடைந்து விடுகின்ற காலம் இது. அறிவுத் துறைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை கலைச்சொற்கள். தக்க கலைச் சொற்களின்றிக் கருத்துகளைச் செம்மையாக, துல்லியமாக, சுருக்கமாக உணர்த்த…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 21: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 20 தொடர்ச்சி) 21 குற்றமற்ற அறநெறியாம் மக்களாட்சி நெறி முறையைப் பின்பற்றிக் மிகப்பெரிய இயக்கமாகத் திராவிட முனனேற்ற கழகத்தை அமைத்து மக்களைக் கவர்ந்தார். மக்களின் மிகப்பெரிய ஆதரவுடன் 6.3.1967 ஆம் நாளன்று தமிழகத்தின் முதலமைச்சராய் அரியணையில் அமர்ந்தார். பேச்சுத் திறன் கொண்டு மக்கள் உள்ளம் கவர்ந்து தலைவரானார். இத் தரணியில் இவர் போல் வேறு எவரேனும் உண்டோ? சொல்வீர். இதனை, சொல்லுந்திறன் கொண்டே தோமில் நெறியில் மக்களைக் கவர்ந்த மாபே ரியக்கம் அமைத்து முதல்வராய்…
மனத்தில் நின்ற மாமணி கா.அப்துல் கபூர் – அப்துல் கையூம்
மனத்தில் நின்ற மாமணி கா.அப்துல் கபூர் [ 1955/1924 – 2033/2002] இந்த மண்ணை விட்டுப் போகையில் சடலமாகப் போகின்றவர் பலர். வரலாற்றாய்ப் போகின்றவர் வெகு சிலர். வரலாறு சமைப்பது கருவாடு சமைப்பது போலன்று. வாழ்வாங்கு வாழ்ந்த பின்னும் வாடாத மலராய் நம் உள்ளத்தில் மணம் வீச வேண்டும். ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’. பிறந்த பயனை பிறரறியச் செய்ய வேண்டும். அதற்கு எடுத்துக்காடு நம் பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர். தமிழ்…
