இசை, தமிழோடு இயைந்து கிடப்பதை இசைவாணர் மறந்தனர் – அண்ணா

இசை, தமிழோடு இணைபிரியாமல் இயைந்து கிடப்பதை இசைவாணர் மறந்தனர்   இப்பொழுதுதான் தமிழ்க் கலையுணர்ச்சி, தமிழரிடம் புகுந்திருக்கிறது. பல வழிகளில் தமிழ்க் கலைகளை வளர்க்க முயன்று வருகின்றனர். இம்முயற்சியில் இசைக் கலை வளர்ச்சியும் ஒன்று. இசைக் கலை தமிழுக்குப் புதிதன்று. தமிழோடு பிறந்தது; தமிழோடு வளர்ந்து, இன்றும் தமிழோடு இணைபிரியாமல் இயைந்து கிடக்கின்றது. இவ்வுண்மையை இசைவாணர் மறந்தனர். ஆதலால் இடைக்காலத்தில் மழுங்கி விட்டது. பேரறிஞர் அண்ணா: தமிழரின் மறுமலர்ச்சி: பக்கம்.18-19

தாய் மொழியிலேயே எல்லாம்! – பேரறிஞர் அண்ணா

தாய் மொழியிலேயே எல்லாம்!   தமிழ்நாட்டார் மட்டுமே வேற்றுமொழியில் பாடுவதைக் கேட்கின்றனர். தமிழ் நாட்டைப் போல் வேறு எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மொழியல்லாத வேறு மொழியில் சங்கீதம் பாடுவதைக் கேட்க முடியாது. ஒவ்வொரு நாட்டினரும் தங்கள் தங்கள் தாய் மொழியிலேயே எல்லாக் கலைகளையும் வளர்ச்சி பெற்று வருகின்றனர்; இல்லாத கலைகளையும் புதிதாக ஆக்கி வருகின்றனர். தமிழரைப் போலத் தாய்மொழிக் கலை உணர்ச்சியற்றவர்களை எந்த நாட்டிலும் காணமுடியாது. பேரறிஞர் அண்ணா : தமிழரின் மறுமலர்ச்சி: பக்கம்.18

புண்ணுக்குப் புனுகு பூசும் வேலை! – பழ.நெடுமாறன்

ஏழை  எளியோர்க்கு எட்டாக்கனியாகும் உயர் கல்வி!  இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளையும் தங்கள் பல்கலைக்கழகக் கிளைகளையும் தொடங்குவதற்கான ஒப்புதலை வழங்கும் முன்னேற்பாடுகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த காங்கிரசுக் கூட்டணி ஆட்சியின்பொழுது இதே முயற்சியில் ஈடுபட்டபொழுது மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பா.ச.க கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், இப்பொழுது பா.ச.க அரசு அதே முயற்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.   உலக வணிக அமைப்பின் முடிவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதன் விளைவே இதுவாகும். இந்திய நாடு முழுவதிலும் இயங்கி வரும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிறவகைத்…

ஒடுக்கப்பட்டவர் விடுதலைக்காகப் பாடிய பறவை கரு.அழ.குணசேகரன் – சுகிர்தராணி

வல்லிசையின் எளிய பறவை   கடந்த தை 1 / 15.01.2016 வெள்ளியன்று புதுச்சேரியில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நான் பேசியபொழுது ‘எங்காண்டே என்னால காரியம் ஆகணும்னா சார் என்பார்’ என்னும் பாடலின் ஒரு பகுதியைக் குறிப்பிட்டபொழுது என் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அன்று இரவு நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது பின்னிரவு வரை அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். மறுநாள் பாண்டிச்சேரியிலிருந்து மாலதி மைத்திரியுடன் மகிழுந்தில் பயணிக்கும்பொழுது மீண்டும் அவரைப்பற்றிய பேச்சு. அன்று இரவு நண்பர்களுடன் உணவருந்தியபடி பின்னிரவு வரை நீண்ட…

சிலப்பதிகாரத்தில் இசைத்தமிழ் – இரா.திருமுருகன்

சிலப்பதிகாரத்தில் இசைத்தமிழ்   சங்கக் காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம் இசைத்தமிழுக்கு நிரம்ப இடமளித்துள்ளது. அஃது ஒரு முத்தமிழ்க் காப்பியம். அதில் உள்ள 30 காதைகளில் 10 காதைகள் இசைப்பாடல்களாகவும் இசைபற்றிக் கூறுவனவாகவும் உள்ளன. மங்கல வாழ்த்துப் பாடல், கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ்வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை ஆகியன இசைப்பாக்களாகவும், அரங்கேற்றுக் காதை, வேனிற்காதை, புறஞ்சேரியிறுத்த காதை ஆகியன இசைபற்றிக் கூறுவனவாகவும் உள்ளன. வரி என்பது இசைப்பாடல்களின் பெயர், முகமுடைவரி, முகமில்வரி, சார்த்துவரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி, கானல்வரி, ஆற்றுவரி, சாயல்வரி, உள்வரி,…

தமிழ்நூல் செய்திகள் தமிழர்க்கே உரியன – அ.நா.பெருமாள்!

வடசொல் கலப்பு இருப்பினும் தமிழ்நூல் செய்திகள் தமிழர்க்கே உரியன!   பல கலைநூல்கள் வடமொழியிலோ மிகுதியான வடசொல் கலப்புடனோ எழுதப்பட்டுள்ளதைப் பாரத நாட்டில் பல இடங்களில் வழக்கமாக இருப்பதைக் காணலாம். தமிழ் மருத்துவ நூல்கள் இதற்கு நல்ல எடுத்துக் காட்டுகளாகும். இவற்றில் கூறப்பட்டுள்ளவை தமிழரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் வடசொல் கலப்பாகவே அவை இருக்கும். இவ்வாறு பத தமிழிசை நூல்கள் வடமொழிக் குவியலாகவே வெளிவந்துள்ளன. இருப்பினும் அவற்றில் தமிழுணர்வு சிறப்பாக இணைந்து விளங்குவதைக் காணலாம். இவற்றை நன்கு உணர்ந்து காணின் இந்த…

திருமுறையின் காலம் தமிழிசையின் எழுச்சிக் காலம் – புலவர் செந்துறைமுத்து

திருமுறையின் காலம் தமிழிசையின் எழுச்சிக் காலம்   சங்கக்காலத்தைத் தமிழிசையின் வளர்ச்சிக் காலம் எனவும் இடைக்காலத்தை தமிழிசையின் எழுச்சிக் காலம் எனவும் கூறுவது பொருந்தும். ஏனென்றால், இடைக்காலத்தில் தமிழிசை மங்கி ஒடுங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. வடபுலத்திலிருந்து தமிழகம் போந்த சமய, பௌத்த சமயவாதிகளாலும் சமணம் சார்ந்த மன்னர்களாலும் தமிழிசை ஒடுக்கப்பட்டது. “இசையும் கூத்தும் காமம் விளைக்கும்” எனக் கூறித் தமிழிசையை மங்கச் செய்தனர்கள். அவ்வாறே தமிழர் சமயமாகிய சைவ சமயத்திற்கும் கேடு செய்தனர். சமணர்கள் சைவ சமயத்துக்கும் தமிழிசைக்கு எதிரிகளாக நின்றனர். அதன் விளைவாகத்…

தோட்டக்கலையின் தாயகம் தமிழ்நாடே! – ச.கு.கணபதி

தோட்டக்கலையின் தாயகம் தமிழ்நாடே!   எந்தநாட்டின் பழைய மொழியினுள்ளும் இத்தகைய அரிய செய்திகளை அறிவிக்கத்தக்க பழஞ்சொற்கள் இல்லை. எந்த மொழியைப் பேசுவோரின் பழங்காலக் கலாச்சாரங்களிலும் தமிழரிடம் இருந்தன போன்ற தோட்டக்கலையின் தொடர்பான பழக்கவழக்கங்கள் இருக்கவில்லை. எனவே, தோட்டக் கலையின் தாயகம் தமிழ்நாடே என்பது உறுதி. அக்கலை, வரலாற்றுக்கு எட்டாத காலத்திலேயே தமிழரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவிவிட்டது. இப்பரவலுக்குக் காரணம் தமிழ் வணிகர் கடல் கடந்து தொலைவு நாடுகளுக்குச் சென்று வந்ததே. ச.கு.கணபதி: குமரிக் கண்டத் தமிழர்: பக்கம்.75

தமிழ்ப் பண்பாட்டுப் பங்களிப்பால் இந்திய நாகரிகம் செழுமையுற்றது. – தாகூர்

தமிழ்ப் பண்பாட்டுப் பங்களிப்பால் இந்திய நாகரிகம் செழுமையுற்றது.   ஆரியரல்லாதார் இந்தியப் பண்பாட்டிற்கு வழங்கியுள்ள பங்களிப்பைப் பயன்மதிப்பு அற்றதென யாரும் கருத வேண்டா. உண்மையைச் சொல்லுவதெனில், பழந்தமிழ்ப் பண்பாடு எவ்வகையிலும் மதிப்புக் குறைந்ததன்று.   திராவிடப் பண்பாட்டோடு ஆரியப் பண்பாடு ஒன்று சேர்ந்ததால் தோன்றியதே இந்திய நாகரிகம். திராவிடப் பண்பாட்டின் தாக்கத்தால், இந்திய நாகரிகம் செழுமையும் சிறப்புமுற்றது; அகலமும் ஆழமும் அடைந்தது.    … … … அவர்கள் மெய்யுணர்வுடன் கலையுணர்வு மிக்க கலைஞர்கள்; ஆடலிலும் பாடலிலும் அவர்கள் தன்னிகரற்றவர்கள். கவின்மிகு கலைவடிவங்களைத் திட்டமிட்டு…

உயர்நீதி மன்றத்தின் பெயர் சென்னை அல்ல… தமிழ்நாடு – இலக்குவனார் திருவள்ளுவன்

சென்னை அல்ல … தமிழ்நாடு – இலக்குவனார் திருவள்ளுவன் . சென்னை மாகாணம், மதராசு என்னும் பெயரில் வழங்கப்பட்ட பொழுது சென்னையில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது. 1862 இல் இது மதராசு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.   பேரறிஞர் அண்ணா அவர்களால், 1968 சூலை 18 இல் சென்னை மாநிலத்தைத் ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 23.11.1968 இல் தமிழ்நாடு பெயர் மாற்ற வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்பொழுதே உயர்நீதிமன்றத்தின் பெயர் ‘தமிழ்நாடு உயர்நீதி மன்றம்’ என மாற்றப்பட்டிருக்க…

தெலுங்கு, மொழி வடிவம் பெறுவதற்கு முன்னரே தமிழில் இசைக்கலை வளமுற்றிருந்தது!

தெலுங்கு, மொழி வடிவம் பெறுவதற்கு முன்னரே தமிழில் இசைக்கலை வளமுற்றிருந்தது!   கருநாடக இசை தமிழிசையின் ஒரு கிளையே அல்லது திரிபேயாகும். தெலுங்கு நாட்டில் என்றுமே அது காணப்படாதது மட்டுன்று, தெலுங்கு மொழியின் பெயர், வரலாற்றில் தோன்றுவதற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் அதன் அரங்குகளும் அதன் முழு இசையியக்கமும் சிறந்து விளங்கின. சிலப்பதிகாரம் தமிழிசையின் அறிவியல் விரிவையும் கலை உயர்வையும் கலையின் பழமையையும் நன்கு எடுத்துக்காட்டுகின்றது. இந்நூலுக்கு உரை வகுத்த உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் … … காலத்திலும் சிலப்பதிகாரத்திற்கு உதவியாகவிருந்த இசையிலக்கண நூல்களும் இலக்கிய…

சேக்கிழாரின் தமிழ் நெஞ்சம் – கடவூர் மணிமாறன்

சேக்கிழாரின் தமிழ் நெஞ்சம்   சேக்கிழார் தமிழ்நெஞ்சம் உடையவர். தமிழ் இன்பத்தில் துய்த்துக் களித்து அதனைத் தம் காப்பியத்தில் பதிந்துள்ளார். பாண்டிய நாட்டில் வீசும் தென்றல் தென்தமிழை நினைவூட்டுவதாக மூர்த்தி நாயனார் வரலாற்றில் பாடுகின்றார். தென்றல் உடல் வெப்பத்தைத் தணிக்கும். தென்தமிழ் உயிர் வெப்பத்தைத் தணிக்கும். அதனால் தமிழையும் தென்றலையும் ஒருசேர நினைந்து, “மொய்வைத்த வண்டின் செறி சூழல் முரன்ற சந்திரன் மைவைத்த சோலை மலயந்தரவந்த மந்த மெய்வைத்த காலும் தரும் ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத்தமிழும் தரும் செவ்வி மணம்செய்யீரம்.” என்று ஞாலம்…