குறள் வழிச் சென்றால் பெருமையை அடையலாம் – ஈ. வே. இராமசாமி
குறள் வழிச் சென்றால் உலகிற்கு நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை அடையலாம். தமிழ் நூல்களையெல்லாம் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் போடச் செய்தும், நெருப்பில் பொசுக்கிப் பாழாக்கியும் விட்டனர் தமிழ்ப் பகைவர்கள். எஞ்சியிருப்பது குறள் ஒன்றேயாகும். நமது திருவள்ளுவர் வகுத்த இக்குறள் வழிச்சென்றால் நம் நாட்டுக்கு மட்டுமின்றி வடநாட்டுக்கும், உலகத்துக்கும்கூட நாம் நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை மீண்டும் அடையலாம். திருவள்ளுவர் இன்றைக்கு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டவர் என்பது இன்று பலரும் ஒப்புக்கொண்டுள்ள செய்தி, ஆதலின் அவர்தம் காலத்தில் கிறித்தவம், இசுலாமியம்,…
அசோகர் காலமே வள்ளுவர் காலம்! – சி.இலக்குவனார்
அசோகர் காலமே வள்ளுவர் காலம் வள்ளுவர் காலம் சங்கக் காலம் என்றோம். சங்கக் காலப் புலவர்களில் பலர் இவருடைய திருக்குறளை எடுத்தாண்டுள்ளார். மணிமேகலையாசிரியர் சாத்தனார் “தெய்வம் தொழான் கொழுநன் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை என்ற பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்” என்று கூறுகின்றார். இதில் வள்ளுவர் மொழியை எடுத்தாண்டு அவரைப் பொய்யில் புலவர் என்று பாராட்டுவதையும் காண்கின்றோம். அதனால் வள்ளுவர் சாத்தனார் காலத்திற்கு முற்பட்டவர் என்று அறிகின்றோம். சாத்தனார் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும்…
அழிவுற்ற தமிழ் ஏடுகளின் பட்டியல் மிகுதியாம்! – க.அன்பழகன்
அழிவுற்ற தமிழ் ஏடுகளின் பட்டியல் நாம் பெற்றுள்ளனவற்றிலும் மிகுதியாம்! அவ்வகையில் தமிழில் பிறந்த சங்கத் தொகை நூல்களின் செய்யுள்களுக்கும், எப்பாலவரும் போற்றும் அய்யன் திருவள்ளுவரின் முப்பாலாம் திருக்குறளுக்கும் முற்படத் தோன்றிய ஒல்காப்புகழ் தொல்காப்பியம் ஓர் ஒப்பற்ற இலக்கண நூலாய்த் திகழ்வதாம். “இலக்கியம் கண்டதற்கென்றே இலக்கணம்” கூறலாகும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அதற்கு முன்னரே தமிழில் தோன்றி வழங்கிய செய்யுள் இலக்கியங்களும் இலக்கண நூல்களும் மிகப் பலவாகும். முத்தமிழும் வளர்த்த முச்சங்கங்களுள், தலை, இடைச் சங்கங்கள் இரண்டின் காலத்திலும் வழங்கிப் பின்னர்க் கடல்கோள் முதலானவற்றால் அழிவுற்ற…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 20: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 19 தொடர்ச்சி) இக்கவிதையின் பயன் எளியோர்க்கு உதவ வேண்டும், ஏழைக்குக் கல்வி அறிவிக்க வேண்டும். ஏற்றத் தாழ்வை அகற்ற வேண்டும். பொய்மையை மாய்க்க வேண்டும். உண்மையை நிலைநிறுத்த வேண்டும். உயர்கணம் கொள்ளல் வேண்டும். ஏழ்மைக்கு அஞ்சாது இருத்தல் வேண்டும். இனிய சொல் பேச வேண்டும். இன்னாச் சொல் எள்ளல் வேண்டும். புகழ்மிகு செயல்கள் புரிதல் வேண்டும். புவியில் அனைவரும் போற்ற வாழ வேண்டும். நன்றே செய்தல் வேண்டும். அதுவும் இன்றே செய்தல் வேண்டும் எனும் கொள்கைகளே…
திருவள்ளுவர் சீர்திருத்தப் பெரியார் – சி.இலக்குவனார்
திருவள்ளுவர் சீர்திருத்தப் பெரியார் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்றார் பாரதியார். வள்ளுவர் தோன்றியதால் நம் தமிழ்நாட்டின் பெருமை உயர்ந்தது. உலகப் பெரும்புலவராம் திருவள்ளுவர் தோன்றிய நாடு என உலகோர் நம் தமிழ்நாட்டைப் போற்றுகின்றனர். வள்ளுவர் சங்கக் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் தலைசிறந்தவர். இவர் ஏனைய புலவர்கள் சென்ற வழியில் செல்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர்களின்று மாறுபட்டும் சென்றுள்ளார். ஏனைய புலவர்கள் உலக வாழ்க்கையை உள்ளதை உள்ளவாறு சொல்லோவியப்படுத்தினர். வள்ளுவர் அவ்வாழ்க்கையைத் திருத்தியமைக்க முயன்றுள்ளார். மற்றைப் புலவர்கள் கள்ளுண்டலையும்,…
ஆரியநெறிகளின் மாறுபாடுகளைக் காட்டவே திருக்குறள் உண்டாக்கப்பட்டது! – பெரியார்
ஆரியநெறிகளின் மாறுபாடுகளைக் காட்டவே திருக்குறள் உண்டாக்கப்பட்டது! ஆரியக்கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவையாவும் பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவற்றிற்குத் தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாகக் குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் எனது உறுதியான கருத்தாகும். –தந்தை பெரியார் ஈ. வே. இராமசாமி
திருக்குறளின்படி ஒழுகுங்கள்! – திரு.வி.க.
திருக்குறளின்படி ஒழுகுங்கள்! தமிழ்நாட்டுச் செல்வர்களே! நீங்கள் பிறந்த நாடு, திருவள்ளுவர் பிறந்தநாடு. அப்பெரியார் நூல் உங்கள் கையில் விளங்குகிறது. அதுவே உங்களுக்கு உரிமை கொடுக்குங் கருவி. அதை ஓதுங்கள்; அதன்படி ஒழுகுங்கள்; ஒத்துழையாமையின் பொருளை ஓருங்கள். ஐம்பெரும் பாவத்துடன் ஒத்துழையாமை என்பதே அதன் பொருள். விரிந்து பரந்த நாடுகளை ஆளும் முறையில் ஐந்து பாவங்கள் புத்த பூர்வமாகவோ அபுத்தி பூர்வமாகவோ நிகழ்ந்துவிடும். ஆதலால், அப்பாவங்கள் நிகழாதவாறு காத்துக்கொள்ளும் கிராம ஆட்சியைபழைய கிராமப் பஞ்சாயத்தை தொழிலாளர் ஆட்சியை பொருளில் பிறந்து, அறத்தில் அமர்ந்து, இன்பத்தை ஈந்து,…
குறள்நெறிப்படி முதாயத்தை நிறுவிட வேண்டும் – சோமசுந்தர பாரதியார்
குறள்நெறிப்படி சாதி சமயமற்ற சமுதாயத்தை நிறுவிட முன்வரவேண்டும் 2000 வருடங்களுக்கு முன்னர்த் தமிழகத்தில் இருந்தவற்றையும், இனி இருக்க வேண்டியவற்றையும் வள்ளுவர் குறளில் கூறியுள்ளார். குறள்நெறி தமிழகத்தில் பரவிடும் நேரத்திப், பிறர் தந்த கலைக்கும் பண்பாட்டிற்கும் இடம் கொடுத்ததின் காரணமாகத் தமிழர் மாண்புகள் நாசமாகி விட்டன. இன்று தமிழர், குறள்நெறியைப் போற்றிடும் காலம் வந்துள்ளது. குறள் நெறியுடன் வாழ்ந்த தமிழரை, சமுதாயத்தின் நச்சுப்பூச்சிகள் என்று கூறியவர் எவர்? ஏன் தமிழர் சமுதாயம் சீர்கெட்டது? இன்று மீண்டும் குறள் நெறிப்படி சாதி, சமய…
திருக்குறள் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்டம் – புலவர் குழந்தை
திருக்குறள் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்டம் திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூல். திருக்குறள் அயற்கொள்கை எதிர்ப்பு நூலேயன்றி எந்த ஓர் அயற்கொள்கையையும் உடன்பட்டுக் கூறும் நூலன்று. தமிழர் வாழ்வே திருக்குறள். திருக்குறளே தமிழர் வாழ்வு என்னும் அவ்வளவு இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள்; உள்ளதை உள்ளபடியே உயரிய முறையில் எடுத்துரைக்கும் உண்மை நூல். தமிழர் வாழ்வின் படப்பிடிப்பு! பழந்தமிழர் நாகரிக நல்வாழ்வை அப்படியே நமக்குக் காட்டும் களங்கமற்ற காலக் கண்ணாடி! தொன்மையும் எதிர்மையும் ஒருங்காய்க் காட்டும் தொலை நோக்காடி! தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்டம்!…
இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்! – பெரியார்
இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்! திருக்குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்மாறாக விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள். அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள். தந்தை பெரியார் ஈ வே. இராமசாமி
தமிழ்நாட்டில் வேரூன்றிய கருத்துகளின் தொகுப்பே திருக்குறள் – சுவைட்சர்
தமிழ்நாட்டில் வேரூன்றிய கருத்துகளின் தொகுப்பே திருக்குறள் அன்பு சமூக சேவையாக வளர்ந்து சிறக்க வேண்டும் எனும் கருத்து திருக்குறளிலேதான் வலியுறுத்தப்படுகிறது. நெடுங்காலமாகத் தமிழ்நாட்டிலே வேரூன்றி வளர்ந்த கருத்துகளைத் திருவள்ளுவர் குறள் வெண்பா வடிவில் எடுத்துரைத்தார். “செயல் மூலமாகவும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய இயலுகிறதே! அதற்காகச் செயலில் ஈடுபடு’ என்பது வள்ளுவர் இடும் கட்டளையாகும். – ஆல்பர்ட்டு சுவைட்சர்: இந்திய எண்ணமும் இதன் மேம்பாடும்: பக்கம் 198(Albert Schweitzer, Indian Thought and its Development)
திருவள்ளுவப் பெயர்க்காரணம்: மு.இராகவையங்கார்
திருவள்ளுவப் பெயர்க்காரணம்: திருவள்ளுவர் என்று இவர் பெயர். பிறந்த குலம்பற்றி இவர்க்கு வழங்குவதென்று கூறுவர். வள்ளுவர் என்ற குடியினர் தாழ்குலத்த¬வ¬ருள் ஒருவராய், விசேட காலங்களிலே அரசாணையை முரசறைந்து சாற்றுவோர் என்பது முன்னூல்களால் அறியப்படுகின்றது. சோதிட நூல்வல்ல நிமித்தகராகவும் பண்டைக்காலத்தே இவர் விளங்கினர் (சீவக.419). சங்கக் காலத்தே தமிழ் நாட்டவருள் சாதிபற்றிய இழிவும் அதன் மூலம் அருவருப்பும் இப்போதுள்ளனபோல இருந்தனவல்ல. தமிழ் வேந்தர்களும் தலைவர்களும் பாணர் முதலிய தாழ்குலத்தவர்களை அவரது கல்வியறிவு முதலியன பற்றி எவ்வளவு சிறப்பாகக் கௌரவித்து வந்தனரென்பதற்குச் சங்கச் செய்யுட்களே தக்க சான்றாக…
