” வாழ்வு இன்பத்திற்குரியது” என்று தமிழ்ப் பெரியார்கள் நிலைநாட்டினர்.- சி. இலக்குவனார்

  வாழ்வின் குறிக்கோள் என்ன? இன்பமாக வாழ்தல். வாழ்வே இன்பத்திற்குரியது. வாழ்வில் ஒரொருகால் துன்ப நிகழ்ச்சிகள் தோன்றினும் அவையும் இன்பத்திற்கு அடிப்படையாகும்; ஆதலின் இன்பமென்றே கருதத் தக்கன. எல்லாம் இன்பமயம். இன்ப வாழ்வுக்கே இன்ப வாழ்வால் மக்கள் தோன்றியுள்ளனர். உலகில் தோன்றிய பிற நாட்டுப் பொரியார்கள், ” உலகம் துன்ப மயம் ; துன்ப வழ்விலிருந்து விடுதலை பெறுவதே வாழ்வின் குறிக்கோள்” என்றனர். தமிழ்ப் பெரியார்கள் அவ்வாறு கருதாது, “வாழ்வு இன்பத்திற்குரியது; இன்பமாகவாழ்தலே வாழ்வின் குறிக்கோள்” என்று நிலைநாட்டினர். அவ்வின்ப வாழ்வுக்கு அடிப்படை இல்லற…

வேற்றுமொழிப் பெயர்ச் சொல்லைத் தமிழோசைவூட்டியே கொள்ளல் வேண்டும் – சி.இலக்குவனார்

           வேற்று மொழிப் பெயர்ச் சொல்லைக் கொள்ள வேண்டிய இன்றியமையாத நிலை ஏற்படின் கொள்ளலாம் என்றும், கொள்ளுங்கால் தமிழோசையூட்டியே கொள்ளல் வேண்டுமென்றும் ஆசிரியர் கூறியிருப்பதை அறியாது வரையறையின்றி வேற்று மொழிச் சொற்களை அம்மொழிகளில் உள்ளவாறே தமிழில் எடுத்தாளத் தொடங்குவது தமிழுக்கு அழிவு தேடித் தருவதாகும்; தொல்காப்பியர் கொள்கைக்கு மாறு பட்டதாகும்; மொழி நூலுக்கும் முரண்பட்டதாகும். செம்மொழிச் செம்மல் முனைவர் சி. இலக்குவனார்  : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 117

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்!

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்! திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் என்னும் பாரதியார் நல்லுரைக்கிணங்க அயல்நாட்டாராலும் போற்றத்தகும் புலமையும் பிறர் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகம் வணங்கச் செய்யும் தமிழ் வளமையும் மிக்க அருந்தமிழ்ச் சான்றோர் பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள்.   தமிழ்நாட்டில் சென்னை மாநிலக்கல்லூரியில் 30 ஆண்டுகளும் புறநகர்க்கல்லூரிகளில் 5 ஆண்டுகளும் கல்விப்பணி ஆற்றியதுடன் ஓராண்டுக்காலம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். அங்குப் பணியாற்றுகையில் அப்பல்கலைக்கழகம் சார்பில் பிற அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும்…

ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை1/2 – புகழேந்தி தங்கராசு

1/2     ஒரு தலைமுறையையே தலைநிமிரச் செய்த பிரபாகரனின் பிறந்தநாளை, எண்ணூர் அசோக்கு இலேலண்டுத் தொழிலாளர்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வை.கோ கொண்டாடியதுதான், இந்த வாரத்தின் நெகிழ்ச்சி நிகழ்ச்சி. காலை ௭ (7.00) மணிக்குத் தொழிலாளர்களுக்கு இனிப்புருண்டை (இலட்டு) வழங்கத் தொடங்கியவர், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குக் கொடுத்து முடிக்கிற வரை சலிக்கவேயில்லை. இத்தனைக்கும் தொழிலாளத் தோழர்கள், வை.கோ-விடமிருந்து இனிப்புப் பெறுவதைக் காட்டிலும், அவருடன் கைக்குலுக்குவதில்தான் அதிக அக்கறை காட்டினர்.  அசோக்கு இலேலண்டிலிருந்து மகிழ்ச்சியுடன் திரும்பிய ஓரிரு மணி நேரத்தில், யாழ்ப்பாணம் அருகே ௧௮ (18)…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 02 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 1 – தொடர்ச்சி)  02 யார்க்கும் அஞ்சாதே! எதற்கும் அஞ்சாதே!   இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் வாழ்ந்த பாரதியார், மக்களின் அடிமைத்தனத்திற்குக் காரணம் அச்சமே என்பதை உணர்ந்தார். எனவே, அச்சப்பேயை விரட்டுமாறு பல இடங்களில் வலியுறுத்துகிறார். அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம் கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம் யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம் (பாரதியார் கவிதைகள் பக்கம் 98/ விநாயகர் நான்மணிமாலை) என்கிறார். எதற்கும் அஞ்ச வேண்டா என்பதற்காக, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதும்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 10: தொடர்ச்சி) 11   தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க கால வரலாறு சரியாக எழுதப் பெறவில்லை. புலவர்கள் பிறந்த இடம், பிறந்த நாள், வளர்ந்த சூழ்நிலை ஆகியவை முறையாக எழுதி வைக்கப் பெறவில்லை. சிறப்பான செய்யுட்கள் பலவற்றை எழுதிய புலவர்கள் தம்மைப் பற்றி எழுதுவதைத் தற்புகழ்ச்சி என எண்ணி விட்டார்கள் போலும். அதனால் சங்கச் செய்யுட்களைக் கால வரிசைப் படி தொகுக்க முடியவில்லை.   பதிற்றுப் பத்து என்ற செய்யுள் தொகுப்பு மட்டும் இதற்கு சிறிது…

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 3/3 – வாலாசா வல்லவன்

(பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 2/3 தொடர்ச்சி) 3/3   15-2-1953 சென்னை மாவட்டத் திராவிடர் கழகச் செயற்குழு 22-2-1953 அன்று சென்னைக்கு வரும் குடியரசுத் தலைவர் இராசேந்திரப் பிரசாத்துக்குக் கருப்புக் கொடி காட்டத் தீர்மானித்தது.(விடுதலை 16-2-1953). அன்றே திராவிடர் கழக நடுவண் செயற்குழு கூடி இந்தியக் குடிஅரசுத் தலைவர் இராசேந்திரப் பிரசாத்து சென்னைக்கு வரும் அன்றே ‘தமிழக உரிமைப் பாதுகாப்பு நாள்’ தமிழகமெங்கும் கொண்டாடும்படித் தீர்மானம் நிறைவேற்றியது. (விடுதலை 16-2-1953).   திட்டமிட்டபடி இராசேந்திரப் பிரசாத்துக்குக் குத்தூசி குருசாமி தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்…

தன்மானத்தலைவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் – கதிர்நிலவன்

  நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவு நாள் கார்த்திகை 29, 1990 / திசம்பர் 14, 1959 ஆரிய எதிர்ப்பும் திராவிட மறுப்பும்   1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில்தான் மொழிவழி அடிப்படையில் தமிழ்த்தேசிய இனம் தன்னைத்தானே அடையாளங் கண்டது. அப்போராட்டத்தின் மூலமாக உருவான மொழிவழி மாகாணக் கோரிக்கையும், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கமும் அப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத் தலைவர்களால் திராவிடன், திராவிட நாடு என்று மடைமாற்றம் செய்யப்பட்டது.   முதல் இந்தி எதிர்ப்புப் போரில் உருவான தமிழின அடையாளத்தை இழக்க…

வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 3/3 – இராம.கி.

(வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 2/3 தொடர்ச்சி) 3/3  அடுத்த கதை மதுரையில் நடந்ததுபோல் புகாரில் நடந்த சகக்கிழத்திகள் கதையாகும். ……………………………………………………………….   இணையாய   மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று   வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 17-19)     புகார்வணிகன் ஒருவனுக்கு இருமனைவிகள். (ஒருவனுக்கு இருவரென்பது கண்ணகியைப் பெரிதும் பாதித்திருக்கலாம்.) இருவருக்கும் ஓரிரு வயதுவேறுபாட்டிற் குழவிகளுண்டு. வீட்டுக் கிணற்றுச்சுவரில் உட்கார்ந்த மாற்றாள்குழந்தை தவறிவிழுந்துவிட அதைக்கண்ட ஒரு கிழத்தி “வேண்டுமென்றே திட்டமிட்டுத் தள்ளிவிட்டதாய் மாற்றாளும், பங்காளி, உறவினரும், ஊராரும் சொல்வரோ?” என்று…

வெள்ளப் படிப்பினை : இடருதவி ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்திடுக!

இடருதவி ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்திடுக! கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. (திருவள்ளுவர், திருக்குறள் 15)    கெடுப்பதும் கொடுப்பதும் மழைதான். எனினும் இதன் விளைவுகளும் நன்மைகளும் பெருகுவதும் குறைவதும் மக்களின் செயற்பாடுகளைப் பொறுத்தே அமைகின்றன. இதனை இப்போதைய கடும் மழையும் கொடுமழையும் உணர்த்தியுள்ளன. எங்கும் வெள்ளக்காடு! காணுமிடமெல்லாம் மனைப்பொருள்கள் மிதப்பு! பல இடங்களில் உயிரற்ற உடல்கள் நீரில் அணிவகுப்பு! எங்கும் அவலம்! இவையே சென்னை, கடலூர் முதலான நகரங்களின் துன்புறு நிலை!   பலர் கூறுவதுபோல்,   நீரிருந்த இடத்தைநோக்கி நீர்…

பழமொழியில் விளைந்த கனிகள் – இ. சூசை

காண்ஒளி வந்தபின்னும் வானொலி விருமபும் நேயர்களே! வணக்கம்.   தமிழின் வாழ்வில் பட்டறிவில் விளைந்தவை பழமொழிகள். முன்னோர் கூறிய பழமொழிகள் நம்மை நெறிப்படுத்தும்   உயர்பண்பாளர்கள் ஒருபோதும் அழிசெயல்திட உடன்படமாட்டார்கள். கடுங்கோபம் வந்தாலும் சான்றோர் வைதாலும், தீய செயல்களைச் செய்திட உடன்பட மாட்டார்கள். உயர்பண்பு இல்லாத இழிந்தோர் தீங்கு செய்யும்போது ஆத்திரம் வரும். மாண்போடு பிறந்து வாழ்ந்தவர்கள் கோபப்படுவதில்லை. . இதனைப், பழமொழி நானூறு(51), “நல்ல விறகிலும் அடினும், நனி வெந்நீர் இல்லம் சுடுகலா வாறு” என்கிறது. நிறைய, தரமான விறகினால் சூடேற்றினாலும், தண்ணீர்…

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சாலிக்குத் தென்கிழக்காசிய இலக்கிய விருது

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சாலிக்குத் தென்கிழக்காசிய இலக்கிய விருது  சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளரான சமாலுதீன் முகமது சாலி  [(Jamaludeen Mohamed Sali /ச.மு.சாலி/ J.M.Sali) (76 : பங்குனி 28, தி.பி. 1970 ஏப்பிரல் 10, 1939)],   இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க தென்கிழக்கு ஆசியாவின் இலக்கிய விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இதனைத், தேசியப் புத்தக மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.     இவ்விருது, தெற்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் (ஆசியான்) இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு…