திருக்குறள் அறுசொல் உரை – 078. படைச் செருக்கு : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 077. படை மாட்சி தொடர்ச்சி) 02. பொருள் பால் 10. படை இயல் அதிகாரம் 078. படைச் செருக்கு படைவீரரின் வீரப்பண்பு, மான உணர்வு, வெற்றிப் பெருமிதம். என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர், பலர்,என்ஐ முன்நின்று, கல்நின்ற வர். பகைவரே! என்தலைவன்முன் நில்லாதீர், நின்றார் நடுகல்லாய் நிற்கிறார். கான முயல்எய்த அம்பினில், யானை பிழைத்தவேல், ஏந்தல் இனிது. முயல்குறி தப்பாத அம்பைவிட, யானை தப்பியவேல் சிறப்பு. பேர்ஆண்மை என்ப தறுகண்;ஒன்(று)…
திருக்குறள் அறுசொல் உரை – 077. படை மாட்சி : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 076. பொருள் செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 10. படை இயல் அதிகாரம் 077. படை மாட்சி நாட்டுப் பாதுகாப்புக்குத் தேவையான வீரப்படையின் சீரும், சிறப்பும். உறுப்(பு)அமைந்(து), ஊ(று)அஞ்சா வெல்படை, வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. பல்உறுப்போடு அஞ்சாத வெல்படையே, ஆட்சியர்க்குத் தலைமைச் செல்வம். உலை(வு)இடத்(து) ஊ(று)அஞ்சா வன்கண், தொலை(வு)இடத்தும், தொல்படைக்(கு) அல்லால் அரிது. அழிவிலும் அஞ்சாப் பெருவீரம், பயிற்சிப் பழம்படைக்கே எளிது. ஒலித்தக்கால் என்ஆம் உவரி..?…
திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும் – ஆய்வுரை 1. : இலக்குவனார் திருவள்ளுவன்
1 உலகப் பொதுநூலாம் திருக்குறள் உலக மொழிகளில் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல். ஆதலால் உலக அறிஞர்களின் பாராட்டிற்குரிய நூலாகவும் திகழ்கிறது. திருக்குறளை அவரவர் நோக்கில் ஆராய்வதற்கு இடம் தரும் வகையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை யாத்துள்ளார். இதனால் சிலர் தாங்கள் சார்ந்துள்ள கருத்தியத்திற்கு ஏற்றாற்போல் திருக்குறளுக்குத் தவறான விளக்கம் அளித்துள்ள சில நேர்வுகளும் உள்ளன. எனினும் ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட திருக்குறள் இன்றைக்கும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. எப்பாலோரும் பாராட்டும் முப்பாலாம் திருக்குறள் வாழ்வியல் நூலாக, அறநூலாக, தலைமைக்கு வழிகாட்டும் நூலாக,…
ஊர்கள் தோறும் தமிழ்ப்பள்ளி தேவை! – பாரதியார்
ஊர்கள் தோறும் தமிழ்ப்பள்ளி தேவை! அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள். “கான்பரென்சு’ என்றும் “மீட்டிங்’ என்றும் கூட்டங்கள் கூடிவிடிய விடிய வார்த்தைகள் சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமலிருக்கிறார்களே! பாரதியார்: தேசியக் கல்வி (கனடாவில் பாரதி தமிழ்க்கல்வி தொடக்க விழாவில் எடுக்கப்பட்ட படம், தினகரன், 24.07.15)
தன்மொழியைப் புறக்கணிப்பவன் ஆயிரம் மடங்கு குற்றம் புரிந்தவன் – பாரதியார்
தேசத்தின் உயிர், மொழியே! ஒரு தேசத்திற்கு உயிர் அத்தேசத்தின் மொழியாகும். சுய பாசையைக் கைவிடுவோர் மூடத்தனமாகவோ பைத்தியம் பிடித்தோ தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். தற்கொலை செய்து கொள்ள யத்தனித்தால் அரசாங்கச் சட்டத்தின் படி குற்றமாகுமானால் தன்னையும், தன்னுடைய சன சமூகத்தையும் கொல்ல ஆரம்பித்து, தேச மொழி உதாசீனம் செய்பவன் ஆயிரம் மடங்கு அதிக குற்றங்களைப் புரிபவனாகிறான். சுப்பிரமணிய பாரதியார்
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 04 : ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015 தொடர்ச்சி) 4 தமிழர் மானத்தோடு வாழ வழிகாட்டியவர் தன் மதிப்பு இயக்கத்தலைவர் பெரியார் ஆவர். அதனால் இலக்குவனாருக்குப் பெரியாரிடம் பற்று ஏற்பட்டது. தமிழறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவனார்க்கு ஆசிரியர். இவர் சொல்வன்மை படைத்தவர். மாணவரிடையே தூய தமிழ்ப் பற்றை வளர்த்து வந்தார். தன்மதிப்பு இயக்கப் பற்றாளராக விளஙகினார். அதனால் ஆசிரியரைப் பின் பற்றி மாணவராகிய இலக்குவனாரும் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அதன் வழி நடந்தார். நீதிக்கட்சி பிராமணரல்லாதாரை எல்லா…
ஆரியக் கலாம் – முகிலன்
ஆரியக் கலாம் (குறிப்பு: இறந்தவரை பற்றித் தூற்றும் எண்ணம் கொண்டு நான் இந்தக் கட்டுரையை வடிக்கவில்லை. கலாம் போல் இன்னும் பல அடிமைகள் உள்ளனர். அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில்தான் என் பணி செய்கிறேன்) “பிறர்க்கென வாழ்ந்து மடிவது மலையை விடக் கடினமானது, தனக்கென வாழ்ந்து மடிவது இறகை விட எளிதானது”. என்பார் மாபெரும் மக்கள் தலைவர் தோழர்.மாசேதுங்கு. கடந்த ஆடி 11, 2046 /27-07-2015இல் இந்திய ஒன்றியத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் இறந்து விட்டார். அதையொட்டி இந்திய…
வலைமச் சொற்கள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015) 5 ஐ.) இலி /இன்மை(null) நல்(null) என்றால் வெறுமை அல்லது ஏதுமற்ற என்று பொருள். நல் என்னும் தமிழ்ச்சொல்லிற்கு நல்ல என்று பொருள். ஆனால், ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தினால் நல்ல என்னும் பொருந்தாப் பொருள் அல்லவா தோன்றும். நல் என்று தமிழ்வரிவடிவிலேயே பயன்படுத்திவிட்டு நல் என்றால் நல்ல அல்ல என்று சொல்வதால் பயனில்லை. அந்த இடத்தில் வேண்டுமென்றால் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கலைச் சொற்களைப் பயன்படுத்தும் இடங்களில் படிப்போர் தவறாகவே எண்ணுவர்….
தமிழில் தேசியக் கல்வி – பாரதியார்
தமிழில் தேசியக் கல்வி தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ் மொழியில் நடத்த வேண்டுமென்பது பொருள். ஆரம்ப விளம்பரம் தமிழில் பிரசுரம் செய்யப்பட வேண்டும் பாடசாலைகள் தாபிக்கப்பட்டால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமின்றி பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலேயே பெயர் சொல்ல வேண்டும். ‘ஃச்லேட்டு’, ‘பென்சில்’ என்று சொல்லக் கூடாது. பாரதியார் : ஞானபாநு, செப்டம்பர் 1915
கல்வி கேள்வியில் வல்லவர்களை மதித்த பழந்தமிழகம் – முனைவர் ப.கிருட்டிணன்
கல்வி கேள்வியில் வல்லவர்களை மதித்த பழந்தமிழகம் கல்வியாளர்கள் ‘நல்லிசைப் புலவர்’ ( தொல்.பொருள் 313.14) ‘புலன் நன்குணர்ந்த புலமையோர்’ (தொல்.பொருள் 12:3) ‘வாய்மொழிப் புலவர்’ (தொல்.பொருள்.387:2) ‘நூல் நவில் புலவர்’ (தொல்.பொருள்.467:2) ‘உயர்மொழிப் புலவர்’ (தொல்.பொருள்.482:3) ‘தொன்மொழிப் புலவர்’ (தொல்.பொருள்.550:3) ‘நுணங்கு மொழிப் புலவர்’ (தொல்.பொருள்.653:5) என இனம் குலம் சுட்டாமல் பொதுப்படையாகப் பாராட்டப் பெற்றனர். மிக எளிய குலத்தில் பிறந்த பாணர்கள் கூடத் தம் கலைச் சிறப்பால், ‘முதுவாய் இரவலர்’ (சிறுபாண். 40; புறம் 48:7)…
குல வேறுபாடில்லை; கற்றவர்க்கே சிறப்பு
பழந்தமிழ் நாட்டில் குல வேறுபாடில்லை; கற்றவர்க்கே சிறப்பு நாடு தழுவிய ஒரே பண்பாடு. ஓரினப் பான்மை உருவாவதற்குக் காரணமாக இருந்தவற்றில் முதலானது பரந்து விரிந்துபட்ட கல்வியாகும். தமிழ்நாட்டில் நிலையான வருண வேறுபாடு அதன் காரணமாக ஏற்படும் உயர்வு தாழ்வு ஆகியன சங்கக் காலத்தில் வலுவாக இருந்ததில்லை. ஏன்? தமிழ்நாட்டு வரலாற்றில் எந்தக் காலத்திலுமே இருந்ததில்லை. காரணம், அப்பண்பு தமிழ்நாட்டுக்குரிய பண்பே அன்று. எக்குலத்தவராயினும் ஒருவர் கல்வியில் உயர்வு பெற்றிருந்தால் அவருக்குச் சமுதாயத்தில் மிகுந்த மதிப்பு இருந்தது. எந்த மன்னனின் அவைக்கு வேண்டுமாயினும் சென்று…
தமிழ் வழிக் கல்வியே அறிவுடையோர் கொள்கை – பாரதியார்
தமிழ்நாட்டில் உண்மையான கல்வி பரவ வேண்டுமானால் சகல சாத்திரங்களும் தமிழ் மொழி மூலமாகவே கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற கொள்கையை நமக்குள்ளே அறிவுடையோர் எல்லோரும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை அனுசரணைக்குக் கொண்டு வருவதற்குத் தக்கபடி நமக்குள்ளே சக்தி பிறக்கவில்லை. பைந்தமிழ்த் தேர்ப்பாகன் சுப்பிரமணிய பாரதியார்
