அரும்பத உரையாசிரியர் ஒரு முத்தமிழறிஞர் – மு.அருணாசலம்
அரும்பத உரையாசிரியர் ஒரு முத்தமிழறிஞர் இவ்வுரை அரும்பதவுரை மட்டுமன்று. வினைமுடிபு காட்டுதல், பொருள் தொடர்பு காட்டுதல், அரங்கேற்றுக் காதையிலும் கானல் வரியிலும் இன்று அடியார்க்கு நல்லார் உரை இல்லாத பிற பகுதிகளிலும் பேருரையும் பெருவிளக்கமும் கூறுதல், மேற்கோள் தருதல் முதலிய பகுதிகளைப் பார்க்கும்போது, இவ்வுரை அரும்பதவுரை அன்று, அரிய உரை என்றே கருதத் தோன்றும். சில இடங்களில் விரிவான பொழிப்புரையே கூறியிருக்கிறார். (3:26: 36 பார்க்க); இதைத் தொடர்ந்து அரும்பதவுரை மட்டுமல்லாமல் விளக்கவுரையே கூறிவருகிறார். இவற்றால் இவர் மிக்க விரிவு பெற்ற உரை…
தமிழிசை மறுமலர்ச்சிக்கு வழியமைத்தவர் அடியார்க்கு நல்லார் – மு.வை.அரவிந்தன்
தமிழிசை மறுமலர்ச்சிக்கு வழியமைத்தவர் அடியார்க்கு நல்லார் அடியார்க்கு நல்லார் தமிழ்க்கலையின் மாண்பைப் போற்றி விளக்கியுரைத்த குரல், காலங்கடந்து வந்து தெளிவாக ஒலிக்கின்றது. இருபதாம் நூற்றாண்டில் தமிழிசை மறுமலர்ச்சிக்கு அடியார்க்கு நல்லார் உரையே பெரிதும் உதவியது. தமிழ்க் கலைகளைப் பல நூற்றாண்டுகளாகக் காத்து வழங்கிய பெருமை இவர் உரைக்கு உண்டு. -ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள்
தொல்காப்பியர் சிலை உருவாக்கத் தொடர் ஆய்வு
தொல்காப்பியர் சிலை உருவாக்கத் தொடர் ஆய்வு குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் அமைக்க இருக்கும் தொல்காப்பியர் சிலை உருவாக்கப் பணி, படிமப் பார்வைக் குழுவினரால் மீண்டும் ஆடி 16, 2046 / ஆக.01, 2015 அன்று மீண்டும் பார்வையிடப்பட்டது. புலவர் த.சுந்தரராசன், புலவர் வெற்றியழகன், இலக்குவனார் திருவள்ளுவன், பாவலர் ம.கணபதி, அனகை நா.சிவன், நாஞ்சில் நடராசன், வளனரசன், தமிழ்த்தென்றல், திருவாட்டி அமுதநம்பி சோழன் நம்பியார், ஆகியோர் சிற்பி இரவியுடன் சிலைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்துக் கலந்துரையாடினர். அவை வருமாறு: –…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்க்கணிணி-இணையப்பயன்பாடுகள் : பன்னாட்டுக் கருத்தரங்கம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி. திருச்சிராப்பள்ளி பங்குனி 13 &14, 2045 / மார்ச்சு 27& 28, 2014 தமிழ் இணையப் பல்கலைக்கழகமாக இயங்கிய, இப்போது தமிழ் இணையக்கல்விக்கழகமாகச் செயல்படும் நிறுவனம் குறிப்பிடத் தகுந்த இலக்கண இலக்கியங்களை அறியவும் அறிமுக நிலையில் தமிழ் கற்கவும் பட்டயக்கல்வி, பட்டய மேற் கல்வி, இளங்கலைக் கல்வி, கணிணிக்கல்வி ஆகியன கற்கவும் சொற்பொருள், கலைச்சொற்கள் அறியவும் சிறப்பாக உதவி வருகிறது. தகவல் மையம், சுற்றுலா வழிகாட்டி, கணிப்பொறி தொடர்பானவை…
இறையாண்மை என்றால் இதுதான் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆடி 10, 2046, சூலை 26, 2015 தொடர்ச்சி) நிலப்புற அரசுகளும் (States on exile) இறையாண்மை உள்ளனவாகக் கருதப்படுகின்றன. சான்றாக இரண்டாம் உலகப்போரின் பொழுது நார்வே, நெதர்லாந்து, செக்கோசுலோவேகியா முதலான நாடுகள் அயலவர் ஆளுகைக்கு உட்பட்டிருப்பினும் இறையாண்மை மிக்கப் புற அரசுகளாக அல்லது புவிசாரா அரசுகளாகக் கருதப்பட்டன. அயலாட்சி நீங்கியதும் புவிசார்இறையாண்மை மிக்க அரசுகளாகக் கருதப்பட்டன. 1990-91 இல் ஈராக் போரின்பொழுது குவைத்து அரசிற்குப் புவிசாரா இறையாண்மை உள்ளதாகக் கருதப்பட்டது. இவற்றின் அடிப்படையிலும் தமிழ் ஈழம் இறையாண்மை மிக்க அரசாகத் திகழ்ந்தது….
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 3 – மறைமலை இலக்குவனார்
(ஆடி 10, 2046, சூலை 26, 2015 தொடர்ச்சி) பேராசிரியரின் கருதுகோளை இற்றைத் தொல்லியல் வளர்ச்சி நிலையில் மீள்ஆய்வு செய்யவேண்டும். நூலுள் நுவலப்பட்டுள்ள செய்திகள் பண்பாட்டுமானுடவியல், கல்வெட்டியல், தொல்லியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வதற்கு ஒரு தூண்டுகோலாகப் பேராசிரியரின் கருதுகோள் விளங்குகிறது. செம்மொழி ஆய்வுக்குச் சிறப்பான ஆற்றுப்படையாகக் கீழ்வரும் இயல்கள் திகழ்கின்றன எனலாம்: பழந்தமிழ் (ப. 26-42) பழந்தமிழ்ப்புதல்விகள் (ப. 65-95), பழந்தமிழ் இலக்கியம் (ப. 96-116), பழந்தமிழ் நிலை (ப. 117-141), பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள் (ப. 142-157), பழந்தமிழ்ச் சொல்லமைப்பு (ப….
இந்தியா என்பது ஒரு நாடல்ல! – ஆ.சு.மணியன்
பல ஊர்கள் இணைந்தால் ஊராட்சி ஒன்றியம். பல நாடுகள் இணைக்கப் பட்டதால் நாமிருக்கும் நாடு ஒரு நாடல்ல. ஒன்றியமாகும். அதனால்தான் அரசியல் சட்டம் இந்திய ஒன்றியம் என்கிறது. இன்னும் தெளிவாக ‘ஒன்றிணைக்கப்பட்ட இந்தியா’ என்கிறது. பலருக்கு இச்சொல் புதுமையாகத் தோன்றலாம். இசுலாமானவர்கள்கூட. ‘யூனியன் முசுலிம் லீக்’ என்று பெயரிட்டுள்ளனர். அதன் பொருள் அறிந்து பெயரிட்டுள்ளார்களா என்பது கேள்விக்குரியது. ‘யூனியன் கேபினட்’ என்கின்றனர். அதன் பொருள் ஒன்றிய அமைச்சரவை / ஒன்றிணைக்கப்பட்ட அமைச்சரவை என்பது. ‘யூனியன்கவர்ன்மெண்ட்’ என்ற சொல்லைக் கேட்டிருக்கலாம் அதன் பொருள்…
கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இரா.மோகன்
கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகில் தடம் பதித்த கவிஞர்கள் நால்வர். இவர்கள் ஒவ்வொருவாருக்கும் தனிச்சிறப்பு உண்டு. நால்வருள் மோனையைப் போல் முன்னிற்பவர் பாரதியார். இவர் 39 ஆண்டுகளே வாழ்ந்து கவிதை உலகில் சாதனை படைத்தவர். பாரதியாருக்கு அடுத்த நிலையில் புகழ் பெற்று விளங்கியவர் பாரதிதாசன்; பாரதியாருக்கு ஒன்பது ஆண்டுகள் இளையவரான இவர் 73 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். கவிமணி சி.தேசிக விநாயகம் (பிள்ளை) (1876–1954) பாரதியாரை விட ஆறு ஆண்டு மூத்தவர்….
தமிழ்ச் சிறப்பை ஆரியர் தழுவினர் : மறைமலையடிகள்
இங்ஙனம் தமிழரின் அறிவாழ ஆராய்ச்சியினை ஆரிய நன்மக்கள் சிலர் தாமுந் தழுவி ஒழுகப் புகுந்த காலத்திலேதான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. இவ்வுபநிடதங்கள் ஆரியர்க்கு எட்டாதிருந்த அறங்களை அறிவுறுத்தி, அவர் செய்து, போந்த உயிர்க்கொலையினை நிறுத்துதற் பொருட்டாகத் ‘தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பட்டனவாமென்பதற்கு அவ்வுபநிடதங்களிலேயே மறுக்கப்படாத சான்றுகள் பலவிருக்கின்றன. இங்ஙனம் உபநிடதங்கள் எழுதப்பட்ட பின்னரும் விலங்கினங்களைப் பலியிட்டுச் செய்யும் வேள்விகள் சிறிதும் குறைபடாமல் ஆரியர்க்குள் மிகுந்து வந்தமையானும், ஆரியக் குருக்கள்மார் தங்கொள்கைக்கு இணங்காத தமிழரையும் அது செய்யும்படி வலிந்து வருந்தினமையானும் ஆரியர்க்கும் தமிழர்க்கும் இதன்பொருட்டு வழக்குகளும் எதிர்வழக்குகளும்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 010. இனியவை கூறல்
(அதிகாரம் 009. விருந்து ஓம்பல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 010. இனியவை கூறல் கேட்பவர் மனமும் மகிழும்படி, இனியநல் சொற்களைக் கூறுதல். இன்சொலால், ஈரம் அளைஇப், படி(று)இலஆம், செம்பொருள் கண்டார்,வாய்ச் சொல். இரக்க[ம்உ]ள்ள, பொய்இல்லா இன்சொல், அறத்தை ஆராய்ந்தார் வாய்ச்சொல். அகன்அமர்ந்(து), ஈதலின் நன்றே, முகன்அமர்ந்(து), இன்சொலன் ஆகப் பெறின். மனம்மகிழ்ந்து ஈதலைவிட, முகம்மலர்ந்து இன்சொல்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 009. விருந்து ஓம்பல்
(அதிகாரம் 008. அன்பு உடைமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 009. விருந்து ஓம்பல் உறுபசியுடன் வருகின்ற எவருக்கும், விருந்து படைத்தலும் உதவுதலும். இருந்(து)ஓம்பி, இல்வாழ்வ(து) எல்லாம், விருந்(து)ஓம்பி, வேள்ஆண்மை செய்தல் பொருட்டு. இல்வாழ்தல், விருந்தினரைக் காக்கவும், நல்உதவி செய்யவுமே ஆகும். விருந்து புறத்த(து)ஆத், தான்உண்டல், சாவா மருந்(து)எனினும், வேண்டல்பாற்(று) அன்று. விருந்தாளர் வெளியில்; சாவினை நீக்கும்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 008. அன்பு உடைமை
(அதிகாரம் 007. மக்கள் பேறு தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 008. அன்பு உடைமை உள்ளம் உள்நெகிழ்ந்து, கனியும்படி உயிர்வளர்க்கும் ஒழுக்கம்; உயர்வழக்கம். அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்….? ஆர்வலர் புன்கண்நீர், பூசல் தரும். அன்பை அடைக்கும் கதவுஇல்லை; அன்பைக் கண்ணீரே, காட்டிவிடும். அன்பு(இ)லார் எல்லாம், தமக்(கு)உரியர்; அன்(பு)உடையார், என்பும் உரியர் பிறர்க்கு. அன்[பு]இல்லார், தந்நலத்தார்; அன்[பு]உள்ளார், …
