இந்தியைப் பற்றிய சொல்லும் செயலும் – பேராசிரியர் சி.இலக்குவனார்

சென்ற இதழில் அலுவலக நேரத்திலேயே இந்தி மொழிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்பின்னர் வெளிவந்துள்ள இந்திய அரசு அறிக்கை ஒன்றில் அலுவலக நேரமல்லாத காலத்திலேயே இந்திமொழிப் பயற்சி பெறுமாறு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (At present classes are being conducted in many departments of the Union Government outside office hours to enable non-Hindi speaking people to learn Hindi) இக்குறிப்பில் ‘எல்லா அலுவலகங்களிலும்’ என்று குறிப்பிடாமல் ‘பல அலுவலகங்களில்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. ஆகவே…

கருத்தரங்கம்: இந்தியால் தமிழுக்குக் கேடு..

  வினா 4: இந்தி மொழியால் எங்காவது ஓர் இடத்தில் தமிழ்மொழி மறைந்திருக்கிறதா? விடைகள்: வட்டார மொழிப்பற்று இந்தியைப் புகுத்துவதற்குத் தடையாயிருக்கும் என்று அரசினர் கருதுவதால், தமிழ் மொழிப் பற்றூற்றும் இலக்கியப் பகுதிகளையும், தமிழ்ப் பற்றையும் தடை செய்கின்றனர். தற்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சர் ‘வாழிய செந்தமிழ்’ என்ற பாரதியின் பாட்டைப் பள்ளிகளில் பாட வேண்டாமென்று வேண்டியதும், இளங்கலை, இளமறிவியல் மாணவர்க்குத் தமிழ் இலக்கியப் பகுதியில் அமைந்த ‘கால்கோட்காதை’யை நீக்கியதும் இதற்குச் சான்று. இவ்வாறு மொழிப் பற்றூட்டும் பகுதிகளை நீக்குவதால் அவ்விலக்கியப் பகுதிகள் மறைய…

இதுதான் மக்களாட்சியா? – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

மக்கள் நன்மைக்காக மக்களால் மக்களைக் கொண்டே ஆளப்படுவது மக்களாட்சியாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு மொழியனரும் சமயத்தினரும், கொள்கையினரும், நாற்பது கோடிக்குமேல் வாழ்ந்தபோதிலும், மக்களாட்சி முறையைப் பின்பற்றி உலகம் புகழுமாறு ஆட்சி செலுத்துகின்றோம் என ஓயாது பறையறைந்து வருகின்றனர் ஆளுங்கட்சியினர். இந்தியக் கூட்டரசு ஆட்சியை நடத்திவரும் கட்சியினர் மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றுப் பதவிப் பீடத்தில் அமர்ந்திருப்பது உண்மைதான். இவ்வாறு அமர்ந்திருப்பது மக்களாட்சி முறைகளைப் பின்பற்றி வருவதன் பயனாகவா? அல்லது வேறு முறைகளைக் கையாண்டு வருவதன் தன்மையாலா? வறுமை, அறியாமை, கல்வியறிவு இன்மை, அச்சம்,…

எரியும் நெருப்பில்… – மு. தங்கராசு

‘இந்தி, இந்திய மக்களில் பெரும்பாலோர் பேசும் இலக்கிய மொழிகளுள் ஒன்றன்று. இந்திய மொழிகளுள் சிறுபான்மையோர் பேசும் சிறு இலக்கிய, இலக்கண வளமற்ற மொழியேயாகும். எனவே இந்தி மொழி பேசுவோர் அம்மொழியைப் பேசாப் பகுதிகளில் வாழ்கின்ற (குறிப்பாகத் தென்னகத்து) மக்களின் இசைவையும் நல்லெண்ணத்தையும் நாட்டின் ஒருமை உணர்வு கருதிப் பெறல்வேண்டும். இவ்வாட்சி மொழியேற்பாடு இன்றோடு முடிவுறும் நிலையற்ற செயலன்று இக்காலத்தினரால் வரும் காலத்தினருக்காகச் செய்யப்படும் நிலைபெற்ற செயலாகும். எனவே, இதனை இந்தி ஆர்வலர் எவரும் மறக்கலாகாது’ என்று இந்திய அரசலமைப்பு’ (Indian Constitution) என்ற நூலில்…

தமிழுக்குக் கல்லறை கட்டப்பட்டுவிட்டது…? – புலவர் வி.பொ.பழனிவேலன், பி.ஓ.எல்

‘இந்தி’ கட்டாயமில்லை என்று நடுவண் அரசும் அதற்கு ஒத்து ஊதிக் கொண்டு தமிழ்நாட்டு அரசும் (இல்லை, தப்பு, தப்பு, சென்னை ராச்யமும்) இந்தியைத் தமிழ்நாட்டில் நுழைக்கும் பணியில் வெற்றி பெற்றுவிட்டன. 1. தமிழ்நாடு என்று பெயரிடத் தமிழக அரசு மறுத்துவிட்டது. அமைச்சர் ஒருவர், ‘மெட்ராசு ஃச்டேட்’ என்பது இரண்டு ஆண்டுக்கு முன்னரே எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது; ஆதலால் அது தீர்ந்துபோன செய்தி; இனி அதைப்பற்றிப் பேசத் தேவையில்லை என்று வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். 2. தமிழ் நாட்டுக் கல்விக் கூடங்களில் பாடம் பயிற்று மொழியாகவிருக்கத்…

‘‘பெரும்பாலோர் மொழி இந்தி’’ என்பது உண்மைக்கு மாறுபட்டது – மே.சி.சிதம்பரனார்

    ‘‘பாதிக்குமேலானவர்கள் பேசுவதால் இந்தியைத் தேசிய மொழியாக்குவதில் நியாயமிருக்கிறது’’ -‘‘மொரார்சி’’ 28-3-64, காஞ்சிபுரம். இந்தி, தனிமொழியா? பழமை மொழியா? சொல்வளம், பொருள் வளமுண்டா? எழுத்து வனப்புண்டா? இலக்கிய விலக்கணங்களுண்டா? அறிவியல் நூல்களுண்டா? இந்தி படித்து ஒரு விஞ்ஞானியாகலாமா? ஒரு மருத்துவனாகலாமா? ஒரு பொறியியலனாகலாமா? ஒரு வழக்கறிஞனாகத்தானாக முடியுமா? அல்லது இந்தியைக் கொண்டு பிறநாட்டானோடு கலந்து பேசவியலுமா? என்ற கேள்விகட்கெல்லாம் விடைகள் இல்லையென்பது ஒப்பமுடிந்ததாய்விட்டது. இறுதிக்காரணம்? பெரும்பான்மையினர் பேசப்படுவதென்பதைத் திட்டமிட்டுத் ‘‘திடீர்ப்புளுகு’’கள் மூலம் உயர்த்திக்கொண்டே வருகிறார்கள். பொய்மையெனத் தயங்காது அதனையே மேன்மேலும் உறுதியுடன் பேசிவந்தால்…

இந்தி முதன்மைத் தனி ஆட்சி – பேராசிரியர் சி.இலக்குவனார்

இந்தி முதன்மையை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. ஆயினும் நடுவிட ஆட்சியாளர் அதைப் பொருட்படுத்தக் காணோம். ஏனைய தேசிய மொழிகளைப் புறக்கணித்து இந்திக்கு மட்டும் முதன்மையளிக்கும் செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. 1. இந்தியறிவு இல்லையேல் அரசு ஊழியர்க்கு ஊதிய உயர்வு இல்லை என்றனர். 2. இந்தியறிவு பெற்றால் ஊதியம் உயர்த்தப்படும் என்றனர். 3. அரசுத்துறை ஆவண ஏடுகளில் தலைப்புக் குறிப்புக்கள் இந்தியில் எழுதப்பட வேண்டும் என்று ஆணை பிறந்துள்ளது. 4. பாராளுமன்றில் இந்தியும் ஆங்கிலமும் மட்டும் பயன்படுத்துவதற்குரிய வசதிகள்…

புரட்சியாளர் அறிஞர் அண்ணா

  – தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்     பெரியாரின் புரட்சிப் படையில் முதியரும் இளையரும் இருந்தனர். மன்பதைத் தொண்டு செய்த பெரியார் வண்டமிழ் காக்க இந்தி எதிர்ப்புப் போரின் இணையற்ற தலைவரானார். அப்பொழுது அவருக்குத் துணையாகக் கிடைத்த தளபதிதான் அறிஞர் அண்ணா அவர்கள். பெரியாரின் வேம்பனைய புரட்சிக் கருத்துகளை கரும்பனைய சொற்களால் இளைஞர் உள்ளங்களில் இடம்பெறச் செய்தார் அறிஞர் அண்ணா. தேன் கூட்டை மொய்க்கும் தேனீக்கள் போன்று அறிஞர் அண்ணாவைச் சுற்றி மக்கள் மொய்க்கத் தொடங்கினர். விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்…

கருத்தரங்கம் 3 :இந்தியால் தமிழுக்குக் கேடு…..! – கவிஞர் அரங்கசாமி

இந்தியை விரும்பும் செந்தமிழ் நண்பரே ஐயம் தெளிமின் –    பரணி பாடிய கவிஞர் அரங்கசாமி, இராசிபுரம் ஒருவன் பிறப்பால் தமிழனாயும், மொழியால் தமிழனாயும் இருப்பானாகில் அவன் நாடு எப்பெயரால் வளரும்? தேசியப் பற்றினால் அந்தந்த நாடு வளம் பெற வேண்டுமே தவிர பல கண்டத்தை இணைக்க முடியுமா? இந்தியா என்பது இந்நாட்டின் பொதுப்பெயர் என்று இலக்கியச்சான்று உண்டா? நேருவைத் தலைவராகக் கொள்வதும் காமராசரைத் தலைவராகக் கொள்வதும் அவரவர் விருப்பம், அதனால் எல்லாரும் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பதன்று. மொழியால் தமிழைப்பெற்று, நாட்டை இந்தியா என்றால், இந்தி மொழி…

கருத்தரங்கம் 4: இந்தியால் தமிழுக்குக் கேடு….! – விழியூர் இளவரசன்

தமிழன்பர் திரு. இலிங்கம் அவர்களுடைய கேள்விகளுக்கு விடை எழுதுமுன்,  நாம் பிறக்கும்போதே நம்மோடு பிறந்த தாய்மொழியான தமிழ், நம்மைப் பெற்ற தாய்போலும் தெய்வம் என்றும், நம் எண்ணங்களை உலகோருக்குத் தெரிவிக்க உறுதுணையாய் நின்று வாழவைக்கும் ஒப்பற்ற தெய்வம் என்றும், இத்தகைய தாய்மொழியை வணங்கிக் காக்க மறப்பது தமிழ் மரபுக்கு ஒவ்வாத கொடுமை என்றும் கூறித் தொடங்குகிறேன்… -விழியூர் இளவரசன் 1. இந்தியால் தமிழ் எந்தவகையில் அழிந்தது? அழிகிறது? அழியும்? வீட்டுக் கூரையின் ஓர் மூலையில் தீப்பற்றினால், மூலையில்தானே தீப்பற்றிக் கொண்டிருக்கிறது என்று நினைப்பது அறிவுடைமை…

திருவள்ளுவரின் அறிவியல் சிந்தனை – களப்பால் குமரன்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு – 355 காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தின் (113) முதல் குறட்பா,  அறிவியல் ஆய்வாளர்களின் ஆய்வு முடிவை ஒத்துள்ளது என்பது வியப்புக்குரிய அறிவியல் உண்மையாகும். 1.   பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி வால்எயிறு ஊறிய நீர்.   இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . – பாவாணர் The dew on her white teeth, whose voice is soft and low, Is as…

முதலமைச்சர் மாநாடும் இந்தி மொழியும் – கூட்டரசன்

மாநில முதலமைச்சர்கள் மாநாடு முடிந்துவிட்டது. இந்தியையும் ஆங்கிலத்தையும் இந்தியக் கூட்டரசின் அலுவலர் தேர்வு மொழிகளாக ஆக்குவதெனவும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டோரும் ஏனையோரும் ஒத்த நிலையில் மதிப்பெண்கள் பெறுவதற்கு வழியொன்று வகுக்கப்படும் எனவும் அம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக முதலமைச்சர் கூறுகின்றார். இதற்குத்தாமே பொறுப்பாளி என்றும் நம் முதலமைச்சர் அறிவிக்கின்றார். இந்தியைத்தாய் மொழியாகக் கொண்டோர் இந்தியில் எழுதுவதில் எளிமையும் ஆற்றலும் கொள்வர். ஆங்கிலத்தில் எவ்வளவுதான் புலமை பெற்றிருப்பினும் ஆங்கிலம் அயல் மொழிதானே, அயல்மொழியைப் பயன்படுத்துவதில் அவ்வளவு எளிமையும் ஆற்றலும் கொள்ள இயலாது. இருவகை விடைத்தாட்களையும் திருத்துவோர்…