திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 002 வான்சிறப்பு
(001. இறைமை வழிபாடு தொடர்ச்சி) 001 அறத்துப் பால் 01 பாயிர இயல் 002. வான்சிறப்பு உலகையே வாழ்விக்கும் அமிழ்தமாம் மழையின், பயன்களும் சிறப்புக்களும். வான்நின்(று), உலகம் வழங்கி வருதலான், தான்அமிழ்தம் என்(று),உணரல் பாற்று. உலகையே நிலைக்கச் செய்வதால், மழைநீர்தான், அமிழ்தம்; உணர்க. துப்பார்க்குத், துப்(பு)ஆய, துப்(பு)ஆக்கித், துப்பார்க்குத், துப்(பு)ஆய தூஉம், மழை. உண்பார்க்கு உணவை ஆக்குவதும், உணவாக ஆவதும் மழைதான். விண்நின்று பொய்ப்பின், விரிநீர் வியன்உலகத்(து), உள்நின்(று) உடற்றும் பசி. மழைப்பொய்ப்பு நிலைத்தால், உலகத்து…
மெல்லிசை மன்னர் விசுவநாதன் மறைவும் கலைஞர்கள் எண்ண வேண்டியனவும்
தமிழரால் வாழும் கலைஞர்களே! பிற துறையினரே! தமிழர்க்காகவும் வாழுங்கள்! மெல்லிசை மன்னர் (ஆங்கில முதல் எழுத்துகளில்) எம்.எசு.வி. (என அழைக்கப்பெறும் மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன்) அல்லது ம.சு.விசுவநாதன் ஆனி, 2046, சூலை 14, 2015 அன்று இசைப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தன் இசையால் பன்னூறாயிர மக்களைக் கட்டிப்போட்டவரைக் காலன் கட்டிப்போட்டுவிட்டான். ஆனி 11, 1959 / சூன் 24, 1928 அன்று கேரளாவில் பாலக்காட்டு அருகில் உள்ள எலப்புள்ளி என்னும் ஊரில் சுப்பிரமணியன் – நாராயணக்குட்டியம்மாள் (நானிக்குட்டி) ஆகியோரின் மகனாகப்…
இறையாண்மை என்றால் இதுதான் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும் அடிப்படைப் பொருளில் மாற்றம் மிகுதியாக இல்லை. இறையாண்மை என்பது அண்மையில் பெரிதும் பேசப்பட்டு வருவதால் நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. தமிழர்க்கு இறையாண்மை மிக்க அமைப்பு தேவையா? அவ்வாறு பேசுவது சரியா? தவறா? தமிழக இறையாண்மை என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? என்பனவெல்லாம் நாம் அறிய வேண்டுவன ஆகும்.புவிப்பரப்பில் சட்டங்களையும் விதிகளையும் ஆக்கவும்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 001. இறைமை வழிபாடு
01. அறத்துப் பால் 001. அதிகாரம் 01. பாயிர இயல் 001. இறைமை வழிபாடு மக்கள் கடைப்பிடிக்கத் தக்க இறைமை ஆகிய நிறைபண்புகள். அகர முதல, எழுத்(து)எல்லாம்; ஆதி பகவன், முற்றே உலகு. எழுத்துக்களுக்கு, அகரம் முதல்; உலகினுக்கு, இறைவன் முதல். கற்றதனால் ஆய பயன்என்கொல்…? வால்அறிவன் நல்தாள், தொழாஅர் எனின். தூய அறிவன்வழியைப் பின்பற்றாத சீரிய கல்வியால், பயன்என்….? மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார், நிலமிசை நீடுவாழ் வார். மலரைவிட,…
எமது போராட்டம் ஒவ்வொன்றும் தன்நிறைவும் கொண்டவையே – இராம் சிவலிங்கம்
எமது போராட்டம் ஒவ்வொன்றும் தனித்துவமானதும் தன்நிகரற்றதும் மட்டுமல்ல! தன்நிறைவும் கொண்டவையே — கலாநிதி இராம் சிவலிங்கம் விடுதலை இந்தியாவுக்கான அறவழிப் போராட்டத்தின்போது, அதன்மகிமையை உணர்ந்த பிரித்தானிய அரசு, மாண்புடன் செயற்பட்டதால், இந்தியாவின் விடுதலை உறுதியானது. எமது அறவழிப் போராட்டம், அதன் தன்மையை மதியா சிங்கள அரசின்அடிதடிக்கு உள்ளாகி, இரத்தம் தோய்ந்த போராட்டமாக மாற்றம் பெற்றது. அன்பை ஆயுதமாகக் கொண்ட இந்தப் போராட்டத்தில், நாம் பொறுப்போடுநடந்ததால், இந்தியாவின் நன்மதிப்பைப் பெற்றோம். உள்நாட்டு மோதல்,இலங்கை-இந்தியச்சிக்கலாக மாற்றம் பெற்றது. அடக்குமுறைக்கும், அரச பயங்கரவாதத்திற்கும் எதிராக ஆயுதம் ஏந்துவதும்ஓர்அறவழிப் போராட்டமே…
தமிழா விழித்தெழு! – ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார்
“தமிழ் மொழி விடுதலையே உலக மொழிகளின் விடுதலை” “தமிழ் மொழியின் மறு மலர்ச்சியே உலக ஆன்மீக மறுமலர்ச்சி” “தமிழ் மொழியின் வள வளர்ச்சியே உலகச் சமய வள வளர்ச்சி” “தமிழின விடுதலையே உலக மானுட இனங்களின் விடுதலை” :”தமிழின விழிச்சியே உலகச் சகோதரத்தத்துவ விழிச்சி” “தமிழின எழுச்சியே உலக மானுட உரிமை எழுச்சி” “தமிழினச் செழிச்சியே உலகப் பண்பாட்டுச் செழிச்சி” “தமிழின ஒற்றுமையே உலக மானுட ஒற்றுமை” “தமிழர் மத விழிச்சியே உலகச் சமாதான மலர்ச்சி” “தமிழர் மத எழுச்சியே உலக நாகரீக மறுமலர்ச்சி”…
மதநல்லிணக்கக் கட்டடங்கள் – வைகை அனீசு
மதநல்லிணக்கக் கட்டடங்கள் இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வதற்கும் உண்மையான வரலாற்றைக் காலவாரியாக எடுத்துக்கூறுவதற்கும் தொல்லியல் சான்றுகளே மிகுந்த துணைபுரிகின்றன. மனித குல வரலாற்றில் எளிய மக்களின் வாழ்வையும், நடுத்தர, உயர்குடி மக்களின் வாழ்வையும் தொல்லியல் சான்றுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் உள்ள பழமையான பள்ளிவாசல்கள், தர்ஃகாக்கள், அகழாய்வுகள் மூலம் கண்டறிந்தவை, ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வாழ்ந்த மக்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. இதே போன்று மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், அவர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் வரலாற்று உருவாக்கத்திற்கு அடிப்படைச்சான்றுகளாய்…
தாமரையின் ஊழல் முகம் ! – பாரதி தம்பி
தாமரையின் ஊழல் இதழ்கள் ! – பாரதி தம்பி மக்களின் அவநம்பிக்கையைப் பெற, காங்கிரசுக்கு 10 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் பாரதிய சனதா கட்சியோ, ஒரே வருடத்துக்குள் மாபெரும் மக்கள் அதிருப்தியைச் சம்பாதித்திருக்கிறது. காங்கிரசை மக்கள் நிராகரிக்க ஊழல் காரணம் என்றால், இந்த ஓர் ஆண்டில் பா.ச.க அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் வாதாட்டங்களும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிக்கின்றன. இலலித் மோடி முதல் ‘வியாபம்’ வரை புதுப் புது ஊழல்கள்; புதுப் புது வாதாட்டங்களள்! தலைமையாளர் மோடி, எதற்குமே வாய் திறப்பது…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 1 – மறைமலை இலக்குவனார்
செந்தமிழின் செம்மொழிச்சீர்மையை விளக்கும் இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோற்றம் ஏனைய மொழிகளின் சார்பின்றியிருத்தலும் வேண்டும். என்கிறார் அமெரிக்கத் தமிழறிஞர் சார்சு கார்ட்டு (George Hart). ஒரு மொழியின் இலக்கியப்பழமையே அதனைச் செம்மொழியாகப் போற்றுதற்கு முதன்மைக் காரணம் எனக் கூறுவதுடன் சங்க இலக்கியங்களின் செழுமையையும் அவர் விரிவாக விளக்கித் தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்குவது குறித்த ஆய்வு தேவையற்றது என்கிறார். தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்கவேண்டும் என்று…
தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் 6 – வைகை அனீசு
(ஆனி 27,2046 / சூலை 12, 2015 தொடர்ச்சி) 6 சட்டஅறிவு இல்லாத பொதுத்தகவல் அலுவலர்கள் தகவல் உரிமைச்சட்டத்தில் அதிகாரமிக்கவர் பொதுத்தகவல் அலுவலர். பொதுத்தகவல் அலுவலருக்குத் தகவல் உரிமை சட்டத்தைப்பற்றிய சட்ட விழிப்புணர்வும் சட்டஞானமும் தெரியவில்லை. தஞ்சாவூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் கடந்த 6.6.2015 அன்று வணிக வரித்துறையில் பணிபுரியும் அருள் என்பவருடைய அலுவல் தொடர்பாகத் தகவல்களை வேண்டினோம். அதற்கு வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து ந.க.எண்3844-2015-ஆ6 என்ற மறுமொழி மடல் வந்தது. அம்மடலில், “பிரிவு (8) ஒ. [8.j.] இன்படித் திரு.அருள்…
தொல்காப்பியம் காலத்தால் முற்பட்டதேயன்றி முதல்நூலன்று – சி.இலக்குவனார்
தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்று கூறப்படுகின்றது. தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில. ஆதலின் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் இல்லையென்று கூறிவிட இயலாது. தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். எம்மொழியிலும் இலக்கியம் தோன்றி வளர்ந்த பின்னரே இலக்கணம் தோன்றும். இதற்குத் தமிழ் மொழியும் புறம்பன்று. தமிழிலும் இலக்கியங்கள் தோன்றிய பின்னரே இலக்கணங்கள் தோன்றியுள்ளன. தொல்காப்பியமும், இலக்கியங்கள் மட்டுமின்றி இலக்கணங்களும் பல தோன்றிய பின்னரே இயற்றப்பட்டுள்ளது என்பதைத் தொல்காப்பியமே தெற்றெனப் புலப்படுத்துகின்றது. ஆதலின் தொல்காப்பியம் இன்று நமக்குக்…
இந்திய வரலாறு குமரிநாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும் – சி.இலக்குவனார்
இந்திய வரலாறு குமரிநாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும். தமிழகம் மிகவும் தொன்மை வாய்ந்த வரலாற்றினையுடையது. ஆனால் வரலாற்றாசிரியர்கள் தமிழகத் தொன்மையை நன்கு ஆராய்ந்து வரையறுத்து எழுதுவதில் கருத்துச் செலுத்திலர். இந்திய வரலாற்றாசிரியர்களில் பெரும்பான்மையினர் தமிழகத்தைப் பற்றிய நினைவே கொண்டிலர். வட இந்தியாவிலும் தென்னிந்தியாவே மிகவும் தொன்மை வாய்ந்தது. வரலாறு மிகத் தொன்மையான காலத்திலிருந்தே எழுதப்பெறுவது மரபென்றால் இந்திய வரலாறு குமரி நாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும். குமரி ஆறும் குமரி மலையும், பனி மலையினும் கங்கையாற்றினும் மிக மிகத் தொன்மை வாய்ந்தனவாகும். “மன்பதை முதலில்…
