திருக்குறளில் உருவகம் – 1

 -ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி  தலைப்புக் குறிப்பு.   உருவகம் என்ற சொல்லைப் பொதுவாக ஆங்கிலத்தில் Metaphor என்ற சொல்லின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் பயன்படுத்துதல் வழக்கம். ஆயினும் இக்கட்டுரை முழுவதிலும் இச்சொல் Image என்ற சொல்லிற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் ‘‘காட்சி’’யென்று சொல்லலாம். ஆனால் ‘காட்சி’ யென்றசொல் அகத்தே தோன்றும் உணர்ச்சிக்கு உருக்கொடுக்கும் ஆற்றலை மட்டுமின்றிக் காணப்படும் பொருள் யாவிற்கும் பொதுவான சொல்லாக இருப்பதால், அதை நீக்கி ‘உருவகம்’ என்ற சொல்லையே Image என்பதன் மொழி பெயர்ப்பாகப் பயன்படுத்தியுள்ளேன். முன்னுரை   திருவள்ளுவர் இயற்றிய குறள்…

நாயன்மார்கள் – அறுபத்து நால்வர்

-முனைவர். ப. பானுமதி           நாயன்மார்கள் அறுபத்து மூவர் என்பது பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் உருவாக்கியுள்ள நெடுங்கணக்கு. அவர்களுள் பெண் நாயன்மார்கள் மூவர். சைவம் தழைக்க உதவிய மகளிர் தொண்டர்கள் என்று காரைக்காலமையார், இசை ஞானியார், மங்கையர்க்கரசியார் ஆகிய மூவரைச் சுட்டுகிறது பெரிய புராணம். நாயன்மார்களின் பட்டியலில் பெண் நாயன்மார்கள் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர்.              பெரிய புராணத்தில் சுந்தரரை ஈன்றெடுத்த அளவில் இசைஞானியாரின் பெருமை ஒர் பாடலில் (1282) பாடி முடிந்துள்ளது,.            மங்கையர்க்கரசியாரின் பெருமை பாண்டிய மன்னன் நின்ற…

வாழ்வு நெறி – முனைவர் வ.சு.ப.மாணிக்கம்.

1. பலருக்குக் ஆராய நூல் வேண்டும், சொற்பொழிவாற்றக் கருத்து வேண்டும் என்பதற்காகத் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றவில்லை. எல்லாரும் வாழ வேண்டும்; எப்படி வாழ்விப்பது என்ற தலையாய நோக்கமே திருக்குறட் பிறப்பிற்குக் காரணம். இந்நோக்கம் எல்லாக் குறள்களிலும் வெளிப்படக் காணலாம். மிகக் கீழானோர்க்கும் உயர்வுண்டு; இயல்பாகவுள்ளவர்க்கும் மேலுயர்வு உண்டு; மிகவுயர்ந்தார்க்கும் மேன்மேலுயுர்ச்சியுண்டு என்ற நம்பிக்கையைத் திருக்குறள் நமக்கு ஊட்டுகின்றது.   தாழ்ந்தாரைப் பார்த்துச் சோர்வடைய வேண்டா எனவும், உயர்ந்தாரைப் பார்த்து அமைதியடைய வேண்டா எனவும் ஊக்கமும் ஆக்கமும் தருவது திருக்குறள். எல்லார்க்கும் பொதுவான அறங்களைக் கூறுவது…

இவர்கள் எந்த இனம்? – திருக்குறளார் வீ.முனுசாமி

 வாழ்க்கையில் நண்பர்கள் – பகைவர்கள் என்று இரு பிரிவுகளைக் காணுகின்றோம். பகைவர்களைக் காணுகின்றபோது, கண்டுகொள்ளமுடியாத கொடியவர்கள், பகைவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களை நாம் கண்டுகொள்ளவும் முடிவதில்லை; புரிந்துகொள்ளவும் முடிவதில்லை; தெரிந்து கொள்ளவும் முடிவதில்லை. ஏன்? இவர்கள் நம்முடைய நெருங்கிய நண்பர்கள் போலவே பழகி வருகிறார்கள்! இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்? இவர்களெல்லாம் தனிப்பட்டதொரு இனத்தைச் சேர்ந்தவர்கள்! நம்முடைய இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்; இது திருவள்ளுவரின் வாக்கு; விளக்கம்.   இந்த இனத்தினர் யாருடன் பழகுகின்றனரோ அவருக்கு முடிவான தீங்கினை உண்டாக்குவதற்கே பழகுகின்றனர்; அப்படிப்பட்ட தீங்கினைச் செய்கின்ற…

ஔவை உரைவேந்தரானது எப்பொழுது?

    செஞ்சொல் வீரர் ஔவை சு.துரைசாமி  அவர்களை உரைவேந்தர் எனக் குறிப்பிடுகின்றோம். இவரது உரைத்திறன்சிறப்பை அறிந்து எப்பொழுது யாரால், எவ்வமைப்பால் உரைவேந்தர் பட்டம் வழங்கப் பெற்றது என்பதை அறிவீர்களா?   உரைவேந்தரைச் செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் பாராட்டி மகிழும் பின் வரும் குறள்நெறிச் செய்தியைப் படியுங்கள். புரியும். உரைவேந்தர் பேராசிரியர் ஔவை சு.துரைசாமிப்பிள்ளையவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவை மதுரைத் திருவள்ளுவர் கழகம் தைத்திங்கள் மூன்றாம் நாள் (16-01-64) சிறப்பாகக் கொண்டாடியது. ஆட்சி மொழிக் காவலர் கி.இராமலிங்கனார் தலைமையில் தமிழவேள் பொ.தி. இராசர்…

வள்ளுவரும் அரசியலும் – முனைவர் பா.நடராசன்

  வாழ்வின் குறிக்கோள் இன்பம். இன்பம் பொருளால் வருவது. பொருள் அறத்தால் வருவது. அறமே முதற் காரணம். இன்பமே இறுதி விளைவு. இங்ஙனமாக அறம், பொருள் இன்பம் என மூன்றும் சங்கிலித் தொடராக – காரண காரியங்களாக அமைகின்றன.   இம்மூன்றனுள் பொருள் நடுவணதாக அமைந்துள்ளது. பொருள் உண்டாவதற்கும் சிறப்பதற்கும் அறமே அடிப்படைக் காரணமாயினும், அரசியல் இன்றியமையாத அடுத்த காரணமாகும்; துணைக் காரணமாகும். நல்ல அரசாட்சியுண்டேல் நல்ல பொருளாதாரமும் உண்டு. அரசாட்சியின் குறிக்கோள் மக்கள் பொருள் நலம் சிறப்பதேயாகும்.   ஏனெனில் ஆட்சியே பொருளை…

அத்தத்தா…… (மழலை மொழி மயக்குறும் மந்திர மொழி)

கொஞ்சு மொழி பேசாவிட்டால் குழந்தைகளிடம் நஞ்சு மொழியே மிஞ்சும்!! –முனைவர். ப. பானுமதி வெளியிடங்களில் இளம் குழந்தைகளின் நடைமுறைகளைப் பார்க்கும் போது மனத்திற்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் பெரியவர்களிடம் மரியாதை சிறிதுமில்லாமல் நடந்து கொள்வதும் வசை மொழிகளை வரையறையின்நி வீசுவதும் வெகு இயல்பாகிப் போயுள்ளது. இல்லங்களிலும் அன்னை, தந்தையை வைவது அன்றாட நடைமுறையாகி விட்டது. “அத்தத்தா என்னும் நின்தேமொழி கேட்டல் இனிது”     சங்கத் தாயின்  மகிழ்ச்சிச் சாரல் இது. சங்ககாலத் தாய் ஒருத்தி தன் குழந்தை ‘அத்தத்தா….’ என்று பிஞ்சு வாயில்…

வள்ளுவர் கூறும் வாய்மை-மு.ஏழுமலை கலை.மு.,

  பொதுவாக உலக வழக்கில் ‘உண்மை’ ‘வாய்மை’ என்னும் இரு சொற்களையும் ஒரு பொருள் குறிப்பனவாகவே மக்கள் வழங்கிவருகின்றனர். ஆனால், இவ்விரு சொற்களும் வெவ்வேறு பொருளைச் சுட்டி நிற்பனவாகும்.   உண்மை என்னும் சொல், உள்ளதை அல்லது நிகழ்ந்த ஒன்றைக் குறிப்பது. மாங்காய் புளிக்கும்; கரும்பு இனிக்கும்; மரம் முறிந்தது; இவை அனைத்தும் உண்மைகள். முயல் கொம்பு; வாடாத நறுமலர்; தேயா நிலவு; இவை இல்லாத அல்லது நிகழாத இன்மைப் பொருள்களைச் சுட்டுவன. இதனின்று உண்மை என்னும் சொல் இன்மை என்பதன் எதிர்ச்சொல் என்று…

முதல்நூலும் முதல்வனும் – திருக்குறளார் வீ.முனுசாமி

1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் ‘அனைத்தறன்’ ஆகுல நீர பிற. 2. அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான். 3. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது.   உலகின் பல்வேறு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ள நூல்களுக்கெல்லாம் முதன்மையாக இருப்பது திருவள்ளுவர் அருளிய திருக்குறளாகும். காலத்தினால் சொல்லுவதென்பதல்லாமல், கருத்தினாலும் சொல்லப்படுவதாகின்றது.   உலகில் காணப்படுகின்ற நூல்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையினையே கருத்துட்கொண்டு எழுதப்பட்டுள்ளன. தெய்வீகம், பொருளாதாரம், அரசியல், காதல் வாழ்க்கை, இல்லறம், துறவறம் இவ்வாறாக ஒவ்வொன்றில் நின்று எழுந்த…

கவிதை உறவு இலக்கியப் பரிசுப் போட்டி

 கவிதை உறவு இலக்கியப் பரிசுகள் பெற ஏப்பிரல் 10-ஆம் நாளுக்குள் புத்தகங்களை அனுப்பவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிப்பிரிவுகள் பரிசுகள் விவரம் வருமாறு:-  மரபுக் கவிதை  :  துரைசாமி(நாடார்) -இராசாம்மாள் நினைவுப் பரிசு புதுக்கவிதை : ஊர்வசி செல்வராசு நினைவுப் பரிசு மனிதநேயம்-வாழ்வியல் : சுப்பையா – தங்கம்மாள் நினைவுப் பரிசு சிறுகதை : சு. சமுத்திரம் நினைவுப் பரிசு இலக்கிய கட்டுரைகள் :  முனைவர் மு. வரதராசனார் நினைவுப் பரிசு ஆய்வு- பொதுக் கட்டுரைகள் :  முனைவர் சி. இலக்குவனார் நினைவுப் பரிசு மேலும்…

திருக்குறள் வாழ்க்கை நூல் – அறிஞர் முகம்மது சுல்தான் கலை.மு.,சட்.இ.,

   வாழ்வின் பயனை மக்கள் அடைவதற்கு வழிகாட்டிகளாக உலகின் பல்வேறு மொழிகளில் பல நூல்கள் உள. அவைகளுள் மூன்று நூல்கள், அவைகளை இயற்றியவர்களின் அறிவுத்திறத்தையும் ஆராய்ச்சி நுணுக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. தாங்கள் எழுதியிருப்பவைகள் எல்லாம் வல்ல கடவுளின் நாதம் அல்லது தொனி அல்லது வெளிப்பாடு என்று இந்த மூன்று நூல்களின் ஆசிரியர்கள் சொல்லவில்லை. தங்களுக்குத் தெய்வ தூதர்களால் அருளப்பட்ட திருவாக்கு என்றும், அவ்வாசிரியர்கள் விளம்பரம் செய்யவில்லை. அம்மூன்று நூல்களும் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் உலக மக்களுக்கு அளிக்கப்பட்டவை.    அவை; 1….

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 5/5

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம்   பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 5/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com  www.akaramuthala.in குறள்நெறிப் பரப்புரைப்பணி பள்ளிமாணாக்கனாக இருந்த பொழுது உணவு நேரத்தில் அமைதி காப்பதற்காக நாள்தோறும் திருக்குறளைப்படிக்கும் பழக்கத்தை மேற்கொணடிருந்தார் பேராசிரியர் இலக்குவனார். படிக்குந்தோறும்  படிக்குந்தோறும் அதன் இன்பத்தில் மூழ்கினார். குறள்நெறியையே தம் வாழ்வின் நெறியாக அமைத்துக் கொண்டார். தாம் பெற்ற பேறு இவ்வையகம் பெற வேண்டும் என்றல்லவா ஆன்றோர் எண்ணுவர். அதன்படி…