பிற்காலத்தில் அசுரர் என்றால் அரக்கர் என்றனர்.
தமக்கு எதிரே நாகரிகம் நிரம்பி விளங்குகின்ற தமிழ் அரசரைத் தமக்குத் தலைவராக ஒருப்பட்டுப் பண்டைய ஆரிய மக்கள் அசுரர் என வாங்கினார். பிற்காலத்து வடமொழியில் மட்டும் “அசுரர்’ என்னும் அச்சொல்லின் உயர்ச்சிப் பொருளை மாற்றி அதற்கு அரக்கரெனப் பொருள் கட்டி விட்டார்கள். மற்று ரிக் வேதமோ அரசியல் நெறி திறம்பாத தமிழரசைச் சுட்டி “அசுரர்’ என மிகவும் பாராட்டி விளங்கியது. – தமிழ்க் கடல் மறைமலையடிகள்
தமிழரை ஆரியர்கள் தலைவர் என்னும் பொருளில் அசுரர் என்றனர்
ஆரியர் வருஞான்று தமிழர் அரசியல் முறை பிழையாது வாழ்ந்தனராகலின் அவரை ஆரியர் “அசுரர்’ என்று பெயரிட்டு வழங்கினார். ரிக் வேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்கள் முழுவதூஉம் “அசுர’ என்னுஞ் சொல் “வலிய’ அல்லது “அதிகாரமுடைய’ என்னும் பொருளில் உரிச்சொல்லாய் வழிப்பட்டு வருகிறது என்றும் “அசுரர்’ என்பதற்கு அதனால் “தலைவர்’ என்னும் பொருள் பெறப்படுகிறது என்றும் உரோமேசு சந்திரதத்தரும் இனிது விளக்கினார். “ஞிமிறு’ என்பது “மிஞிறு’ எனவும் “தசை’ என்பது “சதை’ எனவும், “விசிறி’ என்பது “சிவிறி’ எனவும் எழுத்து நிலைமாறி வருதல்…
ஒலி பெயர்ப்பு வரையறைக் குழு அமைக்க அரசிற்கு வேண்டுகோள்!
சீரான ஒலிபெயர்ப்பை நடைமுறைப்படுத்த தமிழக அரசிற்குத் தமிழறிஞர்களின் வேண்டுகோள் மூல மொழிச் சொற்களை உள்ளவாறு உணர்வதற்கு உதவுவது ஒலிபெயர்ப்பு. அந்த வகையில் தமிழ்ச்சொற்களைப் பிற மொழியினர் அறிய உதவுவது ஒலி பெயர்ப்பு. பொதுவாக உரோமன்/ஆங்கில எழுத்துகளில் தமிழுக்கான ஒலிபெயர்ப்பு மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. [பிற மொழியாளர்கள் புரிதலுக்காகத்தான் ஒலி பெயர்ப்பே தவிர, தமிழில் ஒலி பெயர்ப்பு முறையில் பிற மொழிச்சொற்களைக் கலக்கக்கூடாது.] ஐரோப்பியர் வருகைக்கு முன்னர், எத்தகைய ஒலி பெயர்ப்பு முறைகளைப் பிற மொழியினர் கையாண்டிருந்தனர் என நமக்குத் தெரியவில்லை. ஐரோப்பியர் வருகைக்குப்பின்னரே தமிழ்…
ஓவியத்திலும் பழந்தமிழர் சிறப்புற்றிருந்தனர்!
“ஒவ்வு’ என்றால் ஒன்றைப் பற்று அல்லது ஒன்றைப் போல இருப்பது என்பது பொருள். இதிலிருந்து “ஒப்பு, ஓவம், ஓவியம்’ எனச் சொற்கள் பிறந்து உள்ளன. கண்ணால் கண்ட பொருளை மனதில் நிறுத்திப் பின்னர் இத்ன உருவத்தைச் சுவரிலோ அல்லது பிற பொருள்களின் மீதோ தீட்டி மூலப்பொருட்களின் தன்மையை அதில் எதிரொளிக்கச் செய்வதே ஓவியமாகும். பழந்தமிழகத்தில் வண்ணம் தீட்டும் கோல்கள் “தூரிகை, துகிலிகை’ என இருவகைகளில் இருந்தன. வண்ணம் குழைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டும் பலகை வட்டிகை, மணிப்பலகை எனப்பட்டன. தூரிகை பாதிரிப்பூவைப் போல் இருந்தன…
அயலவரின் முதல் தமிழ்க்கையேடு : நிறைவு – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்
(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு (ஏன் படிக்க வேண்டும்?) முன்சொல் 16-ஆம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்த போர்த்துக்கீசியப் பாதிரி அன்றீக்கு அடிகளார் கிறித்துவ மதத்தைப் பரப்ப வேண்டி, தமிழகத்து முத்துக்குளித்துறைப் புன்னைக்காயலில் உள்ளூர் மக்களாகிய பரவரிடையே வாழ்ந்து அவர்கள் பேசிய தமிழைப் படித்தார். தாம் படித்த தமிழைப் பிற பாதிரிமாருக்குக் கற்பிக்கவேண்டி ஒரு கையேடு தயாரித்தார். அதுவே “மலபார் மொழிக் கருவி (Arte Da Lingua Malabar)” என்ற கையேடு….
மொழித் தூய்மை உலகோர் வேண்டுவது
“தூய தமிழ் என்றால் இன்று எள்ளுவோர்களும் உளர். ஆங்கிலத்தைப் பார்” என்று அதன் கலப்புத் தன்மையைச் சுட்டிக் காட்டுவர். ஆங்கில மொழியின் வரலாற்றை அவர் அறியார். அங்கும் தூய ஆங்கிலம் வேண்டும் என்ற இயக்கம் தோன்றியுள்ளது. தூய ஆங்கில இயக்கம் (Society for Pure English) என்றே பெயரிட்டனர். அது 1913இல் தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கியவர்கள் அந்நாட்டுப் பெரும் புலவர்கள். அதைத் தோற்றுவிக்க முதன்மையாய் இருந்தவர் அந்நாட்டு அரசவைப் புலவர். அதற்கு முன்பு அந்நாட்டில் வேற்றுமொழிச்சொற்களை ஆங்கில மொழியில் கலப்பதை வெறுக்கும் கொள்கை…
பார்க்கும் இடமெல்லாம் பைந்தமிழே!
உழவும் கலப்பையும் காரும் கயிறும் குண்டையும் நுகமும் சாலும் வயலும் வாய்க்காலும் ஏரியும் மடுவும் ஏற்றமும் பிறவும், பயிரும் களையும் நட்டலும் கட்டலும் முதலாய ஏரெழுபதும் தமிழ் மொழிகளால் இயன்றனவே. தமிழர்கள் வசித்துவரும் வீடுகளின் கூறுகளாகிய தலைக்கடையும் புழைக்கடையும் கூரையும் வாரையும் கூடமும் மாடமும் தூக்கும் தூணும் கல்லும் கதவும் திண்ணையும் குறமும் தரையும் சுவரும் மண்ணும் மரனும் மற்றவும் தமிழே. தலையும் காலும் கண்ணும் காதும் மூக்கும் மூஞ்சியும் வயிறும் மார்பும் நகமும் சதையும் நாவும் வாயும் பல்லும்…
உயர்திணை, அஃறிணைப் பாகுபாடு தமிழரின் நுண்ணறிவிற்கு அடையாளம்
ஆசிரியர் தொல்காப்பியனார் சொல்லதிகார முதலிலேயே உலகியற் பொருள்களை உயர்திணையென்றும், அஃறிணையென்றும் பகுத்தோதினார். எம் அரிய நண்பர்கள்! இப்பாகுபாட்டின் அருமையும் நுட்பமும் நாமுணராதிருக்கின்றோம். பிறமொழிகளில் எங்காயினும் இத்தகைய நுண்பகுப்பு உளதா என்று ஆராய்வோமாயின் அப்போது இதன் பெருமை நன்கு தெளியக் கிடக்கும். ஆங்கில முதலான மேல்நாட்டு மொழியிலெழுதப்பட்ட இலக்கண நூல்களை இடைவிடாது எழுத்தெழுத்தாய் ஆராய்ந்து பார்ப்பினும் அற்றின்கண் இவ்வுரிமையை பெரிய இலக்கணப் பாகுபாடு ஒரு சிறிதுங் காணப்படாது, அன்றி, இந்திய நாட்டிற் சீர்த்தி பெற்ற மொழியாய்ப் பயிலப்படும் வடமொழியிலேனும் இம்முறையுண்டோ வெனின் ஆண்டும்…
தமிழர்க்குரியனவற்றை ஆரியர் தமக்குரியன என்றனர்
இவ்வாறு தத்துவ ஞானங்களும் அவை திருத்த விளக்கிய உபநிடதம், சிவாகம் முதலியனவும் தமிழர்க்கே உரியனவாய்ப் பின் ஆரியராற்றமிழரிடமிருந்து பெறப்பட்ட ஆரிய இரவற்பொருணூல்களாய் நிலைப்பவும், இஞ்ஞான்றை ஆரியர் அவை தமக்கே உரியன எனவும், அவை தம்மைத் தமிழர் ஓதப் பெறார் எனவும் கூறுதல் சிறுமகரானும் எள்ளிநகையாடற்பாலதாம் இஞ்ஞான்றை ஆரியர் தமிழர் செய்த நன்றியைச் சிறிதும் ஓராது தீட்டின மரத்திற் கூர் பார்த்தல் ஒப்ப, நமக்கு அறிவு கொளுத்திய பண்டைத் தமிழ் மக்கள் மரபினராம் நம்மனோர்பாற் செய்து போதரும் படித்தொழுக்கம் மிகப்பெரிது! அவர் படிற்றொழுக்க இயல்பு இணைத்தென்றறியாத…
அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 7 தொடர்ச்சி – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்
(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 7 தொடர்ச்சி (புத்தக வெளியீட்டு முயற்சி-3) ஒரு புத்தகத்தை உண்மையான ஆர்வத்துடனும் ஆய்வு நோக்கத்துடனும் அணுகுகிறவர்களுக்கு நுழைவாயில் இரண்டு இடங்களில்: பொருளடக்கத்தில் (Table of Contents) + சொற்களைத் தேடும் குறிப்புப் பட்டியலில் (Index). படிக்கிறவர்களுக்குப் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றித் தெரியாது, இல்லையா, அவர்களுக்கு உதவி செய்யத்தான் இந்த இரண்டும். எங்கள் வரலாற்று மொழியியல் பேராசிரியர் என்றி ஓஎனிகுசுவால்டு (Henry…
தமிழுக்கு அமுது தந்தவர்! – முனைவர் ம. இராசேந்திரன்
சொல்லும் எழுத்தும் மொழிக்குத் தேவைதான். ஆனால், மொழிவாழ்வைத் தீர்மானிப்பது அவை மட்டும் அல்ல. பேசுகிறவர்களின் அதிகாரம் பேசப்படுகிற மொழியை வாழ வைக்கலாம்; ஆனால், அதிகாரம் நிலையானதன்று. அதிகாரம் மாறுகிறபோது மொழியின் வாழ்நிலையும் கேள்விக்குறியாகலாம். அப்படியென்றால் ஒரு மொழி வாழவும் வளரவும் அமுதூட்டுபவர்கள் யார்? ஒவ்வொரு காலத்திலும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் அதிகார உதவியின்றியும் மொழிவாழ அமுதூட்டி வருகிறார்கள். ஆயுட்காலத்தை நீட்டித்துத் தருகிறார்கள். காலம்தோறும் மொழியை இனிது ஆக்குகிறார்கள். “”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதியார். “”தமிழுக்கும் அமுதென்றுபேர்” என்றார்…
சிறப்புடைய மொழியின் இலக்கணம் தமிழுக்கே உரியது
சிறப்புடைய மொழியின் இலக்கணம் தமிழுக்கே உரியது இயற்கை ஒலிகளையுடைய சுருங்கிய எழுத்துக்களை உடைமை. ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்து சொற்களைப் பெருவாரியாக உடைத்தாயிருத்தல். சொல்லும் பொருளும் பருந்தும் நிழலும்போல் ஒற்றுமை உடைமை. தெளிந்த நடையையும், இனிய ஓசையையும், பா அமைதியையும் உடைமை. பகுதியும், அதனிற் தோன்றும் சொற்களும் மாறுபடாமை. காலம் இடம்தட்பவெப்பங்களால் மாறுபடாமை என்றும் அழியாப் புத்தழகு உடைமை. புது நூற்கள் யாத்தற்கு இயைபு உடைமை. பிறமொழிச் சொற்களை மொழி பெயர்த்தற்கு ஏற்ற திறன் உடைமை. பிறமொழி உதவியின்றி இயங்கும் ஆண்மையும், பலமொழிகளுக்குத் தாயாயிருக்கும் பெண்மையும்…
