மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி) அரிமா அடலேறு சேர வேந்தனின் அமைச்சன் அழும்பில்வேள். அவனது மகன் அடலேறு, மாங்கனியைப் பார்த்தது முதல் பித்தனாகிவிட்டான். அவன் விழியிருக்கும் ஒளியின்றி, விரிந்த நெஞ்சு வெளியிருக்கும் நினைவின்றி, வாய்வடித்து மொழிபிறக்கும் தொடர்பின்றிக்காதல் ஒன்றே மூண்டிருக்கும் உருவானான் எனக்காதலர் நிலையை விளக்குபவர், காதற்சுமையை இறக்கி வைக்க வழியில்லையே என எண்ணுகிறார். சுமைதாங்கி, சுமைக்கல், சுமைதாங்கிக் கல் என்ற பெயர்களில் தலைச்சுமையை இறக்கி வைக்க வழி உள்ளது அல்லவா? அதுபோல் காதலால் ஏற்படும்…
திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 2
(கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி) 6.0. சொல்நுட்பத்தகவு நுட்பம்அமைந்தசொல்லின்தகவு / தகைமை எப்படி இருத்தல் வேண்டும் என்று ஆய்தலும் இங்குத் தேவையாகின்றது. அடைப்புக்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள எண்கள் திருக்குறட் பாக்களின் எண்கள். ஆக்கம் தருவதாய் இருத்தல் [0642]. கேட்போரை ஈர்த்து, அவரது உள்ளத்திற்குள் சென்று பதியும் திறன்உடைத்தாதல் [0643], அறனும், பொருளும் அளிக்கும் திறன் பெற்றிருத்தல் [0644], நுட்பச்சொல்லைச் சொல்லும்பொழுது, அச்சொல்லை வெல்லும் வேறு ஒரு சொல் இல்லாதபடிச், சொல்லும் சொல்லே வெல்லும்படி அமைதல் [0645], கேட்போர் விரும்பும்படித்…
சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (நிறைவு) செ.வை. சண்முகம்
மையக்கருத்துரை (கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி) 5.2. இறைச்சி தொல்காப்பியர் இறைச்சியைப் பொருளியலில் மூன்று சூத்திரங்களில் (35 – 37) விளக்கியுள்ளார். ‘இறைச்சிதானேஉரிப்/பொருட்புறத்ததுவே’ என்பது முதல் சூத்திரம். அதில் உரி/ பொருள் என்ற இரண்டு பாடம் காணப்படுகிறது. இங்கு ‘உரிப்பொருள்’ என்ற பாடம் கொண்டால் அதுவும் மனிதவாழ்க்கை (உரி) ஆனது. கருப்பொருள், முதல்பொருள் (உரிப்புறத்தது) ஆகியவற்றால் தாக்கம்பெறும் என்று ஆகும். ‘அன்புறுதகுந இறைச்சியுட் சுட்டலும் வன்புறையாகும் வருந்திய பொழுதே’ (பொருளியல்…
கலைச்சொல் தெளிவோம்! 8.] மலையியல் கலைச் சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
8.] மலையியல் கலைச் சொற்கள் மலை தொடர்பான நாற்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. குறிஞ்சித்திணைப் பாடல்களில் இவை காணப்படுவதால் புவியியல், மலையியல் என்பன போன்று குறிஞ்சியியல் என்றே நாம் தனியியல் கண்டு பல கலைச்சொற்களைப் புதுப்பிக்க இயலும். சங்கச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களையோ பிறமொழிச்சொற்களையோ நாம் காண இயலாது. சான்றாக எதிரரொலிக்கும மலையைச் சிலம்பு என்றனர். ஆனால், அத்தகைய வகைப்பாடு பிற மொழியாளரிடம் இல்லாததால் நாம் பொருள் விளக்கம்தான் அளிக்க இயலும். பின்வரும் சொல்…
கலைச்சொல் தெளிவோம்! 6.] வழக்குரைஞரும் தொடுநரும் – இலக்குவனார் திருவள்ளுவன்
வழக்குரைஞரும் தொடுநரும் பல் கேள்வி துறை போகிய தொல் ஆணை நல் ஆசிரியர் உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் (பட்டினப்பாலை :169 – 71) பலவாகிய கேட்டற்றொழிலையுடைய நூற்றிரளை முற்றக்கற்ற பெரிய ஆக்கினையைடைய நல்ல ஆசிரியர் வாதுசெய்யக்கருதிக் கட்டின அச்சம் பொருந்தின கொடிகளும், என உரையாசிரியர் விளக்கம் தருகின்றனர். எனவே, உறழ்(3) என்பது வாதிடுதல் என்னும் பொருளில் வந்துள்ளதை உணரலாம். இப்பொழுது நாம் வழக்குரைஞர் என்னும் சொல்லையே பொதுவான சொல்லாகக் கருதிப் பயன்படுத்துகிறோம். ஆட்சியியல், மனைஅறிவியல், சட்டவியல், ஆகியவற்றில் advocate…
கலைச்சொல் தெளிவோம்! 5.] உயரமும் உம்பரும் : இலக்குவனார் திருவள்ளுவன்
உயரமும் உம்பரும் height-உயரம்எனவேளாணியல், பொறி-நுட்பவியல், கணக்கியலில் பயன்படுத்து கின்றனர். ஆனால், elevation-உயரம்எனவேளாணியல், புவியியல், மனைஅறிவியல், மருத்துவயியல்ஆகியவற்றில்பயன்படுத்துகின்றனர். அதேநேரம், உயிரியல், பொறி- நுட்பவியல், கணக்கியல், கால்நடைஅறிவியல்ஆகியவற்றில்ஏற்றம்எனப்பயன்படுத்துகின்றனர். ஆட்சியியலில்உயர்வு, உயர்த்துதல், ஏற்றம்எனவும்வேறுபொருளில்கையாளப்படும்பொழுதுமுன்புறத்தோற்றம், மேடுஎனவும்பயன்படுத்துகின்றனர். எனவேஇரண்டையும்வேறுபடுத்திக்குறிப்பிடவெண்டும். சங்கஇலக்கியங்களில்உம்பர், உவணம்என்னும்சொற்கள்உயரத்தைக்குறிக்கின்றன. உம்பர்வரும்சிலஇடங்கள்வருமாறு: பன்மலர்க்கான்யாற்றுஉம்பர்க்கருங்கலை (நற்றிணை : 119.6) ஈனும்உம்பரும்பெறல்அருங்குஉரைத்தே (ஐங்குறுநூறு : 401.5) உம்பர்உறையும்ஔிகிளர்வான்ஊர்பாடும் (பரிபாடல்: 11.70) இமையத்துஉம்பரும்விளங்குக! (கலித்தொகை : 105.75) உம்பர்என்பதுஉயர்ச்சியைக்குறிக்கிறது. எனினும்சிலஇடங்களில்ஓரிடத்திற்குஅப்பால்உள்ளதொலைவுஅல்லதுஉயரத்தைக்குறிக்கிறது. உயரம் – height உம்பர் – elevation, elevated spot – இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னையில் திருவையாறு – தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு : இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னையில் திருவையாறு தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு இலக்குவனார் திருவள்ளுவன் அமிழ்தினும்இனிய தமிழ்க் கடலில்நஞ்சு ஆறாகப் பெருகிக் கலந்தால்அழிவுதானே நமக்கு!ஆனால், நாம் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அழிப்போருக்குஉதவுகிறோம். அல்லதுகண்டும் காணாமல்இருப்பதன் மூலம் மறைமுகமாகத்துணைபுரிகிறோம்.திசம்பர்த் திங்களுக்கு உரிய பெருமைகளுள் ஒன்று, ‘சொல்லில்உயர்வு தமிழ்ச்சொல்லே’ என்பதை உணர்த்தி அதனைத் தொழுது படித்திடச் சொன்னபாரதியார்பிறந்த திங்கள் என்பது. இந்தத் திங்களில்தான் சென்னையில் சிலஆண்டுகளாகநஞ்சு கலக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருவையாறு தமிழிசைப் பரம்பரைக்குரிய ஊர்தான். என்றாலும் நமக்கு என்னநினைவிற்கு வர வேண்டும்? தமிழ்நாட்டில் தமிழர்களின் பொருளால் தமிழர்களால்கட்டப்பட்ட மேடையில் தமிழ்ப்பாட்டுப்…
கலைச்சொல் தெளிவோம்! 7. ] மூத்த குடிமக்களை மூதாளர் என்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மூதாளர் – இலக்குவனார் திருவள்ளுவன் மூதாய், மூதாளர், மூதாளரேம், மூதாளன், மூதிலாளர், மூதிலாளன், மூதிற்பெண்டிர், மூதின் மகளிர், முதலான சொற்கள் மூலம் புலவர்கள் மூத்தோரைக் குறிப்பிடுகின்றனர். இவற்றுள், மூதாளன், மூதாளர் என வரும் இடங்கள் வருமாறு : நரைமூ தாளர் நாயிடக் குழிந்த (மருதன் இளநாகனார் : புறநானூறு : 52.14) நரைமூ தாளர் கைபிணி விடுத்து (அகநானூறு :366.10) பெருமூ தாளர் ஏமஞ் சூழப் (முல்லைப்பாட்டு : 54) முழு(து)உணர்ந்(து) ஒழுக்கும் நரைமூ தாளனை (பதிற்றுப்பத்து: 76.24) இவற்றின் அடிப்படையில்,…
கலைச்சொல் தெளிவோம்! 4.] தோலும் அதளும் : இலக்குவனார் திருவள்ளுவன்
தோலும் அதளும் – (skin and leather) தொல்லியல், பொறிநுட்பவியல், கால்நடையியல் ஆகியவற்றில் leather-தோல் எனப்படுகின்றது; மனையியலில் பதனிட்ட தோல் எனப்படுகிறது. வேளாணியல், தொல்லியல், மருத்துவயியல், கால்நடையியல் ஆகியவற்றில் skin-தோல் எனப்படுகின்றது. இவற்றை வேறுபடுத்திக் கூற வேண்டும். அதளன்(1) (அகநானூறு 274.6) அதளோன் றுஞ்சுங் காப்பின் (பெரும்பாண் ஆற்றுப்படை 151) அதட்பள்ளி- தோற்படுக்கை இலைவேய் குரம்பை உழைஅதள் பள்ளி – மதுரைக் காஞ்சி 310 மெய்உரித்து இயற்றிய மிதிஅதள் பள்ளித் – மலைபடுகடாம் 419 ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கிப் –…
எல்லா இன்பமும் கிட்டட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை கார்த்திகை 28, 2045 / திசம்பர் 14, 2014
புத்துயிர் பெற்றது ஆடு வளர்ப்புத்தொழில் – வைகை அனிசு
தேனிமாவட்டத்தில் புத்துயிர் பெற்றது ஆடு வளர்ப்புத்தொழில் தேனிமாவட்டத்தில் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது ஆடு வளர்க்கும் தொழில். நமது நாட்டில் கால்நடைக்கணக்கெடுப்பு இந்திய அரசாங்கத்தின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடைப் பேணுகை, பால்வளம், மீன்வளத்துறை மேற்கொண்டுவருகிறது. இக்கணக்கெடுப்பு 19191 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது. தற்பொழுது 19ஆவது அகில இந்தியக் கால்நடைக் கணக்கெடுப்பு 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்டுக் கால்நடைப் பேணுகைத்துறை புள்ளியல் பிரிவு வாயிலாக வெளியிடப்படுகிறது. இக்கணக்கெடுப்பு கால்நடைகளின் இனவளர்ச்சிக் கொள்கைகளை வழிவகுப்பதற்குப் பயன்படுகிறது. கால்நடைகளின் நலவாழ்வு…
ஆலைக்கழிவுகளால் அழிந்து வரும் நீர்க்காக்கை – வைகை அனிசு
ஆலைக்கழிவுகளால் அழிந்து வரும் நீர்க்காக்கை தேனிப்பகுதியில் பகுதியில் ஆலைக் கழிவுகளால் நீர்க்காக்கை இனங்கள் அழிந்து வருகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், வைகை அணை, அ.வாடிப்பட்டி பகுதிகளில் காப்பித்தொழிற்சாலை, சர்க்கரைத்தொழிற்சாலை, சாயத்தொழிற்சாலைகளின் கழிவுகள் நிலத்தடி நீரோடு கலந்து விட்டன. மேலும் கழிவுநீர்களை இப்பகுதியில் உள்ள ஊருணிகளில் இரவோடு இரவாக ஊற்றி வருகின்றனர். இதனால் நீர்நிலைகளில் உள்ள மீன்கள், பறவைகள் இறந்து வருகின்றன. நவம்பர் மாதம் முதல் பிப்பிரவரி மாதம் வரை இப்பகுதிகளில் உள்ள குளங்களில் தண்ணீர் நிரம்பியிருக்கும். இந்தத்தண்ணீரில் விதவிதமான வெளிநாட்டுப் பறவைகள், கொக்குகள்,…
