நரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்!
நரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்! நரேந்திர(மோடி)யையும் அவர் சார்ந்த இராசுட்டிரிய சேவா சங்கம் என்னும் அமைப்பையும் இந்து வெறி பிடித்தவர் என்றும் இந்து வெறி அமைப்பு என்றும் பலரும் கூறி வருகிறோம். உண்மையில் அவரோ அவர் சார்ந்த அமைப்போ இந்து சமய வளர்ச்சிக்கான குறியீடு அல்ல. இத் துணைக் கண்டத்தில் எவ்வாறு பல்வேறு இன மக்களையும் இந்தியர் என அழைக்கிறார்களோ அதுபோல்தான் பல சமயங்களின் கூட்டே இந்து என்னும் சமயமும். எவ்வாறு, அரசியல் அடிப்படையில் நாம் இந்தியர் எனப்பட்டாலும் வரலாற்று அடிப்படையில் இந்தியர்…
தேனிமாவட்டத்தில் குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல்
தேனிமாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கும் குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல் தேனிமாவட்டத்தில் ஏமாற்றும் குற்றக்கும்பல் மறுபடியும் தொழிலில் இறங்கிப் பலரை வஞ்சித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் மண்ணுளிப் பாம்பு, நாகரத்தினக்கல், குபேரச்செம்பு, கலசம், மயில்படம் போட்ட பத்து உரூபாய்த்தாள், திப்பு சுல்தான் வாள், ஓர் இலட்சம் கொடுத்தால் இரண்டு இலட்சம், கள்ளப்பணம், அரியவகை மூலிகை, கருப்புப் பூனை, கருப்பு மை, கருந்துளசி, இரிடியம்,குபேர பூசை, 500உரூபாய் வண்ணப்படிமை, 1000உரூபாய், பழங்கால நாணயங்கள், பழங்காலத்து தினார்பணத்தாள்கள், களங்கம்(தோசம்) கழிக்கும் பூசை, அகழ்வராய்ச்சியின்போது கிடைத்த மன்னர்காலத் தங்கக் காசுகள்,…
இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் – வைகை அனிசு
இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள்! அரசு ஆவணங்கள் வெளியில் கடத்தப்படும் கண்டம்(அபாயம்) தேனிமாவட்டத்தில் இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் இயங்கிவருவதால் அரசு அதிகாரிகள் யார், இடைத்தரகர்கள் யார் எனப் புரியாமல் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர். தேவதானப்பட்டியில் செயல்படும் அரசு அலுவலகங்கள், வங்கிகளில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தற்காலிகமாகத் திறன் குறைந்த தொழிலாளர்களை அமர்த்திப் பயன்படுத்துகின்றனர். அரசு அலுவலகங்களில் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள் வெளிஆட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். தேவதானப்பட்டி பாரதஅரசு வங்கியில் வெளியார்களும் ஓட்டுநர்களும் வங்கியினுள் உள்ளே உட்கார்ந்து…
தேனியில் தீயணைப்புத்துறையைப் புதுமைப்படுத்தவேண்டும்
தேனி மாவட்டத்தில் தீயணைப்புத்துறையைப் புதுமைப்படுத்தவேண்டும்! சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்! தேனிமாவட்டத்தில் தீயணைப்புத்துறையை புதுமைப்படுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தேனிமாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் சிறுவர்கள் தண்ணீரில் குளிக்கும் ஆர்வத்துடன் நீச்சல் அடிக்கின்றனர். நீச்சல் பயிற்சியின்போது முறையான நீச்சல் பயிற்சி இல்லாமல் பலர் இறந்துவிடுகின்றனர். இறந்த உடலை மீட்பதில் காலத்தாழ்ச்சி ஏற்படுகிறது. இதற்குச் காரணம் தீயணைப்புத்துறையில் நவீன மீட்புக்கருவிகள் இல்லை. மஞ்சளாறு அணைக்குச் செல்கின்ற வழியில் மொக்கையன்…
கந்துவட்டியாளர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்வு!
கந்துவட்டியாளர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்வு நடத்திவரும் உழவர்கள் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டுத் தமிழக முதல்வருக்கு முறையீடு தேனிமாவட்டத்தில்; கந்துவட்டித் தொழில் செய்பவர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம் பகுதியில் கடந்த சில வருடங்களாகப் போதிய மழையின்மையால் வேளாண்பெருமக்கள் கந்துவட்டிக்கு வாங்கிப் பயிர்த்தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வேளாண்மை நடைபெறாததால் இழப்பு அடைந்தனர். ஆனாலும் தாங்கள் வாங்கிய வட்டிக்கு முறையாக மாதாமாதம் வட்டி கொடுத்து வந்துள்ளனர். இருப்பினும் ஒரு காலக்கட்டத்தில் வட்டி…
கலைச்சொல் தெளிவோம் 14 : நாளம்-vascular
நாளம்-vascular வாசுகுலர்(vascular) என்பதற்கு வேளாணியலில் இரத்தக்குழல்சார், சாற்றுக்குழல்சார், எனவும் புவியியலில் சாறுசெல், நாளஞ்சார் எனவும் கால்நடைஅறிவியலில் இரத்தநாள(ம்) எனவும் பயன்படுத்துகின்றனர். சிலர் குழல் என்கின்றனர். உட்துளை உள்ள பொருள்களைக் குழல்(44), குழாய்(6), தண்டு(14), புழல்(14) எனச் சங்கக்காலத்தில் குறித்துள்ளனர். முதல் மூன்று சொற்களும் டியூப்பு(tube), பைப்பு(pipe), சாப்ட்டு(shaft) முதலான பொருள்களில் கையாளப்படுவதாலும் புழல் என்னும்சொல்லை, உட்துளைப் பொருள்களைவிட உள்ளீடான பொருளைக் குறிக்கப் பயன்படுத்துவதே சிறந்தது என்பதாலும் வேறு சொல்லால் குறிக்க வேண்டும். நாளம் என்பது சங்கஇலக்கியங்களில் கையாளப்படாவிட்டாலும் இரத்தநாளம் என நாளம் குருதிக்குழாயைமட்டுமே…
கலைச்சொல் தெளிவோம் 13 : கற்றை–fascicular
கற்றை–fascicular ஃபசிக்யூலசு(fasciculus) என்பதற்கு மனையியலில் தசைக்கட்டு என்று பயன்படுத்துகின்றனர். பண்டில்(bundle) என்பதைக் கட்டு என்பதால் அதே பொருளை உடைய கற்றை என்பதைப் பயன்படுத்தலாம். சங்கப்பாடல்களில் 3 இடங்களில் கற்றை இடம் பெற்றுள்ளது. தொகுப்பாகத் திரண்டுள்ளதைக் கற்றை என்பதே சரி. கற்றை–fascicular எனவே, வளரியக்கற்றை/ கற்றைவளரியம்- fascicular cambium கற்றையிடை வளரியம்- inferfascicular cambium – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல் தெளிவோம் 12 மரவியம் – xylem
மரவியம் – xylem சைலம்(xylem) என்பதற்கு வேளாணியலில் சாற்றுத்திசு என்றும் பயிரியலில் நீர் கடத்துத்திசு/சாற்றுக்குழாய் என்றும் கானியலில் சாற்றுக்குழல் என்றும் குறித்துள்ளனர். சிலர் குழல்திசு என்கின்றனர். பேராசிரியர் அ.கி.மூர்த்தி மரவியம் என்னும் சொல்லை அறிவியல் அகராதியில் குறிப்பிட்டுள்ளார். மரம்(105) என்னும் சங்கச்சொல்லின் அடிப்படையிலான இச்சொல்லையே ஏற்ற சொல்லாகப் பயன்படுத்தலாம். ஆகவே நாள மெய்ம்மியை(xylem) மரவியம் என்றும் பட்டை மெய்ம்மியை(pholem) பட்டையம் என்றும் சுருக்கமாகக் கூறலாம். மரவியம் – xylem பட்டையம் – pholem உள்நோக்குமரவியம்-endarch xylem வெளிநோக்கு மரவியம்-exarch xylem துணை (அல்லது…
கலைச்சொல் தெளிவோம் 11 : வளரியம்-cambium
வளரியம் – cambium காம்பியம்(cambium) என்பதற்கு வேளாணியலிலும் கானியலிலும் வளர்படை என்றும் பயிரியலிலும் மனையியலிலும் வளர்திசு என்றும் பயன்படுத்துகின்றனர். திசு ஒலிபெயர்ப்பு அடிப்படையில் உருவான சொல். வளர்படை என்றால் போர்ப்படை பொருள் வருகின்றது. cambium – அடுக்கியம் என அறிவியல் அகராதி(பேராசிரியர்அ.கி.மூர்த்தி)யில் குறிக்கப் பெற்றுள்ளது, தன்மையின் அடிப்படையில் சரிதான். ஆனால், இச்சொல் தனிச்சொல்லாக இல்லாமல் பிற சொற்களுடன் சேர்கையில் மூலப்பொருள் மாறும் வாய்ப்பு உள்ளது. சான்றாக அடுக்கிய தக்கை என்னும் பொழுது தக்கை அடுக்கடுக்காக வைக்கப்பட்டதாகவே கருதுவர். அடுக்கியம் என்னும் கலைச்சொல்லாகத் தோன்றாது. எனவே,…
கலைச்சொல் தெளிவோம் 10 : அதிரி-vibrio
அதிரி-vibrio அதிர்(14), அதிர்க்கும்(3), அதிர்ந்து(8), அதிர்ப்ப(1), அதிரப்பு (1), அதிர்பட்டு(1), அதிர்பவை(1), அதிர்பு(9), அதிர்வது (1), அதர்வன(1), அதிர்வு(2),அதிர(20), அதிரல்(17), அதிரும்(4) முதலான சங்கச்சொற்களின் அடிப்படையில் நாம் பின்வருமாறு கலைச்சொற்களைப் படைக்கலாம். அதிரி-vibrio வைபிரியோ(vibrio) என்பது வளைந்த வடிவமுடைய நுண்ணி(bacteria) என்பதால் வடிவ அடிப்படையில் வளைவி என்று சொல்லலாம். ஆனால், மூலச்சொல் அதன் அதிரும் தன்மையின் அடிப்படையில் குறிக்கப்பட்டிருப்பதால் வளைவி என்பது பொருத்தமில்லை எனத் தவறாக எண்ணலாம். எனவே, மூலச்சொல்லைப்போவே அதிரும் தன்மையின் அடிப்படையில் அதிரி எனக் குறிக்கப் பெற்றுள்ளது….
கலைச்சொல் தெளிவோம் 9 : கோளி (பூவிலி) –cryptogam
கோளி (பூவிலி) –cryptogam சங்கஇலக்கியங்களில் உள்ள பயிரியல் செய்திகள் போல் வேறு எந்த அறிவியல் நூல்களிலும் காணஇயலாது. வேர், தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி, முதலான பல உறுப்புகளின் வடிவம் தன்மை, முதலான பலவும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இலக்கியம் கூறும் அறிவியல் செய்திகளே மிகுதியாக உள்ளன எனில் உரிய அறிவியல் நூல்களில் மேலும் கணக்கற்ற உண்மைகள் அல்லவா இருந்திருக்கும். ஆல், அத்தி, பலா முதலான பூவாமல் காய்க்கும் மரங்ககளைப் பற்றிச் சங்கநூல்கள் குறிப்பிட்டுள்ளன. சங்கநூல்கள் பூக்காத் தாவரங்களைக்…
உழவுக்கு வந்தனம் செய்வோம் – கெ.செல்லத்தாய்
உழவுக்கு வந்தனம் செய்வோம்! உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மனிதனுக்கு மிகவும் தேவை. இவை அனைத்தும் விவசாயத்தின் அடிப்படையில் பெற வேண்டும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. உழவன் ‘சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்’.’தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு’ என உழவின் மாண்பைத் திருவள்ளுவர் கூறுகிறார். இன்றைக்கு உழவின் நிலை என்ன? உழவு அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணமும் மனிதர்களாகிய நாம்தானே. மனிதனின் உயிர்மூச்சாக இருந்தது உழவு. அரசுவேலை வேண்டா…
