பாடநூல்களில்பயன்பாட்டுத் தமிழ் – இலக்குவனார் திருவள்ளுவன்

பயன்பாட்டுப் பார்வையில்துறைதோறும் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் : கார்த்திகை 9, 10 – 2045 / நவம்பர் 25, 26 – 2014 எத்திராசு மகளிர் கல்லூரி, சென்னை பாடநூல்களில்பயன்பாட்டுத் தமிழ் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர், அகரமுதல மின்னிதழ் <www.akaramuthala.in> thiru2050@gmail.com கலை, அறிவியல் படைப்புகள் யாவுமே பயன்பாட்டிற்குரியனவே. எனினும் தமிழ்வளர்ச்சி நோக்கில் பார்க்கும் பொழுது, கல்வியில் அன்றாடப் பயன்பாட்டிற்கு முதன்மை அளிக்க வேண்டும். ‘தமிழறிவியல்’ அல்லது ‘அறிவியல் தமிழ்’ எனத் தனியாகக் கற்பிக்கத் தேவையில்லை. முதல் வகுப்பிலிருந்தே பாடநூல்கள் வாயிலாகப் பயன்பாட்டு முறையில்…

சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் – செ.வை. சண்முகம்

 மையக்கருத்துரை   முன்னுரை    சங்க இலக்கியத்தில் சூழ் என்ற வினை   சூழ்ந்திருத்தல் (surrounding),   படர்தல் (spreading), ஆராய்தல் (deliberation), கருதுதல் (intention),   ஆலோசித்தல் (consultation) என்று ஒருசொல்பலபொருளாகப் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது (அகநானூறு , பார்க்க, சுப்பிரமணியன் 1972 ) . சூழல் என்ற தொழில்பெயர்   பரிபாடலில் (‘புடை வரு சூழல்’ 19. 20 ௦) பயின்றுள்ளது. ‘சுற்றமாச் சூழ்ந்துவிடும்’ ( 475) என்பது திருக்குறள் வழக்கு. இங்குச் சூழ்ந்திருத்தல் என்ற பொருளே பொருந்தும். அது பல பொருள் ஒரு சொல்லாக இருப்பதால், சுற்றுச்சூழல்…

‘இந்தியால் தமிழ் கெடும்’ என உணர்த்திய இலக்குவனார்

‘இந்தியால் தமிழ் கெடும்’ என உணர்த்திய இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன் திங்கள், 17 நவம்பர் 2014 (18:18 IST) Share on facebook Share on twitter More Sharing Services (கார்த்திகை 1 / நவம்பர் 17ஆம் நாள், தமிழறிஞர் இலக்குவனார் பிறந்த நாள்) பழைய இலக்கியங்களை ஏட்டிலிருந்து அச்சிற்குக் கொண்டு வந்தது, உரை எழுதியது, பிற மொழிச் சொற்களை நீக்கியது எனப் பல்வேறு செயல்பாடுகளால் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்கள் தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தினர். இவர்களுள் பலர் எழுத்தால் தொண்டாற்றினர்; சிலர்…

செஞ்சீனா சென்றுவந்தேன் 22 – பொறி.க.அருணபாரதி

22. மக்கள் சீனத்தின் எதிர்காலம்?   இறுதியாக, நான் தாயகம் திரும்ப வேண்டிய நாள் வந்தது. சீனாவின் இன்றைய நிலை குறித்து அசைபோட்டேன். இன்றைய சீனாவின் நிறைகுறைகள் அனைத்தும், நாளை அமையவிருக்கும் தமிழ்த் தேசத்திற்கு படிப்பினைகாக விளங்கக்கூடியவை.   எதிர்காலத்தில், பொதுவுடைமைக் கட்சியின் ஒருகட்சி முற்றதிகாரம் நிலவும் சீனாவில், இப்பொழுது நிலவுவதை விட அதற்கெதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கும். அப்பொழுது, சீனாவின் ஒருகட்சி முற்றதிகாரம் வீழ்ந்து நொறுங்கும். உண்மையில், சீனப் பொருளியலை விழுங்கிவிட்ட (கபளீகரம் செய்துவிட்ட) மேற்குலக முதலாளிய நாடுகள், அந்த ஒருகட்சி…

செஞ்சீனா சென்றுவந்தேன் 21 – பொறி.க.அருணபாரதி

(ஐப்பசி 23, 2045 / நவம்பர் 09, 2014 தொடர்ச்சி) 21. கச்சத்தீவும் சீனர்களின் சப்பானிய எதிர்ப்பும்   சீன நண்பர்கள் சிலருடன் பேசும் போது, அவர்கள் தமது நாட்டிற்கு யாரை போட்டியாளர்களாகக் கருதுகின்றனர் எனக் கேட்டேன். வெகு சிலரே வட அமெரிக்கா என்றனர். ஒரு சிலர், இரசியா என்றுகூடச் சொன்னார்கள். ஆனால், இந்தியாவைப் பற்றி கேட்டால், பலருக்கு ஒன்றும் தெரியவில்லை. இங்கே, தமிழகத்தில், வங்க தேசம்தான் நமக்கு சவால் விட்டு வளரும் நாடு என்று சொன்னால் நாம் எப்படி சிரிப்போம்? அதே போலத்தான்,…

தமிழ் இன்றும் என்றும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் இன்றும் என்றும் – இலக்குவனார் திருவள்ளுவன்   தமிழ் மொழி தமிழ்நாட்டின் அனைத்து நிலைகளிலும் நிலைத்து நிற்கும் மொழியாக இருக்க வேண்டுமென்பது நம் இன்றைய கனவு மட்டும் அல்ல; பல நூற்றாண்டுக் கனவாகும். ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் ஊடக மொழியாகவும் வேலைவாய்ப்பு மொழியாகவும் வணிக மொழியாகவும் என எல்லா இடங்களிலும் தமிழே இருக்க வேண்டும் எனத் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆனால், இத்தகைய நிலையை எட்டும் காலம்…

படுக்கையில் அமுக்கும் பேய் !

படுக்கையில் அமுக்கும் பேய் – கட்டாயம் அறியவேண்டிய தகவல்!        இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்களைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பிப் படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய்.   உயிரைக் கொல்லும் அளவுக்கு…

வேங்கடமலை தமிழர்க்குரியதே!

    வேங்கடம்:  தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டின் வடக்குஎல்லையாக இருந்தமலை. மாமூலனார் காலத்தும் இதுதான் வடக்கு எல்லையாகஇருந்தது. இது இப்போதுதிருப்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. தெலுங்கர் நாடாகக்கருதப்படுகின்றது. ஆயினும் தமிழர், தங்கட்குரியது என்பதை நிலைநாட்டித் தமது வடவெல்லை மலையாக மீண்டும் கொள்ளுதல் வேண்டும். – செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்: சங்க இலக்கியம்: பக்கம்.31