குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-1
இன்றைக்கு இருக்கின்ற247தமிழ் எழுத்துகளில்239எழுத்துகளை மாற்றுவதற்கு நடக்கும்பல்வேறு முயற்சிகளின் தொகுப்பு இக்கட்டுரை(தொடர்). தமிழ் எழுத்து வடிவங்களை எப்படியாவது மாற்றிஉருக்குலைத்து விடவேண்டும் என்ற உறுதிதமிழர்களிடையே தென்படுகிறது. தமிழுக்குப் பகைதமிழரே என்ற உண்மையை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது இந்தச் சீர்திருத்த முயற்சிகள். தமிழ்நாட்டில் எத்தனையோ குடிசைத் தொழில்கள்உண்டு.தீப்பெட்டிக்குப் பெயர் ஒட்டும் தொழில், தீக்குச்சிக்கு எரிமருந்து வைக்கும் தொழில், இலைச்சுருட்டு(பீடி) சுற்றும் தொழில், பேரீச்சம்பழத்தை எடை போட்டுபொட்டலம் போடும் தொழில் என்று பலவுண்டு. தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் இத்தொழில் போன்றுஉயிரெழுத்து மாற்றத் தொழில், உயிர்மெய்கள்மாற்றத் தொழில், தமிழெழுத்து எண்ணிக்கைகுறைப்புத் தொழில் போன்று பல்வேறு…
தன்னையே பலியிடும் நவகண்டச் சிற்பங்கள் – வைகை அனீசு
தன்னையே பலியிடும் நவகண்டச் சிற்பங்கள் தனக்கென வாழாப் பிறர்க்குரிய சமூகம் பண்டைய காலத்தில் போற்றுதலுக்குரிய நிலையில் இருந்துள்ளது. தெய்வத்திற்கோ தலைவனுக்கோ ஊருக்கோ தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் வீரனை மக்கள் வழிபடுகின்றனர். இப்பொழுதுகூட உயிரைக் கொடுத்த இறைவனுக்கு மயிரைக் கொடுக்கும் வழக்கம் அனைத்துச் சமயங்களிலும் காணப்படுகிறது. இந்துக்களாக இருந்தால் கோயில்களிலும், முசுலிம்களாக இருந்தால் நாகூர், ஏர்வாடி முதலான அடக்கத்தலங்களிலும் கிறித்தவர்களாக இருந்தால் வேளாங்கண்ணி முதலான கோயில்களிலும் முடி காணிக்கை செலுத்துவதைக் காணமுடிகிறது. வழக்கமாகப் பூசை செய்யும் இறைவனுக்கு எச்சில்உணவு வழங்கிய திண்ணப்பன் என்ற கண்ணப்பனைச் சிவனும் விழைந்துள்ளார்….
செஞ்சீனா சென்றுவந்தேன் 17 – பொறி.க.அருணபாரதி
(புரட்டாசி 26 , 2045 / அக்.12, 2014 தொடர்ச்சி) 17. பழமையை அழித்துவிட்டுப் ‘பாதுகாக்கும்’ பன்னாட்டு நிறுவனங்கள் வட அமெரிக்கா, ஈரான் – ஈராக் – ஆப்கானித்தான் நாடுகளில் தலையிடுகிறது என்றால், சீனாவோ தன்னுடைய மண்டலத்திலுள்ள இலங்கை, வட கொரியா முதலான நாடுகளின் உள்நாட்டுச் சிக்கல்களில் மூக்கை நுழைத்து அங்கெல்லாம் தமக்காக தளம் அமைத்துக் கொள்கிறது. வட அமெரிக்க மக்கள், பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட நுகர்வு வெறி மோகத்தில் அலைகிறார்கள் என்றால், சீனர்கள் அதே போல தம் வாழ்நிலையை மாற்றிக்…
அனைத்து வகுப்புகளிலும் இவ்வாண்டே தமிழ் கற்பிக்கவும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழின் உயர்வைக் கூறித் தங்களை உயர்த்திக் கொள்ளாத எந்த அரசியல்வாதியும் இல்லை எனலாம். என்றாலும் தொன்மையும் தாய்மையும் மிக்க செம்மொழியான தமிழ் தமிழ்நாட்டில் மறைந்து வரும் அவல நிலைதான் உள்ளது. கல்விக்கூடங்களிலேயே தமிழ் துரத்தப்படும்பொழுது வேறு எங்குதான் தமிழ் வாழும்? என்றாலும் மொழிப்பாடம் என்ற அளவில் தமிழ் கற்பிக்கப்படும் சூழல் அரும்பி மலர்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. ஒரே ஆண்டில் தமிழைப் பாடமொழியாக அறிமுகப்படுத்தாமல் ஒவ்வோர் ஆண்டாக அறிமுகப்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்காவிட்டாலும் இந்த நிலையாவது உருவாவது பாராட்டிற்குரியதே! தமிழ் அறியாதார் தேர்வு எழுத இயலாது…
பணிமலர் 1. அவ்வளவு தங்கமும் உங்களுக்குத்தான்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(என் பணிவாழ்க்கையில் எண்ணற்ற மறுவாழ்வுப்பணிகளையும் முன்னோடிப் பணிகளையும் ஆற்றியுள்ளேன். காலமுறையில் இல்லாமல் அவ்வப்போது பூக்கும் நினைவின் மணத்தைப் பரப்ப விழைகிறேன்.) தமிழ்நாடு சிறைத்துறையில் நன்னடத்தை அலுவராகப் பணியாற்றிய பொழுது ஒரு நாள் நண்பர் ‘சௌ.’ என் பக்கத்தில் வந்தமர்ந்தார். “நேர்மையான அதிகாரி ஒருவர் பெயரைக் கூறுங்கள்” என்றார். நான்,“திருவள்ளுவன்” என்றேன். உடனே அவர், “நீங்கள் நேர்மையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக உங்கள் பெயரையே கூறுவதா?” என்றார். நீங்கள் பன்மையில் கேட்டிருந்தால் செளந்தரபாண்டியன், மீசை(பெரியசாமி) எனச் சிலரையும் சேர்த்துச் சொல்லியிருப்பேன். ஒருமையில்…
உலகளாவிய தமிழ்க்கல்வி – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(புரட்டாசி 26, 2045 / 12 அட்டோபர் 2014 தொடர்ச்சி) பாடத்திட்டங்கள் பாடத்திட்டங்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு முறையில் அமைக்க விரும்புவதே இயற்கை. என்றாலும் கலந்து பேசி சீரான முறையைக் கடைப்பிடிப்பது நன்று. பாடத்திட்டங்கள் மாறினாலும் அவற்றின் அடிப்படை நோக்கத்தில் மாறுபாடு கூடாது.எனவே, பின்வருவனவற்றில் கருத்து செலுத்த வேண்டும். தமிழ் நெடுங்கணக்கில் – எழுத்துகளில் – கிரந்த எழுத்துகளைச் சேர்க்கக்கூடாது. கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாத – அயற் சொற்களைக் கலக்காத தலைமுறையை உருவாக்க இஃது உதவும். குறிப்பிட்ட நிலைக்குப்பின்னர் கிரந்த எழுத்துகளைப்…
தீர்வல்ல தற்கொலை!
தற்கொலை தீர்வாகுமா ? அண்மைக் காலங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. உலக நல்வாழ்வு நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 10இலட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அஃதாவது ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றார். தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கையானது கொலைகள் போர்களின் மூலம் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. உலகில் வாழும் 5% பேர் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் தற்கொலை முயற்சியில்…
சங்க இலக்கியக் காலத் தொடக்கம் கி.மு. ஆயிரத்திற்கு முற்பட்டது.
சங்க இலக்கியக் காலத் தொடக்கம் கி.மு. ஆயிரத்திற்கு முற்பட்டது. – இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர், அகரமுதல <www.akaramuthala.in> மின்னிதழ், thiru2050@gmail.com சங்க இலக்கியங்கள் இனிமைச் சிறப்பும்சாதி, சமய, இன வேறுபாடற்ற பொதுமைச்சிறப்பும் இன்றைக்கும் பொருந்தும் புதுமைச் சிறப்பும் மிக்கன. இவை குறித்து, “வாழ்வியல் முன்னேற்றத்துக்கு வழி வகுப்பவை; பொருட் சிறப்பும், கருத்துச் செறிவும், சொல்லினிமையும் வாய்ந்தவை; அவை அகத்திணை, புறத்திணை என இருபாற்பட்டுப் பெரும்பாலும் காதல், வீரம், குறித்துப் பாரித்துரைப்பினும் வையத்துள் வாழ்வாங்கு வாழும் அறநெறிகளை வாய்மை, நட்பு, மானம், தாளாண்மை முதலியவற்றை…
செல்வாக்கு இழந்து வரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு – அ.நிக்சன்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது செல்வாக்கை இழந்து வருகின்றது. உள்ளக முரண்பாடுகள், வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் ஆகியன முதன்மையைக் குறைத்துள்ளன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனையக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல முடியாத சம்பந்தன், முதலமைச்சர் விக்னேசுவரன் ஆகியோர் தாம் நினைத்ததையே செயற்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன. கட்சி அரசியலை நடத்த முடியாத அல்லது நடத்தத் தெரியாத ஒருநிலையா? அல்லது தமிழர்களிடையே இனப்படுகொலைப் போருக்கு முன்னரான காலப்பகுதியில் இருந்த மேட்டுக்குடித்தனமா என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. வெளிப்படைத்…
பண்பிலார் அடிபணிகிறதே இவ்வுலகம்!- இலக்குவனார் திருவள்ளுவன்
பண்புடையோரைப் போற்றுவதன் மூலம் பண்பாளர் பெருகுவர். பண்பிலாரை ஒதுக்குவதன் மூலம் பண்பிலார் குறைவர். பண்புளாருடன் பழகப் பழக நம்மிடமும் நற்பண்புகள் பெருகும். பண்பிலார் பழக்கம் தீங்கினைத் தரும். இவையே பழந்தமிழர் பண்புநலனாக இருந்தன. ஆனால், இன்றைக்கு இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. செல்வமும் செல்வாக்கும் உள்ளவர் தீயராய் இருப்பினும் அவருடன் இழைவர். நற்பண்பாளர் குன்றிய செல்வமும் கீழான பதவியிலும் இருப்பின் அவரிடமிருந்து விலகுவர். இன்றைய சூழல் இவையே! நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார் குணங்கள்…
உலகளாவிய தமிழ்க்கல்வி – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்
அதுதான் என் ஆசை-தமிழ் அன்னை அவள் முன்னைபோலத் தன்னைத்தானே ஆளவேண்டும். என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.தமிழறிஞர் ஒவ்வொருவரின் ஆசையும் இதுதான். நாம் தமிழே கற்காமல் தமிழன்னையைப் புறக்கணிப்பின் இந்நிலையை எய்த முடியாதல்லவா? எனவே, தமிழன்னை ஆள நாம் அனைவரும் உலகில் எங்கிருந்தாலும் தமிழ் கற்றவர்களாகத் திகழ வேண்டும்.பல்வேறுநாடுகளில் தமிழ்க்கல்வி பல நிலைகளில் உள்ளது. வலைத்தளங்கள், வலைப்பூக்கள், முகநூல்கள்என இணைய வழியாகத் தமிழ் கற்பிக்கும் தளங்களும் உள்ளன.தமிழ் கற்பிக்கும் நூல்களை வாங்குவதற்கான விவரத் தளங்களும் உள்ளன. தமிழ் கற்பிக்கும் இணையத் தளங்களை அறிமுகப்படுத்துவதும்…
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் – இலக்குவனார் திருவள்ளுவன்
உலகில் பண்பிலார் பெருகிவிட்டனர். ஒழுங்கின்மையும் ஊழலும் ஒழுக்கக்கேடும் பெருகிவிட்டன. எனினும் பண்பில் சிறந்தவர்கள் இன்றும் உள்ளனர்! இனியும் இருப்பர்! நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. என்னும் ஔவையார் மூதுரைக்கு(10) இணங்க இத்தகைய சிலரால்தான் பிறர் பயனுறுகின்றனர். இத்தகையோரை நாம் வாழ்வில் சந்தித்திருப்போம்! நானும் பலரைச் சந்தித்துள்ளேன். மறக்க முடியாத அவர்களுள் இருவரைப்பற்றிய நினைவுகளைப் பகிர விரும்புகின்றேன். 1980 ஆம் ஆண்டில் ஒருநாள்!…
