மொழித்திற முட்டறுத்தல் – 4 பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர்
(வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) ஒரு மொழி நீண்டகாலம் மாறாத நிலையிலிருப்பதற்கு அதன் எழுத்தமைப்புப் பெரிதும் உதவுகின்றது. தமிழில் 12 உயிர்களும், 19 மெய்களும், 3 சார்பெழுத்துக்களும் உள்ளன. மெய்களில் மேல்லெழுத்தாறும் வல்லெழுத்தாறின் பிறப்பிடங்களிலேயே பிறந்து தலைவளியுடன் மூக்கு வளியாப் புறப்பெற்று வல்லெழுத்துக்களுக்கு நேரிய இனவெழுத்துக்களாய் அமைந்திருத்தலால் ஒரு வகையில் மெய் 12 எனவும் கூறலாம். இவ்வாறு கொள்ளின் 12 உயிர்களுக்கு 12 மெய்கள் அமைந்திருத்தல் மிகவும் பொருத்தமாகும். உடல்மேல் உயிர் வந்தொன்றுவது…
கலப்பினால் வரும் கேடு! – நெல்லை ந.சொக்கலிங்கம்
மறுமலர்ச்சி இயக்கம்: மனிதன் பண்பாடு பெற்ற நாள் தொட்டுப் பயன்பட்டு வரும் கருவி மொழி, நாட்டிற்கேற்பவும், சூழ்நிலைக்கேற்பவும் மொழிகள் வேறுபட்டு நிற்கின்றன. மனிதன் எப்படித் தனித்து வாழவியலாதோ அது போன்றே மொழியும் தனித்து வாழவியலாது என்பது ஓரளவிற்குப் பொருந்தும். இருப்பினுங் கூட கூடுமான வரை தனித்து – அதாவது தூய்மையுடன் இயங்க முடியும். ஆனால் சிலர் கூறுகின்றார்கள். வடமொழி செத்தொழிந்தது அதன் தூய்மைப் பண்பினால்தான் என்பர். மொழி நூலறிஞர்களின் கருத்துப்படி ஒரு மொழி தன் தூய்மையைப் பாதுகாத்ததனால் அழிந்து விடாது என்பதாகும். வடமொழி…
வாழ்த்திற்குரிய கலைஞரே! இனி என்ன செய்யப் போகிறீர்கள்?
கலைஞர், வரலாற்றில் அருவினை பல ஆற்றிய அருந்திறலாளர்! அவரது பகைவர்களும் அவரது உழைப்பை மதிக்கத் தவறுவதில்லை! நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைப் படைத்தவர்; மடல்களாகவும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதித் தள்ளியவை மிகுதி. மொத்தத்தில் இருபதாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதிக் குவித்த படைப்பாளர்; ஏறத்தாழ 75 திரைப்படங்களுக்குக் கதை உரையாடல் எழுதி உள்ளார்; நேற்றுவரை திரை உலகில் நுழைந்தவர்கள் அவர் எழுதிய திரையாடலைப் பேசி நடித்துக் காட்டித்தான் வாய்ப்பு பெற்றனர் என்பது அழிக்க முடியாத வரலாறு; பன்னிரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை…
மொழித்திற முட்டறுத்தல் 3 – பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர்
(சித்திரை 7, 2045 / 20 ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) இறந்த மொழிகள் மேற்கூறிய இருவகை மொழிப் பாகுபட்டினையம் உளத்திற்கொண்டு ஒரு சேர ஆய்வோமாயின் ஒருண்மை புலனாகின்றது. முதற் பாகுபாட்டில் உள்ள 1. இந்திய ஐரோப்பிய மொழிகள், 2. செமிட்டிக்கம் என்ற இனத்தைச் சேர்ந்த மொழிகள் இவையிரண்டும் இரண்டாம் பாகுபாட்டில் உள்ள உட் பிணைப்பு மொழிகளாயுள்ளன. இவற்றிலேயே சிறந்த மொழிகள் நூற்றுக்கு ஐம்பது விழுக்காடு காணப்படுகின்றன. வேர்ச்சொற்கள் இன்னதென அறியமுடியாதவாறு சொற்கள் மாறுபாடடைதல் இம்மொழிகளிற் பல உலகவழக்கறுவதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். ஒரு காலத்தில்…
இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி:
அ பெ கா பண்பாட்டு இயக்கம் – புதுக்கோட்டை, தமிழ்நாடு பெருமதிப்பிற்குரியீர் வணக்கம் . தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய – பெரியாரிய -மார்க்சிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையைக் கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது . அபெகா-வின் செயல் திட்டங்களின் ஒரு பகுதியாக இவ்வாண்டு எழுத்தாளர்கள், ஆய்வாளர்களுக்கான 25 தலைப்புகளிலான இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது . ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகள் தேர்வு செய்யப்படும் தேர்வு பெறும் …
காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 27 – 49
(சித்திரை 28,2045 / 11 மே 2014 தொடர்ச்சி) 27. அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன் – சிலப்பதிகாரம், பதிகம் 10 28. இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய(த்) – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை 37- 29. தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை 38 30. ஆடல் பாடல் இசையே தமிழே – சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை, 45 31. நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல்…
தேர்தல் – நினைத்தனவும் நிகழ்ந்தனவும் – இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இதழின் சித்திரை 7, 2045 / ஏப்பிரல் 20, 2014 நாளிட்ட இதழுரையில் ‘வாக்கு யாருக்கு?’ என்னும் தலைப்பில் தமிழ் நேயர்களின் எண்ணங்களை எதிரொலித்திருந்தோம். தேர்தல் முடிவு வந்துவிட்டது. 16ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். நம் எண்ணங்களின் சுருக்கத்தையும் அவை நிறைவேறியுள்ளனவா என்பதையும் பார்ப்போம். 1.) காங்கிரசுக் கட்சி இந்தியா, முழுவதும் விரட்டி யடிக்கப்பட வேண்டும். .. காங்கிரசு அடியோடு தோற்கடிக்கப்படுவது பிறருக்கும் பாடமாக அமையும். இந்தியா முழுமையும் காங். பரவலாக மண்ணைக் கவ்வி 44 இடங்களில் மட்டுமே வெற்றி…
வல்லமை வழங்கும் கண்ணதாசன் கட்டுரைப் போட்டி
அன்பு நண்பர்களே, நம் வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம். நம் அன்றாட வாழ்வின், சுக, துக்கங்கள் அனைத்திலும்கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் நம் உடன் பயணிப்பவை; அவரது இலக்கியப் படைப்புகள், தனித்த புகழ் வாய்ந்தவை. அவரது அர்த்தமுள்ள இந்து மதம், இன்றும் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் சமூக. அரசியல் களத்திலும் கண்ணதாசன், தீவிரமாகப் பங்கேற்றார். கண்ணதாசனை நினைக்குந்தோறும் நமக்கு எவ்வளவோ எண்ணங்கள் தோன்றும். கண்ணதாசனை எப்படிப்…
உங்களைப் போன்றவனின் உள்ளக்குமுறல் – ஈழப்பதிவுகள் : 1-5
– இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் ஈழத்தில், போராளிகள், சிறார், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளர்கள், பிற உயிரினங்கள் என்ற வேறுபாடின்றி, பன்னூறாயிரவர் கொல்லப்பட்டனர்! பல நாட்டுப் படை உதவியுடன், எரிகுண்டு, கொத்துக்குண்டு, ஏவுகணை, எனப்பல்வகைப்பட்ட படைக்கலன்களைப் பயன்படுத்தி அங்கே வஞ்சகத்தால் மண்ணின் மக்களும் மண்ணும் அழிக்கப்பட்டனர்! 5 ஆண்டுகள் ஆனாலும் நம் உள்ளம் கனன்றுகொண்டுதான் உள்ளது. என்ற போதும் கொலையாளிகள் தண்டனையின்றி அறவாணர்கள்போல் உலா வருகின்றனர். இப்பொழுதுதான் வாக்குச் சீட்டு ஆயுதத்தின் மூலம் கொலையாளிகளையும் கூட்டாளிகளையும் துரத்தியடித்துள்ளோம்! 1,76,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மக்களை அழித்தபின்பும் இருக்கின்ற…
இதயத்தில் எரியும்தழல் என்றைக்கும் அணைவதில்லை!
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை கண்ணுற்றோர் எல்லாம் கதறி அழுவாரே.. குப்பைத்தொட்டிகளில் வாரியிறைத்தாற்போல் பிணங்களைக் குவித்துக் காட்டினாரே! ஒரு நாட்டைக் காப்பாற்றுகிறேன் என்றுசொல்லி, சொந்தநாட்டு மக்களையே நயன்மையின்றிக் கொன்று குவித்தனரே! மனசாட்சி ஒருசிறிதும் இல்லாத கயவர்கள் இன்றும் மனித உருவில் வாழ்கிறார்கள் என்று மெய்ப்பித்தார்களே! பாலுக்கு அழுகின்ற பச்சிளம்குழந்தை முதல் பாவையர் யாவரையும் கொடுமையின் உச்சம் கொண்டு சென்றனரே! இலட்சத்து எழுபதாயிரம் என்கிற உயிர்கள் அவர்களுக்குக் கிள்ளுக்கீரையானதே! எந்த உயிரையும் அவர்கள் கணக்கில் கொள்ளவில்லையே.. முதிய பெரியவர்களும் ஊனமுற்றவர்களும்கூட இவர்கள் பார்வைக்குத் தப்பவில்லையே! வழிபடும்தளங்கள்கூட இவர்களின்…
பேரினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்
இறுதிக்கடன் என்பதன் மூலம் நாம் இறந்தவர்க்கு நம் மதிப்பையும் வணக்கத்தையும் செலுத்துகிறோம். இறந்தவர் நினைவைப் போற்றுவதற்கு நாம் நினைவேந்தல் என்கிறோம். இயற்கையாகவோ நோய்வாய்ப்பட்டோ எதிர்பாரா நேர்ச்சி போன்றவற்றாலோ இறக்கும் பொழுது இவ்வாறு நினைவேந்தலாக நிகழ்த்துவது சரியே! போராளியாக வீர மரணம் அடையும் பொழுது நினைவேந்தலை வீர வணக்கம் செலுத்தும் வகையில் கடைப்பிடித்தலே இறந்தவர்க்கு நாம் அளிக்கும் மதிப்பாகும்! கொலை செய்யப்பட்டு இறக்கும் பொழுது, நினைவேந்தல் நடத்தினாலும் – ‘பல்லுக்குப் பல்’ என்பதுபோல் பழிவாங்குவது தவறு என்றாலும் – பழிவாங்கும் எண்ணமே…
வெற்றி மாலை சூடியவர்களுக்கும் சூடப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்!
12 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வந்துள்ளன. அடுத்து, 10 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வர உள்ளன. (இடையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் வர உள்ளன.) இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அடுத்து வெல்லலாம் என்ற நம்பிக்கை கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்! வெற்றி கண்டு மயங்காதீர்! பத்தாம் வகுப்பில் முதலிடம் பெறுபவர்கள் அனைவரும் அவ்வாறே பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் பெறுகிறார்களா என்றால் இல்லை என்பதே நடைமுறை. இரண்டாண்டில் அவர்களின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் என்ன? அதே போல், 12…
