சட்டச் சொற்கள் விளக்கம் 936 – 940 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 931 – 935 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 936 – 940 936. Assistant உதவியாளர் அமைச்சுப்பணியில் கீழ்நிலையில் இருந்து இரண்டாம் நிலையில் – இளநிலை உதவியாளருக்கு மேல் நிலையில் உள்ள பணியிடம். சட்டத்துறையில் சட்ட உதவியாளர் அல்லது வழக்கு உதவுநர் எனக் குறிக்கப் பெறுகிறார். சட்ட ஆவணங்களை ஒழுங்கு படுத்தல், விசாரணையில் உதவுதல், சான்றுரைஞர்களிடம் நேர்காணல் மேற்கொள்ளல், வழக்குரைஞருக்கும் வழக்காளிக்கும் தொடர்பாளராக இருத்தல் முதலான பணிகளைப் பார்க்கிறார். ஒரு…
குறள் கடலில் சில துளிகள் – 16. அறிவை உடைமையாக்குக! : இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் : 15. வந்தபின் காப்பதைவிட வருமுன் காத்திடு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 16. அறிவை உடைமையாக்கி எல்லாம் உடையவனாகத் திகழ்க! அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 430) அறிவுடையார் எல்லா நலன்களும் உடையவர்; அறிவில்லாதவர் வேறு எச்செல்வம் பெற்றிருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவார் என்கிறார் திருவள்ளுவர். உடையர்=உடைமையாகக் கொண்டவர். அறிவு மாணிக்கங்களை விட மிகுதியும் மதிப்பானது. நீங்கள் விரும்பும் எதனுடனும் அதை ஒப்பிட முடியாது(Wisdom is…
குறள் கடலில் சில துளிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்: 15. வந்தபின் காப்பதைவிட வருமுன் காத்திடு!
(குறள் கடலில் சில துளிகள் 14. அஞ்சவேண்டியதற்குஅஞ்சுவதேஅஞ்சாமையாகும்! –தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 15. வந்தபின் காப்பதை விட வருமுன் காத்திடு! எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 429) எதிர் வருவதை முன்பே எதிர்நோக்கி – அறிந்து காக்க வல்ல அறிவு உடையவர்க்கு அவர் நடுங்கும் படி வரக்கூடிய துன்பம் இல்லை என்கிறார் திருவள்ளுவர். நடக்க இருப்பதை முன்கூட்டி உணர்பவர்கள் துன்பத்தைத் தடுப்பர் (Those who foresee the outcome will avoid suffering)…
க0. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா?-வி.பொ.பழனிவேலனார்
(௯. பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா?-வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௰. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா? க. தமிழ் மொழியுடன் வேற்றுமொழிச் சொற்கள் பெருமளவு கலக்கப்பட்டு பல்லாயிரம் தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்துவிட்டன. உ. தமிழ்மக்கள் பேச்சிலும், எழுத்திலும் தமிழ்ச்சொற்களைக் காண்பது அரிதாகிவிட்டது.௩. தமிழ்நாட்டில் வாழும் தமிழ்மக்களின் பெயர்கள் தமிழாக இல்லை.௪. தமிழ்நாட்டில் உள்ள கடைகள், தொழிலகங்களின் பெயர்கள் தமிழ்மொழியில் எழுதப்படவில்லை.ரு. தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்கள் பல தமிழல்ல. தமிழில் எழுதியுள்ள பெயர்களும் பிழைபட எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழ் வழங்கவில்லை.எ. தமிழில் இப்பொழுது இந்திச் சொற்கள்…
வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 17 : . வேதாந்தம் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி பண்டை நாட்களில், வைதீக நெறியாளர்களுக்கும், ஆகம நெறியாளர்க்கும், இடையில் பெரும்பகை – கடும்பகை நிலவி இருந்தது. ஆகம நெறியாளர்கள், கடவுள் பெயரால் இரத்தம் சிந்தப்படுவதை வெளிப்படையாகவே கண்டித்தனர். இறைச்சி உண்பதை, அதிலும் மாட்டிறைச்சி உண்பதை எதிர்த்தனர். இரத்தம் சிந்தும் யாகங்கள் குறித்த அவர் கண்டனங்களின் எதிரொலி , மகாபாரதத்தில் கேட்டது. வைதீக ஆகம நெறிகளின் ஒருங்கிணைந்த அவ்விரு நெறிகளிலும்…
குறள் கடலில் சில துளிகள் 14. அஞ்சவேண்டியதற்குஅஞ்சுவதேஅஞ்சாமையாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 13. தொலைநோக்குச் சிந்தனையே அறிவாகும்! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 14. அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதே அஞ்சாமையாகும்! அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 428) அஞ்சத்தக்கவற்றிற்கு அஞ்சாதிருத்தல் அறியாமை; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுடையார் இயல்பு என்கிறார் திருவள்ளுவர். அஞ்சாமை உடையவர்கள் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பதில்லை(Fearless people are not afraid to be afraid) என்கின்றனர் மனஅறிவியல் அறிஞர்கள். அஃதாவது அஞ்சவேண்டிய…
தமிழ்க்காப்புக்கழகம்: சிறப்புக் கூட்டம்: தொல்காப்பியமும் அகத்தியமும்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௨௰௩ – 423) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் சிறப்புக் கூட்டம்: என்றென்றும் வாழும் தொல்காப்பியமும் என்றும் இல்லா அகத்தியமும் இணைய வழி நிகழ்வு நாள் : மாசி 11, 2056 / 23.02.2025 ஞாயிறு காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரைஞர்கள் முனைவர் வா.நேரு மாநிலத்…
சட்டச் சொற்கள் விளக்கம் 931 – 935 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 926 – 930 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 931 – 935 931. Association கூட்டு இயைபு ஒன்று சேர் அமைப்பு கூடுதல், இணைதல், சேர்த்தல், சங்கம், கழகம், குழாம் தோழமை, நட்பு, நெருங்கிய பழக்கம், கருத்துத்தொடர்பு எனப் பல பொருள்கள். சட்ட அடிப்படையில், ஒரு சங்கம் என்பது ஒரு பொதுவான நோக்கம் அல்லது ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்வோரின் குழுவாகும். இது மற்றொருவருடன் தொடர்பு கொள்வது அல்லது…
குறள் கடலில் சில துளிகள் 13. தொலைநோக்குச் சிந்தனையே அறிவாகும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 12. உலகத்தார்வழியில்செல்வதேஅறிவு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள், 13. தொலைநோக்குச் சிந்தனையே அறிவாகும்! அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 427) அறிவுடையார் எதிர்கால நிகழ்வை அறியக்கூடியவர். அறிவில்லாதவர் அறியும் திறன் இல்லாதவர் என்கிறார் திருவள்ளுவர். அறிகல்லாதவர்=அறிவதைக் கல்லாதவர்கள் = அறியமாட்டாதவர் அல்லது அறியமுடியாதவர்கள். அறிக + கல்லாதவர் =(அறிக என்பதன் ஈற்று எழுத்தான க மறைந்து) அறிகல்லாதவர் என்றும் சொல்லலாம். “கண்ணுக்கு முன்னால்…
குறள் கடலில் சில துளிகள் 12. உலகத்தார்வழியில்செல்வதேஅறிவு! – இலக்குவனார்திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 11. உலகம்தழுவியதேஅறிவு! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 12. உலகத்தார் வழியில் செல்வதே அறிவு! எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 426) உலகம் எவ்வாறு இயங்குகிறதோ அவ்வழியில் இயங்குவதே அறிவு என்கிறார் திருவள்ளுவர். ஆள்வோர்கள் உலகம் தழுவிச் செல்லும் அறிவை இழப்பதாலேயே போர்கள் உண்டாகின்றன என வரலாற்றிஞர்கள் கூறுகின்றனர். பரிமேலழகர், ‘உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,’ எனக் கருதித்தான் நினைத்தவாறே ஒழுகின்,…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 122: கல்லூரி நுழைவு
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 121: நான் சொன்ன பாடல்-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-82 சோதனையில் வெற்றி – தொடர்ச்சி பிறகு திங்கட்கிழமை நல்ல வேளையில் கல்லூரிக்குப் போக வேண்டுமென்று எண்ணி சோதிடரைக் கண்டு பார்த்த போது 12 மணிக்குமேல் நல்லவேளை யென்று தெரிந்தது. “நாளைக்குப் பதினொன்றரை மணிக்கு சித்தமாக இருந்தால் நான் கல்லூரிக்குப் போய்ச் சொல்லியனுப்புகிறேன். அப்போது வரலாம்” என்று செட்டியார் சொல்லி எனக்கு விடை கொடுத்தனுப்பினார். அன்று மாலையில் முக்கியமான ஆலயங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வந்தேன். சொல்லும் முறை சரியானபடி இருந்தால் அவர்களுடைய…
௯. பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா?-வி.பொ.பழனிவேலனார்
(அ. தமிழும் – தமிழரும் -புலவர் வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௯. பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா? பிறமொழிக் கலப்பால் பிற மொழிகள் வளரலாம். ஆனால், தமிழ் அதற்குப் புறம்பானது. தமிழ் “உயர்தனிச் செம்மொழி” என்பதைப் பலர் அறியாமையால், பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்தால் தமிழ் வளம் பெறும் என்கின்றனர். இத்தகையோர் மொழி நூலறிவு அற்றவராவர். சமற்கிருதத்திலிருந்து தமிழ் பிறந்ததென்றும், அதனால் தமிழ்வளம் பெற்றதென்றும் பிதற்றும் பேதையர் பலராவர். இவர்தம் கூற்று முற்றும் பொய்யே! வடமொழிச் (சமற்கிருதம்) சொற்கள் தமிழில் கலந்தமையால் ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள்…
