சட்டச் சொற்கள் விளக்கம் 561-570 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 551-560 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 561-570 561. Acquitas sequitur legem / legm சமன்மை சட்டத்தின் வழியதாகும். சமன்மை அல்லது சமன்நெறி அல்லது நடுவுநிலைமை என்பது சட்டத்தைப் பின்பற்றியதாகும். இதன் மூலம் சட்டத்தின் வழி நடுவுநிலைமையைப் பேண வேண்டும் எனலாம். இஃது இலத்தீன் தொடர். சமன்மை நெறியே சட்ட நெறி என்று சொல்வது சிறப்பாக இருக்கும். அதுவே தமிழர் நெறி. நடுவுநிலைமை எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவனர் தனி ஓர் அதிகாரத்தையே தந்துள்ளமை…
சட்டச் சொற்கள் விளக்கம் 551-560 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 541-550 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 551-560 551. Acquisition Of Possession உடைமையைக் கையகப்படுத்தல் உரிமையாளரிடமிருந்து அவரது இசைவுடனோ இசைவின்றியோ அவரின் உடைமையைக் கைப்பற்றல். இது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். கீட்டன் என்பார் கூறுவதற்கிணங்க, விடுதிக் காப்பாளர், விடுதியில் தங்கியிருப்பவர் விடுதிக்கட்டணத்தைச் செலுத்தத் தவறினால், அவரது உடைமையைக் கைப்பற்றல் சரியான நடவடிக்கையே. இருப்பினும் இவற்றைக் காவல்துறையினர் முன் மேற்கொள்வது ஏற்றதாகும். 552. Acquisition Of Property சொத்து…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 98 : பிரிவில் வருத்தம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 97 : பிரசங்க சம்மானம்-தொடர்ச்சி) என் சரித்திரம் நான் பிள்ளையவர்களிடம் போக எண்ணி இருப்பதை அக்கூட்டத்தினருக்குத் தெரிவிக்க வேண்டுமென்பது என் கருத்து. பிரசங்கம் செய்யும்போதே பிள்ளையவர்களைப் பற்றிச் சொல்லுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள எண்ணினேன். இப்பாட்டு அச்சந்தர்ப்பத்தை அளித்தது. இப்பாடலுக்குப் பொருள் சொல்லிவிட்டு விசேட உரை சொல்லத் தொடங்கினேன். “வசிட்டாதி முனிவர்கள் என்று சொன்ன மாத்திரத்தில் எல்லா முனிவர்களும் அடங்கிவிடுவார்கள். அப்படி இருக்க, குறுமுனியை என்று அகத்திய முனிவரைத் தனியே ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். வசிட்டருக்கு எவ்வளவு சிறப்பு…
தமிழுக்குவளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். அ. ஆந்திரிக்கசு அடிகளார், ஆ. வீரமாமுனிவர்
தமிழுக்குவளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். 1. அச்சுக்கலைத் தந்த ஆந்திரிக்கசு அடிகளார் முன்னுரை : உலக மொழிகள் மூவாயிரத்துக்கு மேற்பட்டவை. உலகின் முதன் மொழியாக ஒளியுடன் மிளிர்வது தமிழ். இரண்டாயிரத்துப் பத்து மொழிகளில் இடம் பெற்றுள்ள விவிலியத் திருநூல், பாபேல் கோபுரம் கட்டப்பட்டபோது ஒரே மொழியாகத் தமிழ் திகழ்ந்ததைத் தெளிவுறுத்துகிறது. தொடக்கநூலில் (1:1-2)இரண்டு தொடர்கள் இச்செய்தியை எடுத்துரைக்கின்றன. உலகம் முழுவதும் ஒரே மொழியும் ஒரே வார்த்தையும் இருந்தன. பாபேல் கோபுரத்தை கட்டிய பெருமைக்குரியவர் தமிழர். கிழக்கே இருந்து சென்ற தமிழர் சிநேயார்ச்சு சமவெளியில் தங்கி…
அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், இ. அறிவியல்அறிமுகச்சொல்
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், ஆ.திருவள்ளுவரின் பட்டறிவுப் பேச்சு-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் இ. அறிவியல் அறிமுகச் சொல் இவ்வாறு தனித்தன்மையுடன் வாழ்வியல் குறிப்புகளைக் கொண்ட இக்குறட்பாக்கள் மூன்றும் மற்றொரு வியப்பையும் உள்ளடக்கியனவாகும். அதுதான் இக்காலம் வளர்ந்து விரிந்துள்ள அறிவியலின் குறிப்பும் பொருந்தியுள்ளமையாகும். முன்னே கண்ட பக்கம் 25, 26 அறிவியல் விளக்கத்தையும் இக்குறட்பாக்களின் கருத்தேற்றத்தையும் பொருந்திக்காண வாய்ப்புள்ளது. மூன்று குறட்பாக்களும் சொல்லமைப்பிலும், கருத்தமைப்பிலும் பட்டறிவிலும், ஒத்துள்ளமையால் ஒரு குறளைக் கொண்டே பொருத்திக் காணலாம். அவற்றிலும் ”பெறும் அவற்றுள்” (61) என்னும் குறட் கருத்தைப் பொருத்திக்…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 14. மனமும் இனமும்
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 13. இனத்து இயல்பாகும் அறிவு- தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 11. மனமும் இனமும் செயல், புறத்தே நிகழ்வது; உணர்வு அகத்தே எழுவது , செயல் புலப்படக்கூடியது: உணர்வு புலப்பட மாட்டாதது. புறத்தே நிகழும் செயல் அகத்தே எழும் உணர்வை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். அதுவே இயற்கையுமாகும். உணர்வு ஊற்றெடுக்கும் அகமும், அவ்வுணர்வை வெளிப்படுத்தும் நாவும், அதன் வழிச் செயல்படும் மெய்யும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவாகும் இம்மூன்று நிலையாலும், மனிதர் தூய்மையுடையராதல் வேண்டும். இதை வலியுறுத்தவே, உண்மை, வாய்மை,…
சட்டச் சொற்கள் விளக்கம் 541-550 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 531-540 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 541-550 541. Acquiring Property சொத்தினை அடைதல் வணிகச்சொத்துகள் கையகப்படுத்தும் செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து கை மாறுகின்றன. சொத்து கையகப்படுத்தல் என்பது மனைவணிகச்சொத்தின் மீது உரிமை அல்லது உரிமைகளைப் பெறுவதற்கான செயல்முறையைக் குறிப்பது. 542. Acquisition கையகப்படுத்துதல் அகப்படுத்தல், கைப்பற்றுகை, கைப்பற்றல், கைக்கொள்ளல், ஈட்டல், திரட்டூக்கம், ஊறல், அடைவு, செயல், தேட்டம், உழைப்பு, பெற்றி, பேறு, உரிமை, சேகரம், சம்பாத்தியம், ஈட்டியது, முயன்றடைதல், …
சட்டச் சொற்கள் விளக்கம் 531-540 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 521-530 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 531-540 531. Acquired Company நிறுவனத்தைப் பெறுதல் ஒரு நிறுவனம், மற்றொரு நிறுவனத்தின் மீதான உரிமையை வாங்கிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வணிக நடவடிக்கையாகும். 532. Acquired Evidence சான்றாதாரம் அல்லது சான்றாதாரங்கள் அடைதல் உண்மையை அல்லது குற்றத்தை மெய்ப்பிப்பதற்காக அடையப்படும் சான்று. 533. Acquired Immunity நோய்மி எதிர் அடைவு நோய்த் தடுப்பாற்றலைப் பெறுதல். நோய்த்தடுப்பு மருந்தினைப் பயன்படுத்தி நோய்…
சட்டச் சொற்கள் விளக்கம் 521-530 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 511-520 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 521-530 521. Acquainted With Handwriting கையெழுத்தை நன்கறிந்திருத்தல் கையெழுத்தைக் கண்டறியும் பழக்கமுள்ள. வழக்குகளில் இடம் பெற்ற சில தொடர்கள்: குற்றஞ்சாட்டப்பட்டவரின் கையெழுத்தை நன்கறிந்த சான்றரால் போலி ஆவணங்களில் உள்ள கையெழுத்து அவருடையது எனக் கண்டறியப்பட்டது. கையெழுத்து வல்லுநர் குற்றஞ்சாட்டப்பட்டவரின் கையெழுத்தை நன்கு அறிந்து ஆவணத்திலுள்ள போலி கையெழுத்து அவருடையது என மெய்ப்பித்தார். 522. Acquainted With The Fact Of The Case வழக்கு உண்மை…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 97 : பிரசங்க சம்மானம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 96 : அங்கே இல்லை- தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-61 பிரசங்க சம்மானம் காரைக்கு வந்தவுடன் திருவிளையாடற்புராணப் பிரசங்கத்தைப் பூர்த்தி செய்யும் விசயத்தில் எனக்கு வேகம் உண்டாயிற்று. “இன்னும் கொஞ்சநாள் பொறுத்தால் அதிகத் தொகை சேரும்” என்று சிலர் கூறினர். “கிடைத்தமட்டும் போதுமானது” என்று கிருட்ணசாமி ரெட்டியாரிடம் சொன்னேன். பிள்ளையவர்கள் தமக்கு எழுதிய கடிதத்தைக் கண்டு அவர் அளவற்ற ஆனந்தமடைந்தார். அவர் விசயமாக அப்புலவர் பிரான் எழுதியிருந்த பாட்டைப் படித்துப் படித்துப்பெறாத பேறு பெற்றவரைப் போலானார். “உங்களுடைய சம்பந்தத்தால் அம்மகா…
அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன்,ஆ.திருவள்ளுவரின் பட்டறிவுப் பேச்சு
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், திருவள்ளுவர் அறிவியற்கவிஞரா?-தொடரும்) அறிவியல் திருவள்ளுவம் ஆ. திருவள்ளுவரின் பட்டறிவுப் பேச்சு பட்டறிவு என்றால் என்ன பொருள்? ஒருவர் தம் வாழ்வில் கண்டும் கேட்டும், துய்த்தும் அவற்றில் ஆட்பட்டுக் கொண்ட அறிவையே (படு அறிவு) பட்டறிவு என்கிறோம். ‘பாடு பட்டுப் பெற்றேன்’ என்பதிலும் ‘பட்டபாடு பெரிது’ என்பதிலும் உள்ள சொற்களில் இப்பொருளைக் காண்கிறோம். “பட்டமும் கயிறுபோல் பறக்ககின்ற சீவனைப்பட்டறிவினாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா”[1] என்று சிவவாக்கியர் பாட்டில் இச்சொல்லை அதன்பொருட் குறிப்புடன் காண்கிறோம். பட்டறிவைப் புரிந்துகொள்ளப் பின்வரும் இரண்டு தொடர்கள்…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 13. இனத்து இயல்பாகும் அறிவு
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 12. அனைய கொல்! – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 10. இனத்து இயல்பாகும் அறிவு நிலம் பெயராப் பொருள்களாம் மரம், செடி, கொடிகளும், நீர்வாழ்வனவும், பறப்பணவும், நிலத்தில் ஊர்வனவும் நடப்பனவும் ஆகிய அனைத்தும், உயிர் உடைய பொருள்கள் என்ற ஒருமைப்பாட்டால் ஓர் இனம் எனக் கருதப்படினும், அவ்வுயிரினம் அனைத்திலும் மனித இனம் உயர்வுடையது எனக் கருதப்படுவதற்குக் காரணமாய் நிற்பது மனித இனம் பெற்றிருக்கும் பகுத்துணர் அறிவே ஆகும். தக்கனவும், தகாதனவும், ஏற்பனவும் மறுப்பனவும் கலந்தே காட்சி…
