உ.வே.சா.வின் என் சரித்திரம் 100- சங்கீத ஒளடதம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 99 – இரட்டைத் தீபாவளி- தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் 62 தொடர்ச்சிசங்கீத ஒளடதம் நான் அவ்வாறு சென்ற காலங்களில் இரவு நேரங்களில், அவருக்குத் தூக்கம் வாராமையால் அவர் விருப்பத்தின்படி தமிழ்க் கீர்த்தனங்களைப் பாடுவேன். சங்கீதத்தில் சிறிதும் பயிற்சியில்லாத ஆசிரியர் எல்லாம் தளர்ந்திருந்த அந்த நிலையில் அக்கீர்த்தனங்களில் மனம் ஒன்றித் தம் நோயை மறந்தார். அவரை அறியாமலே சங்கீதமும் கீர்த்தனங்களின் எளியநடையும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. முக்கியமாக நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளைக் கேட்கும்போது அவர் அடைந்த ஆறுதல் மிகுதியாக இருந்தது. மணிமந்திர…
அறிவியல்திருவள்ளுவம், கோவைஇளஞ்சேரன், 2. நாட்டிற்கு ஐந்து
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், ஈ. வான அறிவியல் பொதிவு-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் 2. நாட்டிற்கு ஐந்துஅறிவியல் பதினான்கு அறிவியல் ஆய்வும், கண்டுபிடிப்புகளும், பயன்களும் நாட்டு நலனை நோக்கமாகக் கொண்டவை. நாடு என்றால் மலை முதலிய அசையாப் பொருள்களும் ஓரறி உயிர் முதல் ஆறறி உயிர் வரையான உயிர்களும் அடங்கும். எனவே அறிவியல் நலனும் இவைகட்கே உரியது. இவற்றிலும் சிறப்பாக மாந்தருக்கே உரியது. திருவள்ளுவர் மாந்தரின் செம்மையான வாழ்விற் கென்றே திருக்குறளைப் படைத்தார். அதில் மாந்தருக்குப் பல்வகை நெறிகளையும் வடித்தார். பல்வகைப் பற்றுக்கோடுகளையும் கொடுத்தார்….
என்தமிழ்ப்பணி, புலவர்கா. கோவிந்தனார், 16, வள்ளுவர்காட்டும்வழி
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 15, அரிதாகும் அவன் மார்பு!-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி 13. வள்ளுவர் காட்டும் வழி “தமிழனுக்கு உள்ள ஒரு சிறப்பு அவன் அங்கு சென்றாலும் தமிழ்க் கலாசாரத்தைப் பரப்புவது ஆகும். கடல் கடந்து சென்று தமிழன் பரப்பிய கலாசாரத்தின் சுவடுகள் இன்று உலக நாடுகள் பலவற்றில் காணப்படுகின்றன. மது வருந்துவதும், மங்கையரோடு கூடி இன்பம் துய்ப்பதுமே வாழ்வு என்று இருந்த நாகர்களுக்கு, பழத்தமிழன் ஒருவன் மதுவும் மங்கையும் பெற்று வாழ்வது வாழ்வாகாது என்று தமிழ்நாட்டு அறம் போதித்து அவர்களை…
சட்டச் சொற்கள் விளக்கம் 601-610 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 591-600 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 601-610 601. Act of honour நன்மதிப்புச் செயல் நன்மதிப்புச் செயலுக்குக் குந்தகம் விளைவிக்கும் வண்ணம் பேசுவதும் செயற்படுவதும் தண்டிப்பிற்குரிய குற்றமாகும். 602. Act Of Indemnity இழப்பீட்டுச் சட்டம் இழப்பீட்டு ஒப்பந்தம் வழுவேற்புச் சட்டம் ஈட்டுறுதிச் செயல் எனச் சிலர் குறிப்பது தவறு. இங்கே act என்பது சட்டத்தைக் குறிக்கிறது; செயலை அல்ல. வாக்குறுதியளிப்பவரின்…
சட்டச் சொற்கள் விளக்கம் 591-600 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 581-590 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 591-600 591. Act judicially நீதித்துறைச் சட்டம் வெவ்வேறு துறைகளுக்கான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இங்கே நீதித்துறைச் செயற்பாட்டிற்காக இயற்றப்படும் சட்டங்களைக் குறிக்கிறது. 592. Act making an offence குற்றம் விளைவிக்கும் செயல் குற்றம் விளையக் காரணமாகும் எச்செயலும். சட்டம், வழக்காறு, விதி போன்றவற்றை மீறல் அல்லது குலைத்தல் குற்றம் நேரக்/நிகழக் காரணமாவதால் குற்றச் செயலாகிறது. 593. Act of a child under seven…
அறிவுக்கதைகள்நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 7. பொன்னும் பொரிவிளங்காயும், 8. வீண்பேச்சு & 9. போகாத இடம்
(அறிவுக் கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 4. கண்டதும்கேட்டதும், 5. கொள்ளும் குத்துவெட்டும், 6. தூங்கு மூஞ்சிகள்-தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 7. பொன்னும் பொரி விளங்காயும் ஒரு கிழவன் தான் தேடிய சிறு பொருளைத் தானும் உண்ணாமல், பிறர்க்கும் வழங்காமல் பொன்கட்டியாக, பொரிவிளங்காயளவு உருட்டி, அடுக்குப் பானை இருக்கும் இடத்தின் அடியில் புதைத்து வைத்திருந்தான். அவன் மக்களிடமும்கூட இதைச் சொல்லி வைக்கவில்லை. சொன்னால் சொத்துப் பறிபோய்விடும் என்பது அவன் கருத்து. திடீரென ஒரு நாள் நோய்வாய்ப்பட்டான். படுத்து விட்டான்….
சட்டச் சொற்கள் விளக்கம் 581-590 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 571-580 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 581-590 581. Act Done By Consent In Good Faith For Person’s Benefit ஒருவரின் நலன் கருதி அவர் இசைவுடன் மேற்கொள்ளப்படும் நன்னம்பிக்கைச் செயல் இந்தியத் தண்டிப்பு த் தொகுப்புப் பிரிவு 93, நன்னம்பிக்கையிலான தகவல் தொடர்பை வரையறுக்கிறது. நன்னம்பிக்கையின் அடிப்படையில் ஒருவரின் நன்மை கருதி அவருக்குத் தெரிவிக்கப்படும் தகவல். இதனால் அவருக்கு எத் தீங்கு ஏற்பட்டுத் துன்புற்றாலும் குற்றமாகாது. மருந்துகள்,…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 99 – இரட்டைத் தீபாவளி
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 98 : பிரிவில் வருத்தம்-தொடரும்) என் சரித்திரம் அத்தியாயம்—62 இரட்டைத் தீபாவளி எங்கே பார்த்தாலும் விசபேதியின் கொடுமை பரவியிருந்தது. திருவாவடுதுறையைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் அந்நோய்க்கு இரையானவர்கள் பலர். திருவாவடுதுறையிலும் சிலர் இறந்தனர். அதுகாறும் அத்தகைய நோயை அறியாத சனங்கள், “காலம் கெட்டுவிட்டது. கலி முற்றுகிறது. தருமம் அழிந்து வருகிறது. அதனால்தான் இக்கொள்ளை நோய் வந்திருக்கிறது” என்று சொன்னார்கள். “இரெயில் வந்தது. ஆசாரம் ஒழிந்தது, அதற்குக் தக்க பலன் இது” என்று சிலர் பேசினர். வேதநாயகம் பிள்ளை விண்ணப்பம் அரசாங்கத்தார் அந்நோய்…
அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், ஈ. வான அறிவியல் பொதிவு
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், இ. அறிவியல்அறிமுகச்சொல்-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம்ஈ. வான அறிவியல் பொதிவு அறிவியல் என்பது ஒரு பொதுத்துறை. பொறியியல், உளவியல், உயிரியல், கணக்கியல், உடலியல், உளவியல் எனவெல்லாம் பல துறைகளில் கண்டுபிடிப்புகள் நேர்கின்றன. எப்பெயர் பெரினும் அவ்வொவ்வொன்றும் அறிவின் நுண்ணிய செயற்பாட்டால்தான் விளைகின்றது. எனவே. பொறி அறிவியல், உள அறிவியல், வான அறிவியல் என்றெல்லாம் அறிவியல் துறையாகவே கொள்ளப்படும். இவற்றுள் வான அறிவியலைச் சற்று விளக்கமாகக் கண்டு அதன் திருக்குறள் அடையாளத்தைக் காணலாம். வானம் என்பது எல்லையற்றுப் பரவியுள்ளது. நிறமற்றது; இடமற்றது….
சட்டச் சொற்கள் விளக்கம் 571-580 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 561-570 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 571-580 Acrobatic வான் சூழ்ச்சிச் செலவு கழைக்கூத்தாடி செப்பிடு வித்தைக்காரன் கழைக் கூத்தாடிக்குரிய, குட்டிக்கரணம் இடுகிற வான்வழிப்பயணத்திற்குத் தேவையில்லாத பொழுது மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியான வான்வழிச் செல்லுதலைக் குறிக்கிறது. Across குறுக்காக, கடந்து ஒரு பரப்பின் ஊடாகச் செல்லுதல் Across a customs frontier, taking it சுங்க எல்லை முழுவதும் ஒரு சுங்க எல்லையைக் கடந்து, எடுத்துச் செல்லுவதைக் குறிக்கிறது. Act சட்டம்…
என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 15, அரிதாகும் அவன் மார்பு!
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 14. மனமும் இனமும்-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி 12. அரிதாகும் அவன் மார்பு! வேட்டுவக்குடியில் வந்த ஓர் இளைஞன் ஒருநாள் வழக்கம்போல் வேட்டைமேற் சென்றான். வேட்டைக்குத் துணைபுரியும் அவனுடைய வளர்ப்பு நாய் அவனைப் பின் தொடர்ந்து விரைந்து வந்து கொண்டிருந்தது. அன்று, அவன் தன்னை அழகிய மலர்களால் ஆன மாலையால் அணி செய்து கொண்டிருந்தான். நிறத்தைப் போலவே நாற்றத்தாலும், பற்பல வகை மலர்களைச் கொண்ட அம்மாலையின் மணம் செல்லும் வழியெங்கும் சென்று நெடுநேரம் கழிந்த பின்னரும் நாறிக் கொண்டிருந்தது….
சமற்கிருதத் தேர்வுக்குக் காரணம் தி மு க தானா? – இலக்குவனார் திருவள்ளுவன் – விசவனூர் வே. தளபதி – முற்றம் தொலைக்காட்சி
முற்றம் தொலைக்காட்சி காணுரை சமற்கிருதத் தேர்வுக்குக் காரணம் தி மு க தானா? இலக்குவனார் திருவள்ளுவன் செவ்வி காண்பவர் விசவனூர் வே. தளபதி ஆடி 15, 2055 / 31.08.2024
