தமிழ் வளர்த்த நகரங்கள் 13 – அ. க. நவநீத கிருட்டிணன்: வேய்முத்தர்

(தமிழ் வளர்த்த நகரங்கள் 12. – அ. க. நவநீத கிருட்டிணன்: திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி – தொடர்ச்சி) புராணம் புகழும் நெல்லை வேணுவனத்தில் வேய்முத்தர் திருநெல்வேலியின் தெய்வ மாண்பை விளக்கும் புராணங்கள் இரண்டு. அவை திருநெல்வேலித் தல புராணம், வேணுவன புராணம் என்பன. இப் புராணங்களால் பண்டை நாளில் இந் நகரப் பகுதிகள் பெரியதொரு மூங்கிற் காடாக இருந்தது என்று தெரிய வருகிறது. அதனாலயே நெல்லையப்பருக்கு வேணுவனநாதர் என்ற பெயரும் வழங்கி வருகிறது. இப் பெருமான் மூங்கிலின் அடியில் முத்தாக முளைத் தெழுந்த…

தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (4)

(தோழர் தியாகு பேசுகிறார்: இந்துச் சட்டம் இந்தியச் சட்டமானது எப்படி? – தொடர்ச்சி) “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (4) இனிய அன்பர்களே! பொதுக் குடியியல் சட்டம் தொடர்பான உரையாடலை அது வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதமாகச் சுருக்கி விட முடியாது, ‘எடு அல்லது விடு’ என்று முடிவு காண முடியாது. ஆர்எசுஎசு – பாசக கும்பல் பொதுக் குடியியல் சட்டம் என்று சொல்கிறதே தவிர, அதற்கு எவ்வித விளக்கமும் தரவில்லை. வரைவு ஏதும் வெளியிடவில்லை. அவர்களின் நோக்கமும் நமக்குத்…

தமிழ்ப் பெரியார் திரு. வி. க. 6. – வ.உ.சிதம்பரனார்

(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 5. உயிர்த்தொண்டு – தொடர்ச்சி) தமிழ்க்கலை 6. வ. உ. சிதம்பரனார் [9-11-47 ஞாயிறன்று சென்னை செயின்ட்மேரி மண்டபத்தில் நடைபெற்ற தமிழரசுக் கழக மகாநாட்டில் தோழர் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு.) நான் வ. உ. சிதம்பரம்பிள்ளை யவர்கள் படத்தைத் திறப்பேன் என்றார் தலைவர். இத்தனிப்பேற்றினை வழங்கிய கழகத்தாருக்கும் உங்களுக்கும் என் நன்றி உரியதாகுக. நான் இங்கு எக்கட்சியின் சார்பிலும் வரவில்லை, நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல. சிலர் நினைக்கிறார்கள்,…

தோழர் தியாகு பேசுகிறார்: இந்துச் சட்டம் இந்தியச் சட்டமானது எப்படி?

(தோழர் தியாகு எழுதுகிறார்- “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (3)-தொடர்ச்சி) பொதுக் குடியியல் சட்டம் இந்துச் சட்டம் இந்தியச் சட்டமானது எப்படி? இந்தியாவில், முதலாண்மைப் பெருங்குழுமங்களுக்கும் இந்துக் கூட்டுக் குடும்பத்துக்குமான பிணைப்புச் சொத்தின் மீதும் மூலமுதலின் மீதும் குடும்பத்தின் கட்டுப்பாட்டைப் பேணுவதில் தனித்தன்மையதாக உள்ளது எனக் கண்டோம். ஒரு சட்டமுறை நிறுவனமாக இந்தச் சலுகை இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, இது இந்துத் தனியாள், குடும்பச் சட்ட நெறிகளில் வரை யறுக்கப்பட்டுப் புனிதமாக்கப்படுகிறது. அரசமைப்பில் கூறியுள்ளபடி முசுலிம், கிறித்தவர், பார்சி அல்லது…

தோழர் தியாகு எழுதுகிறார்- “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (3)

(தோழர் தியாகு எழுதுகிறார் : அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா? – தொடர்ச்சி) “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (3) காவிக் கூட்டத்தின் பொதுக் குடியியல் சட்டமும் இசுலாமியப் பெண்ணுரிமையும் பொதுக் குடியியல் சட்டம் பற்றிய தொடர் மடலுக்குச் செல்லுமுன்… ஒருசில செய்திகளைப் பகிர வேண்டும். 1) இந்த உரை யாடலில் சொத்துரிமை , வாரிசுரிமை போன்றவற்றுக்கான சட்டங்கள் பற்றிப் பேச வேண்டும் என்று விரும்பிய போது, தோழர் சமந்தா நக்குவெய்ன் மார்க்குசியப் பள்ளிக்குச் சென்று வந்த பின் அங்கு…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 911-915

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 904-910 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 911-915 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 21 : 16. இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறுதொண்டுகள் (1)

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 20 : 15. பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது-தொடர்ச்சி) இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறுதொண்டுகள் 1938-ஆம் வருசம் முதல் நாடகமாடுவதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொண்டே வந்தேன் என்று சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் எனக்கு விருத்தாப்பியம் மேலிட்டதேயாம். ஆகவே இது முதல் நாடகக் கலைக்காக உழைத்ததைப் பற்றி எழுதுகிறேன். 1939-ஆம் வருசம் உலக இரண்டாம் யுத்தம் ஆரம்பித்த பிறகு நாடகக்கலையே இத்தமிழ் நாட்டில் உறங்கிவிட்டது எனலாம் 1942-ஆம் வருசம் சென்னையிலிருந்து…

தோழர் தியாகு எழுதுகிறார் : அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா?

(தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (2) – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா? வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு ஒரு துரும்பு கிடைத்தால் கூட தெப்பமாகத் தெரியும். அந்தத் துரும்பைப் பிடித்துக் கொண்டு கரையேறி விட முடியாதா என்றுதான் நினைப்பான். இனவழிப்பு முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டு ஆண்டுகள் பதினான்கு ஆன பிறகும் நீதியின் ஒளிக்கதிர் கண்ணுக்கு எட்டாத அவலநிலையில் இருக்கும் தமிழீழ மக்களுக்கு யாராவது தமிழினவழிப்பு என்று பேசி விட்டாலே மனம் நிறைந்து…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 59 : 35. சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 58 : புலமையும் வறுமையும்- தொடர்ச்சி) என் சரித்திரம் திருநெல்வேலி சில்லாவில் உள்ளவர்களுக்குத் தாமிரபரணி நதியும் திருக்குற்றால தலமும் பெரிய செல்வங்கள்; அவற்றைப் போலவே மேலகரம் திரிகூடராசப்பக்கவிராயர் இயற்றிய நூல்கள் இலக்கியச் செல்வமாக விளங்குகின்றன. மேலகரமென்பது தென்காசியிலிருந்து திருக்குற்றாலத்திற்குப் போகும் வழியில் உள்ளது. முன்பு திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து வெளியிடங்களுக்கு வரும் கனவான்களிற் பெரும்பாலோர் திருக்குற்றாலக் குறவஞ்சியிலிருந்து சில பாடல்களைச் சொல்லி ஆனந்தமடைவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்கள்; பலர் திருக்குற்றாலத் தல புராணத்திலிருந்தும் அரிய செய்யுட்களைச் சொல்லி மகிழ்வார்கள். தென்பாண்டி நாட்டார் பெருமதிப்பு வைத்துப்…

தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (2)

(தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (1) – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (2) இந்துக் கூட்டுக் குடும்பத்துக்கு சலுகை தரும் சட்டங்கள் இந்தியக் குமுகம் என்பது சாறத்தில் இந்துக் குமுகமாக உள்ளது. இந்திய நாட்டின் ஒவ்வொரு துறையிலும் மேலைநாட்டுச் சட்டமுறையும் மனுநீதிச் சட்டமுறையும் கலந்துள்ளன. இதற்குச் சான்றாக சொத்துடைமை பற்றிய சட்டங்களைக் குறிப்பிடலாம். இந்திய அரசமைப்புச் சட்டத்தையே சாதி காக்கும் சட்டம் என்று சொல்லி அதனை…

தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (1)

(தோழர் தியாகு எழுதுகிறார் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (1) இசுலாமியர்களுக்குத் தனிச் சட்டம் உள்ளதா? பொது சிவில் சட்டம் (COMMON CIVIL CODE) அல்லது ஒரே சீரான சிவில் சட்டம் (UNIFORM CIVIL CODE) என்ற பேச்சை ஆர்எசுஎசு – பாசக கூட்டம் பெரிதாகக் கிளப்பி விட்டுள்ளது. சிவில் என்பதைக் குடியியல் என்றோ உரிமையியல் என்றோ தமிழாக்கம் செய்யலாம். சட்டத் துறையில் குற்றவியல் என்ற வகைக்கு மாறாக உரிமையியல் ஆளப்படுகிறது. குற்றவியல் நீதிமன்றங்களுக்கு…

ஊரும் பேரும் 54 : இறையவரும் உறைவிடமும்

(ஊரும் பேரும் 53 : இரா.பி.சேது(ப்பிள்ளை): திருமேனியும் தலமும் – தொடர்ச்சி) ஊரும் பேரும் இறையவரும் உறைவிடமும் இரு சுடர்      இந் நில வுலகிற்கு ஒளி தரும் சூரியனையும் சந்திரனையும் நெடுங் காலமாகத் தமிழகம் போற்றி வருகின்றது. சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துரைக்கு மிடத்து ஞாயிறு, திங்கள் என்னும் இரு சுடர்களையும் போற்றுதல் இதற்கொரு சான்றாகும்.1 பரிதி நியமம்     தேவாரத்தில் பரிதி நியமம் என்ற கோயில் பாடல் பெற்றுள்ளது. நியமம் என்பது கோயில்.2 எனவே, பரிதி நியமம் என்பது சூரியன் கோயில்3 ஆகும்….