எந்நாளோ? – இறைக்குருவனார்
கனலுகின்ற உள்ளக் கனவெல்லாம் நனவாகிப் புனலுறுபூம் பொய்கையெனப் பொலியுநாள் எந்நாளோ? அந்தமிழாம் நந்தாயை அரியணையின் மேலிருத்தி வெந்திறல்சேர் பெருமையுடன் விளங்குநாள் எந்நாளோ? கல்விக் கழகமெலாங் கவின்றமிழே கமழ்வித்துப் பல்கலையும் நந்தமிழர் பயிலுநாள் எந்நாளோ? திருநெறியாஞ் செந்நெறியின் திறனெல்லாம் உலகறிந்தே அருமையுணர்ந் ததன்வழிவாழ்ந் தகமகிழ்தல் எந்நாளோ? அடிமைவிலங் கொடித்தே அரியணையில் நந்தமிழன் முடிபுனைந்து கொடியுயர்த்தி முழங்குநாள் எந்நாளோ? கொத்தடிமை யாங்கறையைக் குருதிகொண்டும் நாங்கழுவி முத்தமிழின் சீர்மை முழங்குநாள் எந்நாளோ? நாடும்இனமும் நன்மொழியும் நந்தமிழர் பீடும் பெருமையுமாய்ப் பிறங்குவித்தல் எந்நாளோ? உழைத்தும் பயன்காணா(து) உலைவுறு நெஞ்சினரெல்லாம்…
அயல்மொழி எதற்கடா தமிழா?
– கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் அன்னைத் தமிழில் அனைத்தும் இருக்கையில் அயல்மொழி எதற்கடா? – தமிழா அயல்மொழி எதற்கடா? முன்னைய மொழியாம் மூவா மொழியெனும் முத்தமிழ் நமதடா! – அது எத்துணைச் சிறந்ததடா! வீட்டிற்கொரு மொழி நாட்டிற்கொரு மொழி ஆட்சிக் கொரு மொழியா? -வழி பாட்டுக் கொரு மொழியா? பாட்டிற்கொரு மொழி படிப்புக்கொரு மொழி பலமொழி எதற்கடா? – தமிழா பலமொழி எதற்கடா? தமிழில் பேசு தமிழில் எழுது தமிழில் பாட்டிசைப்பாய் – இன்பத் தமிழில் வழிபடுவாய்! தமிழில் கல்வியைக் கற்பதே…
வழி சொல்வீர்! – தங்கப்பா
உப்பினிலே உப்பென்னும் சாரம் அற்றால் உலர் மண்ணின் பயன்கூட அதனுக்கில்லை குப்பயைிலே கொட்டி அதை மிதித்துச்செல்வார்! குணம்கெட்ட பொருளுக்கு மதிப்பும் உண்டோ? தமிழன்பால் தமிழின்றேல் அவனும் இல்லை தலைநின்றும் இழிந்தமயிர் ஆவானன்றே! உமிழ்ந்திடுமே நாய்கூட அவன் முகத்தில். உணராமல் தமிழ்மறந்து கிடக்கின்றானே! பிறவினத்தர் தம்மைத்தாம் காத்துக் கொள்ளப் பேதையிவன் எலும்பில்லாப் புழுவேயானான்! மறவுணர்ச்சி முழுதழிந்தான்; மானங் கெட்டான்; வன்பகையின் கால்கழுவிக் குடிக்கின்றானே! நெருப்பிருந்தால் சிறுபொறியும் மலைத்தீ யாகும் நீறாகிப்…
எல்லாளன் வாழ்க! –
– திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன் 92802 53329 எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் அறிக ஈழத்தின் இடர்நீக்க ஈங்கெழுந்தார் தெளிக! “இல்லையினி எல்லாளன்” என்று சொல்லு மெதிரி இடந்தேடி ஓடும்நாள் இனிவிரைவில் வருமே!
இணைய இதழ்!
இளையவன் செயா (கந்தையா) பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை ; பறிக்கக் காத்திருக்கும் ரோசாமலர் கவின்தென்ற லிலாடும் பார்த்திருக்கும் பாவையவள் பக்குவமாய்ப் பூக்கொய்ய சேர்த்திருந்தாள் மகிழ்வைத்தன் செம்முகத்தில் ! பறிப்பவர் இலக்கணம் பாவைக்குத் தெரியும் ஓரிதழ் உதிர்ந்தாலும் ஓர்குறையே ; அவளுக்கு இதழ்உதிராப் பூவேபூவைக்கு இதயம்நிறை மகிழ்ச்சி இதழ் நடத்துவதும் இதற்கொப்பானதே ! இணையஇதழ் கண்டேன் இணையில்லாத் தமிழ்காக்கும் கணையாக விளங்கிய கால்வழி நடத்தும் இணையஇதழ் என்றும் அணையாமல் துலங்க திணையளவாய் வாழ்த்துகிறோம் தீந்தமிழில் !
மாவீரர் வாழும் பூமி! மறுபடியும் துளிர்க்கும்!!
– புலவர் சா இராமாநுசம் மாண்டார் இல்லை மாவீரர்-வீணில் மகிழும் பக்சே பாவீநீர் மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம் மீள ஆட்சி புரிவாரே
ஏனில்லை பெரியார் படம்!- தமிழேந்தி
வரலாற்றைத் திருத்தும் வேலை வழக்கமாய்ப் பார்ப்பான் வேலை பெரியாரைத் தலைகீ ழாகப் பிழைபடக்காட்டும் வேலை சரியாய்அவ் வேலை தன்னைத் தமிழ்த்தேசம் பேசு வோர்கள் விரிவாகச் செய்கின் றார்கள் விதைநெல்லை அவிக்கின் றார்கள் புராணங்கள் பொய்கள் தம்மைப் பூணூலார் சதிகள் தம்மை இராப்பகல் எடுத்துச் சொல்லி இனமானம் காத்து நின்றார் திராவிடர் தமிழர் என்றார் திருக்குறள் மேன்மை சொன்னார் பொறாமையால் இவரை மாற்றான் போலன்றோ பழிக்கின் றார்கள்! ஒருபக்கம் சாதிக் கேடோ உழைப்பாளர் தமைப்பி ளக்கும் மறுபக்கம் மதத்தின் ஆட்டம் மாத்தமிழ் நாட்டு மாண்பின் திறத்தையே…
எது சொந்தம்?
– இனஎழுச்சிக் கவிஞர் நெல்லை. இராமச்சந்திரன் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 13 அறிக்கைவிட்டு அறிக்கைவிட்டே நமை ஏமாற்றி ஆண்டுவந்தார் இந்தியாவை! தில்லி ஆட்சி விரித்தவலை வீழ்ந்திருக்கும் இறக்கும் புறாக்களாகி விசையற்றுப் பதவிசுகம் தமிழர் கண்டார்! அவித்தமுட்டை போலாகிக் கருவும் செத்து அருந்தமிழன் தில்லிக்குத் தீனி ஆனான்! புவியாண்ட தமிழினத்தான் புள்கூட் டம்போல் பூமியெலாம் பறந்தோடி அகதி ஆனான் 14 ஊரிழந்தான் உணர்வழிந்தான் தேடித் தேடி ஒவ்வொன்றாய்த் தமிழுயிரை அவன்அ ழித்தான் தேரழித்தான் தெய்வீகப் பண்ப ழித்தான்…
இலக்குவனார் புகழ் என்றும் வாழ்க!
– கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் வாய்மேடு தந்த வண்டமிழ்ப் புலவர் தாய்த்தமிழ் மொழிக்கே தம்மை ஈந்தவர்! தந்தை பெரியார் தன்மானக் கொள்கையைச் சிந்தையில் கொண்ட செந்தமிழ்ச் செம்மல்! மான மறவர்! மாத்தமிழ் அறிஞர்!
எது சொந்தம்? இனஎழுச்சிக் கவிஞர் நெல்லை. இராமச்சந்திரன்
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 6 காதலித்தாய் நீபெண்ணே அதனால் தானே கண்;விழித்தேன் உன்மனத்தில் இன்றே! என்னைப் பேதலிக்க வைக்கின்றாய்! என்ஆ சையில் பெருநெருப்பைக் கொட்டுகிறாய்! என்உள் ளத்தில் ஆதவனாய் ஒளிவீசும் வெளிச்சக் காடே! அச்சடித்த மறுபதிப்பு அகநா னூறே! ஏதுமிலா ஈழத்தான் என்னை ஏற்றாய்! என்சொந்தம் நீஎன்றேன் தவறா? கேட்டான். 7 ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர்! இனஉணர்வுவின் பொங்கூற்று அவனின் உள்ளம்! ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர்! இதயமெலாம் தமிழ்ப்பண்பின் குடியி ருப்பு ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர்! எழுச்சிதரும் புறப்பாடல்…
அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி
தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி? 1. கவிதை எந்தப் பா வகையிலேயும் (புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம். 2. 24 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 3. அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை மட்டுமே அனுப்புக! 4. கடைசி நாள் : 31.12.2013. 5. உங்களின் தெளிவான அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் (e-mail), அலைபேசி விவரங்களைக் குறிப்பிடுக. பரிசுத் தொகை முதல் பரிசு உருவா 500 இரண்டாம் பரிசு உருவா 300 மூன்றாம் பரிசு உருவா…
தீக்குச்சி – கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்
கலைவளர் அறுபத்து நான்கு கயமையைப் பொசுக்க நாமும் தவத்தீக் குச்சிகள் கொண்டே தீய்த்திட்டே தமிழைக் காப்போம் கவலைகள் சொன்ன ஆசான் கவனமாய்த் தீர்க்க நாமும் புவனத்துத் தமிழ்த்தாய் எண்ணி பூமியில் ஓங்கி வாழ்வோம்! ஒளியினை வழங்கும் குச்சி ஒண்டமிழ் காக்கும் வேள்வி பழியினைப் போக்க என்றும் பாவத்தைப் பொசுக்கி வெல்வோம்! விழிகளின் தோழன் ஒளியே விண்டிடும் தீக்குச்சி வழியே தளிர்விடும் அறத்தைக் காக்க தீக்குச்சியால் சமைத்தே ஈவோம்! தீமைகள் கலையும் ஆசான் பாக்குச்சி சமைத்து நானும் பாதைவழி…