தமிழ் வளர்கிறது! 7-9 : நாரா.நாச்சியப்பன்
(தமிழ் வளர்கிறது! 4-6 : நாரா.நாச்சியப்பன் தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 7-9 : நாரா.நாச்சியப்பன் பொய்யான கருத்தெல்லாம் தமிழர் நாட்டில் புகுத்துகின்ற கதைகளையே வெறுத்தொ துக்கச் செய்யாரோ எனநினைத்தால் கலைந யத்தைச் செந்தமிழில் இறக்கிவைத்த கவிதை யென்று மெய்யாக விழாக்கள்பல நடத்தி வைத்து மேன்மேலும் அக்கதையே பெருக்கு வார்கள் செய்யாதே என்பதனைச் செய்வ தற்கே திரண்டோடி வருவாரிம் முரண்டர் கண்டீர் ! (7) தென்றமிழில், வடமொழியின் சொற்கள் வந்து திரிந்ததென ஆராய்ச்சி நடத்திக் காட்டி அன்றிருந்த தமிழ்ச்சொல்லும் வடசொல் லென்றே அழிவழக்குப்…
செந்தமிழ் இனமே! – தமிழநம்பி
செந்தமிழ் இனமே! – தமிழநம்பி செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே! முந்து தமிழும் முதனா கரிகமும் இலக்கியச் சிறப்பும் இலக்கணச் செழுமையும் துலக்குறு அறிவொடு இலக்குறு வாழ்வும் நெடுவரைப் பனிமலை நெற்றியில் விற்கயல் கொடும்புலி பொறித்த கடுமறத் திறத்தொடும் மிகையுங் கொளாது குறையுங் கொடாது தகைமிகு வணிகம் தரைகட லோடி நுண்கலை வானியல் நுட்ப அறிவியல் எண்ணியல் நாட்டியம் பண்ணிசை யாழொடும் செழிப்புற விளங்கிய செந்தமிழ் இனமே! அழிப்புற ஒடுக்குற இழிதாழ் வுற்றே இரண்டகக் கொடியரால் எய்தினை வீழ்ச்சி! திரண்டவுன் சீர்மைச் சிறப்பெலா மிழந்தனை!…
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 08– சி.இலக்குவனார்
[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 07 தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 08– சி.இலக்குவனார் நகரங்கள் நாட்டுக்கு அணிகலன்கள் நகரங்களே. நகரங்கள் ஒரே நாளில் தோன்றிவிடா. விளைபொருள் மிகுதியாலும் கைத்தொழிற் சிறப்பாலும் கோயில்கள் அமைவதாலும் கப்பல் போக்குவரத்துக்குரிய வசதியாலும் வாணிபப் பெருக்காலும் தலைநகராகும் பேறு உண்டாவதனாலும் சிற்றூர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெற்று நகரங்கள் என அழைக்கப்பெறும். வளங்கொழிக்கும் பெரிய மாளிகையைக் குறிக்கும் ‘நகர்’ என்னும் சொல்லும் ‘நகரம்’ என்பதன் அடியாகும். ‘நகரம்’ என்பது எவ்வாறு இருக்கும் என்பதை…
காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 4/4 – கி.சிவா
(காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 4/4 – தொடர்ச்சி) காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 4/4 காக்கைக்கு வழிகாட்டல் முதலமைச்சரைச் சந்திக்கப் பலரை அனுப்பியும் பலனில்லை. அதனால், திருச்சிராப்பள்ளியிலிருந்து கிளம்பிய சினங்கொண்ட தமிழர்படை5 போர்க்கொடி உயர்த்திப் போராடி வாகை சூடியது. ஆயினும், யாவரும் முதலமைச்சரிடம் தூதுவிடுக்க முடிவுசெய்தனர். ஆகையால், காக்கையே! நீ அவரிடம் சென்று ‘ஆங்கில ஆட்சியின் அடிமையிலிருந்து மக்களை விடுவிக்கவே பிறந்தேன்; உழைத்தேன் என்று மக்களிடம் திறமையாகப்பேசி, தந்திரத்தால் முதலமைச்சர் ஆனவரே! மறையவரே! நானும்…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33 வள்ளுவர் வடித்த அமைச்சரின் வகை நெறி பற்றிப் பேச வந்த பெருங்கவிக்கோ இற்றைநாள் அமைச்சர்கள் குறித்துச் சிந்தனைப் பொறிகளைக் கவிதையில் சிதறியிருக்கிறார். இயல்பைக் காட்டும் படப்பிடிப்பு அவ்வரிகள். கவிஞர் பாடுகிறார், “அமைச்சர்தமை நினைத்தால் அடிவயிற்றில் போராட்டம் இமைப் பொழுதும் சோராது ஏற்ற பதவியினைக் காப்பாற்ற வேண்டுமெனும் கருத்தால் திறக்காத தாழ்ப்பாள்தனைப் போட்டுச் சதுராடி வாழ்கின்றார்! சமுதாயச் சாக்கடையில் தன் பதவிக் கப்பலினை அமுதாகச் செலுத்தி ஆலவட்டம் போடுகின்றார்!…
தமிழ் வளர்கிறது! 4-6 : நாரா.நாச்சியப்பன்
(தமிழ் வளர்கிறது 1-3 தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 4-6 எழுச்சியும் ஆர்வத் தீயும் என்னுளே எழுந்து பொர்ங்கக் கிளர்ச்சிசெய் வாரைக் கூடிக் கிடந்திடும் அந்தப் போதில் தளர்ச்சிநான் உற்றே னென்றால் தனிவியப் படைவீர், அந்த வளர்ச்சியின் நிலையைக் கண்டால் வடிந்திடும் கண்ணி ரன்றே ! தமிழினை வளர்ப்போ மென்றும் தமிழர்நா டடைவோ மென்றும் அமிழ்தென மொழிவோ ரெல்லாம் அவரவர் கொள்கை கொண்டு சுமைசுமை யாகத் தீமை தோற்றுவித் திடுதல் கண்டேன். அமைந்திடும் தமிழர் நாட்டுக் கவர்பணி வேண்டாம்! வேண்டாம் ! சொல்லழகு மனம்பறிக்கப் புலவன்…
மனவலி போக்கும் மருந்தகம் – ச.சுதாகர்
மனவலி போக்கும் மருந்தகம் – ச.சுதாகர் மனவலி போக்கும் மருந்துகள் வாங்க மருந்தகம் முகவரி கேட்டேன் தினம் வணங்கும் இறையிடம் ; அருளால் தக்கதோர் விடைஉளம் உணர்ந்தேன். மன வோட்டத் தடம் மாற்ற மரக்கறி வளர்த்திடத் திட்டம் மனவலி போக்கும் மருந்துகள் கிடைக்கும் மருந்தகம் புழைக்கடைத் தோட்டம் ச.சுதாகர் http://subhastories.blogspot.in/ scsudhakar72@gmail.com
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 07– சி.இலக்குவனார்
[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 06 தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 07 மக்களுக்கும் மன்னருக்கும் நாட்டுப்பற்று என்பது கருவிலே வாய்ந்த திருவாக இலங்கியது. மக்கள் அனைவரும் அவரவர் கடமையை நன்கு ஆற்றி நாட்டைப் புரத்தலே அவர் தம் தலையாய பணியெனக் கருதினர். குழந்தைகளைப் பெற்று நன்கு வளர்த்தலே தன் கடமையென அன்னை எண்ணினாள். எல்லா நற்குணங்களாலும் நிறைந்த பெரியோராக்குதல் தன் கடன் எனத் தந்தை நினைத்தான். படைக்கலன்களைப் படைத்துக் கொடுத்தல் தன் பங்கு எனக் கொல்லன்…
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 06 – சி.இலக்குவனார்
[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 05 தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 06 தொல்காப்பியர் காலத் தமிழ்நாடு சேரர் சோழர் பாண்டியர் எனும் முக்குலத்தினரால் ஆளப்பட்டு அம் மூவர் பெயரால் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என அழைக்கப்பட்டு வந்துள்ளது. கொங்குநாடு என்ற பிரிவோ தொண்டை மண்டிலம் என்ற நாடோ அன்று தோன்றிலது. வடவேங்கடத்திற்குத் தெற்கே கன்னட நாடும் துளு நாடும் தோன்றில. பிற்காலத்தில் மலையாள நாடு என்று அழைக்கப்பட்டது, அன்று சேரநாடு எனும் பெயரோடு…
தமிழ் வளர்கிறது! 1-3 : நாரா.நாச்சியப்பன்
தமிழ் வளர்கிறது! 1-3 விடுதலைத் தமிழ ரென்று வீறுடன் பேசு கின்ற முடிநிலை காண்ப தற்கு முழக்கடா சங்க மென்று திடுமென வீர ரெல்லாம் திரண்டுவந் தெழுப்பு மோசை கடிதினிற் கேட்டேன் இன்பக் களிப்பினில் துள்ளி வந்தேன். வடவரின் பிடியி னின்றும் வளர்தமிழ் நாட்டை மீட்கத் திடமுடன் தொண்ட ரெல்லாம் திரண்டனர் என்ற போது கடனெலாம் தீர்ந்தவன் போல் களிப்புடன் ஓடி வந்து படையினில் சேர்ந்து கொண்டேன்; பாடினேன் தமிழ்வாழ் கென்றே. தமிழரின் நாட்டை மீட்போம் தமிழ்நறு மொழியைக் காப்போம் தமிழரின்…
தமிழ் நன்று என்றிரு! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்
தமிழ் நன்று என்றிரு! ஒன்று என்றிரு; தமிழ் நன்று என்றிரு. இம்மொழிதான் செம்மொழி எனத் தமிழின்றி வாழ்வோ என்றே நீ மறு குன்று என்றிரு எம் மொழிவளம் குன்று என்றிரு; பிறமொழி தான்கன்று என்றிரு; நம்தமிழ் நன்றேதான் என்றும் என்றிரு . இன்றே தொடங்கியிரு; வன்தமிழராய் நின்றிரு எவ்வுயிர்க்கும் மென்தோழனாயிரு;. என்றும் தீந்தமிழ், கலப்படம் செய்யாதிரு. கொன்றால் பாவமென்றிரு தின்றால் போகாதென்று மறு; ஆங்கிலம் ஆனமட்டும் பேசாதிரு ஆதிமொழி நம்மொழியென்று மேதினியிரு ; தமிழால் பேசி நாவென்றிரு; நல்ல மனத்தால் இனம் வென்றிரு ,…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 32 உலகத்தில், அன்றாட நடைமுறையில் காணப்படுகிற முரண்பாடுகள் கவிஞர் உள்ளத்தில் தைக்கின்றன. அந்த உறுத்தல் அவரது உணர்வில் சூடேற்றுகிறது. சீற்றமாகச் சொற்கள் கொதித்து வெடிக்கின்றன. இதோ ஓர் எடுத்துக்காட்டு: உண்ட சோறு செரிக்காத திருடர்க் கெல்லாம் உபசரணை செய்கின்றீர் உண்டிச் சாலை கொண்டு கூட்டிச் செல்கின்றீர் வாங்கிப்போட்டுக் குடல் நிரப்பி ஆனந்தம் அடைகின்றோரே அந்தோ திண்டாடும் ஏழைமகன் விடுதி வாசல் தெருவோரம் நின்றானே கவனித்…
