இனிது இயற்கைக் குளியல் -சுதாகர்

இனிது இயற்கைக் குளியல் இனிக்கும் இன்பக் குளியல் இனிது இயற்கைக் குளியல் குளம், ஏரிக் குளியல், உளம் விரும்பும் குளியல்; உள்ளங் கால் தொட்டதும், உள்ளம் உடம்புள் துள்ளும்; உடல் முழுதும் சிலிர்க்கும்; உடல் நீரில் மூழ்கப், பற்கள் வாத்திய மாக பண் ணொன்று பிறக்கும்; இழுத்து பிடித்த உணர்வை, ஓடை இழுத்துக் கொண்டு ஓடும்; குழந்தை மனம் ஓங்கும், அக்கம் பக்கம் மறக்கும், பரவசம் பிறக்கும்; நீரில் உள்ள வரை நிலைக்கும், நிலை குலைய வைக்கும்; உடல் மிதக்கும் வரை உள்ள சுகம்…

கொள்கையை நெஞ்சினில் விதைத்திடுவாய்! – ஏரூர் கே. நெளசாத்து

கொள்கையை நெஞ்சினில் விதைத்திடுவாய்! நல்லவர் போலவே நகைத் திருப்பார் – சிலர் நாவினில் நஞ்சை விதைத்திருப்பார் . உள்ளவை யாவையும் கறந்தெடுப்பார் – அவர் உண்மையைச் சொல்வதாய் நம்ப வைப்பார் , பசுத்தோல் போர்த்திய புலியாவார். – சிலர் பாதகம் செய்வதில் நரியாவார். எரிகின்ற வீட்டுக்குக் கொள்ளி வைப்பார் – அவர் ஏதேனும் செய்தியை அள்ளி வைப்பார். நல்லவர் கெட்டவர் பகுத்தறிவாய் – நீயும் நான்கு குணத்தையும் பிரித்தறி வாய் . கோடரிக் காம்பினை முறித்திடுவாய்.- நல்ல கொள்கையை நெஞ்சினில் விதைத்திடுவாய். கவிஞர். ஏரூர்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31  அஞ்சி அஞ்சி அயர்ந்து நெகிழ்ந்து பஞ்சைபோல் வாழும் பண்பு வேந்தர்கள் என்றும் சொல்லி, இவர் பெரும் அறிவை இந்நாடு இயக்கினால், ‘தவம் வென்றது போல்தான் வரும் நலமே’ என்று கருத்துத் தெரிவிக்கிறார்.   பொதுவாக, மேடை மீது நின்று நீட்டி முழக்கிப் பெரும் பேச்சுகள் பேசிக் களிப்பவர்கள்தாம் மிகுதியாக இருக்கிறார்கள். அந்தப் பேச்சைக் கேட்பவர்களோ கை தட்டி மகிழ்கிறார்கள். அந்தக் கரவொலி பேச்சாளர்களைக் கிறக்கத்தில் ஆழ்த்துகிறது. அவர்கள் செயல்திறன்…

காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 1/4 – கி.சிவா

காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 1/4 முன்னுரை  தொல்காப்பியர் காலம்தொடங்கி இன்றுவரையிலும் தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றிணைந்திருப்பது ‘தூது’ என்னும் இலக்கியமாகும். இன்னும் சொல்லப்போனால், மனித இனம் தோன்றிய காலத்திலேயே தூதும் தோன்றியிருக்கவேண்டும். அதன் வளர்ச்சியாக, 14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியாரால் ‘நெஞ்சுவிடு தூது’ எனும் சிற்றிலக்கியம் இயற்றப்பட்டு வெளியானது. காலப்போக்கில் புலவர்கள் தத்தமது தேவைக்கேற்பத் தூது நூல்களைப் படைத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு அணிசேர்த்தனர். இவ்வகையில், இந்தியெதிர்ப்புப் போரின்போது காக்கையைத் தூதாக விடுத்துத் தமிழில் யாக்கப்பட்டுள்ள ‘வெண்கோழியுய்த்த காக்கைவிடு தூது’ எனும்…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  05–  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  04  தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  05 நாடும் நகரங்களும்    இயற்கை யெல்லைகளால் பிரிக்கப்பட்டுத் தமக்கென ஒரு மொழியைக் கொண்டு மக்கள் வாழ்ந்த நிலப்பகுதியை ‘நாடு’ என்று அழைத்தனர் தமிழக முன்னோர். அப் பகுதி அங்கு வழங்கும் மொழியால் வேறுபடுத்தி அழைக்கப்பட்டது.  ‘தமிழ்’வழங்கும் பகுதி ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிடப்பட்டது. இவ்வாறு, மொழியை யடுத்தே நாடுகள் பெயரிடப்பட்டுள்ளமை உலகெங்கும் காணலாம். தமிழ்நாடு ‘தமிழகம்’ எனவும்,  ‘தமிழ்கூறும் நல்லுலகம்’எனவும் சுட்டப்பட்டுள்ளது. ‘தமிழ் கூறும்…

சாமியே வள்ளுவனே சரணம் ! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்

சாமியே வள்ளுவனே சரணம் ! வள்ளுவன் சரணம்; ஐயன் சரணம் ஐயனே வள்ளுவனே; வள்ளுவனே நம்ஐயனே வள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே வள்ளுவனே வருக! வாய்மை தருக! வாய்மை தருக!  வள்ளுவனே வருக! தாயே சரணம் தந்தையே சரணம் தந்தையே சரணம் தாயே சரணம் ஆதியே சரணம் பகவன் சரணம் பகவன் சரணம் ஆதியே சரணம் தமிழே வருக! குறளே வருக!; குறளே வருக! தமிழே வருக! முப்பால் சரணம்; முத்தமிழ் சரணம்; முத்தமிழ் சரணம்; முப்பால் சரணம்; தமிழைப்பாடு தமிழை நாடு குறளும் யாப்பும்…

வா, தமிழா! தமிழா! – நக்கீரன் பாலசுப்பிரமணியம்

வா, தமிழா! தமிழா!   வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம் கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம் வாளெடுத்து வா தோழா அந்தப் பகையை வென்று முடிப்போம் தோள்கள் சேர்த்து வா தோழா நம் தேசத்தைக் காத்திடுவோம் எமனையும் கண்டு அஞ்சோம் பனங்காட்டுப் புலியிது என்போம் நெற்றியில் இந்த மண்ணை நாம் திலகமாகச் சுமந்திடுவோம் வா, தமிழா தமிழா ஒன்று கூடிடுவோம் கேள், தமிழா தமிழா துயிலெழுந்திடுவோம் ஆயிரம் நாடுகள் அன்று நம்மைச் சுற்றியழித்தது பழங்கதையே தீரத்துடன் நாம் நின்று இனி வெல்லப்போவது புதுக்கதையே…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30   சிறிதளவு உரிமை கிடைத்தால், விடைத்துக் கத்தும் இயல்பினர், அடிமைப்படுத்தினால் அடங்கி வாழும் பண்பினர், தடம் புரண்டலையும் தறுதலைக் குட்டிகள் என்றெல்லாம் வருணிக்கிறார் கவிஞர். மக்கள் மக்களாய் வாழ மக்களே தக்க தீர்ப்பைத் தருவரோ என்றும் எண்ணுகிறார்.   எழுத்தாளர்கள் பற்றி மீண்டும் சொல் சாட்டை சொடுக்குகிறார் பெருங்கவிக்கோ. ‘ஏற்று வளர்ப்பதே வாழ்நா ளெல்லாம் பயிலும் நெறியாய்ப் பாரில் வாழ்பவர் உயிலில்* ஒருவர்க்கு உரிமை செய்தல் போல் அயில்வேல்…

காக்கா காக்கா இயல் கொண்டுவா! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்

  காக்கா காக்கா இயல் கொண்டுவா!     காக்கா காக்கா இயல் கொண்டுவா காடைக்குயிலே இசை கொண்டுவா மயிலே மயிலே நடை கொண்டுவா மானத் தமிழா இனம் கொண்டுவா சொல்லால் மனதால் மொழி கொண்டுவா சோலைக்கிளி போல் திறம் கொண்டுவா கருத்தால் எழுத்தால் உரம் கொண்டுவா காணும் பெயரிலே தமிழ் கொண்டுவா பையப் பைய நம்மொழி கொண்டுவா பகைவர் பழிப்பினும் பண்கொண்டுவா நைய நைய இவ்வன்னியம் வேண்டா நாறும் ஆங்கிலம் இனி வேண்டா படிக்கும் மறையாய் குறள் கொண்டுவா பாடல் இனிக்கக் கலி கொண்டுவா செவிக்கும்…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29 – வல்லிக்கண்ணன்

[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (28)   தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29 பகைமை வளர்த்து நாட்டு வளர்ச்சியைக் கெடுக்கிறார்கள். அரசியல்வாதிகளை நோக்கிப் பெருங்கவிக்கோ கடுமையாகக் கண்டனக்குரல் கொடுக்கிறார். பொய்கை போன்ற பொற்றிரு நாட்டில் பொய்நீர்ச் சாக்கடை புகுந்திடச் செய்தீர்! கால மெல்லாம் கட்சிகள் வளர்த்து ஞாலம் இன்று ஏல மிடுகிறீர்! மனச்சாட்சி கொன்று மறுபடி மறுபடி தினச்சாட்சி பொய்மை திளைத்து மகிழ்கிறீர்! தன்னலம் இன்றி இந்நாடு உயர என்ன செய்தீர்? எல்லாம் சுயநல வேட்டைக் காடாய் வேடிக்கை செய்தீர்! ஆட்டுக்(கு) ஓநாய்…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  03 –  சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  03 முன்னுரை   `இலக்கியம்’ என்பது தூய தமிழ்ச்சொல். இதனை ‘இலக்கு+இயம்’ எனப் பிரிக்கலாம். இது ‘குறிக்கோளை இயம்புவது’ என்னும் பொருளைத் தருவது. வாழ்வின் குறிக்கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும். ஆகவே, இலக்கியத்தின் துணை கொண்டு அவ் விலக்கியத்திற்குரிய மக்களின் வாழ்வியலை அறிதல் கூடும். தமிழிலக்கியத்தின் துணை கொண்டு தமிழ் மக்களின் வாழ்வியலை அறியலாம்.   தமிழ் மக்களின் வரலாற்றை அறிவதற்குத்…

எம்மை ஆள எமக்குத் தெரியும்! – ம.குமரவேல்

எம்மை ஆள எமக்குத் தெரியும்!   வடவோர்சிலர் தமிழோர் தமை வதையே புரிகுவதா – இறை மதவோர் பலர் இனமோர் நமை இழிவெனப் பழிப்பதுவா கரமோடு உளிசெய் நம்கடவுளர் கருவறை தடுப்பதுவா – மறை களவொடு சதிசெய் நால்வருணம் நம்கருப்பத்தில் விதிப்பதுவா இறையாண்மை இலா மண்ணில் இருப்பது இறைத்தன்மையா முறைசாரா முடிமன்னன் தில்லி வீணமர்வது பழந்தமிழருக்கா பயனிலாத்தமிழுடன் பண்ணிலா இசையும் இங்கு பலன்தருமா பதவிஆசையில் தமிழ்த்துரோகம் செய்யப்பன்றிகளும் மேவுமா ஆளுநர் உயர்சாதி தனிஅதிகாரி உயர்சாதி நீதியரசரும் அரசுத் தலைமைச் செயலரும் இவர்சாதி உறங்குதே தமிழ்ச்சாதி…