பாடு மனமே பாடு ! – கவிஞர் அம்பாளடியாள்

பாடு மனமே பாடு !   எங்கள் கவியரசர் இயற்றித்  தந்தபொருள் ஏந்தும் இசையளிக்கும் இன்பம்! பொங்கும் மனத்துயரைப்  பொசுக்கி வாழ்வளிக்கும் போதும் இனியெதற்குத் துன்பம் ! இன்னல் வரும்பொழுதும்  இனிய கானமழை என்றும் மனச்சுமையைப் போக்கும் ! அன்னை மொழியழகும் அரும்பும் அசையழகும் அமுதச் சுவையழகைத் தேக்கும் ! பாடும் குயிலுடனே பருவ மங்கையவள் ஆடிக் கழித்திடுவாள் தினமே ! நாடி வரும்துயரும்  நகரும் இன்னிசையால் நல்ல மருந்திதுதான் மனமே ! காதல் உணர்வுகளைக் கலந்து வந்தஇசை ஆளும் எமதுயிரை  இதமாய் ! பாழும்…

மாணவர் ஆற்றுப்படை 2/6 – பேராசிரியர் சி.இலக்குவனார்

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 2/6   என்றே அலமரும் இளைஞனை நோக்கி “அயரேல் வருந்தேல் அடைவாய் உதவி; தமிழகச் செல்வர் தம்இயல் அறிவேன்;                            35 அறம்பல புரிந்து அறவோர்க் களித்துத் தமிழைக் கற்றுத் தமிழ்ப்பணி புரிந்து கல்விக் கூடம் காண்தக அமைத்து நாடும் நலம்பெற நல்லன புரியார்; அழியாப் புகழை அடைய விரும்பார்                               40 உரையும் பாட்டும் உடையார் அன்றி மறையிலை போல் மாய்வோர் பலரே; அறுவகைச் சுவையும் அளவில துய்த்து உறும்பல நோய்க்கே உறைவிட மாவார்; உண்ணவும்…

நோபல் பரிசாளர் பன்முகக்கலைஞர் பாடலர் பாபு தைலன் -சந்தர் சுப்பிரமணியன்

நோபல் பரிசாளர் பன்முகக்கலைஞர்  பாடலர் பாபு தைலன் (Bob Dylan)   வழக்கம்போல் 2016-ஆம் ஆண்டுக்கான நோபல்பரிசு குறித்த செய்திகள் வரத்தொடங்கிய கடந்த ஒரு மாதக்காலத்தில், பரிசாளர்கள் பட்டியல் குறித்த பல தகவல்கள் ஊடகங்களில் உலவத் தொடங்கின. நோபல் பரிசுகளில் மிக முதன்மையான பரிசான இலக்கியப்பரிசு இந்த ஆண்டு யாருக்கு என்று அதனதன் நோக்கில் அலச ஆரம்பித்தது ஊடகம். அக்டோபர் 6 ஆம்  நாள், ‘நியூ (இ)ரிபப்ளிக்கு / new republic‘ என்னும் நாளிதழ், இலக்கியப்பரிசு குறித்த ஒரு கட்டுரையில் “பாபு தைலனுக்கு விருதா?…

உவமைக் கவிஞர் சுரதா – எழில்.இளங்கோவன்

உவமைக் கவிஞர் சுரதா   காதல் எப்படிப்பட்டது? வள்ளுவரைப் பின்பற்றிச் சொல்கிறார் சுரதா, “மலரினும் மெல்லியது காதலே”. காதல் தலைவி தன் தலைவனைப் பார்க்கிறாள். மகிழ்ச்சி மேலிடுகிறது. அதை அவனிடமே சொல்கிறாள் – இப்படி, “சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வதுபோலே உனைக்கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே”. கவிஞர் சுரதாவின் இந்தப் பாடல் வரிகளின் வயது 58. ஆனால் இன்னமும் இளமையாகவே இருக்கிறது. காலையில் சூரியனைப் பார்த்து தாமரை மலரும். அந்தியில் கருக்கலைப் பார்த்து மல்லிகை மலரும். இரவில் நிலவைப் பார்த்து அல்லி மலரும் –…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 37(2.07) : பரத்தையை விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 36 (2.06) தொடர்ச்சி)     மெய்யறம் இல்வாழ்வியல் 37(2.07) பரத்தையை விலக்கல்   பரத்தை யின்பினைப் பலர்க்கும் விற்பவள். பரத்தை உடலின்பத்தைப் பலருக்கும் விற்பவள். மதுசூ திரண்டினும் பொதுமகள் கொடியள். எல்லோருக்கும் சொந்தமாகக் கூடிய அவள் மது, சூது இவ்விரண்டை விடத் தீமை தரக் கூடியவள். 363.அவணடை யுடைநோக் காதியா லழிப்பாள்; அவள் மீது நம் கவனம் சென்றால் நம்மை முற்றிலும் அழிப்பாள். இன்பந் தருதல்போற் றுன்பெலாந் தருவள்; இன்பம் தருவது போல் எல்லாத் துன்பங்களையும் தருவாள். உடைமுதற் பொருளெலா…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 3/6 தொடர்ச்சி)   பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6   அருங்கேடும் கேடறியாமையும் நல் விளைச்சலுக்கு நாடு கேடுகளின்றி இருக்க வேண்டும் என்பதை (குறள் 732) விளக்கும்பொழுது பிறரிடமிருந்து மாறுபட்டு, ‘‘பெருவெள்ளம், நிலநடுக்கம், கடல்அலைப்பு, எரிமலை முதலிய இயற்கைப் பொருள்களால் உண்டாகும் கேடுகள் அற்றிருக்க வேண்டும்’’[11] என இயற்கைஅறிவியல் அடிப்படையில் விளக்குகிறார். கேடறியாமையை நாட்டின் இலக்கணமாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுமிடத்தில் (குறள் 736) அதனை மழை வளம், நீர்வளம் ஆகியவற்றுடன்…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 4/7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி   பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 4/7   தொல்காப்பியம் முழுமைக்கும்  தெளிவும் எளிமையும் வாய்ந்த விளக்க நடை மூலம் விழுமிய ஆராய்ச்சி உரை வழங்கியுள்ளார் இலக்குவனார்; பெயர்க்காரணம், முறைவைப்பு ஆகியவற்றை நடைநலத்துடனும் மதிநுட்பத்துடனும் விளக்குகிறார்; தொல்காப்பியர் கருத்து இக்காலத்திலும் தேவையாகிறது என்பதை நுட்பமான ஆராய்ச்சித்திறனுடன் உணர்த்துகிறார்; இவற்றை, “எண்வகை மெய்ப்பாடுகள்: இலக்குவனாரின் ஆராய்ச்சித் திறன்”  கட்டுரை மூலம்…

கவிஞர் மு.முருகேசின் ஐக்கூ நூல்கள் வெளியீடு, சென்னை

  கார்த்திகை 25, 2047 / 10.12.2016, சனிக்கிழமை,  மாலை 5.30 மணி ஐக்கூவோடு கை குலுக்குவோம் மு.முருகேசு  படைத்துள்ள  ‘தமிழ்  ஐக்கூ: நூற்றாண்டுத் தடத்தில்’ கட்டுரைகள், ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’  ஐக்கூ கவிதை நூல்கள் வெளியீடு பனுவல் புத்தக நிலையம், திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை – 600 041. ஈரோடு தமிழன்பன் என்.லிங்குசாமி வசந்தபாலன் தமிழ் ஐக்கூ கவிதை இயக்கம் பனுவல்

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 36 (2.06) காமம் விலக்கல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 35 (2.05) தொடர்ச்சி]     மெய்யறம் இல்வாழ்வியல் 36. காமம் விலக்கல்    351. காம மகத்தெழு மாமத வெறியே. காமம் உள்ளத்தில் எழுகின்ற மிகப் பெரிய வெறி ஆகும். இன்ப மறிவோ டிருந்ததுநு பவிப்பதே. இன்பம் என்பது சுய நினைவோடு அநுபவிப்பது ஆகும். இராச்சில குறித்தறை யியைந்திட லின்பம். சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அநுபவிப்பது இன்பம் ஆகும். 354.எண்ணிய பொழுதிடத் தியைந்திடல் காமம். நினைத்த பொழுது நினைத்த இடத்தில் அநுபவிப்பது காமம் ஆகும். காம மகப்புறக் கண்களைக் கெடுத்திடும்….

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார்

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 1/6 “இளமையும் ஆர்வமும் ஏங்கிய உள்ளமும் தளர்ந்த நடையும் தனக்கே உரித்தாய் வேனிலில் அசைந்திடும் வெறும்கொம் பேபோல் வந்திடும் சிறுவர் வாட்டம் கூறாய்” எனவே வினவிட இளைஞனும் நிமிர்ந்தே                          …5 “அன்புடன் வினவும் ஐய! என் குறைதனைச் சொல்லக் கேண்மின்! துயர்மிக உடையேன்; பள்ளி இறுதிப் படிப்பினை முடித்துளேன்; முதல்வகுப் பினில்நான் முதன்மையன் பள்ளியில் ஆயினும் செய்வதென்; அப்பனும் அற்றேன்!                        …10 கல்லூ ரியில்நான் கற்றிட வழியிலை; உதவும் உற்றார் ஒருவரும் பெற்றிலேன்; செல்வரை…

அறம் செய விரும்பு! – ஞா.மணிமேகலை

அறம் செய விரும்பு! வாகை சூடி வரவேற்று, வந்த விருந்தினர் மகிழ வகை செய்து பணிவுடன் அன்பும் காட்டுந் திறம் பருமிய நாட்டுப் பண்பாட்(டு) அறம்! ஒப்பிலா ஒண்தமிழ் ஓதுதல் அறம் ஒரு நிலையில்லா மனத்தை ஆளுதல் அறம் கொல்லா நெறியும் வாய்மையும் அறம் கோபம் வென்ற சாந்தம் அறம்! தன்னல மில்லாத் தியாகம் அறம் தாய், தந்தையரைப் பேணுதல் அறம் பிறன் மனை நோக்காப் பேராண்மை அறம். பேதம் இல்லா சமுதாயமே அறம்! அறத்தின் பயனே அட்சயப் பாத்திரம் அறத்தின் சிறப்பே அன்ன…

ஊக்கமது கைவிடேல்! – பா.உலோகநாதன்

ஊக்கமது கைவிடேல்! எல்லைகள் வேண்டா! உன்மன வெளியில் நிற்பாய் நடப்பாய் சிறகுகள் விரிப்பாய்! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! எதுவரை முடியும் அதுவரை ஓடு அதையும் கடந்து சில அடி தாண்டு! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! இலக்குகள் நிருணயி பாதைகள் வடிவமை தடைகளைத் தகர்த்தெறி பயணங்கள் தொடங்கு! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! காரிருள் என்பது கருக்கல் வரைக்கும் விடியலில் ஒளியின் கதவுகள் திறக்கும் ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! காலங்கள் மாறும் வருடங்கள் ஓடும் – உன் கனவுகள் ஒருநாள் நிச்சயம் நிறைவேறும்! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே!…