தண்டமிழ் வேலித் தமிழகம் – புலவர் குழந்தை

தண்டமிழ் வேலித் தமிழகம் – புலவர் குழந்தை   தெண்டிரை மூன்று திசையினுங் காப்ப வண்டமிழ் விந்த மலைவடக் கார்ப்பப் பண்டுந முன்னர் பயன்பட வாழ்ந்த தண்டமிழ் வேலித் தமிழகங் காண்பாம்.   நனிமிகு பண்டுநற் நற்றமிழ்ச் செல்வி பனிமலை காறும் பகைசிறி தின்றி இனிதுயர் வெண்குடை நீழ லிருந்து தனியர சோச்சித் தமிழகங் காத்தாள்.   சீரியல் வாய்ந்த செழுந்தமி ழன்னை மாரி வழங்கும் வடதலை நாட்டை ஆரிய ரென்னு மயலவர் தங்கள் பேரறி யாத பெருமையி னாண்டாள்.     விந்த வடக்கு…

இருந்தபோது நாடு தொழுதது! இறந்த பின்பு நாடு அழுதது! – கவிஞர் வாலி

இருந்தபோது நாடு தொழுதது! இறந்த பின்பு நாடு அழுதது!   பொன்மனச்செம்மலே! என் பொழுத்து புலரக் கூவிய சேவலே! உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில்தான் உலகுக்கு என் முகவரி தெரிய வந்தது!   என் கவிதா விலாசம் உன்னால்தான் விலாசமுள்ள கவிதையாயிற்று!   இந்த நாட்டுக்குச் சோறிடு முன்னரே என் பாட்டுக்குச் சோறிட்டவன் நீ!   என்னை வறுமைக் கடல்மீட்டு வாழ்க்கைக் கரை சேர்த்த படகோட்டியே! கருக்கிருட்டில் என் கண்களில் தென்பட்ட கலங்கரை விளக்கமே!   நான் பாடிய பாடல்களை நீ பாடிய…

தன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார் – சுப.வீ.

தன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார்!   விளக்கை ஏற்றி வெளிச்சம் தந்தவர்கள் உண்டு நீயோ உன்னையே எரித்து வெளிச்சம் தந்தாய்! எங்களுக்கு நீதான் எழுதவும் படிக்கவும் அடித்தளமிட்டாய்! நாங்களோ இன்னும் நன்றி சொல்லவே கற்றுக்கொள்ளவில்லை! எங்களுக்காகவே நீ வாழ்ந்தாய்! மன்னித்துவிடு தந்தையே! நாங்களும் எங்களுக்காவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!   – சுப.வீ. சுப.வீ.வலைப்பூ http://subavee-blog.blogspot.in/2012/04/blog-post_983.html

கிறித்து பிறப்பு வாழ்த்து ​- கெருசோம் செல்லையா

கிறித்து பிறப்பு வாழ்த்து! ​   இல்லா நிலையில் யாவும் படைத்த இணையற்றவரே இறைவன். எல்லோருக்கும் மீட்பின் பொருளாய் இப்புவி வந்தவர் மைந்தன். வல்லோன் விரிக்கும் வலையை அறுத்து, வாழ வேண்டுமே மனிதன். நல்லாவியரால் நடத்தப்பட்டு, நன்மை செய்வான் புனிதன்.   கிறித்து பிறப்பின் மகிழ்ச்சி,  புத்தாண்டு முழுதும் நிலைக்க வேண்டும்!   -செல்லையா,  இறையன்பு இல்லம், செயலகக் குடியிருப்பு, இரட்டை ஏரி, சென்னை. www.iraiyanbuillam.com  

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 39(2.09). சிற்றினம் விலக்கல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 38(2.08) தொடர்ச்சி]    மெய்யறம் இல்வாழ்வியல் 39. சிற்றினம் விலக்கல் சிற்றினங் குணத்திற் குற்றமிகு மாக்கள்; சிற்றினம் என்பவர் தனது குணநலன்களில் குறைகளை உடையவர்; பெருமிதந் தன்னைப் பேணா மாக்கள்; தன்னுடைய மதிப்பைப் பேணிப் பாதுகாக்க இயலாதவர்கள்; அற்பத் தன்மை யளாவிய மாக்கள்; சிறுமைக் குணங்களை விரும்புபவர்கள்; பொறியின் பங்களிற் செறிவுறு மாக்கள்; ஐம்புலன்களினால் கிடைக்கும் இன்பங்களில் தம்மை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள்; சுயநயங் கருதும் பயனிலா மாக்கள். தம் நலத்தையே எப்பொழுதும் எண்ணும் சுயநலம் உடையவர்கள் ஆகியோர் ஆவர். சிற்றினம்…

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6

(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் :3 / 6 தொடர்ச்சி)     மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6 அவர்கருத் தறிந்தே அன்பாய் ஒழுகும்                                               110 தம்பியும் மக்களும் தமரும் பெற்றவர். கோவிந்த சாமியாம் கூறும் தம்பி கொடுப்பதும் கொள்வதும் குறைமிக வின்றி அறநெறி போற்றிடும் அரிய வணிகர். புன்னகை தவழும் நன்னல முகத்தர்.                                                  115 அடக்கமே வடிவம்; அன்பே பண்பு அண்ணனுக் கேற்ற அருள்உளத் தம்பியர் உடலால் இருவர் உளத்தால் ஒருவர் பகுக்க முயல்வோர் பயன்பெறத்…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை: திருக்குறள் ஆராய்ச்சி 5/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6 பொருளியலிலும் நாட்டியல் ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்                                (திருக்குறள் 463)   இக்குறளுக்குப் பொருள்சார் விளக்கம் மட்டும் தராமல், ‘‘பிறர் நாட்டை அடிமைப்படுத்தச்  சென்று தம் நாட்டை இழந்த செயல்கள் வரலாறுகளில் நிறைய உள’’ [18] எனப் புதுமையாக நாட்டாசை அடிப்படையிலும் விளக்குகிறார். பேராசிரியரின் திருவள்ளுவர் கால ஆராய்ச்சி   பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பிற அறிஞர்கள்…

‘ஐக்கூவோடு கைகுலுக்குவோம்!’ – சென்னை

  பனுவல் புத்தக நிலையம், தமிழ் ஐக்கூ கவிதை இயக்கம் இணைந்து நடத்தும்       ‘ஐக்கூவோடு கைகுலுக்குவோம்!’   தலைமை: கவிஞர் ஈரோடு தமிழன்பன்   மு.முருகேசு எழுதிய   ஐக்கூ நூல்கள் வெளியீட்டு விழா: ’தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ ஐக்கூ கவிதை நூலை வெளியிட்டு ‘நானும் ஐக்கூவும்’ பட்டறிவுப் பகிர்வு: இயக்குநர் என்.லிங்குசாமி                                                      …

பாரதியைப் போற்றுநாடே! – மாம்பலம் ஆ.சந்திரசேகர்

பாரதியைப் போற்றுநாடே!  பெண்விடுதலைக்குக் கண்ணென கவிதையாத்த முன்பெரியார் பாரதியைப் போற்றுநாடே! மண்விடுதலைக்கு மனிதர்க்கு சொரணைதந்த மகாகவியின் பாடல்களைப் பாடுநாடே! மனவிடுதலைக்கு சாதிமறுத்துக் களமாடிய மாமனிதரின் கட்டுரைகளைப் பரப்புநாடே! தண்டமிழ் இனிமைஇயம்பிப் புதுமைசெய்த மக்கள்கவிஞனைப் பின்பற்று தமிழ்நாடே!   – மாம்பலம் ஆ.சந்திரசேகர், எழுத்தாளர்    

இன்னும் உறங்கிடும் ஞாபகமோ! – கவிஞர் அம்பாளடியாள்

  முல்லைப்பூ வாடுமுன் வாரா யோ! செந்தமிழ் போற்றிடும்  சேவக னே -உன்னைச் சேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே அந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள் அன்பைப் பொழிந்திடும் தேவதை யோ! கட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு கைவிர லாலெனை வென்றவ னே கொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா கோடிச்சு கம்தரும்  மோகன மே! என்னை ஈர்த்தவன்  நெஞ்சினி லே  – பொங்கும் இன்தமிழ்க்  கற்பனைக் காவிய மே தன்னில் சரிபாதி என்றவ னே -உள்ளம் தஞ்சமென் றுன்னடி தேடுதிங் கே! தென்னை…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 38(2.08) : பரத்தனை விலக்கல்

[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 37(2.07) தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 38. பரத்தனை விலக்கல்     தன்றுணை யலாளைத் தழுவுவோன் பரத்தன். தன்னுடைய மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன் இன்பம் அநுபவிப்பவன் பரத்தன். பரத்தை யினுமிகக் கொடியவன் பரத்தன் அவன் பரத்தையை விடத் தீயவன். பொதுமக ளாதலம் முழுமக னாலே. அந்த அறிவிலியால் தான் ஒரு பெண் பரத்தை ஆகிறாள். 374.நன்மகன் கெடுதலப் புன்மக னாலே. அந்தத் தீயவனால் நல்லவனும் கெடுவான். 375.மறனெலா நிகழ்வதம் மாபாவி யாலே. அத்தீயவனால் தான் அறத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறுகின்றன….

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் : 3/6

(மாணவர் ஆற்றுப்படை 2/6 – பேராசிரியர் சி.இலக்குவனார், தொடர்ச்சி)   மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 3/6 ஆயினும்                                                                                          70 பாரியும் ஓரியும் வாழ்ந்த பாரில் உற்றுழி உதவும் நற்றவ வள்ளலார் அற்றோர் அல்லர்; ஆதலின் செல்வாய் அணி புதுக் கோட்டை; அண்ணன் வீடு எங்குள தெனநீ எவரை வினவினும்                                  75 அன்புடன்…