இனிதே இலக்கியம் – 8 எண்ணும் வகையிலான கடவுள் – கம்பர்

8 எண்ணுவோர்க்கு எண்ணும் வகையிலான கடவுள் – கம்பர் ஒன்றே யென்னின் ஒன்றேயாம் பலவென் றுரைக்கிற் பலவேயாம் அன்றே யென்னின் அன்றேயாம் ஆமே யென்னின் ஆமேயாம் இன்றே யென்னின் இன்றேயாம் உளதென் றுரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடிவாழ்க்கை நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா   கம்பரின் இறை வணக்கப் பாடல்களுள் இதுவும் ஒன்று.   “கடவுள் ஒருவரே என நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கடவுள் ஒருவன்தான்; வெவ்வேறு கடவுள்களாக நம்புவோருக்குப் பலவாகத் தோற்றமளிக்கிறார். அஃதாவது கடவுள் எல்லா உயிர்களையும் இயக்கும் ஒரு தனிப் பெரும் ஆற்றல்…

கருவியிசை – இளங்கோவடிகள்

கருவியிசை குழல்வழி நின்ற தியாழே யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே முழவொடு கூடிநின் றிசைத்தது ஆமந்திரிகை -இளங்கோவடிகள்: சிலப்பதிகாரம்: 3: 139-141

இசை என்றால் என்ன? – இளங்கோவடிகள்

இசை என்றால் என்ன? யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின் இசைந்த பாடல் இசையாகும் -இளங்கோவடிகள்: சிலப்பதிகாரம்: 3: 26-29  

யாவினுள்ளும் நீயே – கடுவன் இளவெயினனார்

தீயினுள் தெறல்நீ; பூவினுள் நாற்றம் நீ; கல்லினுள் மணியும்நீ; சொல்லினுள் வாய்மைநீ; அறத்தினுள் அன்புநீ; மறத்தினுள் மைந்துநீ. கடுவன் இளவெயினனார், பரிபாடல்: 3.63-65

இனிதே இலக்கியம் – 7 அன்பே கடவுள்! : இராமலிங்க அடிகள்

7  அன்பே கடவுள்! அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே அன்பெனும் குடில் புகும் அரசே அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே அன்புரு வாம் தேவ தேவே!   “அன்பு என்னும் கைப்பிடிக்குள் அடங்கும் பெருமலையே! பெருமனையில் தங்கியிருந்தாலும் அன்பெனும் சிறு குடிலுக்குள் புகும் அரசே! அன்பாகிய வலைக்குள் அகப்படும் பெரும் பரம்பொருளே! அன்பெனும் கைக்குள் அடங்கும் அமுதே! அன்பாகிய சிறு குடத்திற்குள் அடங்கும்…

இனிதே இலக்கியம் – 6 விண்ணப்பத்தைக் கேட்பாயாக! : தாயுமானவர்

6 விண்ணப்பத்தைக் கேட்பாயாக! அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே      ஆரமிர்தே என்கண்ணே அரிய வான பொருளனைத்துந் தரும்பொருளே கருணை நீங்காப்      பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக்      காலமுந்தே சமும்வகுத்துக் கருவி யாதி இருவினையுங் கூட்டிஉயிர்த் திரளை யாட்டும்      விழுப்பொருளே யான்சொலும் விண் ணப்பங் கேளே!   பாரதிக்கு முன்னோடியாக எளிய நடையில் பாடல் எழுதிய தாயுமானவரின் இறைச்சுவை உணர்த்தும் பாடல் இது.   தாயுமானவர் பாடல் தொகுப்பில் ஆகாரபுவனம் – சிதம்பர இரகசியம்…

பாவம் செய்யாதே! – கடுவெளிச் சித்தர்

பாவம் செய்யாதே! பாபஞ்செய்யாதிரு மனமே நாளைக் கோபச்செய்தேயமன் கொண்டோடிப்போவான் பாபஞ்செய்யாதிரு மனமே. – கடுவெளிச் சித்தர்

எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ! – நந்திக்கலம்பகம்

எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ! அனைத்துலகில் பிறப்பும் நீ; அனைத்துலகில் இறப்பும் நீ; அனைத்துலகில் துன்பமும் நீ; அனைத்துலகில் இன்பமும் நீ; வானோர்க்குத் தந்தையும் நீ; வந்தோர்க்குத் தந்தையும் நீ; ஏனோர்க்குத் தலைவனும் நீ; எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ! – நந்திக்கலம்பகம்

வள்ளலடி வணங்குவோம்! – பாம்பாட்டிச் சித்தர்

வள்ளலடி வணங்குவோம்! பொன்னி லொளிபோல வெங்கும் பூரணமதாய்ப் பூவின் மணம்போலத் தங்கும் பொற்புடையதாய் மன்னும் பலவுயிர்களில் மன்னி பொருந்தும் வள்ளலடி வணங்கி நின் றாடு பாம்பே. (3) நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம் நடுவன் வரும்பொழுது நாடிவருமோ கூடுபோனபின் பலவற்றாற் கொள்பய னென்னோ கூத்தன் பதங்குறித்துநின் றாடாய்பாம்பே. (40) மாடகூட மாளிகைகள் வண்ணமண்டபம் மதிழ் சூழ்ந்த வரண்மனை மற்றும் உள்ளவை கூடவரா தென்றவந்தக் கொள்கையறிந்தோர் குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே. (43)  – பாம்பாட்டிச் சித்தர்

முத்தமிழ் கற்றால் போதுமே! – குதம்பைச்சித்தர்

முத்தமிழ் கற்றால் போதுமே முத்தமிழ்கற்று முயங்குமெய்ஞ்ஞானிக்குச் சத்தங்களேதுக்கடி– குதம்பாய் சத்தங்களேதுக்கடி அல்லவைநீக்கி யறிவோடிருப்பார்க்குப் பத்தியமேதுக்கடி– குதம்பாய் பத்தியமேதுக்கடி தாவாரமில்லை தனக்கொரு வீடில்லை தேவாரமேதுக்கடி குதம்பாய் தேவாரமேதுக்கடி. – குதம்பைச்சித்தர்