தேனினும் இனிய மொழி – சான் பீ. பெனடிக்கு

தென்பொதிகை பிறந்த மொழி தென்பாண்டி வளர்ந்த மொழி தேனினும் இனிய மொழி தெவிட்டாத செந்தமிழ் மொழி அமிழ்தினும் இனிய மொழி ஆண்டாண்டுகளாய் வாழும் மொழி அன்னை மடியை விஞ்சும் மொழி அணைத்து என்னை மகிழும் மொழி -சான் பீ. பெனடிக்கு http://www.vaarppu.com/padam_varikal.php?id=12

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 21: ம. இராமச்சந்திரன்

  (இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 20 தொடர்ச்சி)  21    குற்றமற்ற அறநெறியாம் மக்களாட்சி நெறி முறையைப் பின்பற்றிக் மிகப்பெரிய இயக்கமாகத் திராவிட முனனேற்ற கழகத்தை அமைத்து மக்களைக் கவர்ந்தார். மக்களின் மிகப்பெரிய ஆதரவுடன் 6.3.1967 ஆம் நாளன்று தமிழகத்தின் முதலமைச்சராய் அரியணையில் அமர்ந்தார். பேச்சுத் திறன் கொண்டு மக்கள் உள்ளம் கவர்ந்து தலைவரானார். இத் தரணியில் இவர் போல் வேறு எவரேனும் உண்டோ? சொல்வீர்.  இதனை, சொல்லுந்திறன் கொண்டே தோமில் நெறியில் மக்களைக் கவர்ந்த மாபே ரியக்கம் அமைத்து முதல்வராய்…

மனத்தில் நின்ற மாமணி கா.அப்துல் கபூர் – அப்துல் கையூம்

மனத்தில் நின்ற மாமணி கா.அப்துல் கபூர்  [ 1955/1924 – 2033/2002]   இந்த மண்ணை விட்டுப் போகையில் சடலமாகப் போகின்றவர் பலர்.  வரலாற்றாய்ப்  போகின்றவர் வெகு சிலர். வரலாறு சமைப்பது கருவாடு சமைப்பது போலன்று.  வாழ்வாங்கு வாழ்ந்த பின்னும் வாடாத மலராய் நம் உள்ளத்தில் மணம் வீச வேண்டும்.  ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’. பிறந்த பயனை பிறரறியச் செய்ய வேண்டும். அதற்கு எடுத்துக்காடு நம் பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர். தமிழ்…

இசை, தமிழோடு இயைந்து கிடப்பதை இசைவாணர் மறந்தனர் – அண்ணா

இசை, தமிழோடு இணைபிரியாமல் இயைந்து கிடப்பதை இசைவாணர் மறந்தனர்   இப்பொழுதுதான் தமிழ்க் கலையுணர்ச்சி, தமிழரிடம் புகுந்திருக்கிறது. பல வழிகளில் தமிழ்க் கலைகளை வளர்க்க முயன்று வருகின்றனர். இம்முயற்சியில் இசைக் கலை வளர்ச்சியும் ஒன்று. இசைக் கலை தமிழுக்குப் புதிதன்று. தமிழோடு பிறந்தது; தமிழோடு வளர்ந்து, இன்றும் தமிழோடு இணைபிரியாமல் இயைந்து கிடக்கின்றது. இவ்வுண்மையை இசைவாணர் மறந்தனர். ஆதலால் இடைக்காலத்தில் மழுங்கி விட்டது. பேரறிஞர் அண்ணா: தமிழரின் மறுமலர்ச்சி: பக்கம்.18-19

தாய் மொழியிலேயே எல்லாம்! – பேரறிஞர் அண்ணா

தாய் மொழியிலேயே எல்லாம்!   தமிழ்நாட்டார் மட்டுமே வேற்றுமொழியில் பாடுவதைக் கேட்கின்றனர். தமிழ் நாட்டைப் போல் வேறு எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மொழியல்லாத வேறு மொழியில் சங்கீதம் பாடுவதைக் கேட்க முடியாது. ஒவ்வொரு நாட்டினரும் தங்கள் தங்கள் தாய் மொழியிலேயே எல்லாக் கலைகளையும் வளர்ச்சி பெற்று வருகின்றனர்; இல்லாத கலைகளையும் புதிதாக ஆக்கி வருகின்றனர். தமிழரைப் போலத் தாய்மொழிக் கலை உணர்ச்சியற்றவர்களை எந்த நாட்டிலும் காணமுடியாது. பேரறிஞர் அண்ணா : தமிழரின் மறுமலர்ச்சி: பக்கம்.18

புண்ணுக்குப் புனுகு பூசும் வேலை! – பழ.நெடுமாறன்

ஏழை  எளியோர்க்கு எட்டாக்கனியாகும் உயர் கல்வி!  இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளையும் தங்கள் பல்கலைக்கழகக் கிளைகளையும் தொடங்குவதற்கான ஒப்புதலை வழங்கும் முன்னேற்பாடுகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த காங்கிரசுக் கூட்டணி ஆட்சியின்பொழுது இதே முயற்சியில் ஈடுபட்டபொழுது மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பா.ச.க கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், இப்பொழுது பா.ச.க அரசு அதே முயற்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.   உலக வணிக அமைப்பின் முடிவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதன் விளைவே இதுவாகும். இந்திய நாடு முழுவதிலும் இயங்கி வரும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிறவகைத்…

ஒடுக்கப்பட்டவர் விடுதலைக்காகப் பாடிய பறவை கரு.அழ.குணசேகரன் – சுகிர்தராணி

வல்லிசையின் எளிய பறவை   கடந்த தை 1 / 15.01.2016 வெள்ளியன்று புதுச்சேரியில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நான் பேசியபொழுது ‘எங்காண்டே என்னால காரியம் ஆகணும்னா சார் என்பார்’ என்னும் பாடலின் ஒரு பகுதியைக் குறிப்பிட்டபொழுது என் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அன்று இரவு நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது பின்னிரவு வரை அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். மறுநாள் பாண்டிச்சேரியிலிருந்து மாலதி மைத்திரியுடன் மகிழுந்தில் பயணிக்கும்பொழுது மீண்டும் அவரைப்பற்றிய பேச்சு. அன்று இரவு நண்பர்களுடன் உணவருந்தியபடி பின்னிரவு வரை நீண்ட…

வானொலிதான் உயர்ந்தே நிற்கும் ! – ப.கண்ணன்சேகர்

  வானொலிதான் உயர்ந்தே நிற்கும் ! காற்றில் மிதக்கும்  ஒலியாக கருத்தாய் மலர்ந்து பெட்டியிலே களிக்க விருந்தென வந்திடும்! வந்திடும் நிகழ்ச்சி சுவையாக வையம் முழுக்க உலவிடவே வண்ண சித்திரம் ஒலித்திடும் ! ஒலித்திடும் வானொலி செய்தியினில் உலக நிலவரம் உள்ளடக்கி ஊரும் பேரும் தந்திடும்! தந்திடும் தகவல் நலமென்றே தவறாது மக்கள் கேட்டிடும் தன்னிக ரில்லா ஊடகம்! ஊடக வரிசையில் வானொலிதான் உயர்ந்தே நிற்கும் எப்போதும் உயர்வான் கற்று பாமரன்ய்ம்! பாமரனும் பயிலும் பள்ளியென பாதைப் போட்ட வானொலியே படிக்க சொல்லும் வீடுதோறும்!…

சிலப்பதிகாரத்தில் இசைத்தமிழ் – இரா.திருமுருகன்

சிலப்பதிகாரத்தில் இசைத்தமிழ்   சங்கக் காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம் இசைத்தமிழுக்கு நிரம்ப இடமளித்துள்ளது. அஃது ஒரு முத்தமிழ்க் காப்பியம். அதில் உள்ள 30 காதைகளில் 10 காதைகள் இசைப்பாடல்களாகவும் இசைபற்றிக் கூறுவனவாகவும் உள்ளன. மங்கல வாழ்த்துப் பாடல், கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ்வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை ஆகியன இசைப்பாக்களாகவும், அரங்கேற்றுக் காதை, வேனிற்காதை, புறஞ்சேரியிறுத்த காதை ஆகியன இசைபற்றிக் கூறுவனவாகவும் உள்ளன. வரி என்பது இசைப்பாடல்களின் பெயர், முகமுடைவரி, முகமில்வரி, சார்த்துவரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி, கானல்வரி, ஆற்றுவரி, சாயல்வரி, உள்வரி,…

வையகத் தமிழ் வாழ்த்து – சி. செயபாரதன்

வையகத் தமிழ் வாழ்த்து   பாரதக் கண்டச் சீரிளம் தமிழே ! ஓரினம் நாமெலாம் ஒரு தாய் மக்கள் வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே ! தாரணி மீதில் உன் வேர்களை விதைத்தாய் வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின ஈழத் தீவில் இணைமொழி நீயே சிங்கப் பூரினில் துணைமொழி நீயே மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் காசினி மீதில் தமிழர் பரப்பிய காவியத் தமிழே ! வாழ்த்துவம் உனையே ! வையகத் தமிழே ! வணங்குவம் உனையே ! ஆத்திசூடி ஓளவையார், ஆண்டாள்,…

தமிழ்நூல் செய்திகள் தமிழர்க்கே உரியன – அ.நா.பெருமாள்!

வடசொல் கலப்பு இருப்பினும் தமிழ்நூல் செய்திகள் தமிழர்க்கே உரியன!   பல கலைநூல்கள் வடமொழியிலோ மிகுதியான வடசொல் கலப்புடனோ எழுதப்பட்டுள்ளதைப் பாரத நாட்டில் பல இடங்களில் வழக்கமாக இருப்பதைக் காணலாம். தமிழ் மருத்துவ நூல்கள் இதற்கு நல்ல எடுத்துக் காட்டுகளாகும். இவற்றில் கூறப்பட்டுள்ளவை தமிழரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் வடசொல் கலப்பாகவே அவை இருக்கும். இவ்வாறு பத தமிழிசை நூல்கள் வடமொழிக் குவியலாகவே வெளிவந்துள்ளன. இருப்பினும் அவற்றில் தமிழுணர்வு சிறப்பாக இணைந்து விளங்குவதைக் காணலாம். இவற்றை நன்கு உணர்ந்து காணின் இந்த…

திருமுறையின் காலம் தமிழிசையின் எழுச்சிக் காலம் – புலவர் செந்துறைமுத்து

திருமுறையின் காலம் தமிழிசையின் எழுச்சிக் காலம்   சங்கக்காலத்தைத் தமிழிசையின் வளர்ச்சிக் காலம் எனவும் இடைக்காலத்தை தமிழிசையின் எழுச்சிக் காலம் எனவும் கூறுவது பொருந்தும். ஏனென்றால், இடைக்காலத்தில் தமிழிசை மங்கி ஒடுங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. வடபுலத்திலிருந்து தமிழகம் போந்த சமய, பௌத்த சமயவாதிகளாலும் சமணம் சார்ந்த மன்னர்களாலும் தமிழிசை ஒடுக்கப்பட்டது. “இசையும் கூத்தும் காமம் விளைக்கும்” எனக் கூறித் தமிழிசையை மங்கச் செய்தனர்கள். அவ்வாறே தமிழர் சமயமாகிய சைவ சமயத்திற்கும் கேடு செய்தனர். சமணர்கள் சைவ சமயத்துக்கும் தமிழிசைக்கு எதிரிகளாக நின்றனர். அதன் விளைவாகத்…