நாலடி நல்கும் நன்னெறி 14: நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 13: நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 14 : நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர் நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம் எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் – பரப்பக் கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக் கடுவினைய ராகியார்ச் சார்ந்து. (நாலடியார் பாடல் எண் 124) பதவுரை: அழல் – நெருப்பு, தீக்கொழுந்து, வெப்பம்; நெய்போல்வ தூஉம் – நெய்போன்ற தன்மை கொண்ட பொருளும்; உயர்வு சிறப்பும்மை நெய்யின் தன்மையையும், புண்களை யாற்றும்…
வெருளி நோய்கள் 416-420 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 411-415 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 416-420 உண்ணுகை குறித்த வரம்பற்ற பேரச்சம் உண்கை வெருளி.உண்ணும் பொழுது அருகில் அல்லது சுற்றுப்புறத்தில் யாரேனும் காற்றை வாய்வழியாகவோ பின்வழியாகவோ வெளியேற்றும் பொழுது உண்பதை வெறுத்துப் பேரச்சம் கொள்வதும் இவ்வகைதான். உண்ணும் பொழுது வாய்வழியாக மூச்சு விடுவதும் உண்கை வெருளிதான்.00 உண்டியகம்(cafeteria) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் உண்டியக வெருளி.கஃபேட்டிரியா என்பது நமக்கு நாமே பரிமாறிக்கொள்ளும் தற்பரிமாற்றச் சிற்றுண்டியகம். சில இடங்களில் ஒரு பகுதித் தற்பரிமாற்றப் பகுதியாகவும் மறு பகுதி பரிமாறுபவர்கள் உள்ள உண்டியகமாகவும் இருக்கலாம். இதனாலும்…
வெருளி நோய்கள் 411-415 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 406-410 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 411-415 411. உணர்ச்சி வெருளி – Animotophobia உணர்ச்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உணர்ச்சி வெருளி.மகிழ்ச்சி சார்ந்த அல்லது துயர உணர்வுகள் எதுவாயினும் அதற்கு ஆட்பட்டுப் பேரச்சம் கொள்வர்.உணர்ச்சிவய வெருளி(Emotaophobia) உள்ளவர்களுக்கு உணர்ச்சி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 உணர்ச்சிவயம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உணர்ச்சிவய வெருளி.உணர்ச்சி வெருளி(Animotophobia) உள்ளவர்களுக்கு உணர்ச்சிவய வெருளி வரும் வாய்ப்பு உள்ளது. 00 உணவு விடுதிபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் உணவு விடுதி வெருளி.உணவகங்களில் தரப்படும் உணவு நலஆதாரமற்று(சுகாதாரமற்று) இருக்கும்,…
சட்டச் சொற்கள் விளக்கம் 996-1000 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 991-995 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 996-1000 996. Authorise அதிகாரமளி / அதிகாரம் அளி உரிமையளி, இசைவளி, ஏற்பளி செயலைச் செய்வதற்கான அதிகாரத்தை ஒருவருக்கோ நிறுவனத்திற்கோ சட்ட முறைப்படி அளித்தல். காண்க: Authorisation / Authorization 997. Authorised absence / Authorized absence இசைவுடன் வராமை ஏற்புடை வராமை இசைவு பெற்று வராமை ஓப்பளிப்புப்பெற்ற வாராமை என அகராதிகளில் குறிக்கப் பெற்றுள்ளன. பொருள் சரிதான். விடுப்பு ஒப்பளிப்பு என்பதுபோல்தான் இதுவும். என்றாலும் ஒப்பளிப்பு என்பது பொதுவாக நிதி…
வெருளி நோய்கள் 406-410 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 401-405 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 406-410 உடுப்பு மாட்டி(coat hanger) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உடுப்பு மாட்டி வெருளி.உடுப்பு மாட்டி குறித்துத் தேவையற்ற பகுத்தறிவிற்குப் பொருந்தாத பேரச்சமே இது.Kremastra என்னும் சொல் உடை மாட்டியைக்/ உடுப்பு மாட்டியைக் குறிக்கிறது.00 உடுமீன்(starfish) மீதான அளவுகடந்த பேரச்சம் உடுமீன் வெருளி விலங்கு வெருளி வகையைச் சேர்ந்ததே இதுவும். விலங்கு வெருளியின் உட்பிரிவே இதுவும். நட்சத்திர மீன் என்று சொல்வதைவிட உடுமீன் என்பது சுருக்கமாக உள்ளது. எனவே, அவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது.இரண்டும் ஒன்றுதான்.00 உடைப் பேழை குறித்த…
செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010): இலக்குவனார் திருவள்ளுவன்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பொழுது (சூன் 2010) செம்மொழிச் செயலாக்கம் குறித்துத் தெரிவித்த கருத்துகள் இப்போதும் பொருந்துபவையே. எனவே, அவற்றை இப்போது வெளியிடுகிறேன். செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010) ? ஐயா, வணக்கம். உங்களிடம் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்தது தொடர்பாகச் சில வினாக்களைத் தொடுத்து விடை கண்டறிந்து வாசகர்களுக்கு அளிக்கலாம் எனக் கருதுகிறோம். # வணக்கம். உங்கள் வாசகர்களுடன் செவ்வி வழித் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு நல்கியமைக்கு நன்றி. பலரும் செம்மொழித் தகுதி தமிழுக்கு இப்பொழுதுதான் கிடைத்துள்ளது போல் தவறாக…
வெருளி நோய்கள் 401-405 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 396-400 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 401-405 உடன் பிறந்தவர்கள் மகன், மகள் இருவர் மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தார் மக்கள் வெருளி.உடன்பிறந்தார் மகள் வெருளியில் குறிப்பிட்டவாறு, சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, வாய்ச்சண்டை ஏற்படும் சூழல்களில் உடன்பிறந்தார் மக்கள் மீது பேரச்சம் வருவது இயற்கை. மகன், மகள் என்பவற்றின் பன்மையும் இருவரையும் சேர்த்துக் குறிப்பது மக்கள் என்னும் சொல்.Nibli என்றால் உடன் பிறந்தார் மகன் அல்லது மகள் அல்லது இருவரையும் குறிக்கும்00 உடன் பிறந்தவர் மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தார் வெருளி.உறவினர்கள் பகையாக…
வெருளி நோய்கள் 396-400 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 391-395 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 396-400 396. உடற்காய வெருளி – Traumaphobia / Traumatophobia உடற்காயம் குறித்த வரம்பற்ற பேரச்சம் உடற்காய வெருளி. பெண்களுக்கும் குறைந்த கல்வி உடையவர்களுக்கும் உடற்காய வெருளி மிகுதியாக இருப்பதாகக் கூறுகின்றனர். பொதுவாகப்பெண்களுக்கும் கல்வியறிவு குறைந்தவர்களுக்கும் இவ்வெருளி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். trauma என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் காயம் எனப் பொருள். 00 397. உடற்பயிற்சி வெருளி -Exercitophobia / Drapanophobia உடற்பயிற்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உடற்பயிற்சி வெருளி. உடற்பயிற்சியின் பொழுது இறப்பு நேர்ந்த…
பொருளைத் தேடு. வாழ்வின் பொருளை இழக்காதே! – சங்கப்புலவர்கள் பொன்னுரை 21 : இலக்குவனார் திருவள்ளுவன்
(காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் – சங்கப் புலவர்கள் பொன்னுரை – 20 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 21 வாழ்க்கைக்கான பொருளைத் தேடு. அதே நேரம் வாழ்க்கையின் பொருளை இழக்காதே! புன்கண் கொண்டு இனையவும் பொருள் வயின் அகறல் அன்பு அன்று –பாலை பாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகை-பாலைக்கலி 1 “புன்கண் கொண்டு இனையவும்” என்பதன் பொருள் “துன்பமான கண் அல்லது துயரத்துடன் கூடிய கண்களுடன் வருந்துதல் “ அகறல் = அகலுதல் = பிரிதல் அத்தகைய சூழலில் பொருள் திரட்ட அன்புத்…
வெருளி நோய்கள் 391-395 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 386-390 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 391-395 ஈரிடவாழ்வி பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் [ஈர்+இட(ம்)+ வாழ்வி+ வெருளி)பொன்னால் வளைத்து இரண்டு சுற்றாக அமைக்கப்பட்ட காற்சரி என்னும் கால்நகையைக் குறிப்பிடுகையில் கலித்தொகை(85.1) ஈரமை சுற்று என்கின்றது. கீழும் மேலுமாக அமைந்த நீச்சல் உடை ஈரணி எனப்படுகின்றது. ஈரறிவு (பதிற்றுப்பத்து : 74.18), ஈருயிர்(அகநானூறு : 72.12), ஈரெழுவேளிர்(அகநானூறு :135.12), ஈரைம்பதின்மர் (புறநானூறு : 2.15; பதிற்றுப்பத்து : 14.5; பெரும்பாணாற்றுப்படை 415) என இரண்டின் அடுக்கு சுட்டப்படுவதைப் பார்க்கிறோம். எனவே,…
தொல்காப்பியமும் பாணினியமும் – 3 : நூற்சிறப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் நூற்சிறப்பு தொல்காப்பியச் சிறப்பு தொல்காப்பியம், பழந்தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய கருவூலமாகத் திகழ்வது என்றும் தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் என்றும் பேரா.முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியத்தின் சிறப்பினைப் பாராட்டுகிறார். “பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது. தொல்காப்பியரும் முன்னோர் வழித் தம் நூலான தொல்காப்பியத்தில் பொருள் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். இதனைப் பேராசிரியர் க. அன்பழகனார் (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம். 12-13) பின்வருமாறு கூறுகிறார்:- “மேலும்,…
அ. பழமையும் புதுமையும் – திருத்துறைக் கிழார்
(எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? – திருத்துறைக் கிழார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் அ. பழமையும் புதுமையும் பழமை என்பது முதன் மாந்தன் தோன்றி வாழ்ந்து வந்த காட்டுமிராண்டிக் காலம் எனக் கருதிவிடல் வேண்டா. பண்பட்ட நாகரிகமெய்திய நல்வாழ்வு வாழ்ந்த நற்காலத்தையே. அக்காலங் கடந்து இன்றுகாறும் நடைபெறுகின்ற காலத்தையே புதுமையென்று குறிப்பிடுகின்றோம். பழமையில்தமிழர் தனிவாழ்வு வாழ்ந்தனர். உயர்ந்த நாகரிகத்தையும், பண்பாட்டையும் உலகுக்கு ஊட்டினர். தந்நலம் பெரிதெனக் கருதாது நாட்டுக்கும், மொழிக்கும் நற்பணி புரிந்தனர். தமிழ்மொழி ஒன்றே தமிழரின் ஆட்சிமொழி, பேச்சுமொழி, அனைத்து மொழியுமாக இருந்தது….
