மொழித்திற முட்டறுத்தல் 1 – பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய( நாட்டா)ர்
கட்டிளங் கன்னியாய்க் காலம் கடந்து நின்றாய் சொட்டும் அமிர்தத் துவர்வாயாய் – மட்டில்லா மாட்சி யுடையாயிம் மாநிலத்தின் கட்டிலில் நீ ஆட்சி செய்வ தென்றோ அமர்ந்து. ‘மொழித்திற முட்டறுத்தல்’ என்னும் இத்தொடர், இயற்றமிழ்ச் செய்யுட்களில் முன் பின்னாகக் கிடக்கும் சொற்களைக் கொண்டு கூட்டி முறைப்படுத்தி இலக்கண விதிகாட்டி விளங்க வைத்தல் எனப் பொருள்படும். ஈண்டெழுதப்படும் கட்டுரை இப்பொருள் குறித்ததன்று. மொழித் தோற்றம் பற்றியும் மொழி வகை பற்றியும் மொழி நூலறிஞர் கொண்டுள்ள கருத்துகளில் சிலவற்றின் முட்டறுத்து எம் கருத்து விளக்குதலும், நாகரிக மக்களாற்…
குறள் நெறி – மே.சி.சிதம்பரனார்
குறுமை என்ற பண்பின் பெயர் அப்பண்பினையுடைய பாவிற்குப் பெயராகி, மை விகுதி குன்றி, அள்சாரியை பெற்று, குறு + அள் = குறள் என்றானது. ஒரு தடியில் துண்டித்ததடி குறுந்தடி. ஒரு அரிசியில் துண்டித்த பகுதி குறுநொய் (குறுணை) என்றாங்கு முதற்பாவான ஒரு வெண்பாவின் நான் கடியிற்றுண்டித்த ஒன்றே முக்காலடி, குறள் எனப் பண்பாகு பெயர் பெற்றது. இக்குறட்பாக்களாலாகிய நூலுக்கும் குறள் என்றது கருவியாகு பெயராய் வந்தது. இங்ஙனம் இருமுறை ஆகுபெயர் மடங்கி வரலால் இருமடியாகு பெயரென்றுங் கூறலாம். மேலும் சிறப்புக்குறித்த திரு என்ற…
திருக்குறளில் உருவகம் 4 – பேராசிரியர் வீ.ஒப்பிலி
(பங்குனி 16, தி.ஆ.2045 / 30, மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி)
ஊர்ப்புற மேம்பாட்டில் தகவல் தொடர்பு, தொழில்நுட்ப ஏந்துகளின் தாக்கம்
– கே.சி.சிவபாலன் ஆராய்ச்சி மாணவர் வேளாண் விரிவாக்கத்துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவை – 03 இந்தியாவின் மக்கட்தொகை 121 கோடியில், சிற்றூர்களில் மட்டும் 70 கோடிக்கு அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். நமது நாட்டில் உள்ள ஆறு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் (6,36,000) சிற்றூர்களில் வசிக்கும் உழவர்களே நாட்டின் உணவுத் தேவைக்காகக் கூலங்களை(தானியங்களை) உற்பத்தி செய்கின்றனர். சிற்றூர்களை மேம்படுத்த வகுக்கப்பட்ட சிற்றூர் மேம்பாட்டுத் திட்டங்கள், வேளாண் தொழில்நுட்பங்கள், விடுதலை அடைந்த 65 வருடங்களில் இன்னமும் முழுமையாக…
ஆதிபகவன் யார்?- புலவர் செம்பியன் நிலவழகன்
வெண்பா வாலறிவன் ஆசான் மலர்ந்த மனத்திருப்பான் நூலறிஞன் நுண்மாண் நுழைபுலத்தான் – கோலக் கலையாவும் கற்பித்தான் கற்றோர்தம் நெஞ்சில் நிலைத்தானை என்றும் நினை. (நன்மொழி நானூறு 4) தனக்குவமை இல்லான் தருங்கல்வி ஆசான் மனக்கவலை மாற்றிய மாண்பின் மனத்தான் அறவாழி அந்தணன் ஆன்றோன் அவனை மறவா மனேம மனம். (நன்மொழி நானூறு 5) “அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு” திருவள்ளுவனார் இம்முதன்மைத் திருக்குறளில் இரண்டு கருத்துகளைச் சொல்கின்றார். ஒன்று,…
சங்க இலக்கியக் காட்சிகள் : தாய்மனம் – மு.வ.
சங்க இலக்கியக் காட்சிகள் தாய்மனம் – பேராசிரியர் முனைவர் மு.வரதராசனார் காக்கை உட்கார்ந்தது! அந்தப் பனை மரத்தில் ஒரு பனம்பழம் விழுந்தது, இந்தக்காட்சியைக் கண்டவன் ‘‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது’’ என்றான்; அவன் சொன்னதைக் கேட்டவன், ‘‘அந்தக் காக்கை உட்கார்ந்ததே பனம்பழம் விழுந்ததற்குக் காரணம்’’ என்று தவறாக எண்ணவும் கூடும். இவ்வாறு எதிர்பாராத நிகழ்ச்சிகளைக் காரணகாரியமாக்கிக் தொடர்புபடுத்திக் கூறக்கூடாது என்பதே பெரியோர் கருத்து தருக்க நூலார் ]காகதாலிய நியாயம்’ என்ற பெயரால் இதனைத் தெரிவிப்பர். காக்கை அந்த மரத்தில் எத்தனையோ முறை…
வள்ளுவரும் அரசியலும் 4 – முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,
(பங்குனி 16, தி.ஆ.2045 / 30, மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) முதலிலே அவனுக்கு, அரசுக்கு வேண்டிய அங்கங்களான படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பவை ஆறும். நன்றாக அமைதல் வேண்டும். ஈகை வேண்டும்; அறிவு வேண்டும்; ஊக்கம் வேண்டும்; செயல்களில் விரைவுடைமை வேண்டும்; தூங்காமை ஆகாது; துணிவு வேண்டும்; கல்வி வேண்டும்; அறன் வழி நிற்றல் வேண்டும். அறனல்லவற்றைக் கடியும் வீரம் வேண்டும். காட்சிக்கெளியனாதல் வேண்டும். கடுஞ்சொல் அல்லாதவனாதல் வேண்டும்; இன்சொல் வழங்கி ஈத்தளிக்கும் இயல்பினனாதல் வேண்டும், செங்கோல்…
இனம் … ஈனம் : ‘தின இதழின்’ சரியான கணிப்பு
இட்லரால் யூதர்கள் அநியாயமாக அழிக்கப்பட்ட காலக்கட்டத்தின் அடிப்படையில் அந்த யூத மக்களை வைத்தே மூளை வளர்ச்சி இல்லாத ஒரு யூத இனக் கதாபாத்திரம், ஆட்டம் பாட்டம் கூத்து, மற்றும் போர்க் காலத்திலும் கூட அவர்கள் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள் என்று இன்று கூட யாராவது நகைச்சுவையாக ஒரு படம் எடுக்க முடியுமா? சும்மா விடமாட்டார்கள் யூதர்கள். ஆனால் ஈழத்தமிழர்களை வைத்து அப்படி ஒரு படம் எடுத்து, இதிலிருக்கும் உள்வஞ்சகம் தெரியாத நம்மில் சிலரையே, அதைப் பார்த்துச் சிரிக்கவும் வைக்கும் தந்திரத்தை செய்கிறது இந்தப் படம். …
திருக்குறளில் உருவகம் 3 – ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி
(23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) இவ்வாறு முட்களும், அடிமரத்தை வெட்டி வீழ்த்தும் கோடரியும் துன்பத்தில் உருவாகின்றன. மரத்தை வெட்டுதலும், வீழ்த்துதலும் அழிவின் சின்னமாகின்றன. இவ்வாறே பிணக்கினால் வாடிய காதலி வாடிய கொடியாகிறாள்; அவளது ஊடலை நீக்காது, கூடாது செல்லும் காதலன் அக்கொடியை அறுக்கும் கொடியவனாகிறான். முள் மரம் இளையதாக இருக்கையிலே அழிக்கப்பட வேண்டும்; ஆனால் பழம் பெரும் அடிமரமும், வாடிய கொடியும் காக்கப்பட வேண்டும். பெருங்குடி காப்பவன் முதலில் இல்லாளின் வாட்டத்தை நீக்கிக் காப்பவனாக இருக்க வேண்டுமல்லவா? கயவரை எண்ணிய…
வள்ளுவரும் அரசியலும் 3 – முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,
(23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) அரசு அமைப்பும் இயல்பும்: வள்ளுவர் அரசின் உருவத்தைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை. அதன் உட்பொருளைப் பற்றியே எண்ணலானார். அரச அமைப்பைவிட ஆட்சி நலத்தையே ஆய்கின்றார். ஏனெனில் எந்த உருவத்தில் அரசிருந்தாலும் மக்கள் பொருளாதார வாழ்வு சிறப்பதற்கு, அந்த அரசின்பால் சிற்சில தகுதிகள் இருக்க வேண்டும். அத்தகுதிகள் இருக்குமானால் மக்களுக்கு இறுதியாக வேண்டும் இன்பவாழ்வு வந்தெய்தும் என்பதே அவர் கோட்பாடாக இருந்தது எனக் கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த அரசியல் அமைப்பாயினும் என்ன, ஆட்சி ஆதிக்கம் ஒரு தலைவன்…
குறள் நெறி வாழ்க – கவிஞர் கதி.சுந்தரம்
1. தமிழினமே! எழுந்தார்த்துக் குறளென்னும் கேடயத்தைத் தாங்கி நின்றே இமிழ்கடல்சூழ் உலகுய்ய வழிகாட்டு! கலையூட்டு! எழிலை ஈட்டு! குமிழியெனும் இளமைதனைக் கொழிதமிழின் குறள் நெறிக்கே கொடுத்து வாழ்வாய்! அமிழ்தனைய வளம்பலவும் நாடெய்தும்; ஆல்போலப் பெருகி வாழ்வாய்! 2. தூளாக்கு வஞ்சகத்தைத் தோள்தூக்கு முயற்சிக்கே என்று பாடி. ஆளாக்கும் குறள்நெறியை அவனியெலாம் பரப்பிடுவீர்! முழக்கம் செய்வீர்! தாளாற்றிப் பொருள் சேர்ப்பீர்! தருபுகழைப் பெற்றுவாழ்வீர்! வேற்று நாட்டார் கேளாத பழங்காலம் கிளைவிரித்தே அறமுரைத்த குறளே! வாழ்க!! – குறள்நெறி தை 2, 1995 /15.01.1964
தமிழ் வாழ்க நாளும் – நாமக்கல் கவிஞர்வெ.இராமலிங்கம்(பிள்ளை)
தமிழென்று தருகின்ற தனியந்தப் பெயரில் அமிழ்தென்று வருகின்ற அதுவந்து சேரும். நமதிந்தப் பெயர்கொண்ட மொழியென்ற எண்ணம் தமிழர்க்குப் புகழ்மிக்கத் தருமென்றல் திண்ணம். 1 பயிருக்கு நீர்என்ற பயன்மிக்க வழியே உயிருக்கு வெகுநல்ல உணர்வுள்ள மொழியே. துயருற்ற மனதிற்குத் துணைநின்றே உதவும்; அயர்வற்ற ஞானத்தை அடைவிக்கும் அதுவே. 2 அன்பென்று அதைமிக்க அறிவிக்க நின்று துன்பங்கள் தருகின்ற துயரத்தை வென்றே இன்பத்தின் நிலைசொல்ல இணையற்ற வழியாம்; தென்புள்ள தமிழென்று திகழ்கின்ற மொழியாம். 3 அருளென்ன உலகத்தின் அறிவாள ரெல்லாம் பொருள்கொள்ளும் பொருள்தன்னைப் புரிவிக்கும் சொல்லாம்; இருள்கொண்ட…
