பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 4/5
வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 4/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com www.akaramuthala.in சொல்லாய்வுப்பணி சொல்லாய்வின் மூலமாகத் தமிழின் தொன்மை, தூய்மை, காலம் முதலியவற்றைப் பேராசிரியர் இலக்குவனார் வரையறுக்கிறார். தமிழின் தோற்றமும் வளர்ச்சியும்/Origin and Growth of Tamil, தமிழ்ச்சொற்கள் பற்றிய சிற்றாய்வு/A Brief study of Tamil words, தமிழிலக்கண உருவாக்கம்/ Making of Tamil Grammar, தமிழ்மொழியில் முதல்நிலைச் சொற்களும்…
பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 3/5
வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 3/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com www.akaramuthala.in தொல்காப்பியப் பரப்புரைப்பணி மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொன்மைச் சிறப்பு வாய்ந்தது தொல்காப்பியர் நமக்களித்த தொல்காப்பியம். இன்றைக்கு ஓரளவு தமிழ் படித்தவர்கள் தொல்காப்பியத்தைப்பற்றி அறிந்திருப்பினும் அறிந்திருக்க வேண்டிய அளவிற்கு அறிந்திருக்கவில்லை. தமிழ் மக்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய – இந்திய வரலாற்றாசிரியர்கள் அறிந்திருக்க வேண்டிய – உலக மொழியறிஞர்கள் அறிந்திருக்க வேண்டிய…
பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 2/5
வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 2/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com www.akaramuthala.in படைப்புப்பணி படைப்புப்பணியில் குறிப்பிடத்தகுந்த சிறப்பை உடைய மொழிபெயர்ப்புப் படைப்புப்பணியும் அடங்கும். பேராசிரியரின் மொழிபெயர்ப்புப் பணி என்பதும் பள்ளிப் பருவத்திலேயே அரும்பி விட்டது. பள்ளி ஆண்டுமலரில் ஆங்கிலச் செய்யுள்களைத் தழுவி, “உலகம் நமதே! உயர்ந்தோர் நாமே!” என இவர் எழுதிய அகவல் வெளிவந்தது. இதுவே, இவரின் மொழிபெயர்ப்பு ஈடுபாடும் கவிதை ஈடுபாடும்…
பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 1/5
வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 1/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com www.akaramuthala.in பள்ளிப்பருவத்திலேயே தமிழ்நலப்பணிக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர் பேராசிரியச் செம்மல் முனைவர் சி.இலக்குவனார். தம் வாழ்நாளில் இறுதி வரை அத் தமிழ்ப்போராளி தம்முடைய தமிழ்சார் போராட்டப் பாதையில் இருந்து விலகவில்லை. பேச்சும் மூச்சும் தமிழாகக் கொண்டு வாழ்ந்தவர் அச்செந்தமிழ்ச் செம்மல். எண்ணம், எழுத்து, உரை, செயல் யாவும் தமிழ்நலமே எனத் திகழ்ந்தவர்…
கருப்புச் சூரியன்களுக்கு நடுவே – பாவலர் வையவன்
கறுக்கும் கருப்புச் சூரியன்களுக்கு நடுவே தளிரிலையால் தடவிவிடும் அன்புத்தாய் – நன்று அறிவித்தாய்! மூவுயிரைக் காக்கும் உந்தன் ஆணை ! – உனக்கு நிகராகக் காட்ட முடியாதொரு ஆணை !
தமிழைத் தாங்கும் தமிழ்வழிப்பள்ளிகள் – 5 : வெற்றிச்செழியன்
தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி தாய்த்தமிழ் மழலையர் தோட்டம் கோபி பள்ளி ஏன் தொடங்கப்பட்டது? மேடைகளில் ஏறித் தமிழ்ப்பெருமை பேசுவது, பட்டிமன்றங்களில் தமிழைக்கொட்டி முழங்குவது, கருத்தரங்கம் நடத்தித் தமிழுக்கு வளம் சேர்ப்பது, பக்கம், பக்கமாக எழுதித் தமிழ்ப்பயிரை வளர்ப்பது, இவற்றை எல்லாம் முழுமையான தமிழ்ப்பணி என்று கருதாமல், மானுடத்தின் உயிரான கல்வியை, தமிழர்களின் உயிர் வேரான தமிழ்வழிக்கல்வியை ஓங்கிப்பிடித்து, கல்விப்பணி செய்வதுதான் தமிழ் இனத்தின் கேடு நீங்கச் செய்யும் வழிமுறைகளில் முதன்மையானது என எண்ணி, எதிர்கால நாற்றங்கால்களான நம் தமிழ்க் குழந்தைகளை, நமது…
நம்மாழ்வார் – திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்
சேற்று வயலில் செம்மண் நிலத்தில் ஆற்றில் காட்டில் அணையில் மலையில் காற்றில் தோய்ந்து களமதில் காய்ந்து மாற்றம் வேண்டி மனம்மிக ஒன்றி ஊரினை நாட்டினை உழைக்கும் உழவரை பாரினை பண்டைய வாழ்வினைக் காக்க ஏரினைத் துவக்காய் எடுத்த பெரியோய்! ஆளும் அரசுகள் செய்யும் அழிம்புகள் நாளும் உழவரை நாச மாக்கிடும் கேட்டினைத் தடுக்க கீழ்த்திசை வானில் மூட்டிய நெருப்பாய் முகிழ்த்த கதிரே! உடையில் உணர்வில் உரிமை மீட்பில் தடைகள் தகர்த்திடும் தன்னல மறுப்பில் நடையால் நானிலம் நிமிர்த்தும் உழைப்பில் திண்மை நெஞ்சில் திறனில் நீயெம்…
பொங்கல் திருநாள்- திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்
ஆண்டுப் பிறப்பில் அறுவடைத் திருவிழா! மாண்புடை மண்ணில் மக்கள் பெருவிழா! கரும்பு மஞ்சள் காய்கறி கிழங்கு விரும்பும் விளைபொருள் எல்லாம் தந்த உழவர் ஆவினம் ஒளிமிகு ஞாயிறு கழனி உழுபடைக் கருவிகள் காளை உயர்வைப் போற்ற ஊரெலாம் கூடி வயலில் வீட்டில் நாட்டில் எங்கும் புத்துயிர் பரவிட பொங்கல் திருநாள் இத்தரை யெங்கும் இன்பமே எனினும் வெற்பினை எறிந்து வீரம் விளைத்த அற்புதத் தாயின் ஆரயிர்த் திருமகன் இற்றை நாளிலும் இந்தியச் சிறையில் இருந்திட இனிக்குமோ இன்சுவைக் கரும்பும்? 00000 ஆரிருள் கவிந்த அழகிய…
சின்னா – கல்வியாளர் வெற்றிச்செழியன்
சிறுமலையில் சிறு எறும்புப்புற்று ஒன்று இருந்தது. அதில் சிற்றெறும்புகள் சிறு கூட்டமாய் வாழ்ந்தன. அதில் சின்னா என்ற குட்டி எறும்புதான் சிறியது. அது ஒரு நாள் தன் சிறிய நண்பரைக் காணப் புறப்பட்டது. தன் சிறு புற்றைவிட்டு சின்னா வெளியில் வந்தது. தன் சிறு கண்களை விரித்துப் பார்த்தது. சிறு தூறல், சிறு புற்களில் பட்டுச் சிதறியது. வழியில் கிடந்த சிறு முள்ளை எடுத்தது. அதில் கொசுவின் சிறிய இறகைப் பொறுத்தியது. சின்ன குடை கிடைத்தது. தனது சிறிய முன்னங்கால்களால் அதைப் பிடித்துக் கொண்டது. …
“இனிமைத் தமிழில்” மை!
இனிமைத் தமிழில் இருக்கின்ற ” மை ” விகுதிக் கனிவான மூவெழுத்துச் சொற்கள் எவையெனஎன் கருத்தாய்வில் முனைந்து பொருத்தத் தேடினேன் திருத்தச் சொற்களைக் குருத்தாய்க் கூறுகிறேன். அண்மை யோடருமை அடிமை இம்மை இனிமை இருமை இளமை இறைமை இன்மை இலாமை யோடுஆளுமை ஆடுமை ஆண்மை ஆணுமை ஆடாமை ஆளாமை ஆணிமை ஆகாமை ஈகாமை உரிமை உடைமை உண்மை உம்மை உவமை உறாமை ஊராமை ஊர்மை ஊதாமை ஊதுமை ஊடாமை ஊடுமை எண்மை எளிமை எருமை எம்மை எழுமை …
ஊனத்தை அடையாளம் ஆக்காதே! – அன்பு
“தம்பி, எழுந்திரம்மா கண்ணா! நேரம் ஆகுதல்லவா?” “கொஞ்சம் பொறுங்கள் அம்மா!” “என்னப்பா இது! பாட்டுப்போட்டிக்குப்போக வேண்டுமல்லவா? அப்பாவும் நானும், முன்பே எழுந்து குளித்துப் புறப்பட்டு உன்னுடன் சாப்பிடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கிறோம்!. நீ, இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே!” “இல்லையம்மா! எனக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது. போட்டிக்கு எதற்குப் போகவேண்டும்?” (அப்பா, வந்துகொண்டே) “சுடர், வழக்கமாக இந்நேரம் குளித்து முடித்து இருப்பாய்! போட்டிக்குப் போக வேண்டிய நேரத்தில் ஏன் படுத்துக் கொண்டு உள்ளாய்! எழுந்திரு! எழுந்திரு! எரிச்சல் பறந்துவிடும்!” “நான்,போட்டிக்கு வரவில்லையப்பா!” “என்ன வரவில்லையா? நீதானே…
மண் பறித்த மானம்! -இளையவன் செயா
விடுதலையே எம்பிறப்புரிமைஅவ் வேட்கைக்குக் கெடுதல் செய்வோரையும் கெடவைத்த வீரமிகு நேத்தாசியைப்பெற்று வளர்த்த வங்கமண் இன்று தொங்கிவிட்டதே ! மொழிஅது தாய்காத்த விழிஅந்த விழியை அழிப்பதற்கு விழையாதீர் விழைந்ததால் தான்பெற்ற”சர்” விருதையும் பிழையான விருதுஎனப் புறமொதுக்கி பிழைப்புக்காக ஏந்திய பித்தலாட்டத்தைக் கழையாக நினைத்தொடித்த கவிஞர் பிழையில்லா இரவீ ந்திரநாத் தாகூர் பிறந்திட்ட மண்அதுவே வங்கமண் ! விடுதலை வேட்கையால் வீறுகொண்டு கெடுதலையே செய்யும் கேடர்களை வெற்றிகொள்ள வீரமுழக்கமிட்ட வீரர்கள் வற்றிப் போகாதமண் வங்கமண் !…
