உ.வே.சா.வின் என் சரித்திரம் 125 : அத்தியாயம்-85 : கோபால ராவின் கருணை
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 124 : எனக்கு உண்டான ஊக்கம்-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-85 கோபால ராவின் கருணை திங்கட்கிழமை பாடம் சொன்னேன். செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாவது மணி எப். ஏ. இரண்டாவது வகுப்பில் நாலடியார் பாடம் நடத்தத் தொடங்கினேன். அப்போது கல்லூரியைப் பார்க்க வந்த ஓர் உத்தியோகத்தருக்கு அங்கங்கே உள்ள வகுப்புகளைக் காட்டிக் கொண்டு வந்த கோபாலராவு நான் இருந்த அறைக்குள் அவருடன் வந்தார். அவர்களைக் கண்டவுடன் எழுந்த என்னைக் கோபாலராவு கையமர்த்தி விட்டு இரண்டு நாற்காலிகளைக் கொணர்ந்து போடச் செய்து ஒன்றில்…
நாலடி நல்கும் நன்னெறி 5 – நிலை புகழ் தரும் செயல் ஆற்றுக : இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 4. – அறம் புரிந்து அருளாளர் ஆகுக! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 5 நிலையில்லாச் செல்வததால் நிலை புகழ் தரும் செயல் ஆற்றுக! செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத புல்லறி வாளர் பெருஞ்செல்வம் – எல்லில் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி மருங்கறக் கெட்டு விடும் –நாலடியார், செல்வம் நிலையாமை, 8 பொருள்: நாம் செல்வமுடையவர்கள் என்று மகிழ்ந்து தாம் இனி இறப்பிற்குப் பின் போக உள்ள மறுமையுலகத்தை நினைத்துப் பார்க்காத சிற்றறிவுடையோரின் மிகுந்த செல்வம், இரவில்,…
மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 : மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-9 : பிராமணர்கள் ஆதரவும் சத்திய மூர்த்தியின் இரட்டை வேடமும் – -தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்களின் முதன்மைப் பங்கு இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பற்பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள் பங்கேற்றமை போல் வேறு எந்த மாநிலத்திலும் எந்தப் போராட்டத்திலும் பெண்கள் ஈடுபாடு இருந்ததில்லை. பெரியார் ஈ. வெ. இராமசாமியும் எதிர்க்கட்சியான நீதிக்கட்சியும் இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்திய,…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 7 : உதவியவர்க்கு உதவாதவன் தேய்வான்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 6 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 7 உதவியவர்க்கு உதவாதவன் தேய்வான்! “ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்” கலித்தொகை 149 : 6 – 7 கலித்தொகை – நெய்தற் கலி பாடியவர் – நல்லந்துவனார் திணை – மருதம் கி.மு. காலத்துப் பாடல் ஒற்கம் என்றால் வறுமை. தான் வறுமையுற்றபோது அத்துன்பம் நீக்க உதவியவருக்கு அவருக்குத் துன்பம்…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 23 : புலவர் கா.கோவிந்தன் – வெளிநாட்டு வாணிகம்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 22 – சாதகக் கட்டுக்கதைகளும் தென் இந்தியாவும் – தொடர்ச்சி) 7. வெளிநாட்டு வாணிகம் கி.மு. 1000 – 500 பாலத்தீனமும் இந்தியாவும் கி.மு. பத்தாம் நூற்றாண்டில், சிபாவின் அரசி {Queen of Sheba) சாலமன் அரசனுக்கு (King of Solomon) ‘மிளகு போலும், உணவுக்கு மணமூட்டும் பொருள்களின் மிகப்பெரிய குவியலையும், கிடைத்தற்கரிய மதிப்பு மிக்க இரத்தினக் கற்களையும் கொடுத்தாள். சீபா அரசி, சாலமன் அரசனுக்குக் கொடுத்த, மணப்பொருளின் இக்குவியல் போலும் ஒரு மணப்பொருள் குவியல் மீண்டும் வரவேயில்லை. (I Kings….
யானையியல் – இலக்குவனார் திருவள்ளுவன், புதிய அறிவியல்
யானையியல் (யானை) இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்னும் பழமொழி யானையின் மதிப்பை வெளிப்படுத்தும். யானைக்கு வேழம், களிறு(ஆண் யானை), பிடி(பெண் யானை), எறும்பி, கடிறு, கடவை, முதலான பல பெயர்கள் உள்ளன. தும்பி, கரிணி, தோல், கண் டாலி,கும்பி, கறையடி, குஞ்சரம், பகடு,களிறு, பூட்கை, கரி,மா தங்கம்,வழுவை, வேழம், வாரணம், மொய்யே,உம்பல், எறும்பி, உவாவே,பொங்கடி,தந்தி, அத்தி, கடிவை, கயமே,நாகம், சிந்துரம், தூங்கல், நிருமதம்,புழைக்கை, வல்விலங்கு, நால்வாய், புகர்முகம்மதாவளம், தந்தா வளம்,மருண் மாவே,கைம்மா(ப்), பெருமா, மதமா, வயமா,மத்த மா,வே மதகயம், ஆம்பல்,இபம்(ஏ),…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 89: சண்டிலியின் அழைப்பு
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 88 : சண்டிலி புகழ்ந்து வேண்டல்- தொடர்ச்சி) பூங்கொடி சண்டிலியின் அழைப்பு பிரிவினை யறியாப் பெருமனக் கொழுநன் பெரிதுறு விழுமமோ டிங்கெனைப் பிரிந்தோன் விரைவினில் வரூஉம் விறலி! எனக்கிசை ————————————————————— தொக்கு – சேர்ந்து, வரூஉம் – வருவான். ++++++++++++++++++++++++++++++++++++ ஊட்டிய தலைவீ ! ஒன்றுனை வேண்டுவல் பாட்டியல் பயில வேட்டவர் பலர்வட 270 நாட்டிடை வேங்கை நகரினில் வதிவோர் ஊட்டுவோர் ஆங்கண் ஒருவரும் இன்மையின் வாட்ட முறுவது வருங்கால் உணர்ந்தேன் அரிவைநீ அருளுடன்…
நாலடி நல்கும் நன்னெறி 4. – அறம் புரிந்து அருளாளர் ஆகுக!: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 3 – பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்!: தொடர்ச்சி) அறம் புரிந்து அருளாளர் ஆகுக ! தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் ; ஆற்ற அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் ; யாரும் பிறந்தும் பிறவாதா ரில். -நாலடியார், செல்வம் நிலையாமை, 7 பொருள்: சூரியனை, முகத்தல் அளவுக்கருவியான ‘நாழி’ போன்று அளவுக் கருவியாகக் கொண்டு வாழ்நாளை இயமன் நாள்தோறும் அளக்கிறான். அவ்வாறு முழுமையாக உண்பதற்கு முன்னதாக அருள் உடையவர் ஆகுங்கள். இல்லாவிடில் பிறந்தும் பிறவாதவர்போல் கருதப்படுவீர் சொல்…
சட்டச் சொற்கள் விளக்கம் 941 – 945 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 936 – 940 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 941 – 945 941. Assurance காப்புறுதி வாக்குறுதி காப்பீடு உறுதி, நம்பிக்கை, இசைவுறுதி, வாழ்க்கைக் காப்பீடு, அறுதியிடல்,உத்தரவாதம் எனவும் பொருள்கள். இறப்பு முதலிய துயர நிகழ்ச்சி அல்லது இழப்புகளுக்கு எதிராகக் காப்பீடு செய்தல். சட்டப்பூர்வச் சூழலில், “உத்தரவாதம்” என்பது ஒரு பொறுப்புறுதி அல்லது வாக்குறுதி. வாக்குறுதியின் அடிப்படையில்தானே காப்பீடு வழங்கப்படுகிறது. எனவே, இது…
நோன்பு என்பது கட்டடமா? படமா? கண்காட்சியா? திறப்பு விழாவிற்குரிய வேறு எதுவுமா? – இலக்குவனார் திருவள்ளுவன்
நோன்பு என்பது கட்டடமா? படமா? கண்காட்சியா? திறப்பு விழாவிற்குரிய வேறு எதுவுமா? தலைப்பைப் பார்த்ததும் இசுலாமியருக்கு எதிராக அலலது நோன்பைப் பழிக்கும் வகையில் சொல்வதாகக் கருதக் கூடாது. தூய நோன்பு குறித்த சொல்லாட்சி தவறு என்பதைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். முதலில் இரமலான் நோன்பு குறித்துத் தெரிந்து கொள்வோம். (அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்னும்) உறுதி யேற்பு(கலிமா), தொழுகை, நோன்பு, தானம், மெக்கா நகரில் உள்ள கஅபாவிற்குப்) புனிதப் பயணம்(Hajj) ஆகியன இசுலாத்தின் ஐந்து தூண்களாகும். கஅபா(Ka aba) என்றால்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 124 : எனக்கு உண்டான ஊக்கம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 123 : இரண்டாவது பாடம்-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-84 எனக்கு உண்டான ஊக்கம் இரண்டாம் நாள் (17-2-1880) நான் வழக்கப்படி கல்லூரிக்குச் சென்று பாடங்களை நடத்தினேன். தியாகராச செட்டியார் அன்று மூன்று மணிக்கு மேல் வந்து நான் பாடம் சொல்லுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்றே முக்கால் மணிக்கு மேல், சீநிவாசையர் செட்டியாரிடம் வந்து, “இன்று நான்கு மணிக்கு மேல் தமிழ்ப் பாடம் எந்த வகுப்பிற்கு என்று இராயர் கேட்டார். அந்த வகுப்பிற்கு அவர் ஒரு வேளை வரலாம். சாக்கிரதையாகப்…
பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்! : சங்கப்புலவர்கள் பொன்னுரை– 6 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 5 : தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 6 : பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்!- கலித்தொகை “என்றும்பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல்சான்றவர்க்கு எல்லாம் கடன்” நல்லந்துவனார், கலித்தொகை 139, 1-3 நோ என்றால் துன்பம் எனப் பொருள். நோ என்பதிலிருந்து பிறந்ததே நோய். பிணியாளர்களுக்குத் துன்பம் தருவதால் பிணியும் நோய் எனப்படுகிறது. இங்கே நோய் என்பது துன்பத்தையே குறிக்கிறது….
