எ. தமிழும் – வடமொழியும்-புலவர் வி.பொ.பழனிவேலனார்
(௬. கலைச்சொற்களின் தேவை-புலவர் வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் எ. தமிழும் – வடமொழியும் தமிழும் வடமொழியும் (சமற்கிருதம்) இறைவனது இரு கண்கள் என்பர் சிவனடியார்; வடமொழியினின்றுதான் தமிழ் தோன்றிற்றென்பர் வடமொழிவாணர். தமிழில் வடமொழிச் சொற்கள் கலந்ததால்தாம் தமிழ் வளம் பெற்றதென்பர் தமிழ்ப்பகைவர். சிவன் ஆரிய அகத்தியனுக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்பித்து, தென்னாட்டில் தமிழைப் பரப்பச் செய்தான் என்பது ஆரியர் கூற்று. மேற்கூறியவை மொழி நூலாராய்ச்சியும், தமிழின் இயல்பறிவும் இல்லாதார் கழற்றுரைகளாகும். தமிழ், திரவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமுமாகும் என்பது மொழிநூல் மூதறிஞர் ஞா….
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 15 : பாலத்தீனத்துடனான வாணிகம் – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் 2 – புலவர் கா.கோவிந்தன் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் 3 பாலத்தீனத்துடனான வாணிகம் கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டு முடிவதற்குச் சிறிது முன்னர், எபிரேயர்கள், எகிப்தில் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுப் பாலத்தீனத்திற்குக் குடிபெயர்ந்துவிட்டனர். அவர்களோடு சென்ற இனிய மணப்பொருள்கள், புனிதத் தன்மை வாய்ந்தனவாக மதிக்கப்பட்டன. இசுரேல் அரசின் தோற்றத்தில் வளம் கொழிக்கும் வாணிகம் முக்கியத்துவம் வாயந்ததாகிவிட்டது. ஆகவே அரேபிய வாணிகர்களால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இலவங்கம், எபிரேய மத குருக்களின் புனித திருநெய்யாட்டு எண்ணெய்யின் சலவைப் பொருள்களுள்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 83 : 18. இசைப்பணி புரிந்த காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 82 : பூங்கொடி இசைவு தருதல்-தொடர்ச்சி) பூங்கொடி 18. இசைப்பணி புரிந்த காதை அருண்மொழி மகிழ்ச்சி எழிலி பயிற்றிய இசைத்திறம் பூண்ட விழிமலர்ப் பூங்கொடி வியன்புகழ் ஊர்தொறும் பரவிப் பரவிப் பாரகம் அடங்கலும் விரவி மலர்ந்தது விளைந்தது நற்பயன்; தான்புனை கவியைச் சான்றோர் ஏத்திட 5 ஈன்றநற் கவிஞன் ஏமுறல் போல ஈன்றாள் அருண்மொழி இவள்புகழ் செவிப்பட ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே; எழிலியின் மகிழ்ச்சி இசையின் அரசியாம் எழிலிதன் கொழுநன் …
சட்டச் சொற்கள் விளக்கம் 911 – 915 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 906 – 910 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 911 – 915 911. assistance international/International assistance பன்னாட்டுதவி பன்னாட்டு உதவி ஒரு நாட்டிற்குப் பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகள். பன்னாட்டு உறவுகள் மூலமும் பன்னாட்டவை( UNO), பன்னாட்டுப் பண நிதியம் (International Monetary Fund) போன்ற பன்னாட்டு அமைப்புகள் மூலமும் கிடைக்கும் உதவிகள். 1923 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பன்னாட்டுக் காவல் துறை(The International Criminal Police…
அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 71-73
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 68 -70-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு திருச்சிக்கு மேற்கே, சொற்பொழிவாற்ற மாலை நேரத்தில் சென்றிருந்தனர். அங்கே, குளத்தங்கரையில், அனுட்டானம் செய்து கொண்டிருந்த நாட்டார் ஐயா அவர்கள் – பண்டிதமணி அவர்கள் (ஒரு கால் நடக்க வராது) தடியை ஊன்றி தட்டுத் தடுமாறி வருவதைப் பார்த்து, ‘ஐயா, கொஞ்சம் விழிப்பாக இருங்கள்; அவ்விடத்தில் ஒரு படி இல்லை’ என்று சொன்னார். அதற்குப் பண்டிதமணி சொன்னார் : “தாங்கள் சிவப்பழம் ஆயிற்றே, இறைவன் இருக்கும் இடம் வந்தும், “எனக்குப் படியில்லை’ என்று…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 118: அத்தியாயம் 80. புதிய வாழ்வு
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 117: அத்தியாயம் 79. பாடும் பணி-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-80 புதிய வாழ்வு 1880-ஆம் வருடம் பிப்பிரவரி மாதம் 12 உ வியாழக்கிழமை பொழுது விடிந்தது. அன்று காலையில் நான் வழக்கம் போலவே உற்சாகத்தோடு இருந்தேன். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பு என்னை நல்ல நிலைமையில் வைத்து வளர்த்து வரும் என்ற எண்ணம் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் இருந்தது. என் வாழ்வில் ஒரு விதமான அமைதி ஏற்பட்டு விட்டதாகவே நான் கருதினேன். பிள்ளையவர்களுடைய பதவியை வகிக்கும் தகுதி என்னிடம் இராவிட்டாலும் அவரது…
விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 1 இன் தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 அடுத்த வாரமே குமணன் நட்சத்திர விடுதியில் விருதாளருக்கு என ஒரு சிறப்பு அறையை ஒதுக்கி வைத்து விட்டனர். அவர் எப்பொழுது வேண்டுமானாலும் இங்கே வரலாம். எவ்வளவு நாட்களும் தங்கியிருக்கலாம் என்றனர். உணவு முதலிய எதற்கும் அவர் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என்றனர். ஐயா, நீங்கள் திரைக்கதை உரையாடலை எழுதியும் தரலாம். உங்களுக்கு ஓர் உதவியாளரை அமர்த்தியுள்ளோம். அவர் கணிணியில் தட்டச்சு செய்து தருவார் என்று ‘வி’ கதைக்குழுத் தலைவர்…
௬. கலைச்சொற்களின் தேவை-புலவர் வி.பொ.பழனிவேலனார்
(ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன-புலவர் வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௬. கலைச்சொற்களின் தேவை வேற்றுமொழிச் சொற்கள் பல தமிழில் வந்து கலந்து தமிழைக் களங்கப்படுத்துகின்றன. ஏன்? தமிழை அழிக்கின்றன என்றாலும் மிகையன்று. சில தமிழ் எழுத்தாளர் தமிழில் கலைச்சொற்கள் இல்லையென்று கூறி வேற்றுமொழிச் சொற்களைத் தம் படைப்புகளில் அப்படியே எடுத்தாள்கின்றனர். சில புதுமை எழுத்தாளர் மக்களுக்குப் புரியும்படி மக்கள் மொழியில் எழுதவேண்டுமென்று சொல்லி கொச்சைத் தமிழில் எழுதுகின்றனர். இத்தகையோரெல்லாம் தமிழை அழிப்பவர் என்பது எம் கருத்து. மணிப்பவளநடை, பேச்சுத்தமிழ்நடை, கொச்சைநடை ஆகியன…
ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் 2 – புலவர் கா.கோவிந்தன் – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 14 வெளிநாட்டு வாணிகம் 2 சலாமிசின் (Salarmis) மதகுருவாம் எபிபணியாசு (Epiphanias) என்பார், மோசசுக்கு (Moses) வழங்கிய சட்ட கட்டளைகள், நீலமணிக்கல்லில்தான் செதுக்கப்பட்டன எனக் கூறுகிறார். (Scoffs’ periplus page: 171). நார்மடி ஆடைகள் எகித்திலேயே, அக்காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டன ஆதலாலும், இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள், அவற்றினும் உயர்தரம் வாய்ந்ததான, பிற்காலத்திற் போலவே அக்காலத்திலும் இந்தியா மட்டுமே தரக்கூடியதுமான பருத்தி ஆடைகளால் ஆனவையாதல் வேண்டும். ஆதலாலும், அரசர்க்கான உடைகள் இந்திய மசுலினால்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 82 : பூங்கொடி இசைவு தருதல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 81 : தமிழைப் பழிக்க விடுவதோ!-தொடர்ச்சி) பூங்கொடி எழிலிபாற் பயின்ற காதை பூங்கொடி இசைவு தருதல் `அன்னையிற் சால அன்புளம் காட்டி என்புலம் ஓம்பி இலங்கிட அருளினை! 95 நின்பணி அஃதேல் நேருதல் அன்றி மறுமொழி கூற யானோ வல்லேன்? மறையுமென் வாழ்வு வளர்தமிழ்ப் பணிக்கே என்றுளம் கொண்டேன் என்பணிக் கஃதும் நன்றெனின் இன்னே நவிலுதி தாயே’ 100 காவியப் பாவை என்றலும், எழிலி யாப்பின் இயலும் பாவும் வகையும் பாவின்…
சட்டச் சொற்கள் விளக்கம் 906 – 910 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் : 901-905-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் : 906 – 910 906. assistance,food./Food assistance உணவு உதவி அரசாங்கம், தன் நாட்டு மக்களுக்கான பசியைப் போக்க உதவுதல், நாட்டில் உள்ள சிறாரின் உணவுத்தேவையை நிறைவேற்ற உதவுதல், பள்ளி மாணவர்களின் பசியைப் போக்க உதவுதல், நண்பகல் உணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம், 60 அகவைக்கு மேற்பட்ட முதியோரின் பசியைப் போக்க உதவுதல், இலவச உணவு அளித்தல், சலுகை விலையில் உணவு அளித்தல்,அரசுடன் இணைந்தோ தனித்தோ தனிப்பட்ட அமைப்புகளோ…
அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 68 -70
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 65-67-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 68. நான் சொல்லவில்லை 1929ல், அஃதாவது அறுபத்திஇரண்டு ஆண்டுகளுக்கு முன், நானும் பெரியாரும் திருநெல்வேலியில் ஒரு சொற் பொழிவுக்காகச் சென்றிருந்தோம். எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இல்லத்தை நாங்கள் அடைந்ததும், எதிர்பாளர்கள் அன்றைய கூட்டத்தை நடக்கவிடாமல் செய்வதற்காக அச்சடித் திருந்த எதிர்ப்பு துண்டறிக்கைகள் சிலவற்றைக் கண்டோம். அதில் பெரியார் புராணங்களையெல்லாம் பொய் என்று சொன்னவர். நாத்திகர் – பெரியார். அவரை இன்று நெல்லையில் பேசவிடக் கூடாது என்றிருந்தது. கூட்டம் மாலை 6 மணிக்கு என்பது…
