வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்தின் மருத்துவ உதவிகள்

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.   கடந்த காலப் போரின் போது தனது ஒரு காலினை இழந்து இருப்பதற்கு ஒழுங்கான வீடு இன்றிப் படுக்கைப் புண்ணுடன் அவதியுற்று வந்த கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு பாரதிபுரத்தைச் சேர்ந்த சந்தானம் சசிக்குமார் அவர்களுக்கு எமது புலம்பெயர் உறவான இலண்டனைச் சேர்ந்த தி.இலக்சனா, நந்தனா ஆகியோரின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரது தந்தை மருத்துவர் செ. திலகன் அவர்களின் நிதி அன்பளிப்பின் ஊடாக இவ் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.   இதன்…

பாரிய நிலவெடிப்பு 48 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் இடம் பெயர்வு

பாரிய நிலவெடிப்பு 48 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் இடம் பெயர்வு   கல ஃகா, துனாலி, மல்பேரி பிரிவு  ஊரில் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட பாரிய நில வெடிப்பின் காரணமாக 48 குடும்பங்களைச் சேர்ந்த 191 பேர் இடம் பெயர்ந்து  துனாலி  தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர். குறித்த  பகுதியில் பல இடங்கில் பாரிய நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீடுகள் வெடித்துள்ளன மரங்கள் சாய்துள்ளன. சில மரங்கள் சாயும் நிலையில் காணப்படுகின்றன. நீர் ஓட்டம் மற்றும் கசிவு அதிகமாகக் காணப்படுகின்றன. இதனால் இவர்களைக்…

இலங்கையில் நல்லாட்சியா ? பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் !

இலங்கையில் நல்லாட்சியா ? பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ! நல்லாட்சி என்ற மாயைக்குள் இலங்கைத்தீவில் தொடர்ந்தும் நடந்தேறும் மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தி  இலண்டனில்  கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தொடர்கின்ற கைதுகளைக் கண்டித்தும், வெள்ளைஊர்தி(வான்) கடத்தலுக்கு எதிராகவும், புலம்பெயர் தேசங்களில் இருக்கின்றவர்களைத் திருப்ப அனுப்ப வேண்டா எனத் தெரிவித்தும் இக்கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறுகின்றது. பிரித்தானிய அரசிற்கு இக் கோரிக்கைகளை  முன் வைக்கும் அதேநேரம், பிரித்தானிய அரசாங்கம்  சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று…

இந்தியன் குரல் : சட்ட விழிப்புணர்வுப் பயிற்சி முகாம்கள்

சமூக ஆர்வலர்களே ! வணக்கம். ஒருவர் ஆற்றிலோ கடலிலோ விழுந்தால் காப்பற்ற யாரேனும் வருவார்கள். ஆனால் அவர்களே சாக்கடையில் விழுந்தால் அவர்கள் அண்மையில் இருப்பவனும் நாற்றம் தாங்காமல் ஓடிவிடுவானே ஒழிய காக்க வரமாட்டான். “யாராவது காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்!” என்று கூவிக்கொண்டுதான் இருப்பான்.  அதுபோலவேதான் நம் மக்கள் நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூவுவதும். அவர்களைக் கொண்டு தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதும் நடக்கிறது யாராவது அரசியலுக்கு வரவேண்டும் என்பதும் வந்தவர்களை வாழ்த்தி வரவேற்பதும் உங்களைச் சாக்கடையில் தள்ளிவிட்டு நாங்கள் வேண்டியதை பெற்றுக்கொண்டு தப்பி ஓடுகின்றோம் என்று அம்மக்கள் உணர்த்தத்தான்.  இதையறியாமலோ அறிந்தோ சமூக ஆர்வலர்களும்,…

அறிவிப்பு: 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும்.

  அறிவிப்பு : 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும்.   அன்புடையீர் வணக்கம். வேறு சில பணிகளால், இனி வரும் மூன்று திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப்பெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியர், அகரமுதல

அழிந்து வரும் நிலையில் ஃகெல்சிரிகம பேருந்து நிலையம் – பா.திருஞானம்

அழிந்து வரும் நிலையில்  பேருந்து நிலையம்  கொத்(து)மலை  பகுதிக்குட்பட்ட  ஃகெல்பொட தோட்டம்  ஃகெல்சிரிகம  பகுதியில் காணப்படும்  பேருந்து நிலையம் அண்மைக் காலமாக உடைந்து காணப்படுகின்றது. இதனால் இந்தப் பேருந்து தரிப்பிடத்தைப் பாவித்து வரும் பயணிகள், பாடசாலை மாணவர்கள், பல இன்னல்களைத் துய்த்து வருகின்றனர்.   இந்தப் பேருந்து தரிப்பிடத்தில் நுவரெலியா, வெளிமடை, பண்டாரவலை, பதுளை, தியத்தலாவ, கதிர்காமம், பூண்டுலோயா பகுதிகளில் இருந்து கண்டி, கொழும்பு, யாழ்ப்பானம், கம்பளை போன்ற இடங்களுக்குச் செல்லும்  பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. நாளாந்தம் 1000 த்திற்கு மேற்பட்ட பயனிகள் பாவித்தும் வருகின்றனர்….

மாணிக்கவாசகம் மாணவி பரமேசுவரி தினமலர் பட்ட அவைக்குத்தேர்வு

தினமலர் பட்டம் –  பட்ட அவை உறுப்பினராகத் தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி பரமேசுவரி தேர்வு “அரசும் ,அரசியல் கட்சிகளும் மாணவர்களுக்கு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன ?”  என  எழுதி அனுப்புங்கள் என்று தினமலர் பட்டம் இதழில் சில நாட்களுக்கு முன்பு மாணவர்களிடம் கேட்டு இருந்தனர். அதன் தொடர்ச்சியாக இப் பள்ளியில் இருந்து பல்வேறு மாணவர்களை ஊக்கப்படுத்தி இப்போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னோம். அதனில் சிவகங்கை மாவட்ட அளவில் அரசு,அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி…

தேவகோட்டையில் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு! தனியார்/ பன்னாட்டுப் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி தேவகோட்டை :- தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தனியார்-பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றுச் சார் ஆட்சியரிடம் பரிசு பெற்றதற்குப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தோரை மாணவர் (இ)யோகேசுவரன்  வரவேற்றார். பள்ளித்தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடியில் உள்ள தனியார் -பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்ற அனைவருக்குமான ஓவியப்போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் திவ்யசிரீ,…

நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! கொடுவினையில், சதிவலையில் இறந்தவர்களை நினைக்கும்பொழுது தீவினையரை மறந்துவிடுவோமோ! கொலைக்குற்றவாளிகளுக்குக் கடுந்தண்டனை  கிடைக்க வேண்டாவா? அன்றுதானே நம் மனம் ஆறுதல் அடையும்!  இறந்தவர்களை நினைவுகூர்வோம்! இருப்பவர்களுக்குத் துணை நிற்போம்! இறந்தவர்கள் கனவை நனவாக்குவோம்! இருப்பவர்கள் வாழ்வை வளமாக்குவோம்! அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 625) – இலக்குவனார் திருவள்ளுவன்

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி- த.மா.கா. சார்பில் திருச்சியில் மாபெரும் மாநாடு

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி – த.மா.கா. சார்பில் திருச்சியில்  மாபெரும் மாநாடு  6 கட்சித் தலைவர்கள்  உரையாற்றினர். மக்கள் நலக்கூட்டணி:   நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி-த.மா.கா. சார்பில் அமைக்கப்பெற்ற கூட்டணி 234 தொகுதிகளிலும்  போட்டியிடுகின்றது. வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.   கூட்டணியின் முதல்- அமைச்சர் வேட்பாளரும், தே.மு.தி.க. நிறுவனத் தலைவருமான விசயகாந்து,  தலைமையில்  மாநாடு நடைபெற்றது.   ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர்  இராமகிருட்டிணன், இந்தியப் பொதுவுடைமைக்  கட்சியின் மாநிலச்…

மின் விளக்கைத் தாமசு எடிசனும், ஊழலைக் கருணாநிதியும் கண்டுபிடித்தனர் – விசயகாந்து தாக்கு

மின் விளக்கைத் தாமசு எடிசனும், ஊழலைக் கருணாநிதியும் கண்டுபிடித்தனர் – விசயகாந்து தாக்கு பல்பை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஊழலைக் கண்டுபிடித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியின் மாபெரும் மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி மாநாடு திருச்சியில் புதனன்று நடைபெற்றது. மாநாட்டில் பேசிய விசயகாந்து, ”தமிழக முதல்வர் செயலலிதா, மக்களைத் தமது குழந்தைகள் என்கிறார். அப்படியென்றால் தமது சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கு எழுதிக்கொடுத்துவிட வேண்டியதுதானே! மின்…

மக்கள் நலக்கூட்டணி, 150 தொகுதிகளில் வெற்றி பெறும். – வைகோ

”மக்கள் நலக்கூட்டணி, 150 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்” – வைகோ   திருச்சி பஞ்சப்பூரில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா., கூட்டணியின் மாற்று அரசியல் வெற்றிக்கூட்டணி மாநாடு நேற்று இரவு நடந்தது. மாநாட்டுக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். மாநாட்டில் த.மா.கா., தலைவர் வாசன் பேசியதாவது: தமிழகத்தில், 50 ஆண்டுகளாக மாறிமாறி தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சி செய்து விட்டு, அவர்களுக்குள் ஒருவரையொருவர் குற்றஞ் சொல்லி வருகின்றனர். இரு கட்சிகளின் அரசியலை மக்கள் நன்கு புரிந்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி…