ஏழு தமிழர் விடுதலை :உச்சநீதிமன்றத்திற்கு உசாவலதிகாரம் இல்லை – நீதிபதி சந்துரு

ஏழு தமிழர் விடுதலைக்கு எதிரான விண்ணப்பத்தை உச்சநீதிமன்றம் உசாவச் (விசாரிக்க) சட்டத்தில் இடமில்லை! – நீதியரசர் சந்துரு நெற்றியடி! இராசீவு கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் விடுதலை விவகாரம் மீண்டும் ஊடக வெளிச்சத்தில்!   இந்த ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது குறித்துக் கருத்துக் கேட்டு நடுவண் உள்துறைச் செயலருக்குத் தமிழ்நாட்டுத் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மடல் எழுதியிருக்கிறார். கவலைக்கிடமாகக் கிடக்கும் தந்தையைக் கடைசி முறை பார்க்கக் கூட நளினிக்கு ஒப்புதல் மறுத்த செயலலிதா அரசு, அது நடந்த அடுத்த ஓரிரு நாட்களுக்குள் இவர்கள் ஏழு…

ஈழ உறவு இரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு- சீமான்

ஈழ உறவு இரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு- சீமான்   சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பித் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் அகதிகள் என்று அடைமொழியிட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்து மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களை ‘கியூ’ பிரிவு காவலர்களும், வருவாய் அதிகாரிகளும் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. ஐயத்திற்குரிய குற்றவாளிகளைப் போலவே நடத்துவது, பைப்பறி(பிக் பாக்கெட்டு), வழிப்பறி செய்தார்கள் போன்ற இல்லாத, சொத்தையான காரணங்களைக் கூறியும், காரணங்கள் ஏதுமில்லையெனும் நிலையில் அயல் நாட்டவர்…

ஈழ ஏதிலியர் இரவீந்திரன் தற்கொலையால் தமிழகத்திற்குக் கெட்ட பெயர்! – வைகோ வேதனை!

[பொதுக்குறிப்பு : செய்தியைமுந்தித்தரும் ஆவலில் வெவ்வேறு வகையான செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. இறந்தவர் பெயர் இரவிச்சந்திரன், இரவீந்திரன் என்ற முரண்பாடு;  இறந்தவர் தன் மகன்  பிரவன் இல்லாமைக்கான காணரத்தை விளக்கியதாகவும், அவரே காலத்தாழ்ச்சியாக வந்ததாகவும இருவேறு தகவல்;  முகாம் உள்ள ஊரின் பெயரிலும் முரண்பாடு;  வருவாய்ஆய்வர் பெயர் இராசேந்திரன், துரைப்பாண்டி என்ற முரண்பாடு;   நேரடியான செய்தி எதுவும் வராததால்,ஊடகங்கள் செய்திகளை நன்றியுடன் பகிர்கிறோம்.  – ஆசிரியர்] ஈழ ஏதிலியர் இரவிச்சந்திரன் தற்கொலையால் உலக அளவில் தமிழகத்திற்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக ம.தி.மு.க…

தேர்தல் நடத்தை நெறிமீறல் குறித்து முறையீடு அளிக்க பகிரழைப்பி(வாட்சு-ஆப்) எண்!

தேர்தல் நடத்தை நெறிமீறல் குறித்து முறையீடு அளிக்க  பகிரழைப்பி(வாட்சு-ஆப்) எண்! அறிவித்தது தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைத் தேர்தலில் நடத்தை நெறிமுறைகளை மீறி நடப்பவர் குறித்து முறையிட பகிரழைப்ப (வாட்சு-ஆப்) எண்களைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்துச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தத் தமிழகத் தேர்தல் ஆணையர் இராசேசு இலக்கானி, “தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள்   செயற்பாட்டில் உள்ளன. மாநிலம் முழுவதிலும் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாக்குப் பொறிகளைச் சரி பார்க்கும் பணி 90% முடிந்து விட்டது. சட்டமன்றத்…

ஈழத் தமிழ் ஏதிலியர் தற்கொலை! அரசின் மனிதநேயமின்மையே காரணம்! – இராமதாசு

[பொதுக்குறிப்பு : செய்தியைமுந்தித்தரும் ஆவலில் வெவ்வேறு வகையான செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. இறந்தவர் பெயர் இரவிச்சந்திரன், இரவீந்திரன் என்ற முரண்பாடு;  இறந்தவர் தன் மகன்  பிரவன் இல்லாமைக்கான காணரத்தை விளக்கியதாகவும், அவரே காலத்தாழ்ச்சியாக வந்ததாகவும இருவேறு தகவல்;  முகாம் உள்ள ஊரின் பெயரிலும் முரண்பாடு;  வருவாய்ஆய்வர் பெயர் இராசேந்திரன், துரைப்பாண்டி என்ற முரண்பாடு;   நேரடியான செய்தி எதுவும் வராததால்,ஊடகங்கள் செய்திகளை நன்றியுடன் பகிர்கிறோம்.  – ஆசிரியர்] ஈழத் தமிழ் ஏதிலியர் தற்கொலை! அரசின் மனிதநேயமின்மையே காரணம்! – இராமதாசு  “மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு ஊரில்…

தெய்வத்தரிசனம் இணையத் தளமாக வெளிவர உள்ளது

அன்பான வாசகர்களே!   உங்களின் தெய்வத்தரிசனம் விரைவில் இணையத் தளமாக வெளிவர உள்ளது. இது முழுவதும் இறைநெறியையே – ஆன்மிகத்தையே – கொண்டதாக இருக்கும். இது ஒரு தனி மனிதனின் தொகுப்பாக இல்லாமல் வாசகர்களின் குரலாகவே இயங்க உள்ளது. இந்த இணையத்தளத்தில் செய்திகளாக இருந்தாலும் சரி, விளம்பரங்களாக இருந்தாலும் சரி வாசகர்களின் பங்களிப்பையே விரும்புகிறது.   உங்கள் குலத்தெய்வக் கோயில்கள்பற்றிய தகவல்களையும், உங்களுக்குத் தெரிந்த இறைநெறித் தகவல்கள், கதைகள், கழுவாய்கள்(பரிகாரங்கள்), அற்புதங்கள்பற்றிய விளக்கமான செய்திகளையும் எழுத்து மூலமாகவோ, தட்டச்சு செய்தோ அனுப்பலாம். ஏதோ தகவல்களை…

299 உரூபாயில் இணைய ஊழியம் – தமிழ்நாடு அரசு தொடக்கம்

299 உரூபாயில் 2 மாப்பேரெண்மம் (கிகாபைட்டுக்கு) இணைய ஊழியம் தமிழ்நாடு அரசு தொடக்கம்   தமிழ்நாடு அரசு வடக்காட்சி வாயிலாக இல்லந்தோறும் இணையம் திட்டம், மாணவர்களுக்கான திரள்கணினி- இணையப் பதிவேற்ற சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் செயலலிதா   அரசுக் கம்பிவடத் தொலைக்காட்சி (cable t.v.) நிறுவனம் மூலம் குறைந்த கட்டணத்தில் இணையச் சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் செயலலிதா தொடங்கி வைத்தார்.   மாநிலம் முழுவதும் மீவேக அகண்ட அலைவரிசைச் சேவைகள் (Broadband Services)  மற்றும் இதர இணையச் சேவைகள் (Internet…

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை – வைகோ

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை (Budget) ! – வைகோ  “நடுவண் அரசின் பொது நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நடுவண் நிதி அமைச்சர் அருண் செத்லி அளித்துள்ள 2016-17ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையில் கடந்த இரண்டு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தவைதாம் இடம் பெற்றுள்ளன. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. பொருளியல் (economical) வளர்ச்சி 8.6 விழுக்காடு(%) இருக்கும் என்று போன ஆண்டு கணித்தது…

மூத்த குடிமக்களுக்கான கட்டணமின்றிப் பயணச்சலுகைத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது

    முதலமைச்சர் செல்வி செயலலிதா அறிவித்துள்ள, சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளும் புதிய சலுகைத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பேருந்துகளில் பயணம் செய்வதற்கான அடையாளச்சீட்டுகளை முதியோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.   அரசுப் பேருந்துகளில், 60 அகவைக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள வகை செய்யும் புதிய திட்டம் ஒன்றை, முதலமைச்சர் செல்வி செயலலிதா, கடந்த 18- ஆம் நாள் சட்டப்பேரவையில் அறிவித்தார். முதற்கட்டமாக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், இன்றுமுதல்…

சான்சன் & சான்சன் உரூ. 493 கோடி இழப்பீடு அளிக்க மிசோரி நீதிமன்றம் தீர்ப்பு!

சான்சன் & சான்சன் (Johnson & Johnson) நிறுவனப் பொருளால் புற்றுநோய் தாக்கிப் பெண் உயிரிழப்பு! உரூ. 493 கோடி இழப்பீடு அளிக்க மிசோரி நீதிமன்றம் தீர்ப்பு!   அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் வாழ்ந்த சாக்குலின் பாக்சு (Jacqueline Fox) என்ற பெண் 35 ஆண்டுக் காலமாக சான்சன் சான்சன் நிறுவனத்தின் முகமாவு (Talcum powder) முதலான பொருட்களைப் பயன்படுத்தி வந்துள்ளார்.   அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கருப்பைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டு அக்தோபர் மாதம் தனது 62ஆவது அகவையில்…

ஒன்பது மாவட்ட மீனவர்கள் கைது!

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்ட ஒன்பது மாவட்ட மீனவர்கள் கைது!   தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதைக் கண்டித்தும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், அமைதியாக மீன் பிடிக்க உறுதி அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், காரைக்கால், சிவகங்கை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை பிப்ரவரி 29, 2016…