பழந்தமிழர் கணிதம் தேடுவோம் வாரீர்! – அழைக்கிறார் தமிழ்த் தொண்டர் பொள்ளாச்சி நசன்!

தமிழர் கணக்கியல் – பழந்தமிழர் கணிதம். தேடுவோம் வாரீர்!   தமிழ் எண் உருக்கள்தாம் கடல் கடந்து சென்று தேய்ந்து, உருமாறி நாம் இப்பொழுது பயன்படுத்துகிற எண்களாக மாறி நம்மை அடைந்துள்ளன. ஒன்று முதல் எட்டு வரையிலான எண்கள்தாம் முதலில் காணப்பட்டன. சுழியம், தொன்பது என்பவை தொடர்ச்சிக்காக இணைக்கப்பட்டவை. தமிழர் கற்றிருந்த ௬௪ (64) கலைகளிலும் இந்த எண்ணுருக்களின் அடிப்படை அமைந்திருக்கலாம். ‘எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்’ என்பதன் வழி எண்ணுக்கான நூல்கள் நிறைய இருந்திருக்கலாம். அவை அனைத்தும் இப்பொழுது இல்லை. கணக்கதிகாரம்…

சார்சா இரோலா பகுதியில் முதல் வாரந்தோறும் பல்மருத்துவ முகாம்

  சார்சா இரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள தமிழ் பல் மருத்துவமனையான அல் சுரூக்கு பல்வகை மருத்துவமனையில் பல் மருத்துவ   இலவச முகாம் அனைத்து மாதமும் முதல் வாரம் நடைபெற இருக்கிறது.   இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சிராசுதீன் பற்களுக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சைகள் குறித்து இலவச ஆலோசனை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர், 06 – 5685 022 , 0562861120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   அனைவரும் பயன்பெறும் வகையில்…

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி  மொத்தப் பரிசு உருவா 1050.00 கடைசிநாள்  மாசி 08, 2047 / 20.2.2016 சிறுவர் பாடிமகிழ்வதற்கேற்ற 12வரிப்பாடல்கள் 5 எழுதி அனுப்ப வேண்டும்! முதற்பரிசு உருவா 300.00 இரண்டாம் பரிசு உருவா200.00 மூன்றாம் பரிசு உருவா150 ஆறுதல் பரிசுகள் உருவா100.00 நான்கு பேர்களுக்கு. நெறிமுறைகள்: 1.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. 2.பிறமொழிச்சொற்கள் கலவாத தனித்தமிழ்ப் பாடல்கள் இயற்றப்பட வேண்டும் 3.பாடல்கள் மதநம்பிக்கை தவிர்த்த எப்பொருளிலும் இயற்றப்படலாம். 4.பாடல்களின் 2 படிகள் கட்டாயம் அனுப்பப்பெற வேண்டும். ஒருபடியில்…

கம்பன் கழகம், காரைக்குடி போட்டி முடிவு விவரம்

கம்பன் கழகம், காரைக்குடி    தை 17, 2047 / 31-1-2016 ஆம் நாள் காரைக்குடி கம்பன் கழகத்தின்அனைத்துக் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகளும், பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டிகளும் காரைக்குடி கிருட்டிணா கல்யாண மண்டபத்தில்  நடைபெற்றன. 28 கல்லூரி மாணாக்கர்களும், 60 பள்ளி மாணாக்கர்களும் பங்கேற்றுக், கீழ்க் குறிப்பிடுவோர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மு.சாசகான் கம்பராமாயணத்தில் முதற் பரிசினையும் (உரூ 3.500), திருக்குறளில் இரண்டாம் பரிசினையும் (உரூ 1,000) வென்றார். அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி…

பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழகத்தில் வேலைவாய்ப்பு

பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழகத்தில் வேலைவாய்ப்பு     பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழக (Bangalore Metro Rail Corporation Limited) அரசு நிறுவனத்தில் 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 21 துணை முதன்மைப் பொறியாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! [No. BMRCL/224/ADM/2016/PRJ நாள்: 20.01.2016] மொத்தக் காலியிடங்கள்: 21 பணி: துணை முதன்மைப் பொறியாளர் (Deputy Chief Engineer) காலியிடங்கள்: 07 ஊதியம்: உரூ.37,400 – 67,000 + தர ஊதியம் உரூ.8,700 மொத்தம் உரூ.1,22,039 வயது வரம்பு: 55-க்குள்…

கருநாடகத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை

கருநாடகத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை   வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று கருநாடகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேசுவர(நாயக்கு) அறிவுறுத்தினார்.   இது குறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் 21.01.2016 அன்று கூறியதாவது:   கருநாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் 30 விழுக்காடு வரை கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று சரோசினி மகிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே பின்பற்றி வருகின்றன.   பெரும்பாலான நிறுவனங்களும், தொழிலாலைகளும் இதைப் பின்பற்றாமல் புறக்கணித்து…

சிங்களஇலங்கை சென்றடைந்தன இந்தியப் போர்க் கப்பல்கள்

  தமிழ் இனத்தை அழித்த சிங்களஇலங்கையுடனான உறவை முறிக்குமாறு தமிழ்நாட்டுத் தமிழர்கள் தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வரும் நிலையில் இந்திய – சிங்களஇலங்கைக் கடற்படை உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தன் போர்க்கப்பலை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.   இந்தியா – சிங்களஇலங்கை இடையே கடற்படை உறவை மேலும் நெருக்கமாகக் கட்டமைப்பதற்காக இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான வானூர்தி தாங்கிப் போர்க்கப்பல் இந்தியக்கப்பற்படை நாவாய்(ஐ.என்.எசு) விக்கிரமாதித்யா இலங்கைக்கு 21.01.2016 அன்று சென்றடைந்தது.   இது குறித்து நடுவணரசு வெளியிட்ட…

யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் – 01 (மின்னூல்)

யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் – 01 (மின்நூல்)   வலையுலக உறவுகளே! எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பா / கவிதை போன்ற எனது கிறுக்கல்களை “யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் – 01” என்ற தலைப்பில் தொகுத்து மின்நூலாக வெளியிடுகின்றேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்பு தாருங்கள்.   எனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன். எனது மின்நூலைப் பதிவிறக்கக்…

உலகத் தமிழர்களுக்கான விலைமதிப்பில்லாச் சிறப்பு நாள்காட்டி – விலையில்லை!

அன்பு உறவுகளே !    வணக்கம். நீங்கள் இதுவரை  கண்டிராத, நீங்கள்  சற்றும்  எதிர்பாராத ஓர் அழகிய நாள்காட்டி,  உலகத் தமிழர் நாள்காட்டி. *பரப்புங்௧ள்!! *வாங்கிப்பயன் அடையுங்கள்!!! * எண்ணுக்குள் எண் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. (இப்படி வருவது உலகில் முதன் முறை.) * தனிக் கவனத்துடன் உருவாக்கப்பட்ட தனித்தமிழ் நாள்காட்டி. * நம்  மொழி காக்க, இனம் காக்க, மண் காக்கப் போராடியவர்களின் செய்திகளுடன், புரட்சியாளர்கள், சிந்தனையாளர்கள், தத்துவ அறிஞர்கள்,   நினைவெழுச்சி நாள்கள், சிறப்பு நாள்கள் என  அனைத்து விவரங்களும் உள்ளடங்கிய நாள்காட்டி . * உலக நாள்காட்டி வரலாற்றில்…

புதுச்சேரி: சித்தர் இலக்கியம், பன்னாட்டுக் கருத்தரங்கம்

பங்குனி 5.6 & 7, 2047 / மார்ச்சு 18, 19 & 20, 2016 ஆய்வுச்சுருக்கம் அனுப்புகை இறுதி நாள்: தை 27, 2047 / பிப்பிரவரி 10, 2016

மின்னூல் பதிவிறக்க – து.நித்யாவின் எளியதமிழில் ‘சிஎசுஎசு’

  விழுத்தொடர் பாணித் தாள்கள்(Cascading Style Sheets -CSS) இணையப் பக்கங்களை அழகாக வடிவமைக்கும் ஒரு நுட்பம். கணிணிக்கேற்ற வலை வடிவமைப்போடு கைபேசிக் கருவிகளுக்கான வலைத்தளங்கள், செயலிகள் உருவாக்கத்திலும் வி.பா.தா.(சி.எசு.எசு.) பெரும்பங்கு வகிக்கிறது. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. ஆசிரியர் : து.நித்யா மின்னஞ்சல்: nithyadurai87@gmail.com வலைப் பதிவு: http://nithyashrinivasan.wordpress.com     தமிழில் கட்டற்ற கணியன்கள்பற்றிய தகவல்களைக் “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது. இதில் வெளியான CSS பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழுப் புத்தகமாக…