நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் நேர்ச்சிகள்

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் தொடரும் துயரநேர்ச்சிகள்   தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் வண்டிமோதல்கள் தொடர்கின்றன.   தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம் வழியாக வைகை அணை,   ஆண்டிபட்டி, தேனி போன்ற பகுதிகளுக்குச் செல்லலாம். மேலும் கன ஊர்திகள் பெரியகுளம் வழியாகத் தேனி சென்றால் 10 அயிரைக்கல்(கி.மீ.) தொலைவு கூடுதலாக இருக்கும். இதனால் பயணநேரம், எரிபொருள் செலவு, ஊர்திப் போக்குவரத்து இடையூறு ஏற்படும். இதனால் தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம் வழியாகப் பல கன ஊர்திகள் செல்கின்றன.   மேலும் ஆண்டிபட்டி, சின்னமனூர், தேவாரம் பகுதிகளில் காற்றாலை மூலம்…

தேவை கீழாநெல்லி!

கீழாநெல்லிச் செடிக்கு மிகு தேவை   தேவதானப்பட்டிப் பகுதியில் மஞ்சள் காமாலை வேகமாக பரவி வருவதால் கீழாநெல்லிச் செடிக்கு மிகு தேவை ஏற்பட்டுள்ளது.   மஞ்சள்காமாலை நோய் வந்தால் கல்லீரல் பாதிக்கப்படும். கல்லீரல் பாதிப்படைந்தால் கை, கால், வயிற்றுப்பகுதி வீங்குவதோடு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. கல்லீரல் பாதிப்படைந்தால் அதற்கான ஆய்வுக் கருவிகள், மதுரையிலும் சென்னையிலும்தான் உள்ளன. பணவசதியற்றவர்களால் இந்த மருத்துவம் மேற்கொள்ளமுடிவதில்லை. இதனால் பழைய மருத்துவமுறையான ஆயுர்வேத, சித்த மருத்துவர்களை நாடுகிறார்கள்.   சித்தமருத்துவத்தில் கீழாநெல்லிச்செடியைப் பொடி ஆக்கி அதன்பின்னர் ஆட்டுப்பாலில் கலந்து தொடர்ந்து…

வருவாய்த்துறை மரங்கள் கடத்தல்

வருவாய்த்துறைக்குச் சொந்தமான இடங்களில் உள்ள மரங்கள் வெட்டிக் கடத்தல்   தேவதானப்பட்டிப் பகுதியில் வருவாய்த்துறைக்குச் சொந்தமாக உள்ள இடங்களில் உள்ள தேக்கு மரங்கள் முதலான விலை உயர்ந்த மரங்களை வெட்டிக் கடத்திவருவது வழமையாக உள்ளது.   தேவதானப்பட்டிப் பகுதியில் வருவாய்த்துறைக்குச் சொந்தமாக ஆற்றின் கரைகளிலும், குளங்கள், கண்மாய்களிலும் மரங்கள் வளர்க்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளன. இவற்றைத்தவிர வனத்துறை சார்பில் மரக்கன்றுகளும் நடப்பட்டு அவையும் நன்றாக விளைந்த நிலையில் உள்ளன. இதனைக் கண்காணிக்கும் மருமக்கும்பல் கண்மாய், ஆறுகளின் கரைகளில் உள்ள  வனத்துறைக்கு சொந்தமாக உள்ள மரங்களை வெட்டிக்…

வெடிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் கண்டம்

தடைசெய்யப்பட்ட வெடிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் கண்டம்(அபாயம்)   தேவதானப்பட்டிப் பகுதியில் தடை செய்யப்பட்ட வெடிகளை வெடிப்பதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் கண்டம் உள்ளது.  தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, செயமங்கலம் முதலான பகுதிகளில், திருமணம், மங்கல நிகழ்ச்சிகள், காதுகுத்துதல், வீடு திறப்பு விழா, கடை திறப்பு விழா எதுவானாலும் வெடிகள் வெடிப்பது வாடிக்கையாக உள்ளது. இதற்காகத்   அதிக ஒலியையும் அதிக புகைகளையும் வெளியிடும் தடை செய்யப்பட்ட வெடிகளை வெடிக்க வைக்கின்றனர். இதன்மூலம் அப்பகுதியில் கரும்புகைகளும், தாள்துண்டுகளும் குவிந்து கிடக்கின்றன. மேலும் அதிக ஆற்றல்வாய்ந்த வெடி வெடிப்பதால்…

செவிலியர்கள், விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

   இந்தியச் செவிலியர் சங்கம் (Trained Nurses Association of India – TNAI ) தமிழ்நாடு கிளை ( Tamilnadu State Branch – TNSB ) உலகச் செவிலியர் நாளன்று  செவிலியர் விருதுகளை வழங்குகிறது.  சிறந்த தொண்டு சிறந்த ஆசிரியர் சிறந்த நிருவாகி  ஆகிய அடிப்படையில் விருதுகள் வழங்கப்பெறும்.   பொது நல்வாழ்வுத் துறை, மருத்துவமனைகள், செவிலியர் கல்வி நிறுவனங்கள் முதலானவற்றில் சிறப்பாகச் செயல்படும் செவிலியர்களைத் தேர்ந்தெடுத்து இவ் விருதுகள் வழங்கப்பட உள்ளன.   தகுதி உடையவர்கள் தங்கள் முழு விவரத்துடன்…

கணிணித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு

தமிழன்பருக்கு, வணக்கம். கணிணித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் –  சான்றிதழ்ப் படிப்பு Certificate Course in  Fundamentals & Use of Tamil Computing சித்திரை 21 – வைகாசி 15, 2046 / 04.05.15 – 29.05.15  எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு மே மாதம் தி.இ.நி./ SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணிணித்தமிழ்க் கல்வித்துறையில் நடைபெறவுள்ளது.  கணிணியின் அடிப்படையையும் செயல்பாட்டையும் தெரிந்துகொண்டு  அனைவரும் கணிணியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ்மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்து கொள்வதற்கும் இணையத்தமிழ்ப் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் பயிற்சியிக்கப்படுகிறது.   இந்தப் பயிற்சியின் வாயிலாக ஊடகத்துறையில் பணிவாய்ப்புகள் பெறமுடியும்….

பாம்புகள் நடனம்

  தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியில் பாம்புகள் நடனமாடுவதைப் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான தோப்பு உள்ளது. தோப்பில் தென்னை, சப்போட்டா போன்ற மரங்களை வைத்து வேளாண்தொழில்புரிந்து வருகிறார். இவரது தோப்பில் ஏராளமான கரையான் புற்றுகள் உள்ளன. இப்புற்றுகளில் பாம்புகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இவருடைய தோப்பில் அடிக்கடி மயில்களுக்கும் பாம்புகளுக்கும் சண்டை நடப்பதும் அதனைப் பொதுமக்கள் கண்டு களிப்பதும் வாடிக்கை.   இந்நிலையில் நேற்று மாலை நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் ஒன்றுடன் ஒன்று…

கெ.கல்லுப்பட்டியில் கிடைத்த கோபுரக் கலசம்

கெ.கல்லுப்பட்டியில் ‘100 நாள்’ வேலை பார்க்கும் போது கிடைத்த கோபுரக் கலசம்   தேவதானப்பட்டி அருகே உள்ள கெ.கல்லுப்பட்டியில் 100 நாள் வேலைத் திட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு வேலை செய்யும்போது சிவப்புத்துணி சுற்றிய நிலையில் கோபுரக் கலசம் இருப்பதை அப்பகுதி மக்கள் எடுத்தனர்.  கெ.கல்லுப்பட்டி பகுதி, வரலாறும் பரம்பரைச்சிறப்பும் மிகுந்த பகுதியாகும். பண்டைய காலத்தில் திப்பு சுல்தான், ஊமைத்துரை, இராணிமங்கம்மாள் ஆகியோர் ஆங்கிலேயர் ஆட்சியில் தலைமறைவாக இருந்த இடங்களும் அதனால் பல வரலாற்றுச்சுவடுகளும் உள்ளன.   மேலும் இப்பகுதியில் பலவருடங்களுக்கு முன்னர்ப் பிளக்கப்பட்ட…

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் துயர நேர்ச்சிகள் ஏற்படும் பேரிடர்

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் துயர நேர்ச்சிகள் ஏற்படும் பேரிடர்   தேவதானப்பட்டி அருகே உள்ள தம்தம்(டம்டம்)பாறைப் பகுதியில் கடந்த அத்தோபர் மாதம் 27 ஆம்நாள் கனமழை பொழிந்ததால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் இயற்கையாக உருவான ஊற்றுகளால் மேலிருந்து மரங்கள் அடித்து வரப்பட்டு, தண்ணீர் வெளியேறும் பகுதியில் அடைத்ததால் பல இடங்களில் சாலை போக்குவரத்து நின்றுவிட்டது. இதனால் கொடைக்கானல் செல்லமுடியாமல் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அல்லல்பட்டனர். இதனால் கொடைக்கானலுக்குச் செல்லமுடியாமல் பொதுமக்கள் பழனி, தாண்டிக்குடி வழியாகச் சென்றனர்.   தேனி, திண்டுக்கல் மாவட்ட…

தேவதானப்பட்டி பகுதியில் மாம்பூப் பருவம் தொடங்கியது

    தேவதானப்பட்டி பகுதியில் மாமரத்தில் மாம்பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.   தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, கெங்குவார்பட்டி, முருகமலை, கல்லுப்பட்டி பகுதிகளில் பல காணி பரப்பளவில் மாந்தோப்புகள் உள்ளன. செந்தூரம், காசா, கல்லாமாங்காய், பங்கனப்பள்ளி, கழுதைவிட்டை முதலான பலவகை மாம்பழவகைகள் உள்ளன.  இப்பகுதியில் விளையும் மாம்பழங்கள் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளா, கருநாடகா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் தற்பொழுது வெளிமாநிலங்களைச்சேர்ந்தவர்கள் மாந்தோப்புகளைப் பார்வையிட்டு முன்கூட்டியே பணத்தை கொடுத்து விட்டுச்செல்கின்றனர்.   கடந்த இரண்டு…

சாலையோரக்கடைகளால் நேர்ச்சி(விபத்து)கள்!

மலைச்சாலைப் பகுதிகளில் சாலையோரக்கடைகளால் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்(அபாயம்)   தேவதானப்பட்டி அருகே உள்ள மலைச்சாலைப் பகுதி உள்ளது. இப்பகுதி மிக முதன்மையான சாலை இணைப்புப் பகுதியாகும். திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து வரும் ஊர்திகள் கொடைக்கானல் செல்லும் பிரிவு இதுதான். எனவே தமிழகம், பிறமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் இச்சாலையில் பயணம் செய்கின்றனர்.   இன்னும் ஓரிரு வாரங்களில் கோடைப்பருவம் தொடங்க உள்ளதால் இப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஊர்திகள் கொடைக்கானல் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனைப்பயன்படுத்தி இப்பொழுது சாலையின் இருபுறமும், சாலை…

வழிப்பறிக் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவரும் சாலைகள்

  தேவதானப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி, எழுவனம்பட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் இருசக்கர ஊர்திகளில் வருபவர்கள் மற்றும் நடந்து வருபவர்களை உருட்டுக்கட்டை கொண்டு தாக்கி நகை மற்றும் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.  வடுகப்பட்டியில் காவல்நிலையம் இல்லை. பெரியகுளத்தில் உள்ள தென்கரை காவல்நிலைய எல்லைக்குற்பட்டது. ஏதாவது குற்றங்கள் நிகழ்ந்தால் பெரியகுளம் போய்தான் புகார் கூறவேண்டும். புகார் கூறிக் காவலர்கள் வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பித்து விடுகின்றனர்.  இதே போல தேவதானப்பட்டி அருகே உள்ள எழுவனம்பட்டி பகுதியில் உருட்டுக்கட்டை கொண்டு இருசக்கர ஊர்திகளில் வருபவர்களைத்…