தேனி மாவட்ட வனத்துறையினர் கொடுஞ்செயல்
தேவதானப்பட்டிப் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களில் வனத்துறையினர் கொடுஞ்செயலால் சுற்றுலாப் பயணிகள் அல்லலுறுகின்றனர். மேற்குமலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள மஞ்சளாறு அணை, எலிவால் அருவி, கும்பக்கரை அருவி முதலான பகுதிகளில் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளைத் துன்புறுத்துகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள எலிவால் அருவி, மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி ஆகிய சுற்றுலா மையங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோடை மழை பருவமழை போல் பொழிந்ததால் வனப்பகுதில் ஆங்காங்கே ஊற்றுகள் தோன்றியுள்ளன. அருவிகளில் தண்ணீரும் கொட்டி வருகிறது. சில இடங்களுக்குச் செல்வதற்கு மாவட்ட நிருவாகம் சார்பில் தடை…
நிறுவ இருக்கும் தொல்காப்பியர் சிலை குறித்த கருத்தைத் தெரிவிக்கவும்
குமரி மாவட்டத்தில் உள்ள காப்பிக்காடு தொல்காப்பியர் பிறந்த ஊராகக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு, தொகாப்பியருக்குச் சிலை அமைத்திடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிலை வடிக்கும் பணி சென்னையில் நடைபெற்று வருகின்றது. சிலையின் மாதிரி வடிவம் அணியமாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தொல்காப்பியர் படத்தை ஒட்டி இந்த வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் படம் தரப்பட்டுள்ளது. அறிஞர் பெருமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். அன்புடன் முத்து.செல்வன் உறுப்பினர் தொல்காப்பியர் சிலை அமைப்புக் குழு. செயல் தலைவர் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை
சிறுகதை, கவிதை, கட்டுரை நூல்களுக்கான பரிசுப் போட்டி
பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் சிறுகதை/கவிதை/கட்டுரை நூல்களுக்கான 10ஆம் ஆண்டு பரிசளிப்புப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு 2013 முதல் 2015 ஆம் ஆண்டு சூலை வரை வெளியான நூல்கள் அனுப்பலாம். நூல்கள் 80 பக்கங்களுக்குக் குறையாமலும், முற்போக்கு சிந்தனைகளை எதிரொலிப்பதாகவும் இருக்க வேண்டும். கவிதை நூல்கள் புதுக்கவிதையாகவோ, மரபுக் கவிதையாகவோ இருக்கலாம். கட்டுரை நூல்கள் தமிழ், வரலாறு, அறிவியல், இலக்கியம், சமூகம் சார்ந்தவையாக இருக்க வேண்டும். போட்டியில், முதல் பரிசாக உரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக உரூ.1000 வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும்…
த.ம.ப.க.வின் சிறுகதைப் போட்டி
இறுதிநாள் : ஆடி 15, 2046 / சூலை 31, 2015
சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்குக!
திட்டச்சேரி பேரூராட்சிப் பகுதியில் சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்கச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்! நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிப்பகுதி, பனங்குடி ஊராட்சி, வாழ்மங்கலம் முதலான பகுதிகளில் சுற்றுப்புறச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் உரிமங்களை நீக்கவேண்டுமெனச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாவண்ணம் தொழிற்சாலைகள் அமைக்கப்படவேண்டும் என்று தமிழ்நாடு சுற்றுப்புறச்சூழ்நிலை பாதுகாப்பு -மற்றும் வனத்துறை சார்பில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. நீரில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்க மத்திய அரசின் சார்பில் பல்வேறு சட்டதிட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. …
சீரான கலைச்சொற்களுக்கு வேண்டுகோள் – செயபாண்டியன் கோட்டாளம்
அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழில் எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் உள்ள ஒரு பெரும் இடர்ப்பாடு என்னவென்றால், அதற்குத் தேவையான கலைச்சொற்கள் இல்லாததாகும். கலைச்சொல் இல்லாத ஒரு கருத்துருவுக்குப் பல எழுத்தாளர்களும் அவரவர் உடனடித் தேவைக்குத் தக்கவாறு பலவிதமாகக் கலைச்சொற்களை உருவாக்குகின்றனர். அவ்வாறு உருவாகும் கலைச்சொற்கள் ஒரே சீரான நடையைப் பின்பற்றி அமைவதில்லை. அவற்றுள் சில செந்தமிழ்ச் சொற்களாகவும், சில கலப்புமொழிச் சொற்களாகவும், வேறு சில ஆங்கிலச் சொற்களாவும் அமைகின்றன. எல்லா எழுத்தாளர்களும் ஒரே சீராக எழுத வேண்டுமானாலும், ஒன்றுடனொன்று இயைபுடைய அறிவியல் நூல்கள் தமிழில்…
உதவிக்காக ஏங்கும் திருவள்ளுவர்! – தமிழ் இராசேந்திரன்
தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே வீரணம் என்ற ஊரில் 2003 ஆம் ஆண்டு 6 காணி(ஏக்கர்) இடத்தில் ஏழு அறைகளுடன் தொடங்கப்பட்டு (தமிழ்த்தேசிய மாபெரும் அறிஞர் பெருமக்களான தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் நண்பரான ) தமிழ்ப்பற்றாளர் ஆறுமுகம் ஐயா அவர்களால் நடத்தப்படும் திருவள்ளுவர் தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி 6 முதல் 10 ஆம் வகுப்புகளுடன் 482/500 என்ற அளவு மதிப்பெண் பெறும் மாணவர்களை உருவாக்கி வந்தது. இந்நிலையில் அருகில் புதிதாகத் தோன்றிய ஆங்கில வழிப் பள்ளி நிருவாகத்தின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் நயவஞ்சகமாக…
பிரபாகரன் சிலையிடிப்பு : கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் – வைகோ
பிரபாகரன் சிலையை இடித்துத் தகர்த்ததைக் கண்டித்து, 9 ஆம் நாள் நாகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்! தமிழகம் முழுமையும் பிரபாகரன் சிலை எழும்; எந்த ஆற்றலாலும் தடுக்க முடியாது! வைகோ அறிக்கை! தமிழ்க்குலத்தின் தவமைந்தன், தரணியில் தமிழ் இனத்திற்கு அடையாளத்தை- முகவரியை நிலைநாட்டிய வரலாற்று நாயகன், நான் உயிரினும் மேலாக நேசிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவச் சிலையை, நாகை மாவட்டத்தில் தெற்குப் பொய்கை நல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வாழும் தமிழ் மக்கள், தாங்கள் வழிபடும் ஐயனார் கோவில் வளாகத்தில் வெள்ளைப் புரவியின்…
பிரபாகரன் சிலை அகற்றம்: மரு.இராமதாசு கண்டனம்! மாணவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!
தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் பிரபாகரன் சிலை நல்லூரில் அகற்றம்: மரு.இராமதாசு கண்டனம்! போராட்டம் வெடிக்கும் எனத் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை! பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்:– நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப் பொய்கை நல்லூரிலுள்ள கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஈழப்போராளி பிரபாகரனின் உருவச்சிலையை காவல் துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருக்கின்றனர். அந்த ஊரில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு பிரபாகரன் சிலையை மட்டும் அகற்றியுள்ளனர். குதிரை சிலை மட்டும் இருக்கும் நிலையில், பிரபாகரன் சிலை…
தேவதானப்பட்டிப் பகுதியில் குழு முறையில் வாடிக்கையாளர்கள் நகை விற்பனை
தேவதானப்பட்டிப் பகுதியில் கூட்டு முறையில் வாடிக்கையாளர்களின் நகைகள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. தேவதானப்பட்டிப் பகுதியில் தேசியமயமாக்கப்பட் வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகியவற்றில் உழவர்கள், பொதுமக்கள் தங்களுடைய அவசரத்தேவைக்காக நகையை அடைமானமாக வைத்து அதன் மூலம் பணம் பெறுகின்றனர். அவ்வாறு பணம் பெறும்பொழுது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வணிகக்கடன், வேளாண்கடன் எனப் பிரித்து வேளாண்கடனுக்குக் குறைந்த வட்டி எனவும் அதற்கு நகையை மீட்டுக்கொள்ள 18 மாதம் எனவும் வரைமுறை வைத்துள்ளது. அதற்குள் நகையைத் திருப்பாவிட்டால் நகை ஏலத்தில் விடப்படும் என்று அறிவிப்பு செய்வார்கள்….
ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் மீண்டும் பணியாற்றும் கொடுமை!
தேவதானப்பட்டிப் பகுதியில் ஊழல் ஒழிப்புக் காவலரால் கைது செய்யப்பட்டவர்கள் வழக்கு முடியும் முன்பே, மீண்டும் அதே அலுவலகத்தில் பணிபுரியும் சட்ட முரணான நடைமுறை உள்ளது. தேவதானப்பட்டி, தேனி மாவட்டத்தின் பிறபகுதிகளில் வருமான வரித்துறை, வணிக வரித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சமூக நலத்துறை எனப் பல அலுவலகங்களில் தங்களுடைய வேலைகள் சீக்கிரம் முடிக்கவேண்டும் எனச் சிலர் இடைத்தரகர்கள் மூலம் கொடுக்கவேண்டியவற்றைக் கொடுத்துத் தங்கள் வேலையைச் சீக்கிரம் முடிக்கின்றனர். சிலர் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்துக் கையூட்டு கொடுத்துத் தங்களுக்கு வேண்டிய தொழிற்சாலை உரிமம், நிலுவைத்தொகை,…
தேவதானப்பட்டியில் போலி இணையத்தளம் மூலம் பெண்களை மிரட்டும் கும்பல்
தேவதானப்பட்டிப் பகுதியில் போலி மின்னஞ்சல் மூலம் இணையத்தளம் தொடங்கிப் பெண்களை மிரட்டி வரும் குற்றக்கும்பல்(மாபியா) மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். தேவதானப்பட்டிப் பகுதியில் போலி மின்னஞ்சல் முகவரி உருவாக்கி அதன் மூலம் இணையத்தளம், முகநூல், பதிபேசி(வாட்சு-அப்) போன்றவற்றைத் தொடங்கிப் பெண்களையும், வணிகர்களையும் குற்றக்கும்பல் மிரட்டி வருவதால் பொதுமக்கள், பெண்கள் பாதிப்படைகின்றனர். ஏதாவது ஒரு பெயரில் போலியான பெயர் வைத்துக் குடும்பப் பெண்களையும், தொழில்அதிபர்களையும், கொச்சைப்படுத்தி எழுதி அதனைப் பதிபேசி மூலம் தகவல் பரப்பி அவமானப்படுத்துகின்றனர். அதன்பின்னர் அதனைக் காண்பித்துத்…
