தமிழ் இலக்கணத் தந்தை கோடிமுனை காசுமான் காலமானார்

தமிழ் இலக்கணத் தந்தை கோடிமுனை காசுமான் காலமானார் தொல்காப்பியர், அகத்தியர் போன்ற தமிழ் இலக்கண ஆசான்களுக்கு நிகராகப் பேசப்படுகின்ற சமகாலப் படைப்பாளர்;தமிழக அரசின் கபிலர் விருது பெற்ற தகைசால் பெரியவர்;இலக்கணப் படைப்பாளர்களுக்கும் நெய்தல் படைப்பாளர்களுக்கும் ஒப்பற்ற ஆசான்; கோடிமுனை மி.காசுமான் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்தது.கடந்த வாரம் அலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு “பெருலின் உன்னிடம் சில விசயங்கள் பேசவேண்டும்; நேரில்தான் பேசவேண்டும். வரமுடியுமா? கட்டாயம் வரவேண்டும்” என்று கட்டளையிடுவதுபோல் பேசினார். நானும் “நிச்சயம் வருகிறேன் ஐயா” என்றேன். ஆனால் என்னால்…

1965 மொழிப்போர் வீரர் – இலக்கியப் படைப்பாளி தோழர் பா. செயப்பிரகாசம் மறைவு பேரிழப்பு! – பெ. மணியரசன் இரங்கல்!

1965 மொழிப்போர் வீரர் – இலக்கியப் படைப்பாளி தோழர் பா. செயப்பிரகாசம் மறைவு பேரிழப்பு! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்! மிகச் சிறந்த படைப்பிலக்கிய ஆளுமையும், மார்க்சிய லெனினியரும், தமிழ்த்தேசியருமான தோழர் பா. செயப்பிரகாசம் அவர்கள் இன்று (23.10.2022) மாலை தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திக்குளத்தில் மாரடைப்பால் காலமாகிவிட்டார் என்ற செய்தி சொல்லொணா வேதனையை உண்டாக்குகிறது. ஆதிக்க இந்தியை எதிர்த்து 1965இல் நடந்த மாபெரும் மாணவர் போராட்டத்தின் தள நாயகர்களில் ஒருவர் தோழர் பா. செயப்பிரகாசம். அப்போது மதுரையில் தியாகராசர் கல்லூரியில்…

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 22, 23 & 24: இணைய அரங்கம்

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. |(திவள்ளுவர், திருக்குறள் 414) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 22, 23 & 24: இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: ஐப்பசி 06, 2053 ஞாயிறு 23.10.2022 காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: முதுமுனைவர் சத்தியவேல் முருகனார் பேரூர் ஆதினம் தவத்திரு மருதாச்சல அடிகளார் சிம்மம் சத்தியபாமா அம்மையார் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09…

இராசராசன் என்ன மதம்? – தோழர் தியாகு

ஐப்பசி 02, 2053 / 19.10.2022 புதன் இரவு 7.00 தமிழ்நாடு இனி – தொடர் அரசியல் வகுப்பு 100 தோழர் தியாகு கூட்ட எண் 8641368094 கடவுச்சொல் 12345

“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” – சென்னையில் எழுச்சியுடன் நடந்த கருத்தரங்கம்!

“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” சென்னையில் எழுச்சியுடன் நடந்த கருத்தரங்கம்! “தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” என்ற தலைப்பில், சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம், தெய்வத் தமிழ்ப் பேரவை ஆகியன சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் எழுச்சியுடன் நடைபெற்றது. அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இத்தீர்ப்பிலுள்ள பாதகங்களை விளக்கியும், தமிழ்நாட்டின் அருச்சனை மொழி சமற்கிருதமாக ஒருபோதும் இருக்கக் கூடாது – தெய்வத் தமிழ்தான் தமிழ்நாட்டின் அருச்சனை மொழி என வலியுறுத்தியும் தெய்வத் தமிழ்ப் பேரவை மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில்  தமிழ்நாடெங்கும் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச், சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்  அட்டோபர் 12 அன்று மாலை நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் அரங்கத்தில் நடைபெற்ற இச்சிறப்புக் கருத்தரங்கத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்கினார். தென்சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் ஏ. பிரகாசு பாரதி வரவேற்றார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், ஆவடிச் செயலாளர் தோழர் வ. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தமிழ்த்திரு. சித்தர் மூங்கிலடியார், தெய்வத் தமிழ்ப் பேரவைச் செயற்குழு உறுப்பினர் தமிழ்த்திரு. சிவ. வடிவேலன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன் சிறப்புரையாற்றினார்.  முன்னதாக, அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் வெளி வந்துள்ள சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்டராமன் அவர்கள் எழுதியுள்ள “கருவறைத் தீண்டாமைக்கு ஒரு தீர்ப்பு – ஆதரிக்கும் திராவிட மாடல்” நூலின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. ஐயா பெ. மணியரசன் நூலை வெளியிட, திருக்கயிலாய வாத்தியக் குழு திரு.கோசை நகரான், ஆசீவகம் சமய நடுவத்தலைமை நிலையச் செயலாளர் திருவாட்டி. கீதா, ம.பொ.சி. பெயரன் திரு. திருஞானம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சீனிவாசன், த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்வில், தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் திரு. வியனரசு, தமிழ்த் தன்னுரிமை இயக்கத் தலைவர் திரு. இராமச்சந்திரன், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் இரத்தினவேலவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், திரளான தமிழின உணர்வாளர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்டராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாசுகர், பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் வெற்றித்தமிழன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் முதலான திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.  நிறைவில், த.தே.பே. திருவள்ளூர் கிளைச் செயலாளர் தோழர் செயப்பிரகாசு நன்றி கூறினார். ================================= தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ================================= பேச: 9443918095, புலனம் : 9841949462 முகநூல் : www.fb.com/tamizhdesiyam ஊடகம் : www.kannottam.com இணையம் : www.tamizhdesiyam.com சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

விடுமுறை நாள் அறிவிக்கை தலைமைச்செயலருக்கு நன்றியும் பாராட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

விடுமுறை நாள் அறிவிக்கை தலைமைச்செயலருக்கு நன்றியும் பாராட்டும்! “விடுமுறை நாள்களைத் தெரிவிக்கக் கூடத் தமிழுக்குத் தகுதி இல்லையா?” என நாம் கேட்டிருந்தோம். இதனை எழுப்பியதன் காரணம் காலம் காலமாக அப்படித்தான் இருக்கிறது என்பதால்தான். நான் 33 ஆண்டுகள் அரசுப்பணியில் இருந்துள்ளேன்; விடுமுறை ஆணை  ஒரு முறை கூடத் தமிழில் வந்ததில்லை. பின்னர் ஆங்கிலத்தில் ஆணை பிறப்பித்தாலும் தமிழிலும் அதனை வெளியிட வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்தது. அதன் பின் அதற்கிணங்கத் தமிழில் விடுமுறை அறிவிக்கையை வெளியிட்டாலும் உடனே  ஆங்கில அறிவிக்கை சுற்றுக்கு வந்து…

“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!”சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்!                  

“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்!                   “தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” என்ற தலைப்பில், வரும் புரட்டாசி 25, 2053/  12.10.2022 அன்று சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் சிறப்புக்  கருத்தரங்கம் நடைபெறுகிறது. அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இத்தீர்ப்பிலுள்ள பாதங்களை விளக்கியும், தமிழ்நாட்டின் அருச்சனை மொழி சமற்கிருதமாக ஒருபோதும் இருக்கக் கூடாது – தெய்வத் தமிழ்தான் தமிழ்நாட்டின் அருச்சனை மொழி என வலியுறுத்தியும் தெய்வத் தமிழ்ப் பேரவை , தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில்  தமிழ்நாடெங்கும் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம் வரும் அக்டோபர் 12 அன்று நடைபெறுகிறது.  சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் அரங்கத்தில் 12.10.2022- அறிவன் (புதன்) கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இச்சிறப்புக் கருத்தரங்கத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்குகிறார். தென்சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் ஏ. பிரகாசு பாரதி வரவேற்கிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், ஆவடி செயலாளர் தோழர் வ. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் “சிகரம்” ச. செந்தில்நாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தமிழ்த்திரு. சித்தர் மூங்கிலடியார், தெய்வத் தமிழ்ப் பேரவைச் செயற்குழு உறுப்பினர் தமிழ்த்திரு. சிவ. வடிவேலன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். த.தே.பே. திருவள்ளூர் கிளைச் செயலாளர் தோழர் செயப்பிரகாசு நன்றி கூறுகிறார். நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! ================================= தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ================================= பேச: 9443918095, புலனம் : 9841949462 முகநூல் : www.fb.com/tamizhdesiyam ஊடகம் : www.kannottam.com இணையம் : www.tamizhdesiyam.com சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

தமிழ்க்காப்புக்கழகம்:ஆளுமையர் உரை 19, 20 & 21: இணைய அரங்கம்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௧ – 441) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 19, 20 & 21: இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: புரட்டாசி 22, 2053 ஞாயிறு 09.10.2022 காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: மழலையர் நரம்பியல் மருத்துவ வல்லுநர் மரு.முனைவர் ஒளவை மெய்கண்டான் குத்தூசி மருத்துவ வல்லுநர் பேரா.முத்துக்குமார்    சித்த மருத்துவ வல்லுநர்  மரு.அசித்தர் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode:…