மனிதநேயச் செம்மல் ப.மகாலிங்கம் வாழ்கவே!

இன்றைய தமிழ்ப்பேராசிரியர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர் முனைவர் ப.மகாலிங்கம். நாநலம் என்னும் நலனுடைமை நிறைவால் மாணாக்கர்களை அரவணைத்துச் செல்பவர். திருவாளர்கள் அர.பழனிசாமி – செல்வநாயகிஇணையரின் நன்மகனாய், திருப்பத்தூர் (வேலூர்) நகரில் பிறந்தவர்; திருவாளர்கள் கா.அ.ச.இரகுநாயகன் – சரசுவதி இணையர் வளர்ப்பில் சிறந்தவர். ‘திருவிகவும் காந்தியக் கோட்பாடுகளும்’ என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர். ‘திருவிகநூல்களில் சமுதாய நோக்கு’ என்னும் தலைப்பில் ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். ‘திருவிக காலமும் கருத்தும்’, ‘திருவிகவும் காந்தியக் கோட்பாடுகளும்’ என்னும் தலைப்புகளில் நூல்கள் படைத்துள்ளார். தமிழ்த்தென்றல் திருவிகவை ஆய்ந்து…

110 அகவை குவைத்து முதியவர் அல்அசுமில் இல்லம் ஓர் அருங்காட்சியகம்

  குவைத்து நாட்டைச் சேர்ந்த முதியவர் அல் அசுமில் 110 அகவை கடந்தவர். பல நூறு ஆண்டுகள் தொன்மையான பல அரிய பொருட்களை சேகரித்து வைத்திருக்கின்றார். இவரின் இல்லம் ஓர் அருங்காடசியகம் போல் காட்சி அளிக்கிறது. அவரை அவரது இல்லத்தில் கவிஞர் செங்கை நிலவன் நண்பர்களுடன் சென்று சந்தித்துள்ளார். அவர், மிகத் தெளிவாக ஆங்கிலம் பேசுகின்றார் எனவும் இச்சந்திப்பு இனம்புரியாத மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.  

கால்டுவெல் 200 ஆண்டுவிழா & நாரண.துரைக்கண்ணன் நூற்றாண்டுவிழா

  சென்னை அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கம் நடத்திய கால்டுவெல் 200 ஆண்டுவிழா & நாரண.துரைக்கண்ணன் நூற்றாண்டுவிழா அறிஞர்கள் நிறைந்தகூட்டமாகப் பொலிந்தது. (ஆவணி 01, 2045 / ஆக.17, 2014 : இடம்-கந்தசாமி நாயுடு கல்லூரி காலை 1030) படங்கள் :  முனைவர் மறைமலை இலக்குவனார் அமுதா பாலகிருட்டிணன்

கம்பன் கழகம் 40-ஆம் ஆண்டுவிழா நிறைவுநாள்

  ஆடி 25, 2045 / ஆக. 08, 2014 காலை கம்பன் கழகம் 40-ஆம் ஆண்டுவிழா நிறைவுநாள் நிகழ்ச்சி கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களின் பேரன் கலைமகன் அவர்களின் வாழ்த்துப்பாடலுடன் தொடங்கியது. தரவு : முனைவர் மறைமலை இலக்குவனார்

அறவாணன் விருதுகள் வழங்கு விழா

  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேரா.முனைவர் க.ப. அறவாணன் (பிறப்பு: ஆடி 25, 1972/ஆகத்து 9, 1941) தம் பிறந்த நாளில் ஆன்றோர்களையும் சான்றோர்களையும் விருது அளித்துப் பாராட்டி வருகிறார். இவ்வாண்டு, தமிழ்ச்செயல்தொண்டர் நா.அருணாசலம், முனைவர் இராம.இராமநாதன், முனைவர் வேலூர் ம.நாராயணன் ஆகிய சான்றோர்கள் விருதுகள் பெற்றுள்ளனர்.   விழாவின் பொழுது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களில் சில :-

புதுச்சேரி-காரைக்கால் வரலாற்றுப் பயிலரங்கம்

    காரைக்கால் : காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை, வரலாற்றுத ஆகியன சார்பில் புதுச்சேரி-காரைக்கால் வரலாறு குறித்த ஒருநாள் பயிலரங்கம்(ஆடி 23, 2045 / ஆக.8, 2014) நடந்தது.   கல்லூரி முதல்வர் முனைவர் நா. இளங்கோ தலைமை தாங்கினார். தமிழ்த்துணைப் பேராசிரியர் முனைவர் மாரியப்பன் வரவேற்றார். வரலாற்றுத்துறை தலைவர் பச்சவள்ளி நோக்கவுரையாற்றினார். அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் சாயபுமரைக்காயர் தொடக்கவுரையாற்றினார். அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் சசிகாந்தாசு புதுச்சேரி அரிக்கன்மேடு கண்காட்சியைத் திறந்து…

குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பண்ணாராய்ச்சி வித்தகரின் நூற்றாண்டு விழா தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழா ஆடி 27, 2045 / 12.08.2014 இல் சிறப்பாகநடைபெற்றது. தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் முனைவர் ம. திருமலை தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு இசை – கவின்கலைப் பல்கலைக்கழகத்தின்துணைவேந்தர் முனைவர் ஈ.காயத்ரி சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டு ‘தமிழிசை வளர்ச்சியில் குடந்தை ப.சுந்தரேசனாரின் பங்கு’ என்னும்நூலை வெளியிட்டார். மேலும் முனைவர் இ.அங்கயற்கண்ணி அவர்கள் பாடிய‘ஆறுபடைவீடு : திருப்புகழ்ப் பாடல்கள்’ என்னும் ஆறுகுறுவட்டுகள் அடங்கியஒலிவட்டுகளையும் வெளியிட்டார்….

செங்கை நிலவனுக்கு வளைகுடா வானம்பாடியினர் பாராட்டு!

வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா! படஉருவாக்குநர்க்குப் பாராட்டு!   குவைத்து வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா, ஆடி 23, 2045 / ஆக.8, 2014 வெள்ளி மாலை 5.30 மணிக்கு மங்காப்பு விழா அரங்கில் மிகச்சிறப்பாக   நடைபெற்றது. இவ்விழா,குவைத்து தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த “இருக்கு ஆன இல்ல” படஉருவாக்குநர்களைப் போற்றும் வகையிலும், அவர்களுள் ஒருவரான திரு செல்லத்துரை, பாடலாசிரியராக அறிமுகமான செங்கை நிலவன் ஆகியோரைப் பாராட்டும் வகையிலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடந்தது.   விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நிறுவனர்…

சென்னை அண்ணாநகர், சௌந்தரியா குடியிருப்பில் விடுதலை நாள் விழா

குழந்தைகளுக்குத் தமிழில் பேச்சுப்போட்டி, நாடகம், இசை நிகழ்ச்சிகள். சிறப்பாக நடந்தன. மழலையரும்புகள் மணக்கும் தமிழில் அழுத்தம் திருத்தமாகப் பேசுவதைக் கேட்கக் கேட்கக் கொள்ளை மகிழ்ச்சி பிறந்தது. பெருந்தலைவர் அம்பேத்கார் அவர்களைப் பற்றிய பொழிவுகள் அருமையாக இருந்தன.   செய்தியும் படங்களும் : மறைமலை இலக்குவனார்

பாரதிதாசன் மகள் வசந்தா தண்டபாணி மறைவு

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகள் வசந்தா தண்டபாணி அவர்கள் மறைவு   புதுவை: பாவேந்தர் பாரதிதாசனின் மகள் வசந்தா தண்டபாணி (84) உடல்நலக் குறைவு காரணமாக ஆவணி 28, 2045 / ஆக. 13 அன்று காலமானார். அவருக்கு அகவை 84. சரசுவதி, இரமணி, வசந்தா, மன்னர்மன்னன் ஆகிய மக்கள் பாவேந்தர் பாரதிதாசனுக்கு இருந்தனர். இவர்களில்   மூன்றாம் மகள் இரமணி சிவசுப்ரமணியம் 1970- இல் காலமாகி விட்டார். பாவேந்தரின் மூத்த மகள் சரசுவதி கண்ணப்பன் அவர்கள் தம் 92ஆம் அகவையில் கரூரில் 30.01.2012 இயற்கை…

“நான் முகவரி அற்றவளா?” – புத்தகம் வெளியீட்டு விழா

    நான் முகவரி அற்றவளா? …. அன்று நடைபெற்றது. செல்வி மாளவி சிவகணேசன் அவர்களின் பாடலுடன் நிகழ்வுகள் தொடங்கின. புத்தகவெளியீட்டை வைகோ, காசி ஆனந்தன் ஆகியோர் அறிமுகம் செய்தனர். புத்தகத்தை வைகோ வெளியிட அதனை இல.கோபாலசாமி பெற்றுக்கொண்டார். அருணகிரி, இளங்கோவன் ஆகியோருக்கு வைகோ பொன்னாடை அணிவித்தார். மாளவிகாவின் தந்தை மருத்துவர் சிவகணேசன் வைகோவிற்குப் பொன்னாடை அணிவித்தார். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் புத்தக ஆய்வுரை ஆற்றினார். வைகோ வின் சிறப்புரைக்குப்பின் ஓவியர் சந்தானம் உரையாற்றினார். அருணகிரி நன்றி நவின்றார்.