தூய்மைக்கேடாக்கப்படும் மஞ்சளாறு அணை
தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை நாளுக்கு நாள் தூய்மைக்கேடாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொற்று நோய் பரவும் பேரிடர் உள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் உழுதொழில், குடிநீர்த் தேவைகளுக்காகக் கட்டப்பட்டது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் பயிர் நிலங்கள் பயன்அடைந்து வருகின்றன. இதே போல மஞ்சளாறு அணையில் உள்ள நீரை நம்பி ஊராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவை பயனடைந்து வருகின்றன. இப்பொழுது மஞ்சளாறு அணை ஆடு, மாடு போன்ற கால்நடைகள்…
தேவதானப்பட்டி பகுதியில் வெளவால்கள் அழிவாட்டம்
தேவதானப்பட்டி பகுதியில் வெளவால்கள் அழிவாட்டத்தால் (அட்டகாசத்தால்) விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, கெங்குவார்பட்டி, வைகை அணைப்பகுதியில் ஆயிரக்கணக்கான வெளவாலகள் கூட்டம் கூட்டமாக தங்கியுள்ளது. இவ்வகை வெளவால்கள் இப்பொழுது மழை இல்லாததால் பழங்கள் இருக்கும் பகுதியை நாடி இடம் பெயர்ந்து வருகின்றன. மேலும் இப்பொழுது நாவல் பழப் பருவம் தொடங்கியுள்ளதால் நாவல்மரங்கள் அடங்கிய பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இவ்வாறு நாவல்மரங்களில் தங்களுக்குத் தேவையான உணவுகள் கிடைக்காவிட்டால் அண்மையில் உள்ள சீமையிலுப்பை(சப்போட்டா), வெள்ளரித்தோட்டம், முந்திரித்தோட்டம், பப்பாளித்தோட்டங்களில் நுழைந்து…
மூடுவிழாவை நோக்கிக் கயிறு திரிக்கும் தொழில்
தேனிப் பகுதியில் கயிறு திரிக்கும் தொழில் மூடப்படும் பேரிடர்(அபாயம்) உள்ளது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பகுதிகளில் தென்னை மரத்தின் மட்டைகளில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழில் குடிசைத்தொழிலாக நடைபெற்று வருகிறது. இத்தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தென்னை மட்டைகளின் நார்கள் வெளிநாட்டிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் செங்கல் போன்று கடினமாக்கப்பட்டு அதனையும் வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள். இதனால் அதிக விலை கொடுத்தும்முன் தொகை கொடுத்தும் தென்னை மட்டைகளை வாங்கிச்செல்கின்றனர். தற்பொழுது குடிசைத்தொழிலாக உள்ள இத்தொழில்போதிய மூலதனத்துடன் நடைபெறுவதில்லை. இவை…
தண்ணீர்ப் பற்றாக்குறையினால் சொட்டுநீர்ப் பாசனத்திற்கு மாறிவரும் உழவர்கள்
தேனிப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் வேளாண் பெருமக்கள் சொட்டு நீர்ப் பாசனத்திற்கு மாறிவருகிறார்கள். தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி, செயமங்கலம் முதலான பகுதிகளில் சோத்துப்பாறைஅணை, வைகை அணை,மஞ்சளாறு அணை ஆகிய அணைகளின் பாசனத்தை நம்பி உழுதொழில் புரிந்து வந்தனர். இதனால் நெல், கரும்பு, வாழை எனப்பயிரிட்டு தமிழகத்திற்குள்ளும் பிற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாகப் போதிய மழை இல்லாததால் வறட்சி காணப்பட்டது. இதனால் உழவர்கள் பயிரிட்ட தென்னை, வாழை, கொய்யா, எலுமிச்சை மரங்கள் அனைத்தும் கருகத்துவங்கியன….
தொடரும் சாலை நேர்ச்சி(விபத்து)கள் – அதிகாரிகள் பொருட்படுத்தாமை
தேனிப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் சாலை நேர்ச்சிகள் தொடர்கதையாகி வருகின்றன. திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை இருவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் திண்டுக்கல்லில் இருந்து தேவதானப்பட்டி வரை இருவழி சாலை அமைக்கும் பணி முடியும் தறுவாயில் உள்ளது. அதனை ஒட்டியுள்ள சிற்றூர்களை இணைக்கும் சாலைகளைச் செப்பனிடாமல் அப்படியே விட்டுவிட்டனர். இருவழிச்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் சாலை இப்படியே நீளும் என்ற எண்ணத்தில் அதிவேகத்துடன் வருகின்றனர். அப்போது புல்லக்காபட்டி பகுதியில் சாலை அமைக்கப்படாததால் ஒட்டுநர்கள் வேகத்தை…
பருவமழை பொய்த்துப் போனதால் பட்டுப்போன வாழை மரங்கள்
தேனிப் பகுதியில் பருவமழை பொய்த்துப் போனதால் வாழை மரங்கள் கருகத்துவங்கியுள்ளன. தேனி அருகே உள்ள குள்ளப்புரம், மருகால்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, செயமங்கலம் முதலான பகுதிகளில் நுhற்றுக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை, சாகுபடி செய்யப்படுகிறது. பச்சை வாழை, மொந்தை, செவ்வாழை, கற்பூரவல்லி எனப் பலவகையான வாழைகள் பயிரிடப்பட்டு, தமிழகத்திற்குள்ளும் அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதனால் இப்பகுதி உழவர்கள் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருந்தனர். கடந்த இரண்டு வருடகாலமாகப் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர், வாய்க்கால் தண்ணீர்…
ஒரே இடத்தில் பல்வேறு பயிர்த்தொழில் செய்து வரும் உழவர்கள்
தேனிப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் ஒரே நிலத்தில் பல்வேறு பயிரிடுதலில் கவனம் செலுத்தி வருகின்றனர். தேனிப் பகுதியில் கடந்த சில வருடங்களாக போதிய மழை பொழியவில்லை. இதனால் உழவிற்குரிய வேளாண்பகுதி நாளுக்குநாள் சுருங்கி வருகிறது. இந்நிலையில் கிடைக்கின்ற நீரை வைத்துக் கரும்பு, தக்காளி, முட்டைக்கோசு எனப் பல்வேறு பயிரிடுகையை ஒரே இடத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்பாக உழவர்களிடம் கேட்டபோது, “மழை கடந்த இரண்டு வருடகாலமாக சரிவரப் பெய்யவில்லை. இதனால் நெல் முடிந்த பின்பு வாழை அதன் பின்னர் கரும்பு…
பெரியாரிடம் கற்றுக் கொள்ள வேண்டியன
தேனி மாவட்டத்தில் காட்சிப்பொருளான பத்தாயங்கள்
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு நீர் வளமும் நிலவளமும் மிகுந்த பகுதி. அண்டை மாநிலமான கேராளவில் மழை பொழிந்து இருப்பதால் எப்பொழுதும் சாரல் மழை பொழிந்து கொண்டே இருக்கும். இதன் அண்மையில் வருடம் முழுவதும் மழை பொழிவதால் வருசநாடு என்ற பெயரும் உண்டு. இவை தவிர முல்லைப்பெரியாறு அணை, மஞ்சளாறு – வைகை அணை பாய்கின்ற பகுதியாகும். இதனால் இப்பகுதியில் கடந்த காலங்களில் மும்மாரி மழை பொழிந்தும் ஆற்றுப்பாசனங்களில் நெல் விளைச்சல் எப்போதும் இருக்கும். எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று நெல்…
பரிதியன்பனுக்குத் தமிழ்நிதி விருது
புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் பரிதியன்பன் என்னும் பாலசுப்பிரமணியனுக்குத் ‘தமிழ்நிதி’ விருது விருதாளர் பரிதியன்பன் மேலும் பல விருதுகளும் சிறப்புகளும் பெற ‘அகரமுதல’ வாழ்த்துகிறது.
“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙி
(ஆவணி 15, 2045 / ஆக.31,2014 தொடர்ச்சி) தீர்மானம் – 3:காவிரி மேலாண்மை வாரியம்உடனடியாக அமைக்க வேண்டும்! தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் பாசன நீராகவும், 19 மாவட்டங்களில்குடிநீராகவும் பயன்பட்டுத் தமிழ்த் தேசிய ஆறாக விளங்குகிறது காவிரி. காவிரித்தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி, 192 ஆ.மி.க. (டி.எம்.சி.) நீரைகருநாடகம் தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டும். ஆனால், கருநாடகம்தமிழகத்திற்குரியத் தண்ணீரைத் திறந்துவிடாமல், திருட்டுத் தனமாக கருநாடகஅணைகளில் தேக்கி வைத்துக் கொள்கிறது. கருநாடகத்தின் இந்தத் திருட்டுத்தனத்தைத் தடுத்து, இறுதித் தீர்ப்பைத்தவறாமல் செயல்படுத்துவதற்காகத் தீர்ப்பாயம் கூறிய தீர்வு தான் ‘காவிரிமேலாண்மை…
வெளியாரை வெளியேற்று! – தாயகத்தோர் வாழ்வுரிமை மாநாடு
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!! 1956ஆம் ஆண்டு ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கும் ஒரு மாநிலம் என்ற வகையில் தமிழ்நாடு பிறந்தது. ஆனால், இன்று, அச்சட்டத்தை மதிக்காமல் தமிழ்நாட்டில் அதிகளவில் வெளி மாநிலத்தவர்கள் நுழைந்து கொண்டுள்ளனர். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10 ஆண்டுகளில் மட்டும் 43 இலட்சம் பேர் இவ்வாறு குடியேறியுள்ளனர். இதன் காரணமாகத், ‘தமிழ்நாடு- தமிழர்களின் தாயகம்’ என்ற அடிப்படை நிலையே மாறிவருகின்றது. மேலும், தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்கள் அனைத்தின் தலைமைப் பொறுப்புகளிலும், பணியாளர்கள் எண்ணிக்கையிலும் அயல் இனத்தாரே…
