தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் இரண்டாம் ஆண்டு முப்பெரு விழா!

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 123 ஆவது பிறந்தநாள் விழா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 124 ஆவது பிறந்தநாள் விழா, உழைப்பாளர் நாள் விழா ஆகிய முப்பெரு விழா தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால், இராயப்பேட்டை, ஔவை சண்முகம்சாலை பெரியார் சிலை அருகில்   வைகாசி 31, 2045 / 14.06.2014 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. த.பெ.தி.க. சட்டத்துறைச் செயலர் திரு வை. இளங்கோவன், தலைமை தாங்கினார். காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட வீரக்கலை நிகழ்சிகளுடன் விழா தொடங்கியது….

செருமனியில் தமிழ் எழுத்தாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர்!

  செருமனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர்களின் பாராட்டு விழா கடந்த 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 15.30 மணியளவில் பெருந்திரளான மக்களின் வரவேற்போடு (International Zentrum – Flachs Markt– 15. 47051 Duisburg என்ற முகவரியில் அமைந்த) பன்னாட்டு மண்டபத்தில் திருமதி சந்திரகௌரி சிவபாலன், திருமதி கெங்கா தான்லி, திருமதி கீதா பரமானந்தம் ஆகியோர் மங்கல விளக்கேற்றத் தொடங்கியது. நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, அவர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களைச் சிறப்பித்துப் பாராட்டி வாழ்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக்…

“அர்ச்சனைமலர்கள்” கவிதை நூல்வெளியீட்டு விழா –செருமனி

செருமனிவாழ் எழுத்தாளர் திருமதி. செயா நடேசன் அவர்களால் எழுதப்பட்ட ‘அர்ச்சனைமலர்கள்’ கவிதை நூல் வெயியீட்டுவிழாவும், இலண்டன் தமிழ் வானொலியின் 127ஆவது பொன்மாலைப் பொழுது நிகழ்வும் ஒரே மேடையில் இரு நிகழ்வுகளாகச் சிறப்புடன் நடந்தேறின. செந்தமிழின் இனிமையும் பெருமையும் என்றும் மண்ணோடு மண்டியிட்டுக்கிடந்து மணம் வீசும் தமிழ் மலர்களை உருவாக்கும் பைந்தமிழ்ப்பாசறையாம் நெடுந்தீவு மாமண்ணில் பிறந்து பார் முழுவதும் புகழ் மணம் கமழும் அறிவுசார் குடும்ப வரலாற்றின் சாதனைப்பெண்ணாய், தெள்ளுதமிழ் பெருக்கெடுக்க அள்ள அள்ளக்குறையாத ஆச்சரியத்திறமைக்களஞ்சியம் திருமதி.செயபாக்கியம் யூட் நடேசன்(ஜெயா நடேசன்) அவர்களின் அன்பு நினைவலைகளை…

சார்சாவில் நடைபெற்ற ‘நிரித்யசமர்ப்பண்’ – இந்திய மரபு நடன நிகழ்ச்சி

சார்சாவில் ‘டிடிஎசு நிகழ்வுகள்’ சார்பில் ‘நிரித்யசமர்ப்பண்’ எனும் இந்தியமரபு நடன நிகழ்ச்சி வைகாசி 30, 2045 / 13.06.2014 வெள்ளிக்கிழமை மாலை சார்சா அமெரிக்கப் பல்கலைக்கழக கலையரங்கில் வெகு சிறப்புற நடைபெற்றது. நிகழ்விற்கு ‘டிடிஎசு நிகழ்வுகள்’ தலைவி செயந்தி மாலா சுரேசு தலைமை வகித்தார். குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. குரு கவிதா பிரசன்னா வரவேற்பு நடனம் நிகழ்த்தினார். வள்ளி திருமணம் நிகழ்வினை நேர்த்தோற்றம்போல் நடித்துக் காட்டிய மாணவியரின் நடிப்பனை அமீரகத்திலிருந்து விடைபெற்றுச் செல்ல இருக்கும் இந்தியத் துணைத் தூதர் அசோக் பாபு வெகுவாகப்…

தமிழ் இணையக் கல்விக் கழகம் – தொடர்சொற்பொழிவு 2

தமிழ் இணையக் கல்விக் கழகம்   தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் உயர்திரு சுவாமிநாதன் அவர்கள் (புதுகோட்டை)   புதுக்கோட்டை மன்னர்கள் வராறுகள் பற்றி நீண்ட பொருள் மிகு சொற்பொழிவு  நிகழ்த்தினார்.   வந்திருந்த அனைவருக்கும் புதிய புதிய செய்திகள் வரலாற்று உண்மைகள் தெரிய வாய்ப்புகள் ஆயிற்று   மன்னர்களின் பரம்பரை மட்டுமல்லாது அங்குள்ள கோயில்களின் வரலாறு, தொன்மம் வேளிர்களின் கோயில்கள்,  சமணக் கோயில்கள் எனும் பலவகையான பொருள்கள் பற்றி சிறப்பான கருத்து வைப்பு படங்ககளுன் நல்  விருந்தாக அமைந்தது இந்நிகழ்வு.   தரவு :…

(முதன் முதலாக) உலகத் திருக்குறள் மாநாடு!

முதன் முதலாக  உலகத் திருக்குறள்  மாநாடு!    இலக்கியக் கூட்டங்களுக்கு நுழைவுக் கட்டணம் 10 டாலர்! உணவு வழங்கப்படும், ஆனால் கட்டணம் உண்டு! கேள்வி-பதில் நேரம் முடிந்துவிட்டால் அடுத்த நாளும் கூட்டம் தொடரும்! இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் யார் வருகிறார்கள் 20- 30 பேர் வந்தாலே பெருங்கூட்டம் என அங்கலாய்த்துக் கொள்ள வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறதென்பது நூறு சதவிகிதம் உண்மை. ஆனால், ஆசுதிரேலிய நாட்டின் தலைநகரான சிட்னியில் கடந்த ஏப் பிரல் மாதம் உலகத் திருக்குறள் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. அந்த மாநாட்டில் பங்கேற்றோர்…

செங்கொடி ஊடகம் (செங்கொடிமீடியா டாட் காம்) புதிய இணையத் தளம்

கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார்! செங்கொடி வெளியீட்டு நடுவத்தின், sengodimedia.com என்ற இணைய தளம் இன்று (7.6.2014) உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இணையப் பயன்பாடு, இணைய வழி வணிகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே  கொண்டே வருகிறது. இக் காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இணையம் மூலம் ஒன்றிணைப்பதும்,  இணையவழி வணிகத்தை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதும் இன்றியமை யாதது. இதனடிப்படையில், செங்கொடி வெளியீட்டு நடுவம் என்ற தயாரிப்பு நிறுவனம் sengodimedia.com என்ற இணையத் தளத்தை உருவாக்கி உள்ளது….

தென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2014

  தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து தென்மார்க்கில் வாழும் தமிழ்ச்சிறார்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாலதி தமிழ்க்கலைகூடம் தமிழ் மொழியைக் கற்பித்துவருகிறது. வழமைபோன்று இவ்வாண்டும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் தமிழ்மொழிக்கான புலன்மொழி வளத்தேர்வு 01-06-2014 அன்றும் எழுத்துத் தேர்வு 07-06-2014 அன்றும் தென்மார்க்கின் பல பகுதிகளிள் நடைபெற்றது.   இத்தேர்வு தென்மார்க்கிலுள்ள 16 தேர்வுநிலையங்களில் நடைபெற்றது. இத்தமிழ்மொழித் தேர்வுக்கு 900 மேற்பட்ட மாணவர்கள் தோற்றினார்கள். இவர்கள் யாவரும் மிகவும் ஆர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் இத்தேர்வை எழுதினார்கள்.

ரோசா தமிழ்ப்பெயரா? – தமிழக அரசியல்

  சூன் 5-ஆம் நாள் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்த நான்கு சிறுமிகளுக்கு, கலைஞர் தமிழ்ப்பெயர் சூட்டினார் என்று முரசொலி செய்தி வெளியிட்டிருக்கிறது. நான்கு சிறுமிகளுக்கும்   ரோசா(ரோஜா), மல்லி, அல்லி, முல்லை, என்று பெயர் சூட்டினாராம் கலைஞர். இந்நிலையில் ரோசா என்பது தமிழ்ப்பெயரா என்று சருச்சையை க் கிளப்பியிருக்கிறார் தமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவரான திருவள்ளுவன் இலக்குவனார். “தமிழில் ‘ரோ’ என்ற எழுத்தில் தொடங்கும் சொல்லே கிடையாது. ரோசா(ஜா) என்பது தமிழ்ப்பெயர் அல்ல. ரோசாப்பூவும் தமிழ்நிலத்தைச் சேர்ந்தது அல்ல. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் சொன்ன 99 பூக்களின்…

மனத்தில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்) மின்னூல் வெளியீடு

  முகம்மது அலியின்   மனத்தில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்)   மின்னூல் வெளியீடு(FreeTamilEbooks.com) சென்னை   திரு முகம்மது அலி தன் வலைத்தளத்தில்(http://anbudanseasons.blogspot.in ) எழுதிய கட்டுரைகளையும கவிதைகளையும் மின்நூல்  வடிவில் கொண்டு வந்துள்ளார்.   கட்டணமின்றிப் பதிவிறக்கம் செய்து கொள்வதற்குப் பின்வரும் வலைவரியில் காண்க: http://freetamilebooks.com/ebooks/manadhil-tondriya-ennangal/

தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

  தமிழ்நாடெங்கும், தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்பிற்கு எதிராகப்போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இவைபோல் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்  நடத்தப்பெற்றது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 400 ஆக்கும் மேற்பட்டோர்  தளையிடப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். வைகாசி 14, 2045, மே 28, 2014 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற போராட்டத்திற்கு, தோழர் பெ.மணியரசன் தலைமை ஏற்க பல்வேறு காட்சித்தொடர்பியல் தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்த்தேச மக்கள் கட்சி சார்பில் பொது செயலாளர் தமிழ்நேயன், அமைப்புச் செயலாளர், செந்தமிழ்க்குமரன்…