தமிழகம் முழுவதும், மலிவு விலை காய்கறிக் கடைகள் – முதல்வர் ஆணை

சென்னை :  திசம்பர் 11: மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அலுவலர்கள் மாநாட்டில்  தொடக்கவுரையாற்றிய பொழுதுமுதல்வர் செயலலிதா, “விலைவாசியைக் கட்டுப்படுத்த, சென்னையில், 40 மலிவு விலை – காய்கறிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இது போன்ற  காய்கறிக்கடைகளை, மாவட்டங்களில் தேவையான இடங்களில் தொடங்க, ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்டார்.

மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்ட வரைவு

மூடநம்பிக்கை எதிர்ப்பு  சட்ட வரைவு 11.12.13 அன்று மகாராட்டிரச் சட்டப் பேரவையில் வைக்கப்பட்டது. இந்தச் சட்ட முன்வடிவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  சமூக நீதித்துறை அமைச்சர் சிவாசி(இராவு மொகே) இந்தச் சட்ட முன்வடிவை அளித்தார். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்குவதற்கும், அப்பாவிப் பொதுமக்களை மூடநம்பிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் இந்தச் சட்டம் வழி வகுக்கும் என்று சட்டப்பேரவையில் சிவாசி கூறினார். எதிர்க்கட்சிகள் தெரிவித்த கருத்துரைகளும் சேர்க்கப்பட்டுத் திருத்திய சட்டவடிவே சட்டமாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். பிற மாநில அரசுகளும் இந்திய நாடாளுமன்றமும்…

மதுக்கடைகளை மூடுமாறு முதல்வர் வீடுமுன் அறப்போர்! – நந்தினி அறிவிப்பு

“நம்மை வீழ்த்தி என்றும் அடிமைகளாக மாற்றுவதற்காகச் சூழ்ச்சிக்காரர்கள் தீட்டிய சதியால் கொண்டுவரப்பட்ட மதுக்கடைகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற உணர்வு தமிழகம் முழுவதும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கிவிட்டது. இந்த நெருப்பை ஆட்சியாளர்களால் அணைத்துவிட முடியாது. அரசின் மதுக்கடைகளுக்கு முடிவுகட்டும் நேரம் நெருங்கிவிட்டது. அதற்கான இறுதிப் போர்தான் 24.12.2013 அன்று காலை 9 மணிமுதல் முதல்வர் செயலலிதா அவர்களின் போயசு தோட்டம் வீட்டின் முன்பாகத் தொடங்கவுள்ள காலவரையற்ற உண்ணா நோன்பு அறப்போர். அனைவரும் இந்த அறப்போரில் பங்கேற்க வாருங்கள்.துணிவும் வீரமும் மிக்க இளைஞர்களே! இளைய தலைமுறை…

கச்சத்தீவை இந்தியாவின் பகுதியெனப்பறைசாற்றுக! – த.இரா.பாலு

அன்று அமைதி காத்த தி.மு.க. இன்று கழுவாய்  தேடுகிறது! புதுதில்லி: இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை இந்தியா மீட்க வலியுறுத்தி மக்களவையில் 11.12.2013 அன்று தி.மு.க. உறுப்பினர்கள் வினாக்கள் எழுப்பினர். இச்சிக்கல் குறித்து நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திருமதி மீரா குமாரிடம் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, 11.12.13 அன்று காலை மக்களவை கூடியதும் முறையீடு அளித்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது: கச்சத்தீவு இந்தியாவிற்குத்தான் சொந்தம். அதனை 1974 ஆம் ஆண்டு இந்திய அரசு இலங்கைக்கு ஓர் ஒப்பந்தத்தின் வாயிலாகத் தாரை வார்த்து…

தீயக் குழுக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்! கச்சத்தீவை மீட்போம்! – முதல்வர்

முதல்வர் செயலலிதா தலைமையில், நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள்- காவல்துறை அதிகாரிகள் மாநாட்டின் முதல் நாளில்(11.012.13), முதல்வர் செயலலிதா தொடக்கவுரை யாற்றினார். அப்பொழுது, தமிழகத்தில் சாதி மோதல்களைத் தூண்டும்   தீயக்குழுக்களைக் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் செயலலிதா தெரிவித்தார்.  “ஏழை, எளிய மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், மிகவும்  நலிவுற்ற பிரிவினர் நலன் ஆகியவற்றுக்காக அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை தொடங்கிச் செயல்படுத்தி வருகிறது. தமிழகம் தேசிய அளவில் பல…

இலங்கையில் நீதி நிலை நிறுத்தப்படும் – கனடா உறுதி!

மனித உரிமை, சட்டம் ஒழுங்கு,  சமயஉரிமை போன்றவற்றில் மிக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள கனடா, இத்தகைய நிலைப்பாட்டில் இலங்கை அரசு போதிய பற்றுறுதியைக் காட்டவில்லை என்பதைக் காரணம் காட்டி, அண்மையில் இடம்பெற்ற பொதுவள மாநாட்டில் கனடியத் தலைமையாளர் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை எடுத்திருந்தது. இதற்கிணங்க, மனிதநேயம் மிக்க, கனடியத் தலைமையாளர் இசுடீபன் ஆர்பர் இனப்படுகொலை நாட்டில் கொலையாளிக்குத் தலைமைப் பொறுப்பைக் கொடுக்கும் பொதுவளஆய மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே! இருப்பினும்,  கனடாவில் சார்பில்  கனடிய வெளியுறவு அமைச்சின் நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒபரோய்…

பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் மழலையர் கற்றல் கொண்டாட்டம்

பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் உலக மாந்த உரிமை நாளான திசம்பர் 10 அன்று ‘மழலையர் கற்றல் கொண்டாட்டம்’ சிறப்பாய் நடந்தது. திரைப்பட நடிகர் தோழர் இராமு அவர்களும் எழுத்தாளர் வழக்குரைஞர் நடராசன் அவர்களும் மழலைச் சொல் பதிப்பகம் தோழர் மலர்விழி அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். மழலையர் தங்களின் கற்றல் திறனை மகிழ்வாய் வெளிப்படுத்தினர். பல்வகைப் படங்களை, கற்றல் துணைக் கருவிகளை, விளையாட்டுப் பொருட்களை அடுக்கி, வகைப்படுத்தி, முறைப்படுத்தி தானாயும் தன் நண்பர்களோடு குழுவாயும் கற்று மகிழ்ந்த காட்சி அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டது….

சிற்றிந்தியாவில் பேருந்துமோதி இளைஞர் மரணம் – வன்முறை வெடித்தது

சிங்கப்பூரில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட கலவரம்!  இன்று (08.12.13) இரவு, பேருந்து மோதி இந்திய இளைஞர் ஒருவர் இறந்ததாகச் செய்தி பரவி அது கலவரமாக மாறியது. சிங்கப்பூரில் சக்திவேல் குமாரவேலு (அகவை 33) என்பவர்,  கடந்த ஈராண்டுகளாக, எங்கு அப்பு சூன் (Heng Hup Soon) என்னும்  நிறுவனத்தில் கட்டடப்பணியாளராக வேலைபார்த்து வந்தார்.  இவரே அந்த இளைஞர் என  அடையாளம் காணப்பட்டுள்ளது.  பேருந்து மோதி இறந்ததாகச் செய்தித்தாள்களில் வந்திருந்தாலும், அவரது முகத்தில் காயங்கள் இருந்தன என்றும் அவர்  இறப்பு குடும்பத்தினர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் …

ஆவடியில் வட இந்தியர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் !

 த.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் கைது! ஆவடி இந்தியப் அரசுப் பாதுகாப்புத் துறை நிறுவனப் பணி வாய்ப்பில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்களை எதிர்த்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் தளையிடப்பட்டுள்ளனர். சென்னை ஆவடியில்  இந்திய அரசு பாதுகாப்புத்துறை  நிறுவனம் (OCF) செயல்பட்டுவருகிறது.  இதில் தையல் பணியாளர்களுக்கான  வேலைவாய்ப்புத் தேர்வு  நடைபெற்றது. வேலை வாய்ப்பு பணித்தேர்வு எழுத இசைவளிக்கப்பட்ட 1800 பேரில் 1026 பேர் தமிழர்கள் அல்லாத, மலையாளிகள், கன்னடர்கள், மேற்குவங்கம், பீகார், மாகாராட்டிராவைச் சேர்ந்த வடஇந்தியர்கள்….

ஏற்காடு இடைத் தேர்தல்: அதிமுக வெற்றி – பரிசும் தண்டனையும்

  ஏற்காடு இடைத்தேர்தலில்  அதிமுக வேட்பாளர் சரோசா 1,42,771 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரைவிட 78116 வாக்குகள்  வேறுபாட்டில்  வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் மாறன்  64, 655 வாக்குகள் பெற்றார்.  இது கடந்த தேர்தலில் தி.மு.க. பெற்ற வாக்கை விடச் சற்றுக் குறைவே.  வேறு முதன்மைக் கட்சிகள் போட்டியிடாத சூழலில் தி.மு.க.  கூடுதல் வாக்குகளைப் பெறும் என எண்ணியவர்கள் ஏமாற்றத்தைத் தழுவினர்.  மூன்றாம் இடத்தில் வாக்கு அளிக்க விரும்பாதவர்கள் எண்ணிக்கை 4,431 ஆகஇடம் பெற்றுள்ளது. இனி், ஒவ்வொரு தேர்தலிலும் இப்பிரிவிற்கான வாக்கான எண்ணிக்கை…

10, 12 ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணைகள்

கருத்தூன்றிப் பயிலுக! கவனமாக எழுதுக! சிறப்பாகத் தேர்ச்சி பெறுக! வாழ்வில் உயர்க! என மாணாக்கர்களை ‘அகரமுதல’ வாழ்த்துகிறது! + 2 தேர்வு அட்டவணை தேர்வு நேரம்:  காலை 10.00  மணி –  நண்பகல் 1.15 மணி   நாள் பாடம் மார்ச்சு 1    மொழித்தாள் 1 மார்ச்சு 4     மொழித்தாள் 2 மார்ச்சு 6     ஆங்கிலம் 1 மார்ச்சு 7     ஆங்கிலம் 2 மார்ச்சு 11     இயற்பியல், பொருளியல் மார்ச்சு 14     கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவு…

சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கில் அரசு முனைப்புடன் வாதாட வேண்டும் : கலைஞர்

தமிழருக்கே உரிய சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு பணியாட்சியின்(நிருவாகத்தின்) கீழ்க் கொண்டு வந்து பணியாள்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தமிழக அரசு மூத்த வழக்குரைஞரை நியமித்து, முனைப்புடன் வாதாட வேண்டும் என்று திமுக தலைவர்  கலைஞர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு நியமித்த அதிகாரிபணியாண்மைபுரிய உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் வாதாடி…